Pages

Sunday, September 13, 2009

பன்றிக் காய்ச்சல் - ஒரு அலசல்


பன்றிக் காய்ச்சல் பத்தி ஒரு அலசல்

இன்றைக்கு மக்கள் பன்றிக் காய்ச்சலால் ரொம்ப அவதிக்குள்ளாகி உள்ளனர் . அது பத்தி ஒரு அலசலை இங்கு காண்போம் .

பன்றிக் காய்ச்சல் சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன் முக்கிய அம்சங்களாவன:

* பன்றிக் காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஒசல்டமிவிர்', 'ஜானமிவிர்' ஆகிய மருந்துகளை அளிக்க வேண்டும். ஒசல்டமிவிர் கிடைக்காத இடங்களில், ஜானமிவிர் மருந்தை அளிக்கலாம். இந்த மருந்துகள், மரணத்தை தடுப்பதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கின்றன. மேலும், இவை மரணத்தை உருவாக்கக்கூடிய நிமோனியாவை கட்டுப்படுத்தக் கூடியவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

* பன்றிக் காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது உடல்நிலை மோசம் அடைபவர்களுக்கோ 'ஒசல்டமிவிர்', 'ஜானமிவிர்' ஆகிய மருந்துகளை உடனடியாக அளிக்க வேண்டும்.

* நோய்த் தாக்குதல் அபாயம் உள்ள கர்ப்பிணிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அறிகுறிகள் தென்பட்டவுடன் இம்மருந்துகள் அளிக்கப்பட வேண்டும்.

* பன்றிக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படாதவர்களுக்கு 'ஒசல்டமிவிர்', 'ஜானமிவிர்' ஆகிய வைரஸ் தடுப்பு மருந்துகளை அளிக்கக்கூடாது.

* 5 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட, அவர்கள் கடுமையாக பாதிக்கப்படாத பட்சத்தில், இந்த மருந்துகளை அளிக்கக் கூடாது.

* மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் ஆகியவை காணப்பட்டால், அவை பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள். அவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

* குழந்தைகள் வேகமாகவோ, சிரமப்பட்டோ மூச்சு விடுதல், சுறுசுறுப்பின்மை, படுக்கையை விட்டு எழுவதில் சிரமப்படுதல், விளையாடுவதில் ஆர்வம் இன்மை ஆகியவற்றுடன் காணப்பட்டால், அதுவும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் ஆகும்.
************************************************************
த‌மிழ‌க‌த்தில் 9 ப‌ரிசோத‌னை மைய‌ங்க‌ள்

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோய்க்கான பரிசோதனை செய்து கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ள 9 தனியார் மையங்களின் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் வெளியிட்ட செய்தியில், "மத்திய அரசு சுகாதாரத்துறை வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி, 'ஸ்வைன் புளு' (பன்றி காய்ச்சல்) நோயின் மாதிரிகளை பரிசோதனை செய்ய தேவையான வசதிகள் உள்ள தனியார் ஆய்வுக்கூடங்களை தமிழக அரசு அங்கீகரித்து வருகிறது.

ஏற்கனவே, பாரத் ஸ்கேன்ஸ் பிரைவேட் லிமிடெட், ராயபேட்டை, சென்னை; ஹைடெக் டையக்னாஸ்டிக் சென்டர், தி.நகர், சென்னை; டையக்னாஸ்டிக் சர்வீசஸ், பர்கிட் ரோடு, தி.நகர், சென்னை; மைக்ரோ லேப், கவுலி பிரவுன் ரோடு, ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர்; டாக்டர் ராத்'ஸ் லேப் (டாக்டர்ஸ் டையக்னாஸ்டிக் சென்டர்), தில்லைநகர், திருச்சி ஆகிய ஐந்து தனியார் ஆய்வுக்கூடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது, லிஸ்டர் மெட்ரோபாலிஸ் லேபரட்டரி மற்றும் ரிசர்ச் சென்டர் பிரைவேட் லிமிடெட், எண்.3, ஜெகன்னாதன் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை, ஸ்ரீராமச்சந்திரா மெடிகல் சென்டர், போரூர், இம்முனோ ஆன்சிலரி கிளினிக்கல் சர்வீஸ், எண்.59, டி.வி. சுவாமி ரோடு (மேற்கு), ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர்; விவேக் லேபரட்டரிஸ், எண்.253, கே-11, கே.பி. ரோடு, நாகர்கோவில் ஆகிய 4 தனியார் ஆய்வுக்கூடங்கள், `ஸ்வைன் புளு' மாதிரிகளை பரிசோதனை செய்ய அரசு அங்கீகரித்துள்ளது.

