என் பஞ்சம்தீர்க்க
அசைந்து அசைந்து வரும்
மழை தரும் மேகமே
கொஞ்சம் நில்லு
என் கதையை கேட்டபின் செல்!
கலங்கிய கண்களில் நீர்
என் கஷ்டங்களை நினைத்துப்
பார்க்கும்போதும் நீர்தானா
என் உழைப்பிலும் தெரிகிறது
உந்தன் சொகுசு வாழ்க்கை!
ஏற்றம் இறைத்து நீர்பாய்ச்சி
உழுதுஉழுது பல நெற்கோட்டைகளை
உருவாக்கிய கைகளும் பிசைகிறது
பழையகஞ்சியையும் மிளகாயையும்..
அப்போதும் கலங்கிய கண்களில் நீர்!!
வயக்காட்டில் விளைந்ததை
சந்தையில் விற்ற பணத்தை
எண்ணிப்பார்க்கும் உன் கைகளை
நோக்கியபோதும் கண்களிலும் நீர்..
நேற்றையவிட அதிகம் தரமாட்டாயா என்று!
"அப்பா, நா பள்ளிக்கொடம் போறேன்ப்பா",
என்ற மகனின் ஆசையை
நிராசையாகாமல் இருக்க
விலையாய் எந்தன் வயக்காடு
பத்திரமாய் உன் டிரங்குபொட்டியில்!!
பத்திரத்தை பத்திரமாய் மீட்டெடுக்க
உழைக்கிறேன் உழைக்கிறேன்
உழைத்துக்கொண்டே இருக்கிறேன்...
ஆளான மகனின் அந்தஸ்துகண்டு
அவனோடு கைக்கோர்க்க விழையும்
உன்னைக்கண்டு பெருமிதமாய்
கலங்கிய கண்களில் நீர்!
// ஏற்றம் இறைத்து நீர்பாய்ச்சி
ReplyDeleteஉழுதுஉழுது பல நெற்கோட்டைகளை
உருவாக்கிய கைகளும் பிசைகிறது
பழையகஞ்சியையும் மிளகாயையும்..
அப்போதும் கலங்கிய கண்களில் நீர்!!//
பசிப்பிணி போக்கும் மருத்துவனின் வறுமை இவ்வரிகள்
எடுத்துக் காட்டுகின்றன!
என் வலைப்பக்கம் வாருங்களேன்!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் நண்பரே..
ReplyDelete//"அப்பா, நா பள்ளிக்கொடம் போறேன்ப்பா",
என்ற மகனின் ஆசையை
நிராசையாகாமல் இருக்க
விலையாய் எந்தன் வயக்காடு
பத்திரமாய் உன் டிரங்குபொட்டியில்!!
பத்திரத்தை பத்திரமாய் மீட்டெடுக்க
உழைக்கிறேன் உழைக்கிறேன்
உழைத்துக்கொண்டே இருக்கிறேன்...//
இன்றைய விவசாயிகளின் வாழ்க்கையை அழகாய வடித்துள்ளீர்கள்..
அருமையான படைப்பு..மிண்டும் மீண்டும் வாசிக்க வைக்கின்றன வரிகளனைத்தும்..
நன்றியுடன்
சம்பத்குமார்
இன்று முதல் தங்களைத் தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி..
ReplyDeleteவிவசாயிகளின் ரத்தக் கண்ணீரை அருமையாக மெருகேற்றி கவிதை புனைந்தமை அழகு, வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஇன்ட்லியில் ianaman இந்தப்பெயரில் ஓட்டு போடுவது நான்தான் நோட் பண்ணிக்குங்க மக்கா...
ReplyDeleteகவிதை வரிகள் நெகிழ வைத்தன.
ReplyDeleteஉணர்வுள்ள கவிதை..
ReplyDeleteவாங்க புலவர் அய்யா @ முத்தாய்ப்பாய் முதல் வருகைதந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா.
ReplyDeleteவாங்க நண்பர் சம்பத்குமார் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும். மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க மனோ @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவிவசாயிகளின் கஷ்டத்தை உணர்த்தியுள்ளாய் சேக்.
ReplyDeleteபத்திரத்தை பத்திரமாய் மீட்டெடுக்க
ReplyDeleteஉழைக்கிறேன் உழைக்கிறேன்
உழைத்துக்கொண்டே இருக்கிறேன்.//
விவசாயிகளின் மனவெளிப்பாடு மிக அருமை வரிகளில்..
என்ன சேக் எப்படியிருக்கீங்க நலமா சகோதரி நலமா?
//பத்திரத்தை பத்திரமாய் மீட்டெடுக்க
ReplyDeleteஉழைக்கிறேன் உழைக்கிறேன்
உழைத்துக்கொண்டே இருக்கிறேன்...//
உழைப்புக்கேத்த பலனும் கிடைக்கட்டும். அப்பத்தான் விவசாயி வாழ்க்கையில் வெளிச்சம் வரும்.
யதார்த்தமான ஒரு கவிதை. அருமைத் தோழரே!
ReplyDeletehttp://atchaya-krishnalaya.blogspot.com
http://atchaya48.blogspot.com