Pages

Saturday, February 27, 2010

வட்டார வழக்கு...


அன்பு மிக்க நண்பர்களே ! எல்லோரும் நலமா ...

நமது நாடான இந்தியா, ஆசியக் கண்டத்தில் உள்ள ஜனநாயக நாடு. இங்கு பலகட்சி ஆட்சிமுறையை கொண்ட நாடு. இங்கு பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றார்கள். இந்திய மக்கள் பல்வேறுமொழிகளை தாய்மொழிகளாக பேசிவருகின்றனர். இவற்றுள் 16 மொழிகளை இந்திய அரசு ஆட்சிமொழிகளாக கொண்டுள்ளது. ஆங்கிலம் பொதுமொழியாகும்.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் தமிழ்மொழிதான் எங்கும்தமிழ் எதிலும்தமிழ் என்று வேறெந்த மொழியும் உள்ளே நுழையாதவாறு ஆட்சி செய்து வருகிறது. ( அதிலும் குறிப்பாக ஹிந்தி , ஆங்.. ஆங்.. உள்ளே வராதே இது எங்க ஏரியா). சரி அது கிடக்கட்டும், விஷயத்துக்கு வருவோம் என்று நீங்கள் சொல்வது தெரிகிறது.

தமிழ்நாட்டு மக்கள் எத்தனை வட்டார பேச்சு வழ‌க்கு மொழிகள் (ஸ்லாங்க்) பேசுறாங்க என்பதை இப்போது பார்க்கலாம்.

மொதல்ல நம்மூர்ல இருந்து ஆரம்பிப்போமா (சும்மா தான் , தெற்கிலிருந்து ஆரம்பிப்போமா ...)


திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் பக்கம் உள்ள மக்கள்

எல நல்லாருக்கியால, சாப்பிட்டியா, நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்துல, கவலப்படாதடே எல்லான் சரியாயிரும்டே.

கிராமங்களில் உள்ள மக்கள்

ஏ மாமோய் , என்ன இம்பூட்டு தூரொம்?.

ஏ காத்தமுத்து ஒன் அப்பாரு நல்லாருக்கானா .. புள்ளையும் மருமொவனும் வாராவுக , இந்த சின்னாளபட்டி வண்டிய இன்னும் காணொம். அதேன் செத்த பாத்துகிட்டு இருக்கேன். வெயிலு வேற..

மதுரை உள்ள மக்கள்

அண்ணே அண்ணே ! ரெண்டு ரூபாக்கு டீத்தூள் கொடுங்கண்ணே

டேய் வெண்ணே ! செத்த நில்லூடா, நாங்க நிக்கிறோமுல்ல, நிக்கிறது கண்ணுக்கு தெர்லயா ..

காரைக்குடி பக்கம் உள்ள மக்கள்

ஏ ஆச்சி நல்லாருக்கியாளா அப்புச்சி நல்லாருக்காவளா, பெரியாச்சி வீட்டுக்கு வந்த மாப்புள செக்கசெவேல்னு இருக்காவுல ...


கோயமுத்தூர் பக்கம் உள்ள மக்கள்

அண்ணா வணக்கங்கண்ணாவ் ! வறேனுங்கண்ணாவ் !

சென்னை பக்கம் உள்ள மக்கள்

என்னண்ணாத்தே ! மெர்சலாருக்கே , குந்துப்பா, கமாண்ட் போட்டு அப்பால போலாம்பா...********************************


இந்த ஸ்லாங்க் பிரச்சனை நாம் ஊருவிட்டு ஊரு போகும் போது கண்டிப்பா சந்திக்க வேண்டிவரும். அப்படி நான் சந்தித்த இரண்டு சம்பவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


நான் சிறுவயதில் மதுரையில் உள்ள எங்க அத்தை ( அப்பாவின் தங்கை ) வீட்டுக்கு ஸ்கூல்லீவ் டைமில் செல்வதுண்டு. ஒரு முறை எங்க தாத்தாக்கூட சென்றேன். அப்போது மாமி புதுவீடு மாறி இருந்தாங்க. அது எங்க‌ளுக்கு தெரியாது. மாமியின் பழைய வீட்டிற்கு அருகில் உள்ள எங்க உறவினர் வீட்டுக்கு சென்று விசாரித்தோம். 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடத்துக்கு வீடு மாறி இருந்தார்கள். நானும் தாத்தாவும் உறவினர் ஒருவரும் ஆட்டோவுக்கு பணம் நிறைய கேட்டதால் குதிரை வண்டியில் பயணம் செய்தோம். எனக்கு குதிரைவண்டியில் சென்றது மிகுந்த சந்தோசமா இருந்தது.


