Pages

Monday, October 5, 2009

இது நல்லாருக்கா - சொல்லுங்க ...


பாகிஸ்தான் - இந்தியா பிரச்சனைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது .
இந்தியா - பாகிஸ்தான் இடையே , சமீபத்தில் நிறைய பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகிறது .

சமீபத்தில் பா.ஜ.க தலைவர் ஜஸ்வந்த் சிங் , பாகிஸ்தான் தலைவர் ஜின்னா அவர்களை பத்தி ஒரு புத்தகம் வெளியிட்டார் .

அந்தப் புத்தகத்தில் ஜின்னா மதச் சார்பற்றவர் என்றும், இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு அன்றைய காங்கிரஸ் கட்சியே காரணம் என்றும் பொருள்படும் வகையில் எழுதியுள்ளாராம். அதனால் பா.ஜ.க. அவரை கட்சியில் இருந்து வெளியேற்றியுள்ளது. நரேந்திர மோடியின் குஜராத் அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று புத்தகத்தையே தடை செய்துள்ளது.

இப்போது இன்னொரு சர்ச்சை கிளம்பியுள்ளது . அது என்னவென்றால் :

பாகிஸ்தானின் முதல் தேசியகீதத்தை இயற்றியவர் ஒரு இந்து என்று, பத்திரிகையில் கட்டுரை வெளியானதை அடுத்து, புது சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியாவில் இருந்து பிரிந்தது பாகிஸ்தான்; 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைய, மூன்று நாட்களுக்கு முன் நாட்டின் தலைவர் முகமது அலி ஜின்னா, லாகூரைச் சேர்ந்த உருது கவிஞர் திலக்சந்த் மக்ரூம் என்பவரது மகன் ஜகன்னாத் ஆசாத்தை பாக்., தேசிய கீதத்தை எழுதும்படி கூறினார்.

அதன்படி, ஆசாத் உருது மொழியில் தேசிய கீதத்தை இயற்றினார். "அயி சர்சாமேனே பாக் சர்ரே...' என்ற அந்த பாடல் ஆறு மாதங்கள் நடைமுறையில் இருந்தது.ஜின்னா, 1947 செப்டம்பரில் மறைந்து விட்டார். ஜின்னாவுக்கு பின்னர் பதவியேற்ற அரசு அப்பாடலை நீக்கிவிட்டது.
பின், தேர்வுக்குழுவின்பரிந்துரையின் படி புதியதாக எழுதப்பட்ட 723 பாடல்களில், ஹபீஸ் ஜலந்ரி என்ற முஸ்லிம் கவிஞர் எழுதிய பாடல் தேர்வு செய்யப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது.

சமீபத்தில் "டான்' என்ற பிரபல பாக்.,பத்திரிக்கை, பீனா சர்வார் என்ற கவிஞர் கட்டுரை ஒன்றை எழுதி யுள்ளார். அதில் அவர், மதச்சார்பின்மையை கடைபிடிப்பவரான ஜின்னா,பாக்., தேசிய கீதத்தை ஒரு இந்துவை எழுதச் சொல்லி இருக்கிறார்."ஒரு இந்து, இந்து மதப்பாடல்களை தான் பாடவேண்டும்; முஸ்லிம் தன் மதப் பாடல்களை தான் பாடவேண்டும் என்பதில்லை.

இந்தியாவில், இக்பால் என்ற முஸ்லிம் கவிஞர் எழுதிய சாரே ஜகான் சி அச்சா என்ற பாடலை குழந்தைகள் அனைவரும் உச்சரித்து இன்றளவும் பாடி வருகின்றனர். அப்படியிருக்கையில், பாக்.,கில் இந்து எழுதிய தேசிய கீதத்தை ஏன் பின்பற்றக் கூடாது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இவங்க ஏன் இப்படி இருக்காங்க ?.
மதப்பிரச்சனை , ஜாதிப்பிரச்சனை என்று சொல்லி நாட்டை பிரிக்கணுன்னு கங்கனம் கட்டிக் கொண்டு அலைறாங்க. குண்டு வைக்கறது ,அடாவடி வன்முறை தாக்குதல்னு சொல்லி அப்பாவி மக்களை கொல்றாங்க .
இப்படித்தான் கொல்லனும்ன்னு எந்த மதத்துல சொல்லிருக்கு ?, சொல்லுங்க பாப்போம் .

