Pages

Sunday, February 21, 2010

பெண்களே ! ஒரு நிமிடம் ...


பெண்கள் நாட்டின் கண்கள் . ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு ரொம்ப முக்கியமானது . இதை யாராலும் மறுக்க முடியாது மறக்கவும் முடியாது . பெண்கள் ஒரு சக்தியாக விளங்குகின்றனர் . எல்லாத் துறைகளிலும் முன்னேறி வருகின்றனர் .

அடுப்பூதும் பெண்களுக்கு கல்வியெதற்கு என்ற காலமெல்லாம் மலையேறி விட்டது எனலாம் . ஆணுக்கு பெண் சமம் என்ற கோட்பாடுகள் பெருகிவரும் காலமிது . கல்வி , பொருளாதாரம் , அர‌சியல் , போக்குவரத்து , தொழில் , சினிமா , இல்லத்தரசி என்று பன்முக திறமை கொண்டவர்களாக மின்னுகின்றனர் .

பெண் ஆணில் ஒரு பகுதி எனலாம் . ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு பெண் இருந்தாக வேண்டும் . இதுதான் இறைவனின் நியதி . பெண் என்பவள் ஆணின் வாழ்க்கையில் எத்தனை பரிமாணம் எடுக்கிறாள் . முதலில் தாயாக , சகோதரியாக , காதலியாக , மனைவியாக , தன் குழந்தைகளுக்கு அம்மாவாக , நல்ல சக தொழிலாளியாக , நல்ல குடும்பத்தலைவியாக , பாட்டியாக என்று அவர்கள் பங்கு முக்கியமானதே !.


முதன்முதலில் ஒரு ஆண் பிறந்தவுடன் சந்திப்பது அம்மாவைத் தான் . அம்மாதான் தன் குழந்தைக்கு முதல் ஆசிரியர் . அவனுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதிலிருந்து அவனை வளர்த்து ஆளாக்கி ஒரு அந்தஸ்துக்கு கொண்டு வருவதுவரை அம்மாவின் பங்கு முக்கியமானது .

அதுபோல சகோதரியும் சகோதரனின் வெற்றிக்கு உதவுகிறாள் . காதலிக்காக உருகாத காதலன் எவரும் இல்லை . கவிபாடாத கவிஞனும் இல்லை . தான் விரும்பிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான் . சில நேரங்களில் சிலருக்கு அந்த காதல் கைக்கூடாமல் போவதுண்டு .

பெண்கள் யாரை மனசுல நினைச்சிட்டாங்களோ அவங்க மனசுல இருந்து சீக்கிரமா அவரை நீக்க முடியாது .

1912 ல் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.


கணவனுக்காக மனைவியின் தியாகத்தை அளவிட முடியாதது . தன்னோட கணவனின் வாழ்வில் சரிபாதியாகி இன்பதுன்ப நேரங்களில் அவனோடு பங்கெடுத்து தன் கடைசிகாலம் வரை வாழ்க்கையை பகிர்ந்து கொள்கிறாள் . அதுபோல அலுவலகங்களில் தன் திறமையைக் கொண்டு முன்னேறும் பெண்கள் சாதனைகளை புரிகின்றனர் . கல்வி , இலக்கியம் போன்ற துறைகளிலும் பெண்கள் தங்கள் படைப்புகளின் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றனர் .


டி.கே.பட்டம்மாள்


சினிமாவிலும் பெண்களின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம் . ஒரு சினிமா எடுக்கப்படுகிறதென்றால் பெண்களை மையமாக கொண்டு தான் . தாய்மார்களின் ஏகோபித்த ஆதரவினைக் கொண்டு தான் இன்றைய நாயகர்கள் ஜொலிக்கிறார்கள் . அம்மா , தங்கை சென்டிமென்ட் , பெண்கள் பிரச்சனைகளை மையமாக கொண்ட படங்களை மக்கள் வெற்றி பெறாமல் விடமாட்டாங்க . பெண்கள் மனதில் இடம் பிடிக்கும் காட்சிகள் படத்தில் ரொம்ப முக்கியம் .
தொழில் நுட்பம், மருத்துவம் , விளையாட்டு என்று அனைத்துதுறைகளிலும் பெண்கள் சாதனை புரிந்து வருகின்றனர். இப்படி பெண்கள் இல்லாத துறைகளே இல்லையெனலாம்.

நாடு முன்னேற வீடு நல்லாருக்க வேண்டும் . வீட்டை வழிந‌டத்துவதும் பெண்கள்தான். வீட்டில் சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் வரலாம் . அப்போது நாம் கவலைப்படாமல் இருக்க வேண்டும் , தம்பதியினர் மனம் விட்டு பேச வேண்டும் . கருத்துகளை பரிமாறிக் கொண்டு ஒருத்தருகொருத்தர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாகும் .


அதுபோல சமூகத்திலும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது . ஈவ்டீசிங் , பாலியல் பலாத்காரம் அலுவலக சீண்டல்கள் ரொம்பவும் வருத்தப்பட வைக்கிறது . இந்த மாதிரி நேரங்களில் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து ஆறுதல் சொல்ல வேண்டும் . பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முன்வரவேண்டும் .

விளம்பரங்களில் பெண்களை மிகவும் அசிங்கப்படுத்துவது மிகவும் வேதனைக்குரியது . அதுபோல பெண்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் . பெண்களின் கருத்துக்களில் தலையிடாதீங்க .

இப்போதைய சில பெண்கள் இன்னும் அந்தகால நினைப்பிலே இருக்கின்ற‌னர்.
சீரியல்களில் தங்களை தொலைத்துவிடுகின்றனர் .

மேடம்களே மேடம்களே !! வாங்க வாங்க ... வெளிச்சத்தை நோக்கி ..


உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன் .

Post Comment

36 comments:

 1. //மேடம்களே மேடம்களே !! வாங்க வாங்க ... வெளிச்சத்தை நோக்கி ..//

  நல்லா தான் கூப்பிட்டு இருக்கீங்க..கண்டிப்ப வருவாங்க..வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. வருக வருக என நானும் அழைக்கிறேன்.

  ReplyDelete
 3. மொக்கை சீரியல்கள் வரவேற்பறையை "அலங்கரிப்பது" கொடுமையிலும் கொடுமை.

  ReplyDelete
 4. கரு...சாரி குரு... சூப்பருங்கோ...

  ReplyDelete
 5. அருமையான பதிவு! இக்காலத்திற்கு மிகவும் பொருத்தமான கருத்துக்கள்! சபாஷ்!!

  ReplyDelete
 6. //நாடு முன்னேற வீடு நல்லாருக்க வேண்டும் . வீட்டை வழிந‌டத்துவதும் பெண்கள்தான். //

  பெண்களைப்பற்றி உயர்வாக எழுதியிருக்கிறீர்கள்.

  ரொம்ப அருமை ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 7. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க....

  ReplyDelete
 8. எல்லாம் சரிதான் என்ன திடீர்னு

  ReplyDelete
 9. நல்லா ஆராய்ச்சி பண்ணி எழுதியிருக்கிறீங்க.நன்று.

  ReplyDelete
 10. நல்ல பதிவு இந்த காள பெண்களுக்கு அவசியமான கருத்துக்கள்


  சம உரிமை வேண்டும் என்றவர்கள் இப்படி சீரியல்களில் தங்களை தொலைப்பதுதான் வேதனையான விஷயம்

  ReplyDelete
 11. நல்ல தொகுப்பு ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 12. அருமையான பதிவு ஸ்டார்ஜன் .

  பெண்கள் முன்னேற்ற பாதையில் வரவேண்டும். அப்போதுதான் ஏற்றதாழ்வு மறையும் என்பதை அழகாக சொல்லிருக்கீங்க.

  வாழ்த்துகள் ஸ்டார்ஜன் .

  ReplyDelete
 13. வாங்க ஸ்டீபன்

  ///நல்லா தான் கூப்பிட்டு இருக்கீங்க..கண்டிப்ப வருவாங்க.. ///

  அதுதான் என் ஆசையும் ..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 14. வாங்க டிவிஆர் சார்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 15. வாங்க ஷங்கி

  எல்லோரும் சேர்ந்து அழைப்போம் .

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 16. வாங்க சைவகொத்துப்பரோட்டா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 17. வாங்க நாஞ்சில் பிரதாப்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 18. வாங்க சேட்டைக்காரன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 19. வாங்க செ.சரவணக்குமார்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 20. வாங்க அக்பர்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 21. வாங்க அண்ணாமலையான்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 22. வாங்க அத்திரி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 23. வாங்க மயில்ராவணன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 24. வாங்க V.A.S.SANGAR

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 25. வாங்க SUFFIX

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 26. வாங்க ராஜா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 27. அழுத்தமான கருத்துகளை கொண்ட அழகான பதிவு. பெண்களுக்கு உங்கள் பதிவில்
  33 % இட ஒதுக்கீடு கொடுத்ததற்கு நன்றி சேக்.

  ReplyDelete
 28. ஆஹா அருமை நண்பரே ஆழமான கருத்துகளுடன் ஒரு பதிவு !

  ReplyDelete
 29. வாங்க அபுல்பசர்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 30. வாங்க சங்கர் !!!

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 31. அழுத்தமான கருத்துகளை கொண்ட அழகான பதிவு.Well done.

  ReplyDelete
 32. //மேடம்களே மேடம்களே !!//

  ஜெ. & சசி மேடம்களையாச் சொல்றீங்க? :-))


  நல்ல கருத்துக்கள்.

  ReplyDelete
 33. வாங்க ஜெஸ்வந்தி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 34. வாங்க ஹூசைனம்மா

  அவங்களெல்லாம் நினைச்சுபார்க்க முடியாத அளவுக்கு பெரியவங்க‌

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்