நான் மாமி பசங்க, பக்கத்துதெரு பசங்க கூட விளையாடிக்கிட்டு இருக்கும்போது மாமி கூப்பிடதால் அவங்க பசங்க போயிட்டாங்க. நான் நெல்லைத்தமிழில் பேசுவது கண்டு அவர்கள் கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு கோபம் அதிகமானதால் அவர்களுடன் சண்டைபோட்டேன். ஒவ்வொருத்தருக்கும் அடி விட்டேன். அவர்களும் தாக்கினார்கள். இதற்குள் அங்குள்ளவர்கள் வந்து சண்டையை விலக்கி விட்டார்கள். நான் வீட்டுக்கு சென்று மாமி பசங்களிடம் சொன்னேன். அவர்கள் மதுரை லோக்கல் பாஷையை சொல்லித் தந்தார்கள்.

மறுநாள் நான் அந்த வழியே போகும்போது நேற்று என்னிடம் சண்டை போட்டவர்கள் என்னை சூழ்ந்து கொண்டார்கள். அவர்களிடம் அவர்கள் பாஷையில் பேசினேன். அவர்கள் அண்ணே தெரியாம சண்ட போட்டுட்டோம், மன்னிச்சிகண்ணே, என்று என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். சரிப்பா ! ஒக்கே என்றேன்.


அப்புறம் இன்னொரு சம்பவம்

நான் ஒருதடவை சென்னைக்கு ஒருவரை பார்க்க சென்றிருந்தேன். அவர் எனக்கு நெருங்கிய உறவினரின் நண்பர்; அவர் அரசு வேளாண் மையத்தில் வேலை பார்க்கிறார். வீட்டில் போர் அடித்ததால் அவரை பார்க்க அவரது அலுவலகத்திற்கு சென்றேன். அங்கே அவர் இல்லை. அங்கு வேலைசெய்யும் ஒருவரிடம் உறவினர் நண்பரை பற்றி விசாரித்தேன். உறவினர் நண்பர் பீல்டுக்கு சென்றுள்ளதாக சொன்னார்.

அப்போது நான் , அவரிடம் சென்னைத்தமிழில் பேசுவதாக நினைத்துக் கொண்டு வித்தியாசமா பேசினேன். உடனே அவர், நான் பேசுவதை புரிந்துகொண்டு தம்பி உங்க ஊர் மதுரையா? என்றார். அதற்கு நான் திருநெல்வேலி என்றேன். பேசிவிட்டு விடைபெறும்போது நான் அண்ணா வறேனுங்கண்ணாவ் என்றேன். உடனே அவர் கலகலவென சிரித்துவிட்டு, தம்பி நீ பொழச்சிகிருவப்பா என்றார்.*******************************


நண்பர்களே ! உங்களுக்கு தெரிந்த தமிழ்நாட்டு லோக்கல் ஸ்லாங்க் இருந்தா தெரியப்படுத்துங்க.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

Post Comment

24 comments:

 1. அண்ணாச்சி, திருநெல்வேலிக்கும், நாகர்கோயில், கன்யாகுமரி தமிழ் வழக்குக்கும் நிறைய வித்தியாசம்.

  சொந்தக்காரங்க வீட்டுக்கு மார்த்தாண்டம்
  போயிருந்தப்ப, 'பதப்பிருக்கா மக்கா"ன்னு ஒரு குரல்.

  ஒரு எழவும் புரியல. பிறகுதான் பதப்புக்கு போர்வைன்னு சொன்னாங்க. இதே போல நிறைய. ஏதோ கேரளாவுக்கு வந்துட்ட மாதிரிதான் நினைச்சேன்.

  ReplyDelete
 2. எலே என்ன சொல்ல வாரே.

  எல்லாத்தையும் கலந்து கட்டிலோ அடிச்சிருக்கான்.

  கேட்டியளா அண்ணாச்சி இவங்கூத்த, பய நெறைய ஊர் சுத்தியிருப்பான் போலல்ல இருக்கு, முக்கு கடைக்காரர் அங்க வெச்சு பார்த்ததா சொன்னாரு.

  நல்லாத்தாம்ல எழுதியிருக்கே.

  ReplyDelete
 3. வாங்க ஆடுமாடு சார்

  நானும் நாகர்கோவிலுக்கு சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிருந்தப்ப காக்கா ( அண்ணன் ) காபி கொடிச்சியளா.ன்னாங்க எனக்கு ஒண்ணுமே புரியல. அப்புறம்தான் தெரியும் , காபி கொடிச்சியளான்னா காலை டிபன் சாப்பிட்டிங்களான்னு அர்த்தமாம். நல்லாத்தான் பீதியை கிளப்புறாங்கப்பா.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 4. வணக்கம் அண்ணாச்சி, சுகமா இருக்கியளா, அன்னைக்கி ஒரு தொடர்பதிவுக்கு என்னைய
  கூப்பிட்டு இருந்தீகல்லா, அத இப்பதான் போட்டிருக்கேன், படிச்சி பார்த்துட்டு கருத்து
  சொல்தீகளா, நேரமாயிட்டு, போய்ட்டு வாறன் அண்ணாச்சி, வட்டார வழக்குல
  கலக்குதீகளே.