எல்லா மதமுமே அன்பைத்தான் போதிக்கிறது . யாரையும் வெட்டனும் , குத்தனுன்னு சொல்லிருக்கா ? , சொல்லுங்க .

அப்புறம் ஏன் இந்த கொலவெறி ? .

முதல்ல பொழைக்கிற வழிய பாருங்க . எல்லாம் தானா சரியாகும் .

அவங்க அவங்க மனதிலே அன்பு , சகோதரத்துவம் , சாந்தி , மதக்கோட்பாடு , இருந்தாலே போதும் .

மனித நேயத்தை போற்றுங்கள் . அதுவே போதும் .
இது நல்லாருக்கா - சொல்லுங்க ....

ஸ்டார்ஜன்

Post Comment

Friday, October 2, 2009

காந்தி - உலக அஹிம்சை தினம்



காந்தி ஜெயந்தி கொண்டாடும் இவ்வேளையில் இன்னொரு மிக முக்கியமான மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது .


இனிமேல் அக்டோபர் 2 உலக அகிம்சை தினமாக கொண்டாடப்படும் . இதை நான் சொல்லல . நம்ம ஐ.நா சபையே சொல்லிட்டது .

இதை பற்றிய ஒரு பார்வை :

ஐக்கிய நாடுகள் சபை தீர்மானப்படி ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி உலக அகிம்சை தினம் அனுட்டிக்கப்படுகின்றது. இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த தினமே அக்டோபர் 2ம் தேதியாகும்.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஜூன் 15, 2007ல் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அத்தீர்மானம் பொதுச் சபையில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2ம் தேதியை ஐ.நா. உறுப்பு நாடுகள் உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை தினமாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தினத்தை சர்வதேச மட்டத்தில் கொண்டாட வேண்டுமென எல்லா அரசாங்கங்களையும், ஐ.நா. விற்கு உட்பட்ட கழகங்களையும், அரசு சாரா நிறுவனங்களையும், தனி நபர்களையும் ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளதுடன் இத்தினத்தை பாடத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்ச்சித் திட்டங்கள் மூலமாகவும் அனுசரிக்குமாறும் கோரியுள்ளது.

வன்முறையாலும், போராலும் மட்டுமே உரிமைகளை பெற முடியும் என உலகம் நினைத்திருந்த கட்டத்தில் அது பிழையானது என நிரூபித்த காந்திஜி உலகத்தையே கைகளுக்குள் அடைக்க நினைத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆயுதமெடுக்காமல் நாட்டை விட்டு விரட்டிக் காட்டினார்.

இவரின் நடைமுறைகளால் கவரப்பட்ட மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அகிம்சை வழியிலேயே சென்று வெற்றி பெற்றுக் காட்டினர்.

'அகிம்சை என்பது வலிமையற்றவர்களின் ஆயுதமல்ல, வலிமையற்றவர்கள் வன்முறையை தான் தேர்வு செய்வார்கள் வலிமையானவர்களால் மட்டுமே அகிம்சையின் பாதையில் நடக்க முடியும். எதிரியை எழ முடியாமல் அடித்து வீழ்த்த வலிமை தேவையில்லை; எந்த தாக்குதலையும் சமாளித்து எழுந்து நிற்கவே வலிமை தேவை" என்று காந்திஜி கூறிய வாசகங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியதொரு கருத்தே.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கமைய முதலாவது அகிம்சை தினம் 2007 அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் போது 'ச‌கி‌ப்பு‌த்த‌ன்மை இ‌ன்மையாலு‌ம், மோத‌ல்களாலு‌ம் உலக‌ம் முழுவது‌ம் பத‌ற்ற‌‌ம் அ‌திக‌ரி‌த்துவரு‌ம் ‌நிலை‌யி‌ல், எ‌ண்ண‌ற்ற ம‌க்களா‌ல் ஏ‌ற்று‌க் கொ‌‌ள்ள‌ப்ப‌ட்ட சுத‌ந்‌திர இ‌ந்‌தியா ‌பிற‌ப்பத‌ற்குக் காரணமான மாகா‌த்மா கா‌ந்‌தி‌யி‌ன் அ‌கி‌ம்சை‌க் கொ‌ள்கைக‌ளை ‌மீ‌‌ண்டு‌ம் நாம் சி‌ந்திக்க வே‌ண்டியது அவ‌சிய‌மானதாகும்" எ‌ன்று ஐ‌க்‌கிய நாடுக‌ள் சபையி‌ன் பொது‌ச் செயலாளர் பா‌ன் ‌கி மூ‌ன் தெரிவித்திருந்தார்.

