அண்டம் என்பது எண்ணிடலங்கா நட்சத்திரங்களும் கோள்களும் அடங்கிய ஒரு பால்வெளி. கண்ணுக்கு தெரியாத புலப்படாத எண்ணற்ற நட்சத்திரங்கள் மின்னுகின்றன. அதில் நம் கண்ணுக்கு தெரிந்த அருகிலுள்ள சூரியன் ஒரு நட்சத்திரம். சூரியனுக்கு 9 கோள்கள் நீள்வட்டபாதையில் சுற்றிவருகின்றன. இந்த ஒன்பது கோள்களுக்கும் ஒன்று அல்லது ஒன்றுக்குமேற்பட்ட துணைக்கோள்கள் உண்டு. நம்முடைய பூமிக்கு சந்திரன் என்ற துணைக்கோள் பூமியை சுற்றிவருகிறது.
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் ஆகிறது. சூரியனை சுற்றிவர 365 1/4 நாட்கள் ஆகின்றன. இதனால் தான் காலநிலை மாற்றங்கள் மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால்தான் இரவுபகல் மாறிமாறி வருகிறது.
இன்று நீண்டபகல். இன்று சூரியன் அஸ்தமனமாவது அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஜூன் மாதம் 22ம்தேதி நீண்டபகல். நாம் இருக்கும் இந்த பூமத்திய ரேகை அருகில் இருப்பவர்களுக்கும் வடதிசையில் இருப்பவர்களுக்கும் இன்று நீண்ட பகல். இதே நாள் தென்துருவத்தில் இருப்பவர்களுக்கு இன்று நீண்ட இரவு.
எதனால் இப்படி ஆகிறது என்று நான் கூகிள் மற்றும் இதர தளங்களில் சேகரித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நீண்ட பகல் எப்படி உண்டாகிறது?.

புவியின் வடகோளம் சூரியனை நோக்கியும் புவியின் தென்கோளம் சூரியனை விட்டு விலகியும் இருப்பதால் வடகோளத்தில் பகல்பொழுது மிக நீண்டதாக இருக்கிறது.
இன்று பூமி சூரியனில் இருந்து மிக நீண்ட தூரத்தில் உள்ளது.
இன்றில் இருந்து பகல்பொழுது மெல்லமெல்லமாக குறையத் தொடங்குகிறது ...!
டிசம்பர் மாதம் 23ம் நாள், வடகோளத்தில் நீண்ட இரவு நாள் ஆகும்.
இந்த நாளில் பூமி, சூரியனில் இருந்து மிகக் குறுகிய தூரத்தில் உள்ளது.
நீண்ட இரவு எப்படி உருவாகிறது?.
வடகோளக் கோடைகாலம் --------21/03--------- வடகோளக் குளிர்காலம்


இந்த ப்ளாஸ் கோப்பை நீங்கள் காண்பதன் மூலம் என்ன காரணம் என்று விளங்கிவிடும். பூமியின் இடத்தை மாற்றிவைத்து பாருங்கள். நீண்டபகலும் இரவும் எவ்வாறு உருவாகின்றன என்பது விளங்கிவிடும்.
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
,
