ஈரம் படம் இப்போதான் என்னால பாக்க முடிந்தது .
தமிழ்சினிமா எத்தனையோ வில்லன்களை பார்த்திருக்கிறது. இந்த படத்தில் போலீசை சுற்றலில் விடும் அந்த வில்லன் தண்ணீர்!
குளியலறை தொட்டிக்குள் பிணமாக கிடக்கிறார் சிந்துமேனன். தற்கொலைதான் என்று முடிவுக்கு வருகிறது போலீஸ். ஆனால், இதில் சந்தேகம் இருப்பதாக கேசை நீட்டிக்கிறார் போலீஸ் அதிகாரி ஆதி. இவரும் சிந்து மேனனும் முன்னாள் காதலர்கள் என்ற சின்ன அதிர்ச்சியோடு நகர்கிறது படம். அந்த பிளாட்டில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தொடர் விபத்தில் மரணமடைய, காரணத்தை தேடிப்போகிற ஆதிக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதிலும் எல்லா மரணமும் தண்ணீர் ரூபத்தில். சிந்துமேனின் ஆவியே வந்து "இது தற்கொலையல்ல" என்று ஆதியிடம் ரகசிய வாக்குமூலம் தருகிறது. கொலையாளியான கணவனுக்கு தண்டனை தருவது ஆதியா? ஆவியா? விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்!
திருச்சி கல்லு£ரியில் படிக்கும் சிந்துமேனன், ஆதியுடன் காதலில் விழும் காட்சிகள் எல்லாம் பனித்துளி படர்ந்த ஹைகூ ரோஜா! என் கண்ணை பார்த்து சொல்லு... இந்த ஒரு டயலாக் வரும்போதெல்லாம் தியேட்டரில் கைத்தட்டல்கள். இடது கை பழக்கமுள்ளவர் இவர் என்பதை கேஷ§வலாகதான் காட்டுகிறார்கள் என நினைத்தால், அதுதான் படத்தின் ஸ்டிராங்கான அடையாளம். அதிருக்கட்டும்... சிந்து எப்படி? லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்! என்ன அழகாக இருக்கிறார் ! அந்த பார்வையே கொல்லுதே !
ஆதிக்கு காக்கி சட்டை போடாமலே ஒரு கம்பீரம் வந்து ஒட்டிக் கொள்கிறது. குரலில் பிருத்விராஜ் தெரிந்தாலும், நடிப்பில் புது ரூட் தெரிகிறது. கண்ணுக்கு எதிரே காதலி இறந்து கிடக்கிறாள். ஒரு அதிர்ச்சி வேண்டாமோ? இதுதான் போலீஸ் மிடுக்கு போலிருக்கிறது.
வில்லனாகியிருக்கிறார் நந்தா. சரியான ரூட். பிக்கப் பண்ணுங்க பிரதர்.
தங்கையான சரண்யா மோகன், பொம்மையாக வளைய வந்தாலும், அக்காவின் ஆவி உள்ளே புகுந்த பின் கண்களே கலவரமூட்டுகிறது.
புறம்பேசுகிற எல்லாருமே ஆவியால் கொலை செய்யப்படுவதும், அந்த கொலைகள் நடைபெறுகிற விதமும் ரத்தம் தெறிக்கும் அச்சத்தை தருகிறது. குறிப்பாக கழிவறையில் சிக்கிக் கொள்ளும் அந்த காதல் பார்ட்டி. நிதானமாக கொலையை செய்துவிட்டு தண்ணீரில் சுவடுகள் பதிய ஆவி நடந்து போவது ஈரக்குலையில் திடுக் திடுக்...
பேய் கதையில் லாஜிக் எதுக்குப்பா என்றாலும், சட் சட்டென்று கூடுவிட்டு கூடு பாயும் ஆவி, தங்கையின் ஜாக்கெட்டை கிழிக்கிற வரை பூப்பறித்துக் கொண்டா இருந்தது?
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு திகிலுக்கு திகில் சேர்க்கிறது. தமனின் இசை மெலடி விருந்து. விஷ¨வல் எபெக்ட்ஸ் இந்தியன் ஆர்ட்டிட்ஸ், ஈஎப்எக்ஸ். ஒவ்வொரு திகில் காட்சியும் விஷ§வல் டேட்ஸ்ட்!
நீண்டகாலமாக நிலவி வரும் திகில் பட வறட்சிக்கு இந்த படம் ஜில்லென்று ஒரு கிளாஸ் -ஈரம்!
படத்துக்கு எத்தனை மார்க் போடலாம் நீங்களே சொல்லுங்க ...
நல்ல விமரிசனம் 40/100
ReplyDelete>>பேய் கதையில் லாஜிக் எதுக்குப்பா என்றாலும், சட் சட்டென்று கூடுவிட்டு கூடு பாயும் ஆவி, தங்கையின் ஜாக்கெட்டை கிழிக்கிற வரை பூப்பறித்துக் கொண்டா இருந்தது? <<
ReplyDeleteThanni venumey koodu paaya (apdeenu padathila solirupaangaley)
எழுத்துக்களாலே நல்லா கெளப்பியிருக்கீங்க பீதியை....
ReplyDeleteவிமர்சனம் படிக்கவே பயமாக இருக்கிறது நண்பரே....
குட் ரிவியூ...
ReplyDelete:)
ReplyDeleteவருகைக்கு நன்றி T.V.Radhakrishnan
ReplyDeleteவருகைக்கு நன்றி யாத்ரீகன்
ReplyDeleteவருகைக்கு நன்றி துபாய் ராஜா
ReplyDeleteவருகைக்கு நன்றி பிரியமுடன்...வசந்த்
ReplyDeleteநான் இந்த படம் நெட்டிள் பார்த்து மூன்று நாளாகிறது, என்னடா சங்கர் பேனர் படத்துக்கு ஒரு பாதீவும் காணொமே என்று நினைத்தேன் நீங்கள் போட்டுவிட்டீர்கள் நீங்கள் சொன்னதுபோல் சில லாஜிக் இடித்தாலும் படம் பார்க்கலாம்
ReplyDeleteவருகைக்கு நன்றி ♥ தூயா ♥ Thooya ♥
ReplyDeleteவருகைக்கு நன்றி moulefrite
ReplyDeleteA very good film. High standards. We must appreciate directors like this. I appreciate the "absence" of routine tamil film nonsense in this film. Kudos to Mr.Arivazhagan, Keep going, Make more films of excellent quality!!. I would give 60 out of 100.
ReplyDeleteவருகைக்கு நன்றி azhagan
ReplyDeleteபார்க்க வேண்டிய படம்.நல்ல விமர்சனம்.முடிந்தால் என் விமர்சனமும் படிக்கவும்.
ReplyDeleteவருகைக்கு நன்றி ரவிசங்கர்
ReplyDeleteஅப்போ வழுக்குற அளவுக்கு ஈரம் இல்லே?
ReplyDeleteவாங்க ராஜ்குமார் வருகைக்கு நன்றி
ReplyDelete