அந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் ''அ‌திக‌ரி‌த்துவரு‌ம், கலா‌சார‌‌க் கல‌ப்பா‌ல் ஏ‌ற்படு‌‌ம் பத‌ற்ற‌த்தையு‌‌ம், ச‌கி‌ப்பு‌த்த‌ன்மை ‌இன்மையா‌ல் ஏ‌ற்படு‌ம் மோத‌ல்களையு‌ம் உலக‌ம் உண‌ர்‌ந்து வரு‌கிறது. இதனா‌ல் ‌தீ‌‌‌விரவாத‌த்‌தி‌ன் ஆ‌தி‌க்கமு‌ம், வ‌ன்முறையை‌த் தூ‌‌ண்டு‌ம் கரு‌த்து‌க்களு‌ம் பலமடை‌ந்து வரு‌கி‌ன்றன.

மியா‌ன்ம‌ரி‌ல் இராணுவ ஆ‌ட்‌சியாள‌ர்களு‌‌க்கு எ‌திராக அமை‌தியான முறை‌யி‌ல் போராடியவ‌ர்க‌ள் ‌மீது நட‌த்த‌ப்ப‌ட்ட அட‌க்குமுறை‌த் தா‌க்குத‌ல்களை‌க் கு‌றி‌ப்‌பி‌ட்ட அவ‌ர்:

மகா‌த்மா‌வி‌ன் கொ‌ள்கைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி அ‌கி‌ம்சை முறை‌யி‌ல் ஆ‌யுத‌ங்க‌ளை‌த் தொடாம‌ல் போராடுபவ‌ர்க‌ளி‌ன் ‌மீது ஆயுத‌ப் படைக‌ள் பய‌ன்படு‌த்த‌ப்படுவதை நா‌ம் கா‌ண்‌கிறோ‌ம். உலக‌ம் முழுவது‌ம் சுத‌ந்‌திர‌ம் ம‌ற்று‌ம் குடியு‌ரிமைகளு‌க்காக ‌மிக‌ப்பெ‌ரிய இய‌க்க‌த்தை மு‌ன்‌னி‌ன்று நட‌த்‌தியவ‌ர் மகா‌த்மா கா‌ந்‌தி. அவர் ஒ‌வ்வொரு நாளு‌ம் த‌ன்னுடைய வா‌ழ்‌வி‌ல் அ‌கி‌ம்சையை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றினார், அத‌ன் மூல‌ம் எ‌ண்‌ணிலட‌ங்கா ம‌னித‌ர்க‌ளி‌ன் அ‌ர்‌த்‌தமு‌ள்ள வா‌ழ்‌க்கை‌க்கு வ‌ழிகா‌ட்டியாக இரு‌‌ந்தார்.'' என்றார்.


ந‌ன்றி த‌ட்ஸ்த‌மிழ்

இதுபோல கூகிளும் தன் பங்குக்கு முகப்பு பக்கத்தில் காந்தியின் படம் போட்டு காந்தி ஜெயந்தியை கொண்டாடுகிறது .

நான் எழுதிய , இதற்கு முந்திய பதிவான காந்தியும் நானும் ‍ காந்தி ஜெயந்தியை பார்க்க விரும்புபவர்கள் இங்கே செல்லவும் .

ஸ்டார்ஜன்

Post Comment

காந்தியும் நானும் - காந்தி ஜெயந்தி


இன்று அக்டோபர் 2 ம் தேதி . இன்று முக்கியமான ஒரு தலைவருக்கு பிறந்த நாள் . அவர் தான் அண்ணல் காந்தியடிகள் . காந்தி ஜெயந்தியை இன்று அனைவரும் கொண்டாடுகிறோம் . இந்த இனிய நாளில் அவரின் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .


காந்திஜியின் இளம் வயதில் ஒருவரோடு நட்பு கொண்டுருந்தார். அந்த நண்வர் சுருட்டு குடிக்கும் வழக்கமுடையவர். அவருடன் சேர்ந்ததால் காந்திஜிக்கும் இந்தக் கொடிய பழக்கம் தொற்றிக்கொண்டது. சுருட்டு குடிக்கும் பழக்கத்தை நாகரீகம் உள்ளவர் என்பதைக் காட்டிக் கொள்ள காந்திஜியும் நண்பருடன் சேர்ந்து புகை பிடிக்கத் துவங்கினார்.

இப்பழக்கத்தின் காரணமாக செலவுக்குப் பணம் தேவைப்பட்டது. சுருட்டு வாங்குவதற்கு பணம் வேண்டுமே. சில காலம் கடைகளிலும் நண்பர்களிடமும் பணம் கடனாகப் பெற்று சுருட்டு வாங்கினார்.

கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்பட்டதும் என்ன செய்வது என்று யோசித்தார்.

தமது மூத்த சகோதரரின் தங்கக் காப்பிலிருந்து ஒரு பகுதியை காந்தி வெட்டி எடுத்தார். இவ்வாறு செய்யும் போது அவர்மீது அவருக்கே வெறுப்பும் வேதனையும் ஏற்பட்டது. தாம் செய்யும் செயல் எத்தனையது என்று எண்ணிப் பார்த்து தாங்கொணாத துயரம் அடைந்தார்.

கடைசியாக, தாம் செய்த தவறுகள் எல்லாவற்றையும் தந்தையிடம் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் செய்தவற்றை, நேரில் சொல்வதற்கு நடுக்கமாக இருந்தது. எனவே காகிதத்தை எடுத்தார். தாம் செய்த குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

காந்திஜியின் தந்தை கரம்சந்த் காந்தி உடல்நலம் சரியில்லாததால் படுத்த படுக்கையாக இருந்தார்.

தந்தையிடம் சென்று தாம் எழுதிய கடிதத்தைக் கொடுத்தார். அவர் படித்துவிட்டு தரும் தண்டனையை எதிர்நோக்கி அருகில் நின்றிருந்தார்.
காந்திஜி தந்த அந்த கடிதத்தை வாங்கிக்கொண்ட தந்தை, எழுந்து உட்கார்ந்துகொண்டார். கடித்த்தைப் படித்தார். படிக்கும்போது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

கடிதத்தைப் படித்து முடித்தும் கண்களை மூடிக் கொண்டார். பிறகு கடிதத்தைக் கிழித்துப் போட்டார். பிறகு படுத்துக்கொண்டார்.

தான் செய்த தவறுகளுக்கு தந்தையிடம் தண்டனையை எதிர்பார்த்து நின்ற காந்திஜி அழுதார். கோபம் கொண்டு திட்டுவார் அல்லது அடிப்பார் என்று காந்திஜிஎண்ணினார்.

தந்தையிடம் காந்திஜி மறைக்காமல், தமது தவறுகளைக் கூறி மன்னிப்புக் கேட்டாரல்லவா? குற்றம் செய்வதை ஒப்புக்கொள்பவ‌ர்களை மன்னிக்க வேண்டும் என்பதே தந்தை கரம்சந்த் காந்தியின் எண்ணமாக இருந்தது.
இதை காந்திஜிஅஹிம்சை என்று உணர்ந்தார்.

அன்பால் எதையும் வெல்லாம் என்பதே அஹிம்சையின் ஆணிவர். இந்த தத்துவம், இளம் பிள்ளையாக இருக்கும் போதே காந்திஜியின் மனத்தில் ஆழ வேரூன்றச் செய்தது இந்தச் சம்பவமே!

பெரும் சாதனைகளை பிற்காலத்தில் செய்ய அஹிம்சையும் சத்தியமுமே காந்திஜிக்குத் துணையாக நின்றன.

தந்தையிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பையும் பெற்றபிறகு காந்திஜி, தேவையற்ற பழக்கங்கள் அனைத்தையும் விட்டுவிட்டார்.

---------------------------------------------------------

நான் பள்ளியில் படிக்கும் போது நடந்த சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது . எங்கள் பள்ளியில் ஆண்டுதோறும் விளையாட்டு விழா , ஆண்டு விழா நடைபெறும் . நான் அப்போது 7 ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் . விளையாட்டு விழாவில் மாறுவேடப் போட்டி உண்டு .

