Pages

Monday, July 5, 2010

தமிழ்மண நட்சத்திரமாய் உங்கள் ஸ்டார்ஜன்


அன்புள்ள நண்பர்களே!!.. தமிழ்மண நிர்வாகத்தினர் இந்தவார தமிழ்மண நட்சத்திரமாக என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள். ரொம்ப சந்தோசமாக உள்ளது. இந்த சந்தோசத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன். கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் தமிழ்மணத்திலிருந்து ஜூலை 5ம்தேதி முதல் ஜூலை 12ம்தேதி வரையிலான தமிழ்மண நட்சத்திர வாரத்தில் உங்களை நட்சத்திரமாக தேர்வு செய்துள்ளோம் என்ற மின்னஞ்சல் எனக்குள் ஒரு இன்பதிர்ச்சியாக இருந்தது. அந்த திகைப்பிலிருந்து வெளியேற சிறிதுகால அவகாசம் தேவைப்பட்டது.

நட்சத்திரமாக தேர்வு செய்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கு உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் என் நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்மண நிர்வாகத்தினர் செய்துவருமிந்த உயரிய சேவையை யாராலும் மறக்க முடியாது. மகத்தான சேவை. பதிவுலகில் வலம்வந்து கொண்டிருக்கும் அத்தனை பதிவர்களுக்கும் ஒரு அங்கீகாரம் கொடுத்து அவர்களின் பதிவுகளை திரட்டி எழுத்துலகில் மின்னுவதற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துவரும் தமிழ்மணத்தினருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் அது ஈடாகாது.

ஆனால் கடந்த சில நாடகளாக பதிவுலகில் நடந்துவரும் தேவையில்லாத சர்ச்சைகளும் குழப்பங்களும் மனதுக்கு வேதனை அளிக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான பதிவர்கள் தங்களுடைய படைப்புகளை வெளியிட்டுவருகிறார்கள். இதில் நிறைய புதியவர்கள் எழுத வந்திருப்பது மகிழ்ச்சியான விசயம். அவர்கள் இதையெல்லாம் பார்த்து ஏன்டா நாம் எழுதவந்தோம் என எண்ணி வருந்தும் அளவுக்கு நம்முடைய பதிவுகள் இருக்கக்கூடாது. காலத்தால் அழியாத படைப்புகளாக இருக்கவேண்டும். பிற்காலத்தில் நமது சந்ததியினர் திருப்பிப்பார்க்கும்போது நமது எழுத்துக்கள் அவர்களை ஈர்க்கவேண்டும்.

நாம் அனைவரும் நமக்கு தோன்றியதை எழுதிவருகிறோம். யாரும் இலக்கியமெல்லாம் படித்துவந்து எழுதவில்லை. அதற்காக, நம்முடைய வலைப்பூவில் இடுகைகள் கொச்சையாகவும் மோசமாக தாக்கியும் இருக்கக்கூடாது. பதிவு எழுதும்போது எழுத்தில் கவனமும் கண்ணியமும் இருக்கவேண்டும். அப்படி கீழ்த்தரமாக எழுதுபவர்களின் பதிவுகளை நாம் எட்டிக்கூட பார்க்ககூடாது.

எழுத்து என்பது நமது எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. உதாரணத்துக்கு பள்ளிக்கூடத்தில் நாம பரிட்சை எழுதும்போது பேப்பரில் நமது எழுத்துதான் ஆசிரியர்களிடம் நம்மைபற்றி பேச வைக்கிறது. பேப்பரை பார்த்தவுடனே தெரிந்துவிடும். நாம் படித்திருக்கிறோமா இல்லையா என்பதை நமது எண்ணங்கள் எழுத்தின்மூலம் சொல்லிவிடும். எழுதியிருப்பதற்கு தகுந்தாற்போல மதிப்பெண்களை பெறுகிறோம். ஆக எழுத்து அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது.

ஆர்வம், கற்பனை வளம்தான் நமக்கான தூண்டுகோல். அது இல்லையெனில் நாம் இந்த உலகில் பிரகாசிக்கமுடியாது.

சிறுவயதில் எனக்கு படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஐந்தாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். அந்த சமயத்தில் எங்க வீட்டுக்கு அருகில் ஒரு படிப்பகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அது சிறிய நூலகம்போல.. தினசரி செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள் அங்கு வைக்கப்பட்டிருக்கும். எனக்கு அங்கு செல்ல ஆசை. ஆனால் அந்த படிப்பகத்தின் பொறுப்பாளர் என்னைப்போன்ற சிறுவர்களை படிப்பகத்தில் சேட்டைகள் செய்வார்கள் என்று அவர் அனுமதிப்பதில்லை.

நான் அங்குசென்று, "சார்சார் நானும் படிக்கணும்ன்னு ஆசையா இருக்கு என்னை உள்ளவிடுங்க சார்" என்று கேட்டேன். உடனே அவர், "போலே.. உள்ளப்போயி சேட்ட பண்ணவா.. போ போ.. பாடபுத்தகத்தை படிடா.." என்றார். "சார் சார், நா நல்ல படிப்பேன். ஸ்கூல்ல நாந்தான் கிளாஸ் பர்ஸ்ட். என்னை உள்ளபோகவிடுங்க சார்" என்றேன். அவர் நம்பவில்லை என்று தெரிந்ததும் என்னுடைய மதிப்பெண் அட்டையை எடுத்துக்காட்டினேன். அவர் உடனே மகிழ்ந்து "தம்பி நீ நல்லா படிக்கிறியே.. இன்னும் நல்லா படிக்கணும்..உங்கப்பா உன்னையை கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறதுக்கு நீ நல்லா படிச்சி பேர் வாங்கணும். நீ எப்போ வேணுன்னாலும் இந்த படிப்பகத்துக்கு வரலாம்" என்று அவர் அனுமதி கொடுத்ததும் என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவில்லை.

என் நண்பர்களிடம் சொன்னதும் அவர்களுக்கும் சந்தோசம். அவர்களும் போகவிரும்பி என்னிடம் "எலய் சேக்.. அந்த படிப்பக சார்ட்ட சொல்லி எங்களையும் உள்ளபோக அனுமதி கொடுக்கசொல்லுலே ப்ளீஸ் என்றார்கள். சார் அனுமதித்ததும் நானும் அவர்களும் அங்கு சென்று படிப்பது வாடிக்கையானது. எங்களூர் நூலகத்தில் படிக்கஆசை. பள்ளிக்கூடம் விட்டதும் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு நூலகத்துக்கு சென்று படிப்பேன். அங்கு இருக்கும் நிறைய புத்தகங்களில் ஆர்வமிகுதியால் எதை முதலில் படிப்பது என்ற குழப்பம் பலமுறை ஏற்பட்டிருக்கிறது. சிறிதுகாலத்துக்கு பின் அந்த நூலகத்தை கொஞ்சம் தொலைவில் மாற்றிருந்த காரணத்தால் அம்மாவிடம் அனுமதிபெற்று வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு சென்று படிப்பேன்.

நூலக வாசிப்பில் நாவல்களும் இடம்பெறும். விலைக்கு வாங்கிய நாவல்களை ஆர்வமுடன் படிக்கும்போது திட்டுக்கள் விழும். சில நேரங்களில் அந்த புத்தகங்களை ஒளித்துவைத்து விடுவார்கள். பின்னர் அதை தேடிப்பிடித்து மீண்டும் தொடரும் எனது வாசிப்பு. கல்லூரியில் படிக்கும்போது அங்குள்ள நூலக சாரிடமும் பாராட்டுக்களை பெறுவேன். ஆண்டுஇறுதியில் நூலக புத்தகங்களை கணக்கெடுக்கும் பணியில் என்னையும் சேர்த்துக்கொண்டார். அப்படி கணக்கெடுக்கும்போது புத்தக விபரங்கள், புத்தகங்களின்வகை, எந்தவருடம் பிரசுரிக்கப்பட்டது, எங்கெங்கு பதிப்பகங்கள் உள்ளன போன்ற விபரங்களை அறிந்து கொண்டேன்.

புதுபுது விசயங்களை பற்றி தெரிந்துகொள்ள நம்முடைய படிப்பு, வாசிப்பு அனுபவ‌ங்கள் கற்றுக்கொடுக்கும். இதனால் நம்முடைய கற்பனைவளத்தைக் கொண்டு நாம் எழுத்துக்களில் பிரகாசிக்கலாம். நம்முடைய தளங்களை படிக்கவரும் அனைவருக்கும் போரடிக்காமல் சுவாரசியமாக இருக்கவேண்டும். கற்பனைதான் சாதனைகளின் மூலதனம் என்று சொல்லலாம்.

எனவே நண்பர்களே.. உங்கள் கற்பனைகளுக்கு தீனி போடுங்கள். உங்கள் எழுத்துக்கள் பிறரால் போற்றப்படவேண்டும். எழுத்திற்கு ஒரு கண்ணியம்கொடுங்கள். பிறர் மனம் வருந்தும் அளவுக்கு உங்கள் எழுத்துக்கள் ஆகிடக்கூடாது.

என்னுடைய எல்லாப்பதிவுகளையும் படித்து எனக்கு ஊக்கமும் ஆதரவும் கொடுத்துவரும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

என்னை தமிழ்மண நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ்மண குழுவினருக்கு மீண்டும்மீண்டும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

66 comments:

 1. VERY GOOD, HAPPY TO SEE U AS STAR, ALL THE VERY BEST

  ReplyDelete
 2. நட்சத்திர வாழ்த்துக்கள்..

  ஆரம்பப் பதிவே தற்போதிய சூழலில் மிக அவசியமான பதிவு ..

  ReplyDelete
 3. ஒரே ஒரு சின்ன வேண்டுகள்.
  போன வார நட்சத்திர பதிவர் கிருத்திகா, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் பதிவையே திறந்தார் என நினைக்கிறேன், அதிலும் பின்னூட்டம் இட்ட ஒரு வாசகரகளுக்கும் ஒரு அடிப்படை பண்பு என்ற முறையில் நன்றி என்று ஒரு வார்த்தை கூட பதில் அளிக்க வில்லை,

  நீங்களாவது தினமும் பதிவை திறந்து, பின்னூட்டம் இட்ட , படித்த வாசகர்களுக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லுங்கள் நண்பரே.
  முதலில் மனிதனாய் இருக்க கற்று கொள்வோம், பின்பு பதிவர், எழுத்தாளர், எழுத்து சித்தர் எல்லாம்

  ReplyDelete
 4. வாங்க செந்தில் @ வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 5. வாங்க ராம்ஜி @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி . உங்களை போன்றோரின் ஆலோசனைகள் என்னை மேலும்மேலும் ஊக்குவிக்கும்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 6. தமிழ்மணம் நட்சத்திரம் என்பது மிக மகிழ்ச்சியான ஒன்று.

  உங்கள் பதிவுகள் இன்னும் நிறைய நண்பர்களைச் சென்றடைய இது நல்லதொடு வாய்ப்பு

  வாழ்த்துகள் ஸ்டார்ஜன்

  ReplyDelete
 7. நட்சத்திர வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 8. தீர்க்கமான சிந்தனை, நல்லா எழுதியிருக்கீங்க, வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. //எழுத்து என்பது நமது எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. //

  மிகச்சரியா சொன்னீங்க பாஸ்..!! வாய திறந்தா தெரியும் அவங்க எப்படி பட்ட ஆளுன்னு  வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..தமிழ்மண நட்சத்திரம்...வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 10. ஸ்டார்ஜன் = நட்சதிரம் .. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அவசியமானப்பதிவு,
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அட்ரா சக்கை! அட்ரா சக்கை! .... மனமகிழ்வுடன் வாழ்த்துகிறோம்!

  ReplyDelete
 13. மனமார்ந்த வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 14. நட்சத்திர வாழ்த்துகள்..

  ReplyDelete
 15. நட்சத்திர வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 16. உங்களுக்கு கிடைத்த இந்த அறிய வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் ஸ்டார்ஜன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. அடிச்சு ஆடுங்க, சிறப்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. ஸ்டார்ஜன்..

  வாழ்த்துக்கள்..!

  ஆரம்பிங்க உங்க கச்சேரியை..!

  ReplyDelete
 19. நட்சத்திர வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

  வாசிப்பின் மகத்துவத்தை உங்கள் அனுபவத்தின் வாயிலாக சொல்லியிருக்கும் விதம் நன்று.

  ReplyDelete
 20. நட்சத்திர வாழ்த்துக்கள் தல.....

  வழக்கம் போல் அடிச்சு ஆடு

  ReplyDelete
 21. நட்சத்திர நாயகருக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 22. நட்சத்திர வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 23. நல்வாழ்த்துகள் தம்பி, தொடந்து எழுதும் உங்களுக்கு இவ்வாய்ப்பு விரைவிலேயே கிடைத்தது அதற்கான ஒப்புதல் தான்.

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள். பதிவு எழுதுவது குறித்து நீங்கள் கூறிய தகவல்கள் மிகுந்த பயன் உள்ளது. நன்றி

  ReplyDelete
 25. நல்ல சிந்தனையுள்ள உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 26. வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 27. ஒரு ஸ்டார்
  ஸ்டாராகியது...

  வாழ்த்துக்கள் ஷேக்

  ReplyDelete
 28. குரு.... வாழ்த்துக்கள்...
  உங்களை குருவா அடைஞ்சது பெருமையா இருக்கு.... :))))

  ReplyDelete
 29. ந‌ட்ச‌த்திர‌மாக‌ ஜொலிக்க‌ வாழ்த்துக்க‌ள் ஸ்டார்ஜ‌ன்.....

