Pages

Saturday, February 6, 2010

கோவா - ஜாலிலோ ஜிம்கானா


கோவா படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறதாமே !!. எல்லோருமே இந்த படம் பார்த்து விட்டார்கள் . நான் நேற்றுத் தான் கோவா படத்தை பார்த்தேன் .பிற‌கு ஏண்டா இந்த படத்தை பார்த்தோம் என்றாகி விட்டது . நான் இந்த படத்தை ரொம்ப எதிர்பார்த்தேன் . நமக்கு எதிர்பாக்காதது நடக்கும் போது , நாம எதிர்பார்த்தது சர்வ‌சாதாரணமாகி விடுகிறது . இது தான் வாழ்க்கையோட தத்துவமோ ...


கோவா படத்தில் ஜெய் , வைபவ் , பிரேம்ஜி அமரன் ஆகியோர் பஞ்சாயத்தில் நிற்பது போல ஆரம்பம் ஆகிறது . ஆரம்பமே அசத்தலா இருக்கே என்று நினைத்தது தப்பானது . அதிலிருந்து தப்பிக்கும் மூவரும் வீட்டில் உள்ள பணம் நகை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடுகின்றனர் . பின்னர் மதுரைக்கு வரும் அவர்கள் அவர்கள் ஊர் நண்பர் கல்யாணத்தில் கலந்துகொள்கின்றனர் . மணப்பெண் வெளிநாட்டுக்காரி . திகைத்து போகின்றனர் . லொப்பையான நண்பனான அவனுக்கே வெளிநாட்டுக்காரி கிடைக்கும் போது நமக்கு கிடைக்காதா என்ன என்று மூவரும் கோவாவிற்கு பயணப்படுகிறார்கள் .


அங்கே அவர்களுக்கு அரவிந்து நட்பு கிடைக்கிறது . அவர் ஒரு ஹோமோசெக்ஸ் எண்ணம் கொண்ட சம்பத்துக்கு ஜோடி . இவர்களும் சம்பத்திடம் மாட்டிக் கொள்ள முடிவு என்ன ஆனது , நண்பர்கள் ஊர் திரும்பினார்களா இல்லையா என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க .


வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வந்திருக்கும் இந்த படத்தில் ஜெய் , வைபவ் , பிரேம்ஜி அமரன் , ஸ்னேகா , பியா மற்றும் பிரேம்ஜியின் வெளிநாட்டுக்காரி , சண்முக சுந்தரம் , விஜயகுமார் , சந்திரசேகர் என ஒரு பட்டாளமே நடித்து இருக்கிறார்கள் .


படம் ஆரம்பத்து காட்சிகள் ரொம்ப நல்லாருக்கு . பஞ்சாயத்து காட்சிகள் அரதப‌ழசு என்றாலும் ரசிக்க வைக்கிறது . அதிலும் பிரேம்ஜி எப்படி சாமிப்பிள்ளையானார் என்பதற்கு பிளாஸ்பேக் காட்சிகள் ரொம்ப நல்லாருக்கு .


இன்னும் சண்முக சுந்தரம் பழைய நடிப்பை மறக்க வில்லை என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார் .ஜெய் இன்னும் அப்பாவி பையன் போல இருக்கிறார் . அவருக்கும் பியாவுக்கும் ஆன காதல் காட்சிகள் மனதில் ஒட்டவில்லை .


அதேபோல வைபவ் , ஸ்னேகா காட்சிகள் ரொம்பவே கண்றாவியா இருக்கு .


அப்ப யாரு ஹீரோ அட நம்ம பிரேம்ஜி தான் . என்னக் கொடுமை சார் இது ? ...


தன் தம்பிக்குன்னு படம் எடுத்த அண்ணன் வெங்கட் பிரபு வாழ்க . அவர் இயக்கிய மற்ற 2 படங்களின் பாதிப்பு ரொம்பவே இருக்கு . சரோஜாவில் இதே கதை தான் . நண்பர்கள் கிரிக்கெட் நேரடியாக பார்க்க பெங்களூர் போகும் போது ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள் . அதே போல தான் இதிலும் ஜாலிக்காக கோவா செல்லும் இவர்கள் ஹோமோ செக்ஸ் எண்ணம் கொண்ட சம்பத்திடம் சிக்கிக் கொள்கிறார்கள் .


கோவா என்றாலே ஜாலி என்பது தான் நினைவுக்கு வரும் . திரைப்படம் கோவா என்றால் நமக்கு எரிச்சல் தான் நினைவுக்கு வருகிறது . எப்படி எடுத்திருக்க வேண்டிய கதைக்களம் . வெங்கட்பிரபுக்கு மிஸ்ஸாகி விட்டது .


இந்த பட‌த்தில் சொல்லி இருக்கும் ஹோமோசெக்ஸ் அந்தளவுக்கு வரவேற்பை பெற வில்லை .


இன்னொரு முக்கியமான விஷயம் யுவன்சங்கர்ராஜா . இசையிலும் பிண்ணனி இசையிலும் எப்போதுமே கலக்கிக் கொண்டிருக்கும் யுவனுக்கு இந்த படம் கொஞ்சம் பின்னடைவு .மொத்தத்தில் இந்த படத்தை ஒரு தடவை பார்க்கலாம் .