இதுவரை ஒன்பது தனியார் ஆய்வுக்கூடங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட வகைகளில் 'ஸ்வைன் புளு' காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள், அவர்கள் விரும்பினால், பரிசோதனை செய்து கொள்ளலாம்," என்று அதில் கூறப்பட்டுள்ளது.
**********************************************************
பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த 3 வகை முறைகள்

பன்றிக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மூன்று புதிய வகை முறைகள் கையாளப்படும் என்று தமிழக அரசின் ஆரம்ப சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் எஸ் இளங்கோவன் இன்று தெரிவித்தார். சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர்களுக்கான எச்1என்1 இன்புளுயன்சா பற்றிய கருத்தரங்கில் உரையாற்றி அவர் மேலும் கூறியதாவது :

வகை 1 :

சாதாரண காய்ச்சலுடன் கூடிய இருமல் மற்றும் தொண்டைவலி காணப்படும் நோயாளிகள். இவர்களுக்கு உடம்பு வலி, தலை வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
இந்த நோயாளிகளுக்கு ளிsமீறீtணீனீணீஸ்வீக்ஷீ/டாமிபுளு மருந்து தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியம்.

ஏ (ஹெச்1என்1) ஆய்வக பரிசோதனை தேவையில்லை
இந்நோயாளிகள் வீட்டில் ஓய்வெடுத்து கொள்ளும்படியும் மற்ற நபர்களுடன் தொடர்பினை குறைத்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இருமல், தும்மல் இருந்தால் கைக்குட்டைகளைப் பயன்படுத்திட வேண்டும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வகை 2 :

வகை ஒன்றில் காணப்படும் நோய் அறிகுறிகளுடன் கடுமையான காய்ச்சல் மற்றும் கடுமையான தொண்டைவலி இருக்கும் நிலை

வகை ஒன்றில் காணப்படும் நோய் அறிகுறிகளுடன் காணும் நபர் ஐந்து வயதுக்கு உரிய குழந்தையாகவோ, கர்ப்பிணியாகவோ, 65 வயதிற்கு மேல் உள்ள முதியவராகவோ அல்லது நுரையீரல், இருதயம், கல்லீரல், சிறுநீரகம், நீரழிவு, நரம்பு, ரத்தம் மற்றும் எச்ஐவி/எய்ட்ஸ் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ
ஓஸல்டாமிவீர்/டாமிபுளு மருந்து கொடுக்கப்பட வேண்டும். ஆய்வகப் பரிசோதனை தேவையில்லை.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்

வகை 3 :

மேற்கூறிய வகை 1 மற்றும் வகை 2-க்கான அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மயக்கம், குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்துடன் கலந்த சளி, நீல நிறமாகும் நகங்கள், குழந்தைகளைப் பொருத்தவரை உணவு அருந்தாத நிலை ஆகிய சூழ்நிலைகளில்

ஏ (ஹெச்1என்1) ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்திட வேண்டும்
மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும்
ஓஸல்டாமிவீர்/டாமிபுளு மருந்து கொடுக்கப்பட வேண்டும்
எனவே சாதாரண ஜலதோஷம் உள்ளவர்கள் அனைவரும் கி (பி1ழி1) பரிசோதனை செய்திட வேண்டிய அவசியம் இல்லை

மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே பரிசோதனை செய்து கொள்வது அவசியம்

தேவையற்ற நிலையில் ஓஸல்டாமிவீர்/டாமிபுளு மாத்திரைகளை பயன்படுத்தாமல் இருத்தல் நல்லது

இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்.

