நேற்று ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி காணமல் போனார் .
இன்று அவர் விமான விபத்தில் காலமாகி போனதாக செய்திகள் கூறுகின்றன.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேரும் பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்னூல் மாவட்டம் ரொல்லபென்டா என்ற இடத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் மலைக் குன்றின் மீது நொறுங்கிய நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
கர்னூலிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் அந்த மலைக் குன்று உள்ளது.
ஹெலிகாப்டர் மலை மீது மோதி விழுந்துள்ளதாகவும், முற்றிலும் எரிந்து போன நிலையில் அது காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதில் பயணித்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பி்ல்லை என்றும் செய்திகள் கூறின.
ஹெலிகாப்டர் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படை அதிகாரி சாகர் பாரதி உறுதி செய்துள்ளார். விமானப்படை ஹெலிகாப்டர்கள்தான், ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட இடம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைக் குன்று என்பதால் விமானப்படை ஹெலிகாப்டர்களால் அங்கு இறங்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் இறங்க முடியாத நிலையில் இருப்பதால் விமானப்படை பாராசூட் பிரிவு கமாண்டோக்கள் அனுப்பப்பட்டனர்.
அவர்கள் சற்று முன்னர் மலைப் பகுதியில் இறக்கி விடப்பட்டனர்.
இதையடுத்து ஹெலிகாப்டரை நெருங்கிய அவர்கள், அங்கு ஐந்து உடல்கள் இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து ரெட்டி உள்ளிட்ட ஐவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
ரெட்டி மரணச் செய்தி அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம்...
முதல்வர் ராஜசேகர ரெட்டி
சுப்ரமணியம்- முதல்வரின் முதன்மைச் செயலாளர்.
வெஸ்லி - முதல்வரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி.
கேப்டன் எஸ்.கே.பாட்டியா - ஹெலிகாப்டர் கேப்டன்.
கேப்டன் எம்.எஸ். ரெட்டி- ஹெலிகாப்டர் துணை கேப்டன்.
இன்று விமான விபத்தில் மரணமடைந்த ஆந்திர முதல்வருக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறேன் .
அண்ணாருக்கும், அவருடன் மறைந்தவர்களுக்கும் அஞ்சலிகள்.
ReplyDeleteஆந்திர முதல்வருக்கு அஞ்சலியும் சில அரசியல் தகவல்களும்.....
http://rajasabai.blogspot.com/2009/09/blog-post_7206.html
ஒரு நல்ல தலைவரை, மனிதரை, அரசியல்வாதியை இந்த நாடு இழந்துவிட்டது என்பது மட்டும்தான் உண்மை
ReplyDeleteஎனது ஆழ்ந்த அனுதாபங்கள்
நன்றி துபாய் ராஜா
ReplyDeleteவிபத்தில இறந்த அனைவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்..
ReplyDelete:( கண்ணீர் அஞ்சலி
ReplyDeleteஒரு அரசியல் தலைவர் ஹெலிகொப்ரர் விபத்தில் இறப்பதென்பது கொடுமையானது தான்.
ReplyDelete:-(((
ReplyDeleteYSRன் குடும்பத்தாருக்கும், மாநில மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!
ReplyDelete