Pages

Tuesday, September 29, 2009

உன்னைப் போல் ஒருவன் - நானும் நீயும்

உன்னைப் போல் ஒருவன்உன்னைப் போல் ஒருவன் விமர்சன தொகுப்பில் நானும் சேர்ந்து விட்டேன் .

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு விறுவிறுப்பான படம் . படம் ஒண்ணேமுக்கால் நேரம் தான் என்றாலும் ரொம்ப ஸ்பீடா போகுது .
துப்பாக்கி ரவை மாதிரி ரொம்பவே ஷார்ப்பான படம். பொம்மலாட்ட அரங்கத்தில் விரல்களை போல வேலை பார்த்திருக்கிறார் கமல். ஓடியாடுவதெல்லாம் மற்றவர்களே! ஆனாலும் அவரது அலட்டிக்கொள்ளாத நிதானமே குறி பார்த்து பதற வைக்கிறது ரசிகனை.

பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், மார்க்கெட் என்று மக்கள் கூடும் இடங்களில் பாம் வைக்கிற கமல், அப்படியே போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளேயும் பாம் வைக்கிறார். பின்பு வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு மிகப்பெரிய கட்டிடத்தின் உச்சிக்கு போகிறார்.

அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது திடுக் திடுக்...

சிட்டி கமிஷனர் மோகன்லாலுக்கு போன் செய்து குண்டு வைத்த விபரத்தை சொல்கிறார். அப்படியே அந்த விஷயத்தை மீடியாவுக்கும் போட்டுக் கொடுக்க, திமிலோகப்படுகிறது அதிகார வட்டாரம். “என்ன வேண்டும் உனக்கு?” பேரம் ஒரு பக்கம், தேடல் மறுபக்கம் என்று காவல் துறை சல்லடையாக துளைக்க, சைலண்டாக காய் நகர்த்துகிறார் கமல். பயங்கர தீவிரவாதிகள் நால்வரை விடுவித்து ஒரு ஜீப்பில் ஏற்ற சொல்கிறார். இல்லையென்றால் டமால்தான்...

கட்டுப்படும் போலீஸ், தீவிரவாதிகளை விடுவித்து ஜீப்பில் ஏற்ற, ஒருவனை மட்டும் விடாமல் பிடித்துக் கொள்கிறார் இன்ஸ்பெக்டர் கணேஷ் வெங்கட்ராம். ஏறிய மூவரும் தப்பித்தார்களா? அதுதான் இல்லை. குண்டு வெடித்து ஜீப்போடு கைலாசம்! அப்படியென்றால் கமலின் நோக்கம்?
அப்பாவி உயிர்களை காவு கொடுக்கிற தீவிரவாதிகளை சட்டம் சில நேரங்களில் விடுவித்துவிடுகிறது. அவர்களுக்கு தண்டனை, அதே போல ஒரு கொடூரம்தான்! கடைசியில் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கிற கமலை, கண்டும் காணாமல் போகிறார் கமிஷனர். சுபம்...

கமல் என்ற மகா கலைஞனின் அடக்கம், அமைதியான சுனாமிக்கான முன் நிமிடங்களையே உணர்த்துகிறது. எங்கும் நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும், குஜராத் இனக்கலவரத்தை விவரிக்கும் அந்த நிமிடங்களில் அத்தனை நேர நடிப்பையும் ஒரு முகத்தின் கீழ் கொண்டு வந்திருக்கிறார் அவர். வசனங்களில் அனல் மற்றும் நையாண்டி.


சிட்டி கமிஷனர் மோகன்லால் சின்ன சின்ன அசைவுகளில் கூட கம்பீரம் காட்டுகிறார். தலைமை செயலாளரிடம் மோதும்போது அவரது வார்த்தைகளில் தீப்பொறி. தனக்கு கீழே வேலை செய்யும் அதிகாரிகளிடம் அவர் காட்டும் பரிவும், உத்தரவும் கூட ‘அட...!’

இன்ஸ்பெக்டராக வரும் கணேஷ் வெங்கட்ராம் ஒரு லட்டியை போலவே நடமாடுகிறார். குற்றவாளியை அடிக்காமலே உண்மையை வரவழைக்கும் அவரது டெக்னிக் பகுத் அச்சா! (அதே நேரத்தில் குற்றவாளிக்கு உச்சா..)

இவர் மட்டுமல்ல, படத்தில் வந்து போகிற அத்தனை கேரக்டர்களும் அசரடிக்கிறார்கள். அந்த ஐஐடி டிராப் அவுட் மாணவன் உட்பட! சீரியஸ் கதையில் சிரிக்க வைக்கும் பகுதிகள், முதலமைச்சரின் வாய்சில் வரும் அந்த டயலாக்குகள்தான்!

மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு காலையில் துவங்கி மாலையில் முடியும் ஒவ்வொரு நிமிடத்தையும் பரபரப்பாக பதிவு செய்திருக்கிறது.

ஸ்ருதிஹாசனின் இசையில் உருவான பாடல்கள் ஆடியோ சி.டியில் மட்டுமே. திரையில் இல்லாதது ஏமாற்றம். பின்னணி இசை தேவைப்பட்ட இடத்தில் மட்டும் முணுமுணுத்திருக்கிறது. அதுவே அழகு.

தீவிரவாதத்தை முன் வைக்க நினைத்திருக்கும் இந்த படத்தில், கமலின் அணிசேரா கொள்கைதான் கொஞ்சம் பிசிறடிக்கிறது. மற்றபடி உன்னைப்போல ஒருவன், நமக்குள் ஒருவனாக கரைந்து போவது தவிர்க்க முடியாதது!

படத்தில் எத்தனை ஓட்டைகள் இருந்தாலும் ,
கமலின் அட்டகாசமான நடிப்பு , மோகன்லாலின் கம்பீரம் படத்துக்கு பிளஸ் .

மொத்தத்தில் இந்த படம் விறுவிறுப்பான திரைக்கதையில் பாஸ் .

இந்த படத்துக்கு எத்தனை மார்க் போடலாமுன்னு நீங்களே சொல்லுங்க .

எனக்கு இந்த பதிவு 50 வது பதிவு

ஸ்டார்ஜன்

Post Comment

16 comments:

  1. //எனக்கு இந்த பதிவு 50 வது பதிவு //

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சீக்கிரம் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள் நண்பரே....

    "உன்னைப் போல் ஒருவன்" விமர்சனம் எழுதி நீங்களும் ரவுடிதான்னு ஜீப்புல ஏறிட்டிங்க....

    ம்ம்ம்.நடத்துங்க.நடத்துங்க....

    :))

    ReplyDelete
  3. 50, 500-ஆக எனது வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்..!

    ReplyDelete
  4. நல்வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்!

    ReplyDelete
  5. //எனக்கு இந்த பதிவு 50 வது பதிவு //

    வாழ்த்துகள்

    ReplyDelete
  6. நண்பரே....
    சீக்கிரம் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்,
    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. வாங்க கோவி கண்ணன்

    வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  8. வாங்க துபாய் ராஜா

    வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  9. வாங்க உண்மைத் தமிழன்

    வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  10. வாங்க சென்ஷி

    வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  11. வாங்க T.V.Radhakrishnan

    வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  12. சீக்கிரம் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்,
    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. 50 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் ஷேக்...

    ReplyDelete
  14. வாங்க நையாண்டி நைனா

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  15. வாங்க சந்ரு

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  16. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வசந்த்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்