"ஆமா.. எப்பப்பாரு அவன்கூடயே சுத்திக்கிட்டு அலையுதான். அவனும் சரியில்ல., அவனோட சேருமானமும் சரியில்ல..வெறுவாக்கட்டவன்.
மேரி மாதா தான் அவனுக்கு நல்ல புத்திய கொடுக்கணும். வரட்டும் அந்தோணி. ரெண்டு டோஸ் விட்டாத்தான் சரியா வருவான். வட்டிக்காரன் வேற வருவான்., பணம் கொடுக்கணும்" என்றாள் ஆரோக்கியம்.
"சரில ஜோசப்பு.. அண்ண வந்தா அந்த போட்டுல மோட்டாரெல்லாம் நல்லாருக்கா.,வலைய சரிப்பாக்கச் சொல்லு.. நா இந்த மீனுகள வித்துட்டு செத்த தேரத்துல வந்துருவேன். நீ செல்வியக்கா வீட்டுக்கு போயி அம்மா ரூவா கேட்டாகன்னு சொல்லி பணம் வாங்க ஒரு எட்டுபோயிட்டு வா என்ன.. நா கிளம்புறேம்முல.. வீட்ட பாத்துக்கோ" என்று சொல்லியபடி ஆரோக்கியம் மீன்கூடையை தலையில் சுமந்தபடி சென்றாள்.
**********************
"மீன் வாங்கலியோ.. மீன் மீன்னு.. யம்மோய் மீன்னு வாங்கலியோ.."
"ஏய் எலா சாச்சி.. என்ன மீனெல்லாம் வச்சிருக்கே.."
"பாறை, மத்தி, வஞ்சிரம், வாவல், சூர, கெழுத்தி எல்லா மீனும் வச்சிருக்கேன்லா சாச்சி"
"எல்லாம் பழசுமாதிரி இருக்கு.."
"பழசுல்லாம் கிடையாது சாச்சி.,எம்புள்ள ராத்திரிதான் கொண்டு வந்தான். இத்தன வருசமா வாங்குற., உனக்குபோயி பழசு தருவேனா சாச்சி."
"சரி சரி சும்மா கேட்டேன். ஆமா சாச்சா போனதுக்கு அப்புறம் அந்தோணிதான் கடலுக்கு போறானாலா சாச்சி. பாவம் கொஞ்சவயசுலே சாச்சா போயி சேந்துட்டாரே.. பாவம் நீயும் ரெண்டு புள்ளகள வச்சிக்கிட்டு கஷ்டப்படுதே.. கடவுள் உனக்கு வழி காட்டுவாரு.. கவலபடாதேலா சரியா"
"ம்ம்.. என்ன செய்ய.. அவரு சேருமானம் சரியில்லாத சேக்காளிக்கூட சேந்து போயி சேந்துட்டாரு. சரி சரி நா நாலுத் தெருவுக்கு போவணும் வாரேன்லா சாச்சி."
"மீன் வாங்கலியோ.. மீன் மீன்னு.. மீன்னு வாங்கலியோ.."
"ஏய்ய்.. ஏய்.. எலே அந்தோணி.. கூப்பிடறது காதுல விழலியோ..வீட்டுக்கு போலே.. நா செத்த நேரத்துல வருவேன்" என்று தெருவில் போய்க்கொண்டிருந்த அந்தோணியிடம் சொன்னாள் ஆரோக்கியம்.
*************
"எல அந்தோணி.. உம்மனசுல என்ன நினச்சிக்கிட்டு இருக்க., அந்த பிச்சபயக்கூட சுத்திக்கிட்டு அலையுதே., உங்கப்பா போனதுக்கு அப்புறம் உங்க ரெண்டுபேத்தையும் வளக்க எவ்வளவு கஷ்டப்படுதேன். உங்கப்பா எப்படி செத்தாருன்னு தெரிஞ்சிருந்தும் எப்படில உனக்கு இப்படி சுத்துறதுக்கு மனசு வருது. நாங்கல்லாம் உன்னநம்பிதான் இருக்கோம். உனக்கு எதாவது ஒண்ணு ஆச்சுன்னா எங்களால தாங்கிக்கிக்க முடியுமா.. சொல்லு... ம்ம்ம்..ஹூம்.." சேலை முந்தானையை கொண்டு கண்ணைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.
"அழுவாதம்மா அழுவாத.. சரி சரி நீ சொல்றபடியே இருக்கிறேன். பிச்ச நல்ல பயல்ம்மா... நீ நினைக்கிறமாதிரி கிடையாது. அவன் எனக்கு நிறய உதவி செஞ்சிருக்கான்ம்மா.. நா முதலாளிய பாத்து பேசிருக்கேன்.. பணம்தர்றதா சொல்லிருக்காவ., போட்டுக்கு வாடக கொடுக்கணும். நீ கவலப்படாதே நா இருக்கேன் சரியா" என்றான் அந்தோணி.
"சரிப்பா,, நீ நல்லாருக்கணும் அதான் என்னோட ஆசை" என்றாள் ஆரோக்கியம்.
"அம்மா.. அம்மா.. விளக்கு வைக்கிற நேரமாச்சி.. கருக்கல்லா ஆகிருச்சி.. நா கடலுக்கு போயிட்டு வாரேம்ம்மா.." என்று வலையை தோளில்போட்டுக் கொண்டு அந்தோணி கிளம்பினான்.
"சரிப்பா., இந்த அரிசிய சாப்பிட்டு போ..இந்தாப்பா" என்று அம்மா கொடுத்த அரிசியை வாயில்போட்டு கொறித்துக் கொண்டே சென்றான் அந்தோணி.
கர்த்தாவே.. இன்னக்கி நிறைய மீன் கிடைக்கணும் என்று வேண்டியபடியே போட்டில் ஏறி அமர்ந்தான்.
**********
கடலில் காற்று இதமாக வீசிக் கொண்டிருந்ததை சுகமாக அனுபவித்தான் அந்தோணி. இது வழக்கமா இருந்தாலும் இன்று மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது. கடலலை அவனை ஒரு அன்னைபோல தாலாட்டிக் கொண்டிருந்தது.
அவனுக்கு அம்மா சொன்னது நினைவலைகளாய் நெஞ்சில் அலைமோதியது. அவனுடைய மனதும் அலைகளோடு பயணித்தது.
எங்கப்பா சூசை, தினமும் கடலுக்கு போயி மீன் பிடிச்சி கொண்டு வருவார். எங்கப்பா ராசிக்கு நிறைய மீன்கள் வலையில விழுமாம். எங்கப்பா பிடிச்சிட்டு வர்ற மீன்கள் நல்ல விலைக்கு போகுமாம். நல்ல வருமானம் வரும். எங்கம்மா இத சொல்லி சொல்லி பெருமைப்பட்டுக்குவாங்க. எங்கப்பாவுக்கு எங்க குப்பத்துல நல்ல பேரு. ஆனா அவரோட சேக்காளிக எல்லோரும் எங்கப்பாவ குடிக்க வச்சி அவருக்கிட்டருந்து பணத்த கறந்துருவாங்க. எங்கப்பாவும் குடிபோதைக்கு அடிமையாகி வீட்டுல அம்மாவையும் எங்களையும் அடிப்பாரு.
தினமும் அடிதான். நாளாகநாளாக அப்பா கடலுக்கு போறதே இல்ல.. எப்பாவாச்சும் போவாரு. வீட்டுல ரொம்ப கஷ்டமானதால அம்மா வீடுகளுக்கு போயி பத்துப்பாத்திரம் தேச்சாதான் எங்களுக்கு ஒரு நேர கஞ்சி கிடைக்கும். அம்மாவும் அப்பாவுக்கு எவ்வளவோ சொல்லிப் பாத்துச்சி., அப்பா திருந்தவே இல்ல. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கடலுக்கு போனவரு போனவர்தான். திரும்பி வரவே இல்ல.
ம்ம்.. என்ன செய்ய.. எல்லாம் விதி. படிக்கவேண்டிய வயசுலயே கடலுக்கு வந்தாச்சு..
கடல் ஒரு அமுதசுரபி. நீங்க என்ன கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம தரும். கடல்தான் எங்களுக்கு எல்லாமே. இங்குள்ளவர்களுக்கு இந்த கடல் ஒரு அன்னை போல. இங்குள்ள எல்லோருக்கும் இந்த கடல் அத்துப்படி. எந்த நேரத்துல என்ன சூழ்நிலை இருக்கும். கடல் எப்போ உள்வாங்கும்;கடல் எப்போ சீறும்; இயற்கை மாற்றங்கள் எப்படி இருக்கும் என்பதை கடலலைகள் சொல்லாமல் சொல்லும். மேலும் சில அறிகுறிகளும் தெரியும். அதைவைத்து யாரும் அன்னக்கி கடலுக்கு போக மாட்டோம்.
