Pages

Tuesday, June 22, 2010

ஜூன் 22 - நீண்ட பகல் ஏன்

ஸ்யப்பா.. என்னா வெயிலு.. 53 டிகிரி வெயிலை இப்போது சமாளிக்கமுடியவில்லை. அனலா கொதிக்கிறது. எந்த வருசமும் இல்லாத அளவுக்கு இந்த வருசம் அதிகமான வெப்பம். என்ன செய்வது சம்பாதிக்கணும் என்று வந்திட்டோம். இதெல்லாம் கடந்துதான் ஆகணும். புவி வெப்பமயமாதல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இனி பிற்காலத்தில் என்னநடக்கும் என்பது நம் யாருக்கும் தெரியாத ஒன்று.

அண்டம் என்பது எண்ணிடலங்கா நட்சத்திரங்களும் கோள்களும் அடங்கிய ஒரு பால்வெளி. கண்ணுக்கு தெரியாத புலப்படாத எண்ணற்ற நட்சத்திரங்கள் மின்னுகின்றன. அதில் நம் கண்ணுக்கு தெரிந்த அருகிலுள்ள சூரியன் ஒரு நட்சத்திரம். சூரியனுக்கு 9 கோள்கள் நீள்வட்டபாதையில் சுற்றிவருகின்றன. இந்த ஒன்பது கோள்களுக்கும் ஒன்று அல்லது ஒன்றுக்குமேற்பட்ட துணைக்கோள்கள் உண்டு. நம்முடைய பூமிக்கு சந்திரன் என்ற துணைக்கோள் பூமியை சுற்றிவருகிறது.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் ஆகிறது. சூரியனை சுற்றிவர 365 1/4 நாட்கள் ஆகின்றன. இதனால் தான் காலநிலை மாற்றங்கள் மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால்தான் இரவுபகல் மாறிமாறி வருகிறது.

இன்று நீண்டபகல். இன்று சூரியன் அஸ்தமனமாவது அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஜூன் மாதம் 22ம்தேதி நீண்டபகல். நாம் இருக்கும் இந்த பூமத்திய ரேகை அருகில் இருப்பவர்களுக்கும் வடதிசையில் இருப்பவர்களுக்கும் இன்று நீண்ட பகல். இதே நாள் தென்துருவத்தில் இருப்பவர்களுக்கு இன்று நீண்ட இரவு.

எதனால் இப்படி ஆகிறது என்று நான் கூகிள் மற்றும் இதர தளங்களில் சேகரித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நீண்ட பகல் எப்படி உண்டாகிறது?.


புவியின் வடகோளம் சூரியனை நோக்கியும் புவியின் தென்கோளம் சூரியனை விட்டு விலகியும் இருப்பதால் வடகோளத்தில் பகல்பொழுது மிக நீண்டதாக இருக்கிறது.

இன்று பூமி சூரியனில் இருந்து மிக நீண்ட தூரத்தில் உள்ளது.

இன்றில் இருந்து பகல்பொழுது மெல்லமெல்லமாக குறையத் தொடங்குகிறது ...!
டிசம்பர் மாதம் 23ம் நாள், வடகோளத்தில் நீண்ட இரவு நாள் ஆகும்.

இந்த நாளில் பூமி, சூரியனில் இருந்து மிகக் குறுகிய தூரத்தில் உள்ளது.


நீண்ட இரவு எப்படி உருவாகிறது?.

வடகோளக் கோடைகாலம் --------21/03--------- வடகோளக் குளிர்காலம்



இந்த ப்ளாஸ் கோப்பை நீங்கள் காண்பதன் மூலம் என்ன காரணம் என்று விளங்கிவிடும். பூமியின் இடத்தை மாற்றிவைத்து பாருங்கள். நீண்டபகலும் இரவும் எவ்வாறு உருவாகின்றன என்பது விளங்கிவிடும்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

41 comments:

  1. தகவலுக்கு நன்றி ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  2. அண்டம்,நட்சத்திரம்,கோள் என்று சைன்டிஃபிக் இடுகை எல்லாம் போட்டு அசத்துறீங்க.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு நண்பரே..வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

    ReplyDelete
  4. தகவலுக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன்..!

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு... பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  6. என்ன அறிவுப்பூர்வமான பதிவு, முழுவதையும் படித்தே நண்பரே நல்ல பயனுள்ள செய்திகள். உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. குரு...உங்களுக்குள்ள ஒரு அப்துல் கலாம் அளிஞ்சுட்டு இருக்கறது இன்னிக்குத்தான் தெரியும்...

    அவருக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாரேன்...

    ReplyDelete
  8. //53 டிகிரி வெயிலை இப்போது சமாளிக்கமுடியவில்லை.//

    50 தாண்டிட்டாலே லேபர் சட்டம் படி கம்பள்சரி அனைவருக்கும் லீவு கொடுக்கனும், அதெல்லாம் இல்லியா? என்ன கொடுமங்க இது

    இங்கேயும் இந்த கொடுமையை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கோம்

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல் நன்றி ஸ்டார்ஜன்

    ReplyDelete
  10. நம்ம வலை பூக்களில் இந்த மாதிரியான நல்ல விஷயத்தை எல்லாம் யார் ரசிக்கிறார்கள்., ரஜினி திருப்பதி கோவிலில் இரண்டு மணி நேரம் கால்கடுக்க நின்றார் என்று சொன்னால், நம்மவர்கள் இரண்டு மணிநேரம் காத்திருந்து பேப்பர் வாங்கி படிப்பார்கள்.,
    அறிவியலை இயல்பாக கொஞ்சம் நஞ்சம் சொல்லிகொடுத்த அந்த naallavar செத்துப்போனது., இந்த மாதிரி நேரத்தில் தான் அதிக வருத்தம் கொடுக்கிறது.,
    நன்றி ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  11. நா இந்த பாடத்துல எப்பவுமே கொஞ்சம் வீக்கு... :D
    ஆனா... உங்க பகிர்வு சுவாரஸ்யம்... நன்றி.. :)

    எப்பவும் தூங்கிருவேன்.. உங்க கிளாஸ்-ல தூங்கல..

    ReplyDelete
  12. நல்ல பகிர்வு.
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  13. நல்ல தகவல்கள் நல்ல பதிவு..

    ReplyDelete
  14. வாங்க ஷபிக்ஸ் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    வாங்க எல்கே @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    வாங்க டிவிஆர் சார் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  15. claps sheik...

    போஸ்டோட ப்ரசெண்டேசன் அற்புதமா இருக்கு...

    ReplyDelete
  16. நண்பரே இதுவரை நான் அறியாத ஒரு புதியத் தகவல் தந்து இருக்கிறீர்கள் , பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  17. ந‌ல்ல‌ ப‌கிர்வு ஸ்டார்ஜ‌ன்.... வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  18. அருமையான தேடல் செய்திகள் நன்றி ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  19. very nice write-up.

    Over here, June 21 st is considered as the longest day...... Time difference.....

    http://en.wikipedia.org/wiki/Solstice

    ReplyDelete
  20. நல்ல அறிவியல் பூர்வமான பதிவு. அளிச்சதுக்கு நன்றி.

    ReplyDelete
  21. பள்ளிக்கூடத்துல படிச்சது.. நல்லா விளக்கிருக்கீங்க!

    ReplyDelete
  22. நல்ல அருமையான விளக்கத்துடன் கூடிய படம்.
    எதிர்காலத்தில் நிகழ இருக்கும் ஒரு நிகழ்வு.
    ஆம் ஒரு நாள் ஒரு வருடத்தை போன்றது.
    நடக்கும் உங்கள் ஆய்வின் படி பார்த்தால் ,நிச்சயம் நடக்கும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. வாங்க ஆசியாக்கா @ நன்றி கருத்துக்கும் வருகைக்கும்

    வாங்க கமலேஷ் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    வாங்க உண்மைத்தமிழன் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    வாங்க சசிகுமார் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  24. வாங்க சந்ரு @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    வாங்க சிஷ்யா @ ஆஹா கண்டுபிடிச்சிட்டீங்களே.. இனி பாப்புலாரிட்டி ஜாஸ்தியாயிருமே.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    வாங்க அபு அஃப்ஸர் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  25. வாங்க அக்பர் @ நன்றி நன்றி

    வாங்க ஷர்புதீன் அண்ணே @ ஆமா சரியாச் சொன்னீங்க. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    வாங்க ஆனந்தி @ அப்படியா ரொம்ப சந்தோசமாயிருக்கு.. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

    வாங்க ரியாஸ் @ ரொம்ப நன்றி

    ReplyDelete
  26. வாங்க அம்பிகா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

    வாங்க வசந்த் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

    வாங்க பனித்துளி சங்கர் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

    வாங்க ஸ்டீபன் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

    ReplyDelete
  27. வாங்க ஹேமா @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுக்கு

    வாங்க சித்ரா @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுக்கு

    ReplyDelete
  28. வாங்க அமைதிசாரல் அக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

    ReplyDelete
  29. வாங்க ஹூசைனம்மா @ ரொம்ப நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்

    ReplyDelete
  30. வாங்க இளம்தூயவன் சார் @ ரொம்ப நன்றி கருத்துக்களை பகிர்ந்துகொண்டதுக்கு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  31. அறிவு பூர்வமான அறிவியல் தகவல்.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. நல்ல பகிர்வு.நாங்களும் அறிந்து கொண்டோம்.நன்றி ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  33. நல்ல பகிரவு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  34. அறிவியல் தகவலுக்கு நன்றி.. பல விஷயங்கள் அறிந்துக்கொண்டேன் மீண்டும் நன்றி

    ReplyDelete
  35. படிக்கிற காலத்துல ஒன்னும் புரியல. ஆனால் இப்ப நல்லாவே புரியுது. அற்புதமான அறிவியல் பதிவு. ஜஸாக்கல்லாஹ்.

    ReplyDelete
  36. ஸலாம் சகோ.ஸ்டார்ஜன்,
    மிக அருமையான விளக்கத்துடன் அமைந்த சிறந்த பதிவு... அதுவும், சரியான நாளில் வெளியிட்டு உள்ளது தனித்துவம்..! மிக்க நன்றி சகோ.

    அப்புறம்,

    ///சூரியனுக்கு 9 கோள்கள் நீள்வட்டபாதையில் சுற்றிவருகின்றன. இந்த ஒன்பது கோள்களுக்கும்...///---என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்..!

    நாம் பள்ளியில் படிக்கும் காலத்தில் இது சரிதான் சகோ. ஆனால், ஆறு வருஷத்துக்கு முன்னரே, ப்ளூட்டோ ஒரு கோள் இல்லைன்னு ஏகமனதா தீர்மானிச்சிட்டங்க விஞ்ஞானிகள்..!

    ஆகவே, இப்போது சூரியனுக்கு எட்டு கோள்கள்தான்..!

    http://www.msnbc.msn.com/id/14489259/ns/technology_and_science-space/t/scientists-decide-plutos-no-longer-planet/#.T-TIP3mumOQ

    ReplyDelete
  37. அப்புறம், உங்க பிளாஸ் கோப் படம் லிங்க்... ரியல்லி சூப்பர்ப்..!

    தமிழ்நாட்டில் சம்மர் மே மாசம்... 'நாம் இருக்கும் ஏரியா'வில் சம்மர் ஜூலை மாசம்... இது எப்படி..?

    இந்த கேள்விக்கு பதில் எப்படி சொல்லி என் மகளுக்கு புரிய வைக்கிறது என்று முன்பு யோசித்துக்கொண்டு இருந்தேன்..! இப்போது அந்த லிங்க் ஐ காட்டி மிக எளிதாக புரியவைத்து விட்டேன்..!

    பகிர்வுக்கு நன்றி சகோ.ஸ்டார்ஜன்..!

    ReplyDelete
  38. அறிவியல் தகவலெல்லாம் போட ஆரம்பித்தாயிற்றா?நல்ல பகிர்வு.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்