இந்த கருத்தரங்கில் பேசிய மருந்துப் பிரிவு இயக்குனர் டாக்டர் சி ராஜேந்திரன் இந்த நோய் வருவதற்கு முன்னரே பொது மக்கள் ஏ (ஹெச்1என்1) பரிசோதனை செய்ய வேண்டும் என்று வருகிறார்கள். இந்த நோய் பற்றி மருத்துவர்கள் ஆராய்ந்த பின், அவர்களின் ஆலோசனையின் பேரிலேயே பொது மக்கள் பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும் இந்த நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகள் அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த மாத்திரைகளை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற நேரங்களில் ஒரே மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த நோய்க்கான வைரஸ் பற்றி குறிப்பிட்ட அவர் குளிர் பருவங்களில் மூன்று மாதங்கள் வரையிலும், 22 டிகிரி வெப்பம் உள்ள தண்ணீரில் நான்கு நாட்களும், 0 டிகிரி வெப்பம் உள்ள தண்ணீரில் 30 நாட்களும், கைக்குட்டையில் 12 மணி நேரமும், கைகளில் 5 நிமிடமும் உயிர் வாழக் கூடியது என்றார். இந்த நோய் தும்மல் மூலமாகவும், இருமல் மூலமாகவும் காற்றின் வழியாக பரவும் என்பதால் நோயாளி தும்மும் இடத்தில் இருந்து ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்குமாறு மற்றவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
***********************************************************
பன்றி காய்ச்சலைத் தடுக்க புதிய வழிகாட்டு முறைகள்

நாட்டில் பல்வேறு இடங்களிலும் பரவி வரும் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க புதிய வழிகாட்டு முறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், இந்நோய் குறித்து மக்களிடையே நிலவி வரும் அச்சம் வெகுவாக களையப்படும் எனத் தெரிகிறது.

மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தலைமையில் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இதில், சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் பன்றி காய்ச்சலை தடுக்க வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டம் முடிந்ததும், பன்றி காய்ச்சலை தடுப்பதற்கான புதிய வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டன.

புதிய வழிகாட்டு முறைகளாவன:

* உடல் வலி, தலை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை இல்லாமல் இருமல், தொண்டை எரிச்சல் ஆகியவற்றுடன் லேசாக காய்ச்சல் இருக்கும் நபர்கள் பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் 'ஏ' பிரிவின் கீழ் வருவார்கள்.

இவர்களுடைய உடல்நிலை முன்னேற்றம் 24 முதல் 48 மணி நேரத்துக்கு டாக்டர்களால் கண்காணிக்கப்பட வேண்டும். இவர்கள் பொது இடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து இருப்பதை தவிர்ப்பதுடன், வீட்டில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுடன் சேர்ந்து இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

மேற்கண்ட 'ஏ' பிரிவில் உள்ளவர்களுக்கு இருப்பதை போன்ற அறிகுறிகளுடன் தீவிர காய்ச்சல், கடுமையான தொண்டை எரிச்சல் உள்ளவர்கள் 'பி' பிரிவினராக கருதப்படுவதோடு, அவர்கள் வீட்டில் தனியாக இருக்க வேண்டும்.

5 வயதுக்கும் குறைவான குழந்தைகள், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், கர்ப்பிணி பெண்கள், இருதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், சீரற்ற ரத்த அழுத்தம் உடையவர்கள், நீரிழிவு நோயாளிகள், நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள், புற்று நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள் ஆகியோருக்கும் பன்றி காய்ச்சல் நோய் பரிசோதனை தேவை இல்லை.

மேற்கண்ட இரு பிரிவுகளிலும் உள்ள அறிகுறிகளுடன் மூச்சுவிட சிரமம், நெஞ்சு வலி, ரத்த அழுத்தம் குறைதல், சோம்பல், நகம் நீல நிறமாக மாறுதல், கைக்குழந்தைகள் அடிக்கடி எரிச்சலுடன் காணப்படுவதோடு தாய்ப்பால் அருந்த மறுத்தல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் அத்தகையவர்கள் பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ளவதோடு, உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும்.
*******************************************************
பன்றிக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை :

பன்றிக் காய்ச்சலுக்கான சுவாச முகமூடியை பொதுமக்கள் அனைவரும் அணிய வேண்டிய அவசியம் இல்லை. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு கர்சீஃப் (கைக்குட்டை) தான் சாலச் சிறந்தது.

