Pages

Saturday, February 13, 2010

காதல் சொல்ல வந்தேன் ...


பொழுதும் விடிந்தது
பூவும் மலர்ந்தது
கோபமும் அதிகமானது
எனக்கு அவள் மேல !


திட்டித் தீர்க்க என்ன வழி
கொஞ்சம் யாராவது
சொல்லுங்களேன் !!
கோலி விளையாடுகையில்
தண்ணீரால் நிரம்பியது குழி !!
விளையாடமுடியாமல் ...


நண்பர்களுடன் சிகரெட் அட்டை
சேர்க்கும் போது அம்மாவிடம்
திட்டும் அடியும் கிடைத்தது ...
குச்சிக் கம்பு விளையாடும்போதும்
அப்பாவிடம் மாட்டினேனே
அவளாலே எல்லாம் அவளாலே ...


அவள் வந்தாள் பள்ளிக்கு ..
முகசுழிப்புடன் திரும்பினேன்
அவள் இருக்கும் திசையை விட்டு ..
ஏன்டி என்னை மாட்டி விட்டே
கண்களாலே திட்டித் தீர்த்தேன் ..ஓ வீட்டுப்பாடம் எழுதலியே
எப்படி மறந்தேன் ...
டீச்சர் கேட்டதுக்கு உடம்பு
சரியில்லை என வார்த்தைகள்
பொய்யாய் என்னுள்ளே...
இவன் எங்க வீட்டிலே
படம் பார்த்தான் என
வார்த்தைகள்
மெய்யாய் அவ‌ளுள்ளே ...


மாடு எருமை மாடு !!!...
பக்கத்து வீட்டு மாலதி
என்னமா படிக்கிறா !
உனக்கென்ன குறைச்சல்
உருப்படாதவனே !!!..
திட்டும் விழுந்தது
அவளாலே எல்லாம் அவளாலே ....பொழுதும் விடிந்தது
பூவும் மலர்ந்தது
கோபமும் அதிகமானது
எனக்கு அவள் மேல !


இன்னைக்கி எப்படியும்
ஒருவழி பண்ணிறனும் ..
நினைப்பிலே துயில்
எழுந்தேன் ...


டேய் என்னடா இன்னும்
தூக்கம் எழுந்திரு !!
அம்மா வேறு சே ...டேய் ! மாலதி ஊருக்கு
போறாடா ...
அவங்க அப்பாவுக்கு
வேலை மாறிருச்சி ...
அம்மாவின் இந்த
வார்த்தைகள் என்னவோ
செய்கிறதே என்னுள்ளே ...முதல்முறையா வருத்தமானதே
என்னுள்ளம் _ ஏனென்று
தெரியலியே எனக்கு ..டேய் எங்கடா போற ..
கூராப்பா இருக்கு
மழை வர்றமாதிரி இருக்கே
என்ற அம்மாவின் வார்த்தைகளை
தாண்டி என் கால்கள்
வேகமாக இயங்குகிறதே !!ஓடுகிறