Sunday, August 22, 2010

பால பாடம்


மூழ்குவதற்கு மூச்சுப்பயிற்சி
பழகினேன் முத்தெடுக்க அல்ல..
மூழ்கியதும்தான் தெரிந்தது
மூழ்குவது கஷ்டம்தான் என்று!!
முறை தெரிந்தால் சொல்லுங்கள்
கடன் கொடுத்தவனை சமாளிக்க..

படிக்கும்போது தெரிந்த
கடன்வாங்கி கழித்தல்
இப்போதும் தொடர்கிறது
கொடுக்கல் வாங்கலில்..

தேவையும் வள‌ர்ச்சியும்
எனக்கு தேவைதான்
தேவையாய் பணம்..

பத்துரூபாய் பார்க்க‌
விலையாய் வியர்வைத்துளி..
தேவைக்கு மிஞ்சியதும்
தேவைதான்
இதுக்கு பெயர்தான்
தொடருமா?..

,

28 கருத்துரைகள்:

கலாநேசன் said...

//படிக்கும்போது தெரிந்த
கடன்வாங்கி கழித்தல்
இப்போதும் தொடர்கிறது//

அருமை.

சீமான்கனி said...

//பத்துரூபாய் பார்க்க‌
விலையாய் வியர்வைத்துளி..
தேவைக்கு மிஞ்சியதும்
தேவைதான்
இதுக்கு பெயர்தான்
தொடருமா?...//

ரசித்த சிறப்பானவரிகள் ஸ்டார்ஜன் வாழ்த்துகள்...

ஜெய்லானி said...

//தேவையும் வள‌ர்ச்சியும்
எனக்கு தேவைதான்
தேவையாய் பணம்..//

சூப்பர் பாயிண்ட்

தியாவின் பேனா said...

அருமை
வார்த்தைகள் சூப்பர்

நாடோடி said...

வ‌ரிக‌ள் ந‌ல்லா வ‌ந்திருக்கு ஸ்டார்ஜ‌ன்.

சேட்டைக்காரன் said...

நல்லாயிருக்கு கவிதை! எல்லாருக்கும் கேள்வியிருக்கு; அதை கவிதையாக்கிட்டீங்க! :-)

சிங்கக்குட்டி said...

ஏ, எப்பாடி அருமையான சிந்தனை அழகான கவிதை, ரொம்ப நல்லா இருக்கு.

asiya omar said...

நல்ல கருத்துள்ள கவிதை.ஸ்டார்ஜன்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

பத்துரூபாய் பார்க்க‌
விலையாய் வியர்வைத்துளி..//

உண்மைதா ஸ்டார்ஜன்.. பணம் சம்பாதிப்பது கஷ்டம்தான்..

சி. கருணாகரசு said...

படிக்கும்போது தெரிந்த
கடன்வாங்கி கழித்தல்
இப்போதும் தொடர்கிறது
கொடுக்கல் வாங்கலில்..//

மிக நகைச்சுவை நிறைந்த வரிகள்
கவிதை யதார்த்தம் பாராட்டுக்கள்.

abul bazar/அபுல் பசர் said...

// படிக்கும்போது தெரிந்த
கடன்வாங்கி கழித்தல்
இப்போதும் தொடர்கிறது
கொடுக்கல் வாங்கலில் //

நூறு சதவீதம் உண்மை.
இதுதான் இன்றும் தொடரும் துயரம்.

கமலேஷ் said...

அண்ணே இதை மாதிரி ஒரு கவிதை எல்லோர் கிட்டயும் இருக்கு...

தொடரும்தான்...தொடரும்தான்...

ஹேமா said...

சொல்லி முடித்த விதம்தான் பாராட்டுக்குரியது ஸ்டார்ஜன்.

சே.குமார் said...

ரொம்ப நல்லா இருக்கு.

மதுரை சரவணன் said...

அருமை .வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

ரொம்ப நல்லாருக்கு.. கடன் வாங்கி கழித்தல்.

சொல்லிக்கொடுத்த கணக்கு வாத்தியாரைச்சொல்லணும் :-))))))

ஆயிஷா அபுல் said...

அஸ்ஸலாமு அழைக்கும் ஸ்டார்ஜன்
உங்கள் கவிதை நல்ல கருத்துக்கள்.
கடனை கொடுத்து விட்டு மூழ்குவதற்கு
மூசசு பயிற்றி எடுக்கவும்.{ தமாஸ் }
இன்று கஷ்டப்பட்டால் தான் நாளை
ராஜா ஆகலாம்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாங்க கலாநேசன் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

வாங்க சீமான்கனி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

செ.சரவணக்குமார் said...

நல்லாருக்கு ஸ்டார்ஜன். கடன் வாங்கி கழிச்சிக்கிட்டே இருக்கோமே?

Chitra said...

பத்துரூபாய் பார்க்க‌
விலையாய் வியர்வைத்துளி..
தேவைக்கு மிஞ்சியதும்
தேவைதான்


...... வாழ்க்கை பாடங்களை, பணம் எப்படி சொல்லி கொடுக்கிறது! உங்கள் கவிதை, அருமையாக இருக்குதுங்க .....

Ananthi said...

///படிக்கும்போது தெரிந்த
கடன்வாங்கி கழித்தல்
இப்போதும் தொடர்கிறது
கொடுக்கல் வாங்கலில்..////

எப்படியோ, படிச்சத வேஸ்ட் ஆக்காம யூஸ் பண்றீங்க போங்க...
ரொம்ப நல்லா இருக்கு, கவிதை வரிகள்.. வாழ்த்துக்கள்..

மங்குனி அமைசர் said...

எதார்த்தமான வரிகள் சார்

ஸாதிகா said...

அருமையான வரிகளை தேர்ந்தெடுத்து அற்புதமான கவிதையை படைத்த ஸ்டார்ஜனுக்கு வாழ்த்துக்கள்.

DREAMER said...

அருமையான கவிதைங்க..!

-
DREAMER

வெறும்பய said...

எதார்த்தமான வரிகள்

அஹமது இர்ஷாத் said...

சூப்பரான் வரிகள் ஸ்டார்ஜன்.. நல்லாயிருக்கு..

ஜெயந்தி said...

தலைப்பு பொருத்தம். பால பாடம் வயதானாலும் தொடர்கிறது.

asiya omar said...

ஸ்டார்ஜன் ஒரு வாரமாக ப்ளாக்கில் குறிப்பு கொடுக்கலை,பிஸியா?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்