அதில் நானும் கலந்து கொள்ள ஆசை . ஜேம்ஸ் சாரிடம் , சார் , என்ன வேஷம் போடலாம் என்று கேட்டேன் . ( ஏற்கனவே , நான் 6 ம் வகுப்பில் வேறு மாறுவேடப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன் ) . ஏய் , நீ காந்தி வேடம் போடு . நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் என்றார் . சரி என்று சொன்னேன் .

காந்தியை பற்றிய விவரங்களையும் , பொருள்களையும் சேகரித்தேன் . காந்தியை பத்தி ஜேம்ஸ் சாரே எழுதி தந்தார் . காந்தி அணிந்த கண்ணாடி போல , எங்க தாத்தா வைத்திருந்தார் . காந்தி கண்ணாடி எங்க தாத்தா கொடுத்தார் . கடிகாரம் , எங்கூட படித்த நண்பன் வீட்டில் இருந்ததை கொடுத்தான் . கதர் வேட்டி எங்கப்பா கொடுத்தார் .

பின்னர் , போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன் . எல்லோரும் பாராட்டின‌ர் .

காந்தி ஜெயந்தியை கொண்டாடும் இவ்வேளையில் அவ‌ர் கூறிய‌ க‌ருத்துக்க‌ளை நினைவு கூறுவோம் .

ஸ்டார்ஜ‌ன்

Post Comment

Tuesday, September 29, 2009

உன்னைப் போல் ஒருவன் - நானும் நீயும்

உன்னைப் போல் ஒருவன்



உன்னைப் போல் ஒருவன் விமர்சன தொகுப்பில் நானும் சேர்ந்து விட்டேன் .

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு விறுவிறுப்பான படம் . படம் ஒண்ணேமுக்கால் நேரம் தான் என்றாலும் ரொம்ப ஸ்பீடா போகுது .
துப்பாக்கி ரவை மாதிரி ரொம்பவே ஷார்ப்பான படம். பொம்மலாட்ட அரங்கத்தில் விரல்களை போல வேலை பார்த்திருக்கிறார் கமல். ஓடியாடுவதெல்லாம் மற்றவர்களே! ஆனாலும் அவரது அலட்டிக்கொள்ளாத நிதானமே குறி பார்த்து பதற வைக்கிறது ரசிகனை.

பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், மார்க்கெட் என்று மக்கள் கூடும் இடங்களில் பாம் வைக்கிற கமல், அப்படியே போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளேயும் பாம் வைக்கிறார். பின்பு வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு மிகப்பெரிய கட்டிடத்தின் உச்சிக்கு போகிறார்.

அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது திடுக் திடுக்...

சிட்டி கமிஷனர் மோகன்லாலுக்கு போன் செய்து குண்டு வைத்த விபரத்தை சொல்கிறார். அப்படியே அந்த விஷயத்தை மீடியாவுக்கும் போட்டுக் கொடுக்க, திமிலோகப்படுகிறது அதிகார வட்டாரம். “என்ன வேண்டும் உனக்கு?” பேரம் ஒரு பக்கம், தேடல் மறுபக்கம் என்று காவல் துறை சல்லடையாக துளைக்க, சைலண்டாக காய் நகர்த்துகிறார் கமல். பயங்கர தீவிரவாதிகள் நால்வரை விடுவித்து ஒரு ஜீப்பில் ஏற்ற சொல்கிறார். இல்லையென்றால் டமால்தான்...

கட்டுப்படும் போலீஸ், தீவிரவாதிகளை விடுவித்து ஜீப்பில் ஏற்ற, ஒருவனை மட்டும் விடாமல் பிடித்துக் கொள்கிறார் இன்ஸ்பெக்டர் கணேஷ் வெங்கட்ராம். ஏறிய மூவரும் தப்பித்தார்களா? அதுதான் இல்லை. குண்டு வெடித்து ஜீப்போடு கைலாசம்! அப்படியென்றால் கமலின் நோக்கம்?
அப்பாவி உயிர்களை காவு கொடுக்கிற தீவிரவாதிகளை சட்டம் சில நேரங்களில் விடுவித்துவிடுகிறது. அவர்களுக்கு தண்டனை, அதே போல ஒரு கொடூரம்தான்! கடைசியில் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கிற கமலை, கண்டும் காணாமல் போகிறார் கமிஷனர். சுபம்...