கடலுக்கு போறவங்க திரும்பி வர்றது மறுஜென்மம் எடுக்கிறமாதிரி. எங்களுக்கு எப்போ என்ன நடக்குமுன்னு தெரியாது. நாங்க திரும்பி வரும் நேரத்துல எங்க குடும்பத்துல இருக்கிற அம்மா, மனைவி, பிள்ளைங்க என்று எல்லோரும் கரையில் காத்து இருப்பாங்க. நாங்க திரும்பி வர்றத பாக்கிற எங்களுக்கும் அவங்களுக்கும் வருகிற சந்தோசத்துக்கு அளவே இல்ல.
நாங்க போகும்போது அரிசி கொடுத்து வழியனுப்பி வைக்கிறவங்க விளக்கு ஏத்தி அதை அணையாம பாத்துக்கிருவாங்க. அணைந்தால் கடலுக்குள்
போனவங்களுக்கு ஏதோ ஆகிப்போச்சின்னு ஒரு நம்பிக்கை.
இருட்ட ஆரம்பிக்கும்போது கடலுக்கு போகிற நாங்க, நடுசாமம் கழிச்சி விடியிற சமயத்துல மீன் பிடிச்சிட்டு வருவோம். வந்தவுடனே மீன் வியாபாரிங்க மீன பூராவும் ஏலத்துல எடுத்துக்கிருவாங்க.. அவங்க வச்சதுதான் விலை. எதுத்து பேசினா மறுநாளைக்கு மீன் எடுக்க மாட்டாங்க. ஒரு கூடை மீன் இருநூறு முன்னூறு ரூபாய்க்குதான் தர ரேட்டுக்கு போகும். என்ன செய்ய..
சில நேரங்களில் மீன் எதுவும் கிடைக்கலின்னா அன்னக்கி பட்டினிதான்.
இதுதான் எங்களோட வாழ்க்கை.
************
"எலே.. அந்தோணி.. இன்னக்கி மீன் கிடைச்சுதாலே" என்றார் முதலாளி. "ஆமா முதலாளி.. நேற்றைவிட இன்னக்கி கொஞ்சம் கம்மிதான்" என்ற அந்தோணிக்கு "சரி சரி.. மீன வித்து காச வீட்டுல கொடுத்திரு.., நா டவுனு வரைக்கும் போயிட்டு வாரேன்" என்றபடி சென்றார்.
"ஏய்.. அந்தோணி.. உன்னோட மீன ஏலத்துக்கு கொண்டுவா.. சீக்கிரம் நேரமாவுது.." என்று அழைத்தான் மீன் ஏலம் நடத்துபவன்.
"சரிண்ணே.. இந்தா கொண்டு வாரேன்.." என்றபடி அந்தோணி மீனை ஏலத்தில் வைத்தான்.
கர்த்தாவே!.. நல்ல விலைக்கு எடுக்கணுமே என்று மனதில் வேண்டிக்கொண்டான். முதலாளிக்கு பணம் கொடுக்கணும்., போட்டு வாடகை கொடுக்கணும்., கடன்காரங்களுக்கு கொடுக்கணும்., இதெல்லாம் போகத்தான் அவனுக்கு எதாவது மிஞ்சும்.
ஏலம் முடிந்து கையில் வந்த பணத்தை எண்ணிப்பார்த்தான். நேற்றைவிட குறைவு.
எல்லோருக்கும் கொடுத்ததுபோக மிச்சமிருந்த பணம் சட்டைப் பாக்கெட்டிலிருந்து சிரித்துக் கொண்டிருந்தது.
மனதில் பாரத்துடன் அவனுடைய கால்கள் சென்றன.. வீட்டை நோக்கி....
,
kathai patikkaiyil manam kanaththu pooyvittathu .azakaana miinavathamizil peessu vazakkai kondu senRathu suvaarSyam.
ReplyDeletehai..vadai enakkuththaan.
ReplyDeletewalla kathaasiriyar aakittu varringka Starjan.vaazththukkaL!
ReplyDeleteவாங்க ஸாதிகாக்கா @ ரொம்ப நன்றி உங்க அன்புக்கு.. உங்க பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
ReplyDeleteஅந்த போட்டோ, நான் மணப்பாடு (திருச்செந்தூர் பக்கத்துல) போயிருக்கும்போது எடுத்த படம்.
