இரவு நேரம். உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தபோது எங்கிருந்துதான் அந்த வலி வந்ததோ தெரியவில்லை. அம்ம்ம்ம்ம்மா.... என்ற அலறலுடன் தட்டுதடுமாறி மெதுவாக எழுந்தேன். வாசலுக்கு வந்து பார்த்தால் எங்கும் இருட்டு பயம்வேறு தொற்றிக் கொண்டது. யாராவது உதவிக்கு வருகிறார்களா என்று தேடினேன். பக்கத்து வீடுகளை தட்டியதில் குறட்டை சத்தமே பதிலாய் வந்தது. அங்குமிங்கும் நடந்தேன்., பதிலே இல்லை. இந்த நேரம் துணைக்கு யாராவது இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அவரும் இல்லாதது வெறுப்பாய் உணர்ந்தேன். மனம் ஒருவித ஏக்கத்துடன் தவியாய் தவித்திருந்தது.
அம்மாவுக்கும் மாமி வீட்டுக்கும் போன் செய்யும் போது மனமும் வலித்தது. உறவுகளை உதறித்தள்ளி தொலைவில் தனிமையில் இருந்தது முதலில் சந்தோசமாக இருந்தாலும் இப்போது நினைக்கையில் மெல்ல தலையை சுற்றியது. தண்ணீரை அள்ளிஅள்ளி குடித்தாலும் தாகம் அடங்கவில்லை. மீண்டும் வலி வரத் தொடங்கியிருந்தது.
அந்த ஆளரவமற்ற சாலையில் என் கால்கள் மெல்லமெல்ல விரைந்தன. வலி விட்டுவிட்டு வருகிறதே.. என்னால் நடக்க முடியல.. தலைசுற்றி மயக்கத்துடன் நடந்து வந்தேன். யாரோ பின்னாலிருந்து தள்ளுவது போன்று இருந்ததால் அம்ம்ம்மா.. என்றபடி மயங்கி விழுந்தேன். இதமான காற்று என் முகத்தினில் மோத சிலிர்த்தெழுந்து நினைவுகள் பயணிக்கத் தொடங்கியிருந்தது. எழும்போது கால்கள் நடக்க திரணியற்று பயணித்தன.
"மரகதவல்லி மருத்துவமனை" என்ற பெயர்தாங்கி நின்ற இடத்தினிலுள்ளே கால்கள் சென்றன. என் நிலை கண்டும் அங்கிருந்த செவிலியர் கண்களில் அலட்சிய பார்வை "டாக்டர் இல்லை., காலையில்தான் வருவார்" என்ற பதிலுடன்.
நான் பொறுத்துக் கொள்வேன். வலி பொறுக்குமா?.. கத்த தொடங்கினேன். செவிலியர், "ஏம்மா, சும்மா சும்மா கத்திக்கிட்டே இருக்கே.. டாக்டர் வரட்டும்" என்றவளுக்கு மயக்கம்தான் விடையாய் கிடைத்தது என்னிடமிருந்து.
"குவா.. குவா" குரல் கொடுத்து என்னை மெல்ல கண்விழிக்க செய்தான் என் செல்லம். எழ முடியாமல் பெட்டிலிருந்து எழுந்தபோது, "வாடா.. வாடா என் செல்லக்குட்டி" என்ற குரல் கேட்டு திரும்பினேன். மாமியை கண்டதும் என் கண்களையும் மீறி நீர் வடிந்தது. "மாமி..." என்று பேச எத்தனிக்கும்போது வார்த்தைக்கு பதிலாய் கண்ணீர். பரவாயில்லமா என்றபடி என் செல்லத்தை கொஞ்சிக் கொண்டிருந்தார்.
,
// உறவுகளை உதறித்தள்ளி தொலைவில் தனிமையில் இருந்தது முதலில் சந்தோசமாக இருந்தாலும் இப்போது நினைக்கையில் மெல்ல தலையை சுற்றியது. //
ReplyDeleteவலிக்கும் போதும் கண்ணீர்
வழிக்கும் போதும்தான் உறவுகளின் வலிமை புரியும்! தற்காலத்திற்கு அவசியமான சிந்தனையைத் தந்தமைக்கு
நன்றி ஷேக் அண்ணே.!
'மரகதவல்லி மருத்துவமனை' பெயர் பார்த்ததும் சென்ற ஆண்டு என் மகன் வந்த நேரம் நினைவுக்கு வருகிறது :-))
உறவுகளை உதறித்தள்ளி தொலைவில் தனிமையில் இருந்தது முதலில் சந்தோசமாக இருந்தாலும் இப்போது நினைக்கையில் மெல்ல தலையை சுற்றியது. //நிஜம் நிஜம்..
ReplyDeleteநலலதொரு கருத்தினை சில வரிகளில் கதையாக்கி விட்டீர்கள் ஷேக் நன்று.
அவன் வந்த நேரம் நல்ல நேரம் தான்..அருமை ஸ்டார்ஜன்.
ReplyDeleteவாங்க மீரான் @ ரொம்ப சந்தோசம்.. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteகருத்துமிக்க ஒரு குட்டிக் கதை. அருமை ஸ்டார்ஜன்.
ReplyDeleteமீண்டு(ம்), துளிர் விட்டது பந்தம், பிறந்து சேர்த்து வைத்த சேய் ! சமாதான தூது! அருமை. தெளி”வான”(ம்) எழுத்துக்கள்
ReplyDeleteநன்றி., எல்லா புகழும் இறைவனுக்கே..!
Delete