கமல் என்ற மகா கலைஞனின் அடக்கம், அமைதியான சுனாமிக்கான முன் நிமிடங்களையே உணர்த்துகிறது. எங்கும் நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும், குஜராத் இனக்கலவரத்தை விவரிக்கும் அந்த நிமிடங்களில் அத்தனை நேர நடிப்பையும் ஒரு முகத்தின் கீழ் கொண்டு வந்திருக்கிறார் அவர். வசனங்களில் அனல் மற்றும் நையாண்டி.


சிட்டி கமிஷனர் மோகன்லால் சின்ன சின்ன அசைவுகளில் கூட கம்பீரம் காட்டுகிறார். தலைமை செயலாளரிடம் மோதும்போது அவரது வார்த்தைகளில் தீப்பொறி. தனக்கு கீழே வேலை செய்யும் அதிகாரிகளிடம் அவர் காட்டும் பரிவும், உத்தரவும் கூட ‘அட...!’

இன்ஸ்பெக்டராக வரும் கணேஷ் வெங்கட்ராம் ஒரு லட்டியை போலவே நடமாடுகிறார். குற்றவாளியை அடிக்காமலே உண்மையை வரவழைக்கும் அவரது டெக்னிக் பகுத் அச்சா! (அதே நேரத்தில் குற்றவாளிக்கு உச்சா..)

இவர் மட்டுமல்ல, படத்தில் வந்து போகிற அத்தனை கேரக்டர்களும் அசரடிக்கிறார்கள். அந்த ஐஐடி டிராப் அவுட் மாணவன் உட்பட! சீரியஸ் கதையில் சிரிக்க வைக்கும் பகுதிகள், முதலமைச்சரின் வாய்சில் வரும் அந்த டயலாக்குகள்தான்!

மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு காலையில் துவங்கி மாலையில் முடியும் ஒவ்வொரு நிமிடத்தையும் பரபரப்பாக பதிவு செய்திருக்கிறது.

ஸ்ருதிஹாசனின் இசையில் உருவான பாடல்கள் ஆடியோ சி.டியில் மட்டுமே. திரையில் இல்லாதது ஏமாற்றம். பின்னணி இசை தேவைப்பட்ட இடத்தில் மட்டும் முணுமுணுத்திருக்கிறது. அதுவே அழகு.

தீவிரவாதத்தை முன் வைக்க நினைத்திருக்கும் இந்த படத்தில், கமலின் அணிசேரா கொள்கைதான் கொஞ்சம் பிசிறடிக்கிறது. மற்றபடி உன்னைப்போல ஒருவன், நமக்குள் ஒருவனாக கரைந்து போவது தவிர்க்க முடியாதது!

படத்தில் எத்தனை ஓட்டைகள் இருந்தாலும் ,
கமலின் அட்டகாசமான நடிப்பு , மோகன்லாலின் கம்பீரம் படத்துக்கு பிளஸ் .

மொத்தத்தில் இந்த படம் விறுவிறுப்பான திரைக்கதையில் பாஸ் .

இந்த படத்துக்கு எத்தனை மார்க் போடலாமுன்னு நீங்களே சொல்லுங்க .

எனக்கு இந்த பதிவு 50 வது பதிவு

ஸ்டார்ஜன்

Post Comment

ஈரம் - தண்ணீரின் தாகம்

ஈரம்


ஈரம் படம் இப்போதான் என்னால பாக்க முடிந்தது .

தமிழ்சினிமா எத்தனையோ வில்லன்களை பார்த்திருக்கிறது. இந்த படத்தில் போலீசை சுற்றலில் விடும் அந்த வில்லன் தண்ணீர்!

குளியலறை தொட்டிக்குள் பிணமாக கிடக்கிறார் சிந்துமேனன். தற்கொலைதான் என்று முடிவுக்கு வருகிறது போலீஸ். ஆனால், இதில் சந்தேகம் இருப்பதாக கேசை நீட்டிக்கிறார் போலீஸ் அதிகாரி ஆதி. இவரும் சிந்து மேனனும் முன்னாள் காதலர்கள் என்ற சின்ன அதிர்ச்சியோடு நகர்கிறது படம். அந்த பிளாட்டில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தொடர் விபத்தில் மரணமடைய, காரணத்தை தேடிப்போகிற ஆதிக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதிலும் எல்லா மரணமும் தண்ணீர் ரூபத்தில். சிந்துமேனின் ஆவியே வந்து "இது தற்கொலையல்ல" என்று ஆதியிடம் ரகசிய வாக்குமூலம் தருகிறது. கொலையாளியான கணவனுக்கு தண்டனை தருவது ஆதியா? ஆவியா? விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்!