தமிழ்மணத்துல இணைக்க முடியல.. யாராவது இணைச்சிருங்க..
ReplyDeleteஅப்பாடி.. ஒரு வழியா தமிழ்மணத்துல இணைச்சாச்சி..
ReplyDeleteஸாதீக்காக்கா, வடை உங்களுக்கு தான் என்றாலும் மீன் எனக்கு தான்!! ஹி..ஹி..
ReplyDelete// கடல் ஒரு அமுதசுரபி. நீங்க என்ன கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம தரும்//
ReplyDeleteமிகச் சரியான வார்த்தை. கதாசிரியரின் அனுபவம் இதில் பளிச்சிடுகிறது..
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு..,
ReplyDeleteமிக அருமையான கதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநம்ம ஊர் மீனவர்கள் கிராமத்தில் நடக்கும் அந்த இனிய நினைவுகளை கதையின் கருவாக்கி கதை சொன்ன விதம் அருமை சேக்.
ReplyDeleteநிறைய பேரோட வாழ்க்கை இதுதான்!!!
ReplyDeleteவறுமையின் வாழ்வுப் போராட்டம் கதை முழுதும் பரவிக்கிடக்கிறது கடலின் அலைகள்போல !வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.
ReplyDeleteகலக்கல்...
ReplyDeleteநல்ல எழுத்து நடை ஸ்டார்ஜன்..
ReplyDeleteவாங்க அப்துல்காதர் சார் @ ரொம்ப நன்றி.. பாராட்டுக்கு நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க டாக்டர் சுரேஷ் @ ரொம்ப நன்றி தல..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க எஸ் கே @ ரொம்ப மகிழ்ச்சி.. நன்றி பாராட்டுக்கு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க பாய். அவங்க பேசற பாஷையும் நல்லா வருது. கடைசில பாவம்னு நினைக்க வெக்குது!!. கஷ்டம்தான் இப்படி உடலை வருத்தி,உயிரை கயில புடிச்சு வேலை செய்யறவங்க ஜீவனம்.!!
ReplyDeleteமீனவ நண்பன்! பாவம்தான்.
ReplyDeleteகடல் வாழ்க்கையை அழகாய் கண்முன்னே கொண்டுவந்துவிட்டீர்கள்.
ReplyDeleteமிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக
ReplyDeleteஅருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
கதை நல்லா இருந்தது ஸ்டார்ஜன்.
ReplyDeleteமீனவர் அன்றாட வாழ்க்கையை அழகா சொல்லியிருக்கீங்க..
ReplyDelete//"ஆமா.. எப்பப்பாரு அவன்கூடயே சுத்திக்கிட்டு அலையுதான். அவனும் சரியில்ல., அவனோட சேருமானமும் சரியில்ல..வெறுவாக்கட்டவன்.//
பேச்சு நடை, சூப்பர்.. :-)))
எனக்கு ஊர்பக்கம் பேசுறது, ஞாபகம் வந்திருச்சு. வெருவாகெட்ட பயன்னு..... :D :D
///அந்த போட்டோ, நான் மணப்பாடு (திருச்செந்தூர் பக்கத்துல) போயிருக்கும்போது எடுத்த படம்.///
வாவ்.. சூப்பரா இருக்குங்க.. P .C .ஸ்ரீராம்-கு அச்சிஸ்டேன்ட்டா போயிறலாம் போல இருக்கே?? :-))))
வாழ்த்துக்கள் மாச்சான்
ReplyDeleteசூப்பரான வட்டார வழக்கில் அருமையான கதை.. நல்லாருக்கு.
ReplyDeleteகதை அருமை.ஸ்டார்ஜன்.
ReplyDeleteSuper Story Nanbarey. Akbar phone seithara?
ReplyDeleteகதை ரொம்ப நல்ல இருக்கு
ReplyDeleteமீனவர்களின் வாழ்க்கை ரொம்ப கஷ்டம் தான். ஆனால எல்லோஒரும் விரும்பி சாப்பிடும் மீன் , அவர்கள் உயிரை ப்ணயம் வைத்து பிடித்து வருகிறார்கள்.
கடல் அமுத சுரபி.. ஆனா மனுஷங்கதான் அப்படி இல்லை..ஸ்டார்ஜன்..
ReplyDelete