Pages

Sunday, October 10, 2010

உங்ககிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?.. (தொடர் பதிவு)

நேற்று நண்பர் "மங்குனி அமைச்சரிடமிருந்து" அவசர ஓலை! அதிலிருந்த சாரம்சம் கீழே!

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? (தொடர் பதிவு)

முஸ்கி : நண்பர்களே நேற்று "சந்தோஷ் பக்கங்கள்" இந்த பதிவை போட்டு இருந்தார், "இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க" அப்படின்னு கேட்டு இருந்தார், ரொம்ப நல்ல விஷயம் எனவே நண்பர்களே உங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு நாளாவது உங்கள் பிளாக்கில் இந்த பதிவை போடுங்க நிறைய பேருக்கு ரீச் ஆகும். விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்த தொடர்பதிவை தொடரலாம் .

For your quick referance:

http://santhoshpakkangal.blogspot.com/2010/10/blog-post.html

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா? அதை எங்களிடம் கொடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு கொடுக்கிறோம்.

CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால்...

"இந்த சுட்டியில்"

https://spreadsheets1.google.com/viewform?hl=en&formkey=dEU1d2gzVnNVVTBMR3Z2eGNiMS1RaVE6MQ#gid=0

உள்ள EXCEL FORM-ஐ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக் கொள்வார்கள். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.

முத்துலட்சுமி அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொடுக்கப் போறாங்க. எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் கொடுங்க. கிழிந்த நிலையில் உள்ள துணிகளை எல்லாம் கொடுக்காதீங்க பிளீஸ்!!

இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஐந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க!!

(நன்றி : சந்தோஷ் பக்கங்கள் + மங்குனி அமைச்சர்)


-------------------

டிஸ்கி : உதவி பண்றேன்னு பெருமைக்காக நிறைய பேர் கிழிந்த,
உடைந்த பொருட்களை தருகிறார்கள், உங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை, கொடுக்கபோகும் துணிகளை நன்றாக துவைத்து,
அயன் செய்து உபயோகிக்கும் நிலையில் கொடுங்கள்.
இல்லையென்றால் சும்மா இருங்கள். யாரும் உங்களை குறை
சொல்ல மாட்டார்கள்.
----------
உங்களின் அவசர வேலையின் நேரத்திலும், சில நிமிடத் துளிகள் ஒதுக்கி படித்து மனதால் புரிந்து கொண்டமைக்கு நன்றி!!

,

Post Comment

11 comments:

  1. நல்ல பகிர்வு தொடரட்டும்!!

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  3. ஸ்டார்ஜன் நானா, நலமா? நானும் இந்த தொடர் பதிவில் கலந்துக் கொண்டு, என்னுடைய ப்ளாக்கிலும் பகிர்ந்துள்ளேன். உங்களின் தகவலுக்கு நன்றி நானா!

    ReplyDelete
  4. ஸ்டார்ஜன் உங்கள் உதவி செய்யும் தகவலை எல்லோருமே சொல்கிறார்கள் செய்கிறார்கள்.உங்கள் டிஸ்கிதான் சிறந்த பதிவு !

    ReplyDelete
  5. பகிர்வுக்கு பாராட்டு.

    ReplyDelete
  6. ந‌ல்ல‌ ப‌கிர்வு ஸ்டார்ஜ‌ன்..

    ReplyDelete
  7. நானும் பார்த்தேன் நண்பரே...
    அவசியமான இடுகை என்பதைவிட நல்லதொரு இடுகை.
    அதற்காக நீங்களும் பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அருமை நண்பரே தொடர்ந்து எழுதுங்கள் தொடர்ந்து படிக்கிறேன்.

    நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்