திருச்சி கல்லு£ரியில் படிக்கும் சிந்துமேனன், ஆதியுடன் காதலில் விழும் காட்சிகள் எல்லாம் பனித்துளி படர்ந்த ஹைகூ ரோஜா! என் கண்ணை பார்த்து சொல்லு... இந்த ஒரு டயலாக் வரும்போதெல்லாம் தியேட்டரில் கைத்தட்டல்கள். இடது கை பழக்கமுள்ளவர் இவர் என்பதை கேஷ§வலாகதான் காட்டுகிறார்கள் என நினைத்தால், அதுதான் படத்தின் ஸ்டிராங்கான அடையாளம். அதிருக்கட்டும்... சிந்து எப்படி? லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்! என்ன அழகாக இருக்கிறார் ! அந்த பார்வையே கொல்லுதே !

ஆதிக்கு காக்கி சட்டை போடாமலே ஒரு கம்பீரம் வந்து ஒட்டிக் கொள்கிறது. குரலில் பிருத்விராஜ் தெரிந்தாலும், நடிப்பில் புது ரூட் தெரிகிறது. கண்ணுக்கு எதிரே காதலி இறந்து கிடக்கிறாள். ஒரு அதிர்ச்சி வேண்டாமோ? இதுதான் போலீஸ் மிடுக்கு போலிருக்கிறது.

வில்லனாகியிருக்கிறார் நந்தா. சரியான ரூட். பிக்கப் பண்ணுங்க பிரதர்.

தங்கையான சரண்யா மோகன், பொம்மையாக வளைய வந்தாலும், அக்காவின் ஆவி உள்ளே புகுந்த பின் கண்களே கலவரமூட்டுகிறது.

புறம்பேசுகிற எல்லாருமே ஆவியால் கொலை செய்யப்படுவதும், அந்த கொலைகள் நடைபெறுகிற விதமும் ரத்தம் தெறிக்கும் அச்சத்தை தருகிறது. குறிப்பாக கழிவறையில் சிக்கிக் கொள்ளும் அந்த காதல் பார்ட்டி. நிதானமாக கொலையை செய்துவிட்டு தண்ணீரில் சுவடுகள் பதிய ஆவி நடந்து போவது ஈரக்குலையில் திடுக் திடுக்...

பேய் கதையில் லாஜிக் எதுக்குப்பா என்றாலும், சட் சட்டென்று கூடுவிட்டு கூடு பாயும் ஆவி, தங்கையின் ஜாக்கெட்டை கிழிக்கிற வரை பூப்பறித்துக் கொண்டா இருந்தது?

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு திகிலுக்கு திகில் சேர்க்கிறது. தமனின் இசை மெலடி விருந்து. விஷ¨வல் எபெக்ட்ஸ் இந்தியன் ஆர்ட்டிட்ஸ், ஈஎப்எக்ஸ். ஒவ்வொரு திகில் காட்சியும் விஷ§வல் டேட்ஸ்ட்!

நீண்டகாலமாக நிலவி வரும் திகில் பட வறட்சிக்கு இந்த படம் ஜில்லென்று ஒரு கிளாஸ் -ஈரம்!


படத்துக்கு எத்தனை மார்க் போடலாம் நீங்களே சொல்லுங்க ...

Post Comment

Sunday, September 20, 2009

ரமழான் பெருநாள் வாழ்த்துக்கள்


சௌதி அரேபியாவில் இங்கே இன்று ரமழான் பெருநாள் கொண்டாடுகிறோம் . அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு 6 மணிக்கெல்லாம் பெருநாள் தொழுகைக்கு செல்வோம் . 6 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெறும் . நல்ல ஜாலியாக இருக்கும் .

இந்தியாவில் நாளை திங்கள்கிழமை ரமழான் பெருநாள் கொண்டாடுவார்கள் .

அனைவருக்கும் என் இனிய ரமழான் பெருநாள் வாழ்த்துக்கள் .

