Pages

Friday, September 3, 2010

நான் கோவலன் அல்ல..

என் விரல்களுக்குள்
ஒரு யுத்தமே நடந்தேறியது
உன்னை முதலில் யார்
தொடுவது என..

உன்னோடு வாழ்ந்த நாட்க‌ளும்
உன்னுடன் உறங்கிய
நாட்களும் என்னில்
வந்துவந்து இமை
மூடவிடாமல் இம்சிக்கின்றன..

முதல்நாள் சந்திப்பில்
என் கண்களுக்கு
புதிதாய் உன்முகம்
மறுநாளிலிருந்து
லப்டப் என‌ என்ஓசை
கேட்கும் அறையில்
உன்னை காண்கின்றேன்..

ஜனனம் முதல் மயானம்வரை
தொடரும் உறவுகளைப்போல‌
நானும் உந்தன் உறவானேன்..
அது நம்நட்பையும் தாண்டியதோ...

மாணிக்கப் பரல்களும்
முத்துப் பரல்களும்
கொஞ்சி விளையாடிய‌
முத்தமிழும் சங்கமித்த‌
நீ இருக்கும் நகருக்குள்
என்பாதம் படும் நேரத்தில்

வாராய் வாராய் என‌
கொடிகள் அசைந்து
நகருக்குள் வரவேண்டாம் என
மறுப்பு தெரிவிக்கவில்லை

ஏன்னென்றால் நான் கோவலனும் அல்ல‌
என்கையில் சிலம்பும் இல்லை..

மாறாக, மாறாத புன்னகையுடன்
வரவேற்க ஆவலுடன் நீ..

'கோ'வென்ற அரசனும் நீயில்லை
'பி'என்ற புலவனும் நானில்லை
காணாமல் நாமும் இருக்கவில்லை

இப்போதும் காண்கிறேன்
உன்னை என்மடியில்
திரையில் நிழல்படமாய்...

நண்பா என் நண்பா...

,

Post Comment

36 comments:

  1. //வாராய் வாராய் என‌
    கொடிகள் அசைந்து
    நகருக்குள் வரவேண்டாம் என
    மறுப்பு தெரிவிக்கவில்லை..//

    சிலப்பதிகாரத்திலேருந்தே சுட்ட எழுத ஆரம்பிச்சட்டிங்களா....இருங்க இருங்க.. இளங்கோவடிகள்கிட்ட போட்டுக்கொடுக்கறேன்....:))

    ReplyDelete
  2. மாணிக்கப் பரல்களும்
    முத்துப் பரல்களும்
    கொஞ்சி விளையாடிய‌
    முத்தமிழும் சங்கமித்த‌
    நீ இருக்கும் நகருக்குள்
    என்பாதம் படும் நேரத்தில்


    ....... ம்ம்ம்ம்ம்ம்...... என்னவோ போங்க.... நல்லா இருந்தா சரி!!!! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

    ReplyDelete
  3. அன்புள்ள நண்பர்களே!!.. ரமலான் மாதத்தில் இரவு மட்டுமே வேலை. வேலை அதிகமாக இருந்ததினால் என்னால் இடுகை எழுதமுடியவில்லை.. ஆயினும் என்பதிவுக்கு தினமும் வருகைதந்து நலம்விசாரித்து ஊக்கமளித்த‌ அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  4. வாங்க பிரதாப் @ தோசையை முறுகலா சுட்டாதான் நல்ல டேஸ்டா இருக்கும்.. ஹி ஹி ஹி ஹி...

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  5. வாங்க சித்ரா @ உங்க அன்புக்கு ரொம்ப நன்றி..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  6. @நாஞ்சில் பிரதாப்
    //சிலப்பதிகாரத்திலேருந்தே சுட்ட எழுத ஆரம்பிச்சட்டிங்களா....இருங்க இருங்க.. இளங்கோவடிகள்கிட்ட போட்டுக்கொடுக்கறேன்....:)) //

    போட்டுக்கொடுக்குறதே கொடுக்கிங்க. ஒரு அஞ்சு பத்து சேர்த்து போட்டு கொடுங்க.

    கவிதை நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  7. கவிதை சூப்பர்..

    ((நோன்பா இருப்பதால் இங்கும் அதே நிலைதான் ))

    ReplyDelete
  8. அன்பின் ஸ்டார்ஜன்

    நண்பனைப்பற்றிய கவிதை அருமை.

    சிலப்பதிகார வரிகள் கோ - மா வினை நினைவுபடுத்துகின்றன.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  9. கவிதை மிளிர்கிறது ஸ்டார்ஜன்!!

    ReplyDelete
  10. நல்லாயிருக்குங்க ஸ்டார்ஜன்...

    ReplyDelete
  11. க‌விதை ந‌ல்லா இருக்கு ஸ‌டார்ஜ‌ன்..

    ReplyDelete
  12. நல்ல வேளை திருமதி ஸ்டார்ஜன் தப்பிச்சாங்க..:))

    ReplyDelete
  13. //லப்டப் என‌ என்ஓசை
    கேட்கும் அறையில்
    உன்னை காண்கின்றேன்//

    அருமை சார் இது போன்று வரியை நான் எங்கும் கண்டதில்லை அருமையான கவிதை ஸ்டராஜன் சார் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. சூப்பர் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கவிதை ஷேக்
    நல்லாயெழுதியிருக்கீங்க.

    சமயம் கிடைக்கும்போது இதையும் பாருங்கhttp://fmalikka.blogspot.com/2010/09/blog-post.html

    ReplyDelete
  15. ///லப்டப் என‌ என்ஓசை
    கேட்கும் அறையில்///சூப்பர்.."என்ன அழகாக வடித்திருக்கின்றீர்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  16. அடடா.. கவிதை சூப்பரா இருக்கு....
    கொஞ்சமாய் ஒரு குழப்பம்.. வந்து.. கடைசியில் சரி ஆச்சுங்க.. :-)

    ReplyDelete
  17. "ஏன்னென்றால் நான் கோவலனும் அல்ல‌
    என்கையில் சிலம்பும் இல்லை.."

    கோவலன் கைகளில் சிலம்பா,கண்ணகியின் கைகளில் சிலம்பா.

    எப்படி இருப்பினும் கவிதை வரிகள் அருமை.
    வாழ்த்துக்கள் சேக்.

    ReplyDelete
  18. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்.
    ஆமா, நம்ம பக்கம் ஆளையே காணோம்.
    வந்துட்டுப் போறது.

    ReplyDelete
  19. வாங்க அக்பர் @ ரொம்ப நன்றி..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  20. வாங்க ஜெய்லானி @ ரொம்ப நன்றி..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  21. வாங்க சீனா அய்யா @ ரொம்ப நன்றி.. உங்களின் பாராட்டு என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  22. வாங்க புதிய மனிதா @ ரொம்ப நன்றி..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  23. வாங்க சைவகொத்துப்ப்ரோட்டா நண்பா @ எப்படி இருக்கீங்க.. ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  24. வாங்க வெறும்பய @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  25. வாங்க வெறும்பய @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  26. வாங்க எல்கே @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  27. வாங்க ஸ்டீபன் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  28. வாங்க டிவிஆர் சார் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  29. நட்பு எதையும் எதிர்பார்க்காத அன்பு. கவிதை நல்லாயிருக்கு.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்