Pages

Tuesday, September 15, 2009

அண்ணா - வாய் சொல்லில் வீரனடி ....

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டுருக்கிறோம் . அவரது நினைவில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் ...


காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909] - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார்.

அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.


தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடையத் திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.


இந்த‌ வ‌கையில் பார்க்கும் போது நான் இத‌ற்கு முன் எழுதிய‌ வாய் சொல்லில் வீர‌ன‌டி என்ற‌ த‌லைப்பில் எழுதிய‌ ப‌திவை அண்ணா நூற்றாண்டு விழா பதிவில் உங்க‌ள் முன் ப‌கிர்ந்து கொள்ள‌லாம் என்று நினைக்கிறேன் .
அத‌னை இங்கே மீள்ப‌திவாக‌ இட்டுள்ளேன் .அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே , நண்பிகளே , அன்பர்களே , தாய்மார்களே , பெரியோர்களே ,


நாம ஒரு விசயத்தை நல்லா கவனிக்கணும் . கடவுள் நம்மை படைக்கும் போது நமக்கு ஒரு அழகான உயிரையும் உடம்பையும் கொடுத்திருக்கிறார் . நம் உடம்பில் ஒவ்வொரு உறுப்பும் ரொம்ப முக்கியமானது . அதில் ஒன்று வேலை செய்யவில்லை என்றால் நாம் அம்பேல் தான் . அதில் மூளை முக்கியமானது . நம்முடைய ஒவ்வொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்துததும் மூளை தான் .

நாம எப்படி பேசுகிறோம் ? . நம் மூளையில் உதிக்கிற கருத்துக்களையும் எண்ணங்களையும் வாயின் மூலமாக நாக்கின் உதவியோடு பேசுகிறோம் . இது இப்ப மட்டுமல்ல , பிறக்கும் போதே குவங்க் குவங்க் .... என்று அழுகையின் மூலம் தான் .

ஒரு வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்துகிறார் . அப்போது வருகைப்பதிவு வாசிக்கப்படுகிறது .

முருகன் ,

உள்ளேன் அய்யா

சண்முக நாதன்

ஆஜர் சார்

பட்டமுத்து

ஆஜர் சார்

காந்திமதி

யஸ் சார்

சேக் மைதீன்

உள்ளேன் அய்யா

ஜுடி

பிரசண்ட் சார்

இப்ராஹிம்

உள்ளேன் அய்யா .

சரி இப்ப விசயத்துக்கு வருவோம் . ஒரு வகுப்பறையில் மாணவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதை வருகைப்பதிவு காட்டிடும் . அதே மாதிரி நாம , மத்தவங்ககிட்ட நம்மளை நாம் அடையாளப்படுத்திக் கொள்வது இந்த பேச்சின் மூலமா தான் . ஒருவர் தன்னுடைய பேச்சின் மூலமா நானும் இருக்கேன் என்பதை வெளிக்காட்டுகிறார் .

நம்ம ஆளுகளை பேச்சில மிஞ்சிக்கிட முடியாது . பேச ஆரம்பிச்சாங்கன்னா நிறுத்தவே மாட்டாங்க . நான்ஸ்டாப் . கேக்கிற ஆள் ரொம்ப கொடுத்து வைத்து இருக்க வேண்டும் . இவ்வளோ நல்லவரா அவர் ....

இன்னும் சில பேர் இருக்காங்க , பேசுவதற்கு காசு கொடுக்கனும் அவங்களுக்கு . அப்படி இருக்கும் அவங்க பேச்சு .

இதிலே சில பேர் உண்டு . பேசாமலே காரியத்தை சாதிச்சிட்டு போயிக்கிட்டே இருப்பாங்க . இந்த மாதிரி ஆளுககிட்ட உசாரா இருக்கணும் . ஒன்னுமே தெரியாத மாதிரி ரியாக்சன் காட்டுவாங்க பாருங்க . அப்பப்பா ... முடியலடா சாமி ...

சில பேர் எப்படின்னா , இரண்டு பேருக்குள்ள சண்டை இழுத்து விட்டுருவாங்க . பலே ஆளுங்கப்பா ... இதத்தான் ஊமை குசும்பாங்களோ .... நீங்க நல்லவரா கெட்டவரா ....

சில பேர் எப்படின்னா , அவங்க பேச்சிலயே நம்மளை மயக்கிப்புடுவாங்க . நாம அவங்களுக்கு அடிமையானது மாதிரி ஆகிடுவோம் . நீங்க தான் மன்மதன் பேமிலியா .... சொல்லவே இல்ல ...

இதுல இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா ... ஒருத்தர் பேச ஆரம்பிச்சார்னா அருவி கொட்டோ கொட்டன்று கொட்டும் . இப்படி சில பேர் உண்டு . அவர் அங்கருந்து வரும் போதே சொல்வாங்க "ஏய் குத்தாலம் வர்றாருடா ஒதுங்கியே நில்லு , சாரலடிக்கும்" . நீங்க குத்தாலத்துல இருந்திங்களோ ....

சிலபேரை பாத்த உடனே தப்பா எடை போட்டுறக் கூடாது . உதாரணத்துக்கு சொல்லனுன்னா எனக்கு ஒரு காமெடி ஞாபகத்துக்கு வருது .

வேலைக்காரன் படத்துல ஒரு ஹோட்டல்ல வேலைக்கு சேத்து விட நம்ம சூப்பர்ஸ்டாரை செந்தில் கூட்டிட்டு போவார் . அப்போ அங்க மேனஜரா இருக்கும் நாசர் ரஜினியைப் பாத்து ஏம்பா உனக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியுமான்னு கேட்பார் . உடனே பக்கத்துல இருக்கிற செந்தில் என்ன சார் அவனே இப்ப தான் கிராமத்துல இருந்து வாரான் அவனுக்கெப்படி .... என்று சிரிப்பார் . உடனே நம்ம தலைவர் இங்கிலீஷ்ல சும்மா பேசுவார் பாருங்க . அப்பப்பா ......

இப்படி எக்கசக்கமான பேர் உண்டு .... சொல்லிக்கிட்டே போகலாம் . உங்களுக்கு தெரிந்தா கொஞ்சம் சொல்லுங்க .

பேச்சு இப்ப ஆரம்பிக்கலை . மனிதன் எப்ப தோன்றினானோ அப்பவே ஆரம்பிச்சிருச்சு . சில உதாரணத்தை சொல்லனுன்னா ....

300 வருசத்துக்கு முன்னாடி நம்மளை ஆங்கிலேயன் ஆண்டு அடிமைப்படுத்தி வந்தான் . நம்மளோட சுதந்திரம் பறிபோனது . அப்போ நம்ம முன்னோர்கள் எல்லாம் சேர்ந்து குரல் கொடுத்தாங்க . நிறைய மன்னர்கள் தங்களோட கருத்தை ( சுதந்திரம் வேண்டி ) சொன்னாங்க . அதுக்கு அப்புறம் வந்த மக்கள் , தலைவர்கள் , காந்தி , ராஜாராம் மோகன்ராய் , கோபாலகிருஷ்ண கோகலே , அபுல் கலாம் ஆசாத் ராஜாஜி , முகம்மது அலி ஜின்னா , நேரு , கான் அப்துல் காபார் கான் , இப்படி நிறைய தலைவர்கள் பாடுபட்டு நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தாங்க . இதுக்கு அடிப்படையா இருந்தது அவங்களோட பேச்சு தான் .


பேச்சுக் கலை நமக்கெல்லாம் ஒரு வரம் தான் . அதுக்கு இறைவனுக்கு தான் நாம நன்றி சொல்லணும் .

இதே மாதிரி , சுதந்திரம் அடைந்த பின்னாடியும் , அரசியல்ல சில தலைவர்கள் தன்னோட பேச்சுத் திறமையால மக்கள் மத்தியில் பிரபலம் அடைச்சிருக்காங்க . பெரியார் , காமராஜர் , அண்ணாத்துரை , கலைஞர் , எம்ஜியார் , ஜெயலலிதா , வைகோ , நெடுஞ்செழியன் , காளிமுத்து , தீப்பொறி ஆறுமுகம் , டி ராஜேந்தர் , கடைசியா நம்ம விஜயகாந்த் இப்படி நிறைய தலைவர்கள் தங்களோட பேச்சுத் திறமையை வைத்து மக்கள் மத்தியில் பிரபலமானாங்க . ..... அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா ....

இதுல இன்னொருத்தர் இருந்தார்யா .. அவர் வேற யாருமல்ல .. 1991 -1996 வரை பிரதமரா இருந்த நம்ம நரசிம்மராவ் தான் . மனுசர் 5 வருசம்மா சிரிக்கவே இல்லையே என்ன .

பட்டிமன்றத்துல எல்லாம் பேச்சு தான் முதல் . அங்க பேச்சு இல்லைன்னா நம்ம பப்பு வேகாது .

இதைத்தான் வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கும்னு சொல்வாங்களோ .....

சில பேருக்கு இந்த மாதிரி கோர்வையா பேச வராது . அவங்க என்ன பண்ணுவாங்க , தங்களோட எழுத்துத் திறமையைக் கொண்டு மத்தவங்களை பேச வப்பாங்க . எனக்கு காலேஜ் படிக்கும் போது உள்ள சம்பவம் ஞாபகத்துக்கு வருது .....

எங்க காலேஜ்ல பேச்சுப் போட்டி வச்சாங்க . அதுல நானும் கலந்துகிட்டேன் . அப்ப எனக்கு கோர்வையா பேச வராது . ஏதோ பேசினேன் . அப்ப சார் கூப்புட்டு , தம்பி உன்னோட கருத்துக்கள் எல்லாம் நல்லாயிருக்கு . ஆனா பேச்சு வரல . நீ பேச நினைக்கிறதை , உன்னோட எழுத்தைக் கொண்டு மத்தவங்களை பேச வையின்னு சொன்னார் .

இப்ப அப்படிதான்னு நினைக்கிறேன் , நீங்க தான் சொல்லனும் ......


இந்த வலைப்பதிவில் நான் எழுத ஆரம்பித்ததுக்கு அப்புறம் எனக்கு நண்பர்கள் நண்பிகள் என்று நீங்க தான் கிடைத்திருக்கிறீர்கள் . அதுக்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . உங்க அன்பால என்னை கட்டி போட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் .


நம்முடைய நட்பு எப்படின்னா , சங்க காலத்தில வாழ்ந்த கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு மாதிரி . காணா நட்பா இருந்தாலும் ரொம்ப நெருக்க மாயிட்டோம் .

பேச்சும் எழுத்தும் லவ்வர்ஸ் மாதிரி .

ஒருத்தருக்கொருத்தர் கருத்துக்களை பரிமாறிக்கணும் . நம்முடைய எண்ணங்கள் மற்றவர்களை சென்றடையனுன்னா நம்ம எழுத்து பேசணும் .

நல்ல நல்ல விசயங்களை பத்தி நாம எழுதணும் . அது தான் நம் வாழ்க்கையில நிறைய விசயங்களை கத்துக் கொடுக்கும் .


இது என்னோட எண்ணம் ..... அப்ப உங்க எண்ணம் ......???? ..

Post Comment

15 comments:

 1. அற்புதமான பதிவு . நலமா ஸ்டார்ஜான்?

  ReplyDelete
 2. நாம எல்லாம் பேசியே ஆட்சியை பிடிச்சவங்கதானே.

  கலக்கல் பதிவு.

  ReplyDelete
 3. வாங்க செந்தில்குமரன்

  நல்லா இருக்கேன்

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 4. வாங்க அக்பர்

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. என்ன கடையில கூட்டத்தை காணோம்.

  ReplyDelete
 6. கடையில் கூட்டத்தை கூட்ட என்ன செய்ய வேண்டும்

  ReplyDelete
 7. பேச்சும் எழுத்தும் பற்றி சூப்பர் ....

  ReplyDelete
 8. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  கடையில் கூட்டத்தை கூட்ட என்ன செய்ய வேண்டும்

  July 17, 2009 8:47 PM///

  கடையில் கூட்டம் இன்றும் நாளையும் இருக்காது!!

  ReplyDelete
 9. வாங்க தேவா

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 10. //நல்ல நல்ல விசயங்களை பத்தி நாம எழுதணும் . அது தான் நம் வாழ்க்கையில நிறைய விசயங்களை கத்துக் கொடுக்கும் .


  இது என்னோட எண்ணம் ..... அப்ப உங்க எண்ணம் ......???//

  எழுத்தும் பேச்சும் பயிற்சியால் வருவது, மேடையில் பேசும் போது பேசியதைத் திரும்ப பெற முடியாது என்பதால் சொற்களை சரியாக பயன்படுத்தனும் என்கிற கட்டுப்பாடு உண்டு. பழக்கத்தினால் தான் சரி செய்ய முடியும், மேடை கூச்சம் போகும். எழுத்துக்குக்கு அந்த கட்டுபாடு இல்லை, வெளி இடும் முன் படித்துப் பார்த்து வெளி இட முடியும் என்பதால் எழுத்தை பழகிக் கொள்வது கடினமன்று.

  கோர்வையாக மனதில் நினைப்பதை எழுதிறிங்க. இனி இன்னும் சிறப்பாக எழுதுவீர்கள்.

  ReplyDelete
 11. வாங்க கோவி

  வருகைக்கு நன்றி


  நல்ல கருத்துக்களை சொல்லிருக்கீங்க

  கோவியை மாதிரி நீங்களும் சொல்லலாமே...

  ReplyDelete
 12. //அதே மாதிரி நாம , மத்தவங்ககிட்ட நம்மளை நாம் அடையாளப்படுத்திக் கொள்வது இந்த பேச்சின் மூலமா தான்//

  ithu Commentukkum porundhum pola irukke!!!

  ReplyDelete
 13. வாங்க ராஜ்குமார்

  வருகைக்கு நன்றி

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்