Post Comment

Wednesday, September 16, 2009

என்னை பத்தி - தொடர்பதிவு


திரு தங்க ராஜ் செல்வேந்திரன் என்னை ஒரு அருமையான தொடர்பதிவுக்கு அழைத்துள்ளார் .

அந்தத் தொடர்பதிவு ஆங்கில எழுத்துக்களுக்கு, 26 எழுத்துக்கும் ஒரு பதில் தருவது. '

சுவாரசியம்தானே!!

இதன் விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.

ஆரம்பிப்போமா .. ஸ்டார்ட் மியூசிக் ...

1. A – Avatar (Blogger) Name / Original Name : / ஸ்டார்ஜன் / சேக் மைதீன் /

2. B – Best friend? : எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான் : வள்ளுவரின் குறள் தான் ஞாபக‌த்துக்கு வருது , முகநக நட்பது நட்பன்று .... என்ற குறள் .

3. C – Cake or Pie? : Cake ( யாரும் கேக்காம இருந்தா சரிதான் ) .

4. D – Drink of choiசெ? காபி , டீ , குளிர்பானம் வேறென்ன இருக்கு .

5. E – Essential item you use every day? கண் ( அலை பாயுதே கண்ணா.. என்னவளை ரொம்பவே தேடும் ) .

6. F – Favorite color ? . blue ( ஊதா )

7. G – Gummy Bears Or Worms : --------------------------------------->யாராவது நிரப்புங்க..

8. H – Hometown? -திருநெல்வேலி..

9. I – Indulgence? - கொஞ்சி கொஞ்சம்.. கெஞ்சி கொஞ்சம்..

10. J – January or February? - ஜனவரி மாதம் ‍‍ வருடத்தின் முதல் மாதம் தானே ....

11. K – Kids & their name? இப்போதைக்கு இல்லை , இன்ஷா அல்லாஹ் ! ,

12. L – Life is incomplete without? குடும்பதோடு இருக்கிற சுகமே தனி தான் ...

13. M – Marriage date? ‍ 21/12/08

14. N – Number of siblings? = எண்ணிலடங்கா ...

15. O – Oranges or Apples?ஒரு ஆறஞ்சி (ஐந்தாறு) ஆப்பிள்..

16. P – Phobias/Fears? யானையை கண்டால் உள்ளுற ஒரு பயம் ..

17. Q – Quote for today? வாழ்க்கை வாழ்வதற்க்கே ,

18. R – Reason to smile? சந்தோசத்தின் தொடக்கம் , சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் ...,

19. S – Season? வசந்த காலம்..

21. U – Unknown fact about me? தெரியாதே ... தெரிந்தவங்க சொல்லலாம்..

22. V – Vegetable you don't like? கத்திரிக்காய்

23. W – Worst habit? இருக்கு ... ஆனா இல்லை ....

24. X – X-rays you've had? இல்லை

25. Y – Your favorite food? கறிக் குழம்பு

26. Z – Zodiac sign? சிம்ம ராசி , உத்திர நட்சத்திரம் ,
********************************************************************

அன்புக்குரியவர்கள்: அம்மாவும் அப்பாவும்
ஆசைக்குரியவர்: என்ன‌வ‌ளே அடி என்ன‌வ‌ளே ...

இலவசமாய் கிடைப்பது: அறிவுரைகளும்,வியாதிகளும்

ஈதலில் சிறந்தது: முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் வள்ளலுக்கு ஈடுஇல்லை

உலகத்தில் பயப்படுவது: அப்பிடின்னா?

ஊமை கண்ட கனவு: அவ‌ன் பேசுவ‌து மாதிரி

எப்போதும் உடனிருப்பது: கனவுகளும்,கற்பனைகளும் , த‌ன்ன‌ம்பிக்கையும்

ஏன் இந்த பதிவு: த‌ங்க‌ ராஜ் செல்வேன்திர‌ன் அழைத்த‌தினால் ,

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வி, செல்வ‌ம் , தைரியம் ,

ஒரு ரகசியம்: ரகசிமாய் …

ஓசையில் பிடித்தது: குழந்தைகளின் மழலைப்பேச்சு ,

ஔவை மொழி ஒன்று: அறம் செய்ய விரும்பு ,

(அ)ஃறிணையில் பிடித்தது: பேனா .

Post Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்