Pages

Saturday, September 12, 2009

சிக்கலில் சிக்கிய கமலின் மர்மயோகி


கமலின் மர்மயோகி சில சிக்கல்களில் சிக்கித் தவித்து வருகிறது . அது பத்தி கமல் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் .


பத்துகோடியே சொச்சம் பணத்தை கேட்டு கமல்ஹாசனை நெருக்குகிறது பிரமிட் சாய்மீரா. இது மர்மயோகி படத்திற்காக கொடுத்த அட்வான்ஸ் தொகையாம். இந்த பணத்தை திருப்பி தரவில்லை என்றால் தற்போது ரிலீஸ் ஆகவிருக்கும் உன்னை போல் ஒருவனுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் பிரமிட் சாய்மீரா நீதிமன்றத்தை நாடப் போகிறதாம். இதற்கு கமல் என்ன பதில் சொல்கிறார்?

பிரமீட் சாய்மீரா நிறுவனம், 'உன்னைப் போல் ஒருவன்' படத்துக்கு இடைக்காலத் தடை வாங்கியுள்ளதாக சில இதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. அது உண்மையல்ல.


இதுகுறித்த உண்மைகளை வெளி்ப்படுத்த விழைகிறேன்.


'மர்மயோகி' படம் நின்று போனதும், அதற்கான காரணங்களும் அனைவரும் அறிந்ததே. 'மர்மயோகி' படத்துக்காக நான் மிகத் தீவிரமாக உழைத்தேன். ஒரு வருட காலமாக இதற்காக வேறு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் செலவிட்டேன்.


மிக விரிவான் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. செட்கள் அமைக்கப்பட்டன. சில காட்சிகளும் ஷூட் செய்யப்பட்டன, நடிக்கப்பட்டன, இயக்கப்பட்டன.
ஆனால் படப்பிடிப்பைத் தொடரத் தேவையான நிதியைத் திரட்ட பிரமீட் சாய்மீரா நிறுவனத்தால் முடியாமல் போனதால்தான் இந்தத் திட்டம் முடங்கிப் போனது.


எனது திரையுலக வாழ்க்கையின் ஒரு வருட காலத்தை நான் பிரமீட் சாய்மீரா நிறுவனத்திற்காக இழந்துள்ளேன். அது மட்டுமல்லாமல் ரூ. 40 கோடி வருமானத்தையும் இழந்துள்ளேன். இதுதொடர்பாக எனக்கு ரூ. 40 கோடியைத் தர வேண்டும் என்று கோரி 2009, ஏப்ரல் 12ம் தேதி நான் பிரமீட் சாய்மீரா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் இதுவரை அந்த நோட்டீஸுக்கு சாய்மீரா பதில் தரவில்லை.


மேலும், சாய்மீரா நிறுவனத்திற்கு எதிராக நாங்கள் பல்வேறு கோர்ட்களில் கேவியட் மனுக்களையும் தாக்கல் செய்துள்ளோம். பிரமீட் சாய்மீரா நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிடப்பட்டு வந்தது.


இந் நிலையில், எனது சட்டப்பூர்வமான நடவடிக்கைளை தடுக்கும் வகையில், பத்திரிகைககள் மூலம் எனக்கு எதிரான விஷமப் பிரசாரத்தில் சாய்மீரா நிறுவனம் இறங்கியுள்ளது. தவறான குற்றச்சாட்டுக்களையும், கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கான இடைக்கால பதிலறிக்கையையும் நாங்கள் அனுப்பி விட்டோம்.


உண்மை என்னவென்றால் நாங்கள் அவர்களுக்கு எதிராக கேவியட் பெற்றுள்ளோம். நானோ அல்லது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனமோ 'உன்னைப் போல் ஒருவன்' பட ரிலீஸுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவை எந்த கோர்ட்டிலிருந்தும் பெறவில்லை என்று கமல் கூறியுள்ளார்.