இதனை டெல்லியில் தெரிவித்த இந்திய மருத்துவ கவுன்சில் துணைத்தலைவர் அஜய் காம்பீர் மேலும் கூறுகையில், "பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பன்றி காய்ச்சல் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவர்கள் மட்டும் சுவாச பாதுகாப்பு முகமூடியை பயன்படுத்தினால் போதுமானது.

நுண்ணிய பொருட்களை வடிகட்டுவதற்கு 2 விதமான சுவாச முகமூடிகள் உள்ளன. அதில் ஒன்று என்-95 என்பதாகும். இது குளிர் காய்ச்சலுக்கு பயன்படுத்த விசேஷமாக தயாரிக்கப்பட்டது.

குறிப்பாக இந்த முகமூடி, பன்றிக் காய்ச்சல் பாதித்த நோயாளிகளை கவனித்து கொள்ளும் சுகாதார பணியாளர்கள் அணிவதற்கு உரியது ஆகும். இதை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது. 24 மணி நேரம் வரைதான் பயன்அளிக்கும். அதன்பிறகு தூக்கி எறிந்து விடவேண்டும்.

இன்னொரு முகமூடி, மருத்துவ அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்துவதாகும். இது எந்தவிதமான நோய் கிருமியையும் தடுக்கும் தன்மை கொண்டது. இந்த முகமூடி 4 முதல் 6 மணி நேரம் மட்டுமே பயன் தருவதாக இருக்கும்.

எனவே, விலை உயர்ந்த சுவாச பாதுகாப்பு முகமூடிகளை பொதுமக்கள் வாங்கி அணியவேண்டிய அவசியம் கிடையாது. ஒரு கர்சீப் இருந்தால் கூட போதும். அதை முகத்தில் கட்டிக் கொள்ளலாம். ஆனால், அதை 2 மணி நேரத்துக்கு ஒரு முறை துவைக்கவேண்டும்.

ஒவ்வொரு வைரசும் உங்களுடைய கர்சீப்பில் ஒரு மணி நேரம் வரை இருக்கும். கைகளில் 15 நிமிடங்கள் இருக்கும்.

பெரியவர்களுக்கு நோய் எச்.1.என்1. வைரஸ் தொற்றினால் 7 நாட்கள் வரை இருக்கும். ஆனால் குழந்தைகளிடம் இரண்டு வாரங்கள் வரை இருக்கும். பன்றி காய்ச்சலுக்கு 48 மணி நேரத்துக்குள் சிகிச்சை பெறுவது சிறந்த பலனை தரும்.

எச்1என்1 என்னும் வைரஸ் எச்1என்2 ஆக மாறலாம். ஆனால் நாங்கள் இப்போது எச்1என்1 வைரஸ் பற்றித்தான் கவலைப்படுகிறோம். இந்த வைரஸ் மீண்டும் வரலாம். அதையும் நாம் எதிர்கொள்ள தயாராகத்தான் இருக்கவேண்டும்," என்றார் அஜய் காம்பீர்.

எல்லா ம‌க்க‌ளையும் நோய்நொடி எதுவும் வ‌ராம‌ல் இறைவ‌ன் காப்பாற்றுவானாக‌ ....

ஸ்டார்ஜ‌ன்

Post Comment

16 comments:

 1. காலத்திற்கேற்ற பதிவு.

  விளக்கங்கள் அருமை.

  ReplyDelete
 2. நல்ல விளக்கங்கள்!!! ஸ்டார்ஜான்!!!

  ReplyDelete
 3. சிறப்பாக இருக்கின்றன..,

  ஓட்டும் போட்டாச்சு

  ReplyDelete
 4. வாங்க துபாய் ராஜா

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. வாங்க தேவா சார்

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 6. ஆஹா சேக் நீங்களுமா?

  பன்றிக்காய்ச்சல் விளக்கங்கள் சிறப்பு

  ReplyDelete
 7. வருகைக்கு நன்றி சுரேஷ்

  ReplyDelete
 8. வருகைக்கு நன்றி தமிழினி

  ReplyDelete
 9. வருகைக்கு நன்றி வசந்த்

  ReplyDelete
 10. வருகைக்கும் தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கும் மிக்க நன்றி நைனா

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்