  ReplyDelete
 30. வாழ்த்துக்கள் சார் ...,

  ReplyDelete
 31. மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது நண்பரே..

  இந்தவார நட்சத்திர வாழ்த்துக்கள்..

  தங்கள் கருத்துக்களை தமிழ்மணம் வழி நிறைவாக எடுத்துச்சொல்லுங்கள்..!!

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள் சகோதரரே.தமிழ்மண நட்சத்திரமாக ஜொலிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.பதிவுலக வருத்த நிகழ்வுகள் குறித்து தாங்களின் பதிவு மேலும் மகிழ்வைத்தந்தது.இறைவன் நம் அனைவருக்கும் நல்லருளை வழங்குவானாக!

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் அண்ணா :)

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்

  ReplyDelete
 35. நட்சத்திர வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

  ரொம்ப சந்தோஷமா இருக்கு.

  ReplyDelete
 36. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்..

  ReplyDelete
 37. நட்சத்திரமானதற்கு வாழ்த்துகள் ஸ்டார்ஜன். இந்த வாரம் முழுவதும் அட்டகாசமாக பதிவுகளை போட்டு அசத்துங்கள்.

  ReplyDelete
 38. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

  கலக்குங்க

  ReplyDelete
 39. வாழ்த்துக்கள் வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.. கலக்குங்க..

  ReplyDelete
 40. நட்சத்திர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 41. நட்சத்திர வாழ்த்துகள் starjan

  ReplyDelete
 42. நட்சத்திர நாயகரே நல்வாழ்த்துகள்.. மிக மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து அசத்துங்க ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 43. வாங்க கதிர் சார் @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

  வாங்க கல்ப்தமிழன் @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

  வாங்க தோழி @ பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 44. வாங்க ஜெய்லானி @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  வாங்க ரோமியோ @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

  வாங்க ராஜவம்சம் @ பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 45. வாங்க கார்த்திக் சிதம்பரம் @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

  வாங்க பாரா அண்ணே @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

  வாங்க சித்ரா @ பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 46. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்... இந்த பக்கம் நீ... வலைசரத்தில் செந்தில்
  கலக்குங்க...


  இன்னும் பல வெற்றிகள் பெற எல்லாம் வல்ல பரம் பொருளை வாழ்த்துகின்றேன்...

  அன்புடன்
  ஜாக்கிசேகர்...

  ReplyDelete
 47. இன்னும் இது போல பல நட்சத்திர பட்டங்கள் பேர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 48. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 49. நட்சத்திர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 50. மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்

  ReplyDelete
 51. வாழ்த்துக்கள் தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றிகள்

  ஷங்கி @ நன்றி
  ராஜசேகர் @ நன்றி
  டிவிஆர் சார் @ நன்றி
  ராமசாமிகண்ணன் @ நன்றி
  அபுல் பசர் @ நன்றி

  ReplyDelete
 52. வாழ்த்துக்கள் தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றிகள்

  நீச்சல்காரன் @ நன்றி
  உண்மைத்தமிழன் அண்ணே @ நன்றி
  ராமலக்ஷ்மி மேடம் @ நன்றி
  கண்ணா @ நன்றி

  ReplyDelete
 53. வாழ்த்துக்கள் தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றிகள்

  சீமான்கனி @ நன்றி
  குமார் @ நன்றி
  கோவி.கண்ணன் @ ரொம்ப நன்றிண்ணே
  கௌசல்யா @ நன்றி

  ReplyDelete
 54. வாழ்த்த்க்கள் தோழா! தொடர்ந்தும் தேன் தமிழால் எமைக் கவர்ந்து நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 55. நட்சத்திர வாழ்த்துக்கள்..
  வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..
  தமிழ்மண நட்சத்திரம்...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 56. தமிழ்மண வானில் ஜொலிக்கும் நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 57. இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 58. நட்சத்திர வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டிருக்கும் அனைவருக்கும், இனி சொல்லப்போகும் அனைவருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 59. //நம்முடைய பதிவுகள் காலத்தால் அழியாத படைப்புகளாக இருக்கவேண்டும்.//

  நூத்துக்கு தொண்ணூத்தியொம்பது பதிவுகள் அப்படித்தானுங்க இருக்குது. ஏதோ ஒண்ணு ரண்டு அப்படியும் இப்படியும் இருக்கலாம். அதப்போயி பெருசா நெனைக்க வேண்டாமுங்க.

  ReplyDelete
 60. அன்பின் ஸ்டார்ஜன்

  நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்
  நட்புடன் சீனா

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்