எதிலும் முன் மாதிரியாக இருப்பவர் கமல். உன்னைப்போல் ஒருவன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முந்தின தினத்தில் அவர் இணையதள பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் சொன்னார்.


சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே போன்ற படங்களிலும் நடிக்கிறீர்கள். மகாநதி, குணா, நாயகன் போன்ற படங்களிலும் நடிக்கிறீர்கள்? உங்களது முற்போக்கு சிந்தனைக்கு சகலகலா வல்லவன் மாதிரி படங்கள் தேவைதானா? எப்போதாவது இது பற்றி யோசித்திருக்கிறீர்களா?அதுபோன்ற படங்களையும் ரசிப்பவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.


உங்க கூட்டத்திலேயே கூட இருக்கக்கூடும். (இந்த நேரத்தில் ஒருவர் கையை உயர்த்த, ...தோ இருக்காரே என்கிறார் கமல்) சினிமாங்கிறது கபடி விளையாட்டு மாதிரி. எங்கே வேணும்னாலும் போகலாம். ஆனால் பிடிபடாமல் கவனமா திரும்பிடனும். அது மாதிதான் என்னோட நிலையும் என்றவரிடம் சமீபத்தில் பரவலாக வந்த ஒரு எஸ்எம்எஸ் குறித்தும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.


சிகப்பு ரோஜாக்கள் படத்தை எடுத்தீர்கள். சிறிது காலத்திலேயே அப்படத்தில் வருவது மாதிரியே ஒரு சைக்கோ கொலையாளியை போலீஸ் கைது செய்தது. அன்பே சிவம் படத்தில் சுனாமியை பற்றி சொன்னீர்கள். அடுத்த சில வருடத்திலேயே சுனாமி வந்தது. தசாவதாரத்தில் உயிர்கொல்லி கிருமியை பற்றி சொன்னீர்கள். இதோ பன்றி காய்ச்சல் பரவுகிறது. உன்னைப் போல ஒருவன் படத்தில் தீவிரவாதிகள் குண்டு வைப்பதை பற்றி... (இடையிலேயே குறுக்கிடுகிறார் கமல்)


“...நான்தான் குண்டு வைக்கறதை பற்றி புதுசா சொல்றேன்னு நினைச்சிராதீங்க. ஏற்கனவே மும்பையிலே குண்டு வச்சிட்டாங்க. இப்படியெல்லாம் தீவிரவாதம் இருக்கக் கூடாதுன்னு சொல்ற படம்தான் அது” என்றார். ஒவ்வொரு கேள்வியையும் படு ஜோவியலாக எதிர்கொண்ட கமல், இன்னொரு கேள்விக்கு பதில் சொன்னதுதான் வெடிகுண்டு சிரிப்பு.


உங்களோட அடுத்த திட்டம் என்ன? “இந்த பிரஸ்மீட்டை சீக்கிரம் முடிச்சிரணும்ங்கிறதுதான்!”


எப்படி நம்ம கமல்...?


ஸ்டார்ஜன்

Post Comment

10 comments:

 1. பிரமிட் சாய்மிரா பற்றி எற்கனவே தெரிந்த விஷயம்

  ReplyDelete
 2. நல்லா ஆராய்ஞ்சிருக்கீங்க!

  ReplyDelete
 3. மொட்டை அடித்துக்கொண்டு ஆண்டி போண்டியாக விருப்பம் உள்ளவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு. அருமையாக மொட்டை அடித்து விடப்படும். Straight ஆ நடுத்தெரு நிச்சயம். (தகுதி: எஸ்.தாணு போன்ற பெரும் பணக்காரர்கள் மட்டுமே).

  அணுகவும்:

  ஆழ்வார்பேட்டை ஆண்டவன்
  எல்டாம்ஸ் ரோடு
  சென்னை.

  ReplyDelete
 4. வாங்க துபாய் ராஜா வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி டி வி ஆர்

  ReplyDelete
 6. வருகைக்கு நன்றி சுரேஷ்

  ReplyDelete
 7. வருகைக்கு நன்றி ராஜாராமன்

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்