  ReplyDelete
 5. தஞ்சாவூருக்கும் வட்டார வழக்கு இருக்கு தெரியுமுல

  ReplyDelete
 6. //நான் சிறுவயதில் மதுரையில் உள்ள எங்க அத்தை ( அப்பாவின் தங்கை ) வீட்டுக்கு ஸ்கூல்லீவ் டைமில் செல்வதுண்டு. ஒரு முறை எங்க தாத்தாக்கூட சென்றேன். அப்போது மாமி புதுவீடு மாறி இருந்தாங்க.//

  இதுலயே ஒரு குழப்பம் இருக்கு..அதை முதல்ல தெளிவாக்குங்க ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 7. "ஸ்டார்ஜன் காக்கா..பதிவு நல்லா எழுதி இருக்கீஹ.சில வட்டார சொல் நமக்கு எல்லாம் விளங்காதுதான்.இன்னிக்கு உங்கள் வீட்டிலே என்ன பசியாற?எங்க வீட்டிலே பகலைக்கு மீனானமும்.தொணக்கறியும்,புளியானமும்தான்"...ஹி..ஹி..இது எங்க வட்டார பாஷையாக்கும்.

  திருமணமான புதிதில் சென்னையில் நடந்த கணவரின் நண்பரின் திருமணத்திற்கு வந்திருந்த பொழுது சாப்பாட்டு நேரத்தில் இலையில் பறிமாறப்பட்ட உணவு வகைகள் அதிகமாக இருந்ததால் பறிமாறுபவரிடம்"மானா..மானா"என்று கூறிக்கொண்டிருந்தேன்.ஆனால் அவரோ மீண்டும் மீண்டும் வைத்துக்கொண்டே இருந்தார்.என் கணவர் "வேண்டாம்" கூறியதும்தான் "மானா" நிறைவேற்ற‌ப்பட்டது.மானா என்றால் எங்கள் பக்கம் வேண்டாம்.உங்கள் பதிவைப்பார்த்ததும் எனக்கு அந்த நிகழ்வு நினைவில் வந்து சிரிப்பை வரவழைத்து விட்டது.

  ReplyDelete
 8. வாங்க அக்பர்

  நெல்லைத்தமிழில் பிச்சிஉதறிட்டீங்களே...

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 9. வாங்க சைவகொத்துப்பரோட்டா அண்ணாச்சி

  நெல்லைத்தமிழில் பிச்சிஉதறிட்டீங்களே... உங்க பதிவிலே கலக்கிப்புட்டீகளே..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 10. வாங்க பேநாமூடி சார்.

  தஞ்சாவூர் பாஷையை கொஞ்சம் சொல்லப்படாதா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 11. வாங்க ஸ்டீபன், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 12. நீங்க நெனைக்கற மாதிரி கோயம்புத்தூர்ல எல்லாருமு வாத்தைக்கு வாத்த அண்ணா போட்டு பேசறதில்லீங்க.. வாங்க, போங்கண்ணு பேசுவோம். ’ங்’ உபயோகம் நெறைய இருக்குமுங்க..

  நீங்க சொல்லிருக்கறது கோயம்புத்தூர் பாஷை இல்லீங்க. விஜய் மட்டும் தான் அப்படி பேசறாரு :)

  ReplyDelete
 13. india,s official language is hindi only.but recognised language are 22 in numbers.while english is used as subsidary language along with hindi,but not official language.
  there is no national language as such, in india.

  ReplyDelete
 14. வாங்க ஸாதிகா,

  உங்க ஊர் பாஷையில் கலக்க்கிட்டீங்க. சூப்பர். உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 15. வாங்க சங்கர், நலமா

  உங்கள் பதிவில் சச்சினின் படங்களை ரசித்தேன்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 16. வாங்க லோகு

  கோயமுத்தூர் பாஷை ரொம்ப நல்லாருக்கும் ; எப்படி பேசுவாங்க கொஞ்சம் ஒரு வசனம் சொல்லக்கூடாதா..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 17. வாங்க

  தங்கள் கருத்து மிக சரியானது.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 18. வாங்க டிவிஆர் சார்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 19. கொங்கு மொழியில் நிறைய இடுகைகளையும் சென்னைத் தமிழில் சில இடுகைகளையும் படிக்க இந்த வலைப்பூவைப் பாருங்களேன்
  lathananthpakkam.blogspot.com

  ReplyDelete
 20. நீங்களே அம்புட்டையும் சொல்லிப்புட்டீக ஸ்டார்ஜன் அப்பாலிக்கா நாங்க சொல்ல இன்னா கீது

  ReplyDelete
 21. வாங்க லதானந்த் சார்

  உங்களின் தளம் கண்டேன்; பயனுள்ள தகவல்கள்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 22. வாங்க தேனம்மை அக்கா

  சென்னைத்தமிழில கலக்கிபுட்டீக

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா

  ReplyDelete
 23. எப்படியெல்லாம் பேசுறாக! அதை நீங்க
  ஒரு பதிவாகவே போட்டுட்டீகளா!
  நல்லாருக்கு!

  (தலைப்பில் உள்ள 'வழக்கு' பற்றி,
  யாருக்கும் யாருக்கும்னு கொஞ்சம்
  சொல்லுதீகளா?)

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்