இன்று அக்டோபர் 2 ம் தேதி . இன்று முக்கியமான ஒரு தலைவருக்கு பிறந்த நாள் . அவர் தான் அண்ணல் காந்தியடிகள் . காந்தி ஜெயந்தியை இன்று அனைவரும் கொண்டாடுகிறோம் . இந்த இனிய நாளில் அவரின் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .
காந்திஜியின் இளம் வயதில் ஒருவரோடு நட்பு கொண்டுருந்தார். அந்த நண்வர் சுருட்டு குடிக்கும் வழக்கமுடையவர். அவருடன் சேர்ந்ததால் காந்திஜிக்கும் இந்தக் கொடிய பழக்கம் தொற்றிக்கொண்டது. சுருட்டு குடிக்கும் பழக்கத்தை நாகரீகம் உள்ளவர் என்பதைக் காட்டிக் கொள்ள காந்திஜியும் நண்பருடன் சேர்ந்து புகை பிடிக்கத் துவங்கினார்.
இப்பழக்கத்தின் காரணமாக செலவுக்குப் பணம் தேவைப்பட்டது. சுருட்டு வாங்குவதற்கு பணம் வேண்டுமே. சில காலம் கடைகளிலும் நண்பர்களிடமும் பணம் கடனாகப் பெற்று சுருட்டு வாங்கினார்.
கடனை அடைப்பதற்குப் பணம் தேவைப்பட்டதும் என்ன செய்வது என்று யோசித்தார்.
தமது மூத்த சகோதரரின் தங்கக் காப்பிலிருந்து ஒரு பகுதியை காந்தி வெட்டி எடுத்தார். இவ்வாறு செய்யும் போது அவர்மீது அவருக்கே வெறுப்பும் வேதனையும் ஏற்பட்டது. தாம் செய்யும் செயல் எத்தனையது என்று எண்ணிப் பார்த்து தாங்கொணாத துயரம் அடைந்தார்.
கடைசியாக, தாம் செய்த தவறுகள் எல்லாவற்றையும் தந்தையிடம் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் செய்தவற்றை, நேரில் சொல்வதற்கு நடுக்கமாக இருந்தது. எனவே காகிதத்தை எடுத்தார். தாம் செய்த குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
காந்திஜியின் தந்தை கரம்சந்த் காந்தி உடல்நலம் சரியில்லாததால் படுத்த படுக்கையாக இருந்தார்.
தந்தையிடம் சென்று தாம் எழுதிய கடிதத்தைக் கொடுத்தார். அவர் படித்துவிட்டு தரும் தண்டனையை எதிர்நோக்கி அருகில் நின்றிருந்தார்.
காந்திஜி தந்த அந்த கடிதத்தை வாங்கிக்கொண்ட தந்தை, எழுந்து உட்கார்ந்துகொண்டார். கடித்த்தைப் படித்தார். படிக்கும்போது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
கடிதத்தைப் படித்து முடித்தும் கண்களை மூடிக் கொண்டார். பிறகு கடிதத்தைக் கிழித்துப் போட்டார். பிறகு படுத்துக்கொண்டார்.
தான் செய்த தவறுகளுக்கு தந்தையிடம் தண்டனையை எதிர்பார்த்து நின்ற காந்திஜி அழுதார். கோபம் கொண்டு திட்டுவார் அல்லது அடிப்பார் என்று காந்திஜிஎண்ணினார்.
தந்தையிடம் காந்திஜி மறைக்காமல், தமது தவறுகளைக் கூறி மன்னிப்புக் கேட்டாரல்லவா? குற்றம் செய்வதை ஒப்புக்கொள்பவர்களை மன்னிக்க வேண்டும் என்பதே தந்தை கரம்சந்த் காந்தியின் எண்ணமாக இருந்தது.
இதை காந்திஜிஅஹிம்சை என்று உணர்ந்தார்.
அன்பால் எதையும் வெல்லாம் என்பதே அஹிம்சையின் ஆணிவர். இந்த தத்துவம், இளம் பிள்ளையாக இருக்கும் போதே காந்திஜியின் மனத்தில் ஆழ வேரூன்றச் செய்தது இந்தச் சம்பவமே!
பெரும் சாதனைகளை பிற்காலத்தில் செய்ய அஹிம்சையும் சத்தியமுமே காந்திஜிக்குத் துணையாக நின்றன.
தந்தையிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பையும் பெற்றபிறகு காந்திஜி, தேவையற்ற பழக்கங்கள் அனைத்தையும் விட்டுவிட்டார்.
---------------------------------------------------------
நான் பள்ளியில் படிக்கும் போது நடந்த சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது . எங்கள் பள்ளியில் ஆண்டுதோறும் விளையாட்டு விழா , ஆண்டு விழா நடைபெறும் . நான் அப்போது 7 ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் . விளையாட்டு விழாவில் மாறுவேடப் போட்டி உண்டு .
அதில் நானும் கலந்து கொள்ள ஆசை . ஜேம்ஸ் சாரிடம் , சார் , என்ன வேஷம் போடலாம் என்று கேட்டேன் . ( ஏற்கனவே , நான் 6 ம் வகுப்பில் வேறு மாறுவேடப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன் ) . ஏய் , நீ காந்தி வேடம் போடு . நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் என்றார் . சரி என்று சொன்னேன் .
காந்தியை பற்றிய விவரங்களையும் , பொருள்களையும் சேகரித்தேன் . காந்தியை பத்தி ஜேம்ஸ் சாரே எழுதி தந்தார் . காந்தி அணிந்த கண்ணாடி போல , எங்க தாத்தா வைத்திருந்தார் . காந்தி கண்ணாடி எங்க தாத்தா கொடுத்தார் . கடிகாரம் , எங்கூட படித்த நண்பன் வீட்டில் இருந்ததை கொடுத்தான் . கதர் வேட்டி எங்கப்பா கொடுத்தார் .
பின்னர் , போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றேன் . எல்லோரும் பாராட்டினர் .
காந்தி ஜெயந்தியை கொண்டாடும் இவ்வேளையில் அவர் கூறிய கருத்துக்களை நினைவு கூறுவோம் .
ஸ்டார்ஜன்
nalla padhivu
ReplyDeleteநல்ல பகிர்வு
ReplyDeleteவாங்க டி வி ஆர் , வருகைக்கு நன்றி
ReplyDeleteஅட.. நானும் ஐந்தாம் வகுப்பில் மாறுவேடப் போட்டியில் காந்தி வேஷம்தான் போட்டேன்..! ரொம்ப ஈஸியான மேக்கப்பாச்சே.. அதுதான்..! நான் ஜெயிக்கலை.. நீங்க ஜெயிச்சிட்டீங்க.. வாழ்த்துக்கள்..!
ReplyDeleteகாந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்
ReplyDeleteகாந்தியை பத்தி சுவையான தகவலும் உங்க அனுபவமும் ரொம்ப சூப்பர் . வாழ்த்துக்கள் முதல் பரிசு பெற்றதுக்கு
ReplyDeleteநல்லதொரு பகிர்வு நண்பரே...
ReplyDeleteகாந்தியடிகள் குறித்த எனது பதிவு...
http://rajasabai.blogspot.com/2009/10/blog-post.html
Good to share
ReplyDeleteவாங்க சுரேஷ் வருகைக்கு நன்றி
ReplyDeleteஆஹா ! உண்மைத் தமிழன் சரவணன் , நீங்க நம்ம கட்சியா ...
ReplyDeleteவருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி ராஜா
ReplyDeleteகருத்துக்கும் நன்றி
வாங்க துபாய் ராஜா
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க அபு அஃப்ஸர்
ReplyDeleteவருகைக்கு நன்றி