கோவாவுக்கு ஜாலியாக டூர் போகும் எண்ணம் கொண்டவர்கள் , போவதற்கு முன்னர் இந்த படத்தை பார்த்துறாதீங்க . அப்புறம் எண்ணமெல்லாம் மாறிடும் .


கோவா _ ரசிகனின் புலம்பல் = ஜாலியை தொலைத்தது திரும்ப கிடைக்குமா ?...


**********************************************


இன்று தல அஜித் நடித்து வெளியாகி இருக்கும் அசல் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துவோம் .விரைவில் எதிர்பாருங்கள் உங்கள் தமிழ் படத்தை ...

Post Comment

20 comments:

 1. நல்ல விமர்சனம் ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 2. சூப்பர் விமர்சனம் ஸ்டார்ஜன் .

  அருமை .

  ReplyDelete
 3. விமர்சனம் நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்.

  வெங்கட் பிரபு அடுத்த படத்தில் இதை விட நல்ல செய்ய வேண்டும்.

  ReplyDelete
 4. நல்ல பார்வை

  அடுத்தவாரம் அசல் விமர்சனமா?

  ReplyDelete
 5. //கோவா என்றாலே ஜாலி என்பது தான் நினைவுக்கு வரும் . திரைப்படம் கோவா என்றால் நமக்கு எரிச்சல் தான் நினைவுக்கு வருகிறது . எப்படி எடுத்திருக்க வேண்டிய கதைக்களம் . வெங்கட்பிரபுக்கு மிஸ்ஸாகி விட்டது//

  நன்றி ஸ்டார்ஜன் விமர்சனத்துக்கு

  ReplyDelete
 6. //நமக்கு எதிர்பாக்காதது நடக்கும் போது , நாம எதிர்பார்த்தது சர்வ‌சாதாரணமாகி விடுகிறது . இது தான் வாழ்க்கையோட தத்துவமோ ...//

  ஸ்டார்ஜன்...தத்துவமா வருதா இந்தப் படம் பாத்து !

  ReplyDelete
 7. சூப்பர் விமர்சனம் ஸ்டார்ஜன் .....

  ReplyDelete
 8. ஹேமா said...
  //நமக்கு எதிர்பாக்காதது நடக்கும் போது , நாம எதிர்பார்த்தது சர்வ‌சாதாரணமாகி விடுகிறது . இது தான் வாழ்க்கையோட தத்துவமோ ...//

  ஸ்டார்ஜன்...தத்துவமா வருதா இந்தப் படம் பாத்து //

  அதானே..:) ஆனாலும் படம் நல்ல தத்துவத்த தான் தந்திருக்கு..:))

  ReplyDelete
 9. ஊருக்கு போயி பார்க்கலாம்னு இருந்தேன். வேனாம்னு சொல்லிட்டீங்க. சரி விடுங்க.

  ReplyDelete
 10. //கோவாவுக்கு ஜாலியாக டூர் போகும் எண்ணம் கொண்டவர்கள் , போவதற்கு முன்னர் இந்த படத்தை பார்த்துறாதீங்க . அப்புறம் எண்ணமெல்லாம் மாறிடும்//

  அப்படியா, ரைட்... :))

  ReplyDelete
 11. கோவா,படத்தை அக்கு வேறா,ஆணிவேரா, பிரிச்சு மேஞ்சுட்டிங்க சேக்.
  நல்ல விமர்சனம்.

  தல படம் எப்படி.சொல்லுங்க. புருனையில் அதுதான் இப்பம் ஓடுகிறது.
  உங்கள் விமர்சனம் படித்துவிட்டுதான் படம் பார்கபோகவேண்டும்.

  ReplyDelete
 12. //விரைவில் எதிர்பாருங்கள் உங்கள் தமிழ் படத்தை //

  ரைட்...

  ReplyDelete
 13. வாங்க

  செ.சரவணக்குமார் @ நன்றி
  Raja @ நன்றி
  gulf-tamilan @ சரியா சொன்னீங்க ..
  அக்பர் @ நன்றி , பார்ப்போம் என்ன செய்கிறார் என்று ...
  கட்டபொம்மன் @ நன்றி மன்னா
  பிரியமுடன்...வசந்த் @ நன்றி வசந்த் @ விரைவில் எதிர்பாருங்கள் அசலை
  thenammailakshmanan @ நன்றி தேனம்மை அக்கா
  ஹேமா @ ஆமாம் ஹேமா
  Sangkavi @ நன்றி
  ஷங்கர்.. @ அதானே..:-))
  S.A. நவாஸுதீன் @ நன்றி நவாஸ்
  சைவகொத்துப்பரோட்டா @ முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
  அபுல் பசர் @ ரொம்ப நன்றி சார் , விரைவில் எதிர்பாருங்கள் அசலை
  ஜெட்லி @ ரைட்...


  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 14. எதிர் பார்த்த அளவுக்கு கோவா இல்லை என்பதே உண்மை..............வெங்கட் பிரபு முதல் முறையாக சறுக்கியிருக்கிறார்.....பாவம் சூப்பர் ஸ்டார் பொண்ணு

  ReplyDelete
 15. வாங்க

  அத்திரி

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 16. சரிப்பா நான் பார்க்கலை :) நல்ல விமர்சனம்.

  ReplyDelete
 17. வாங்க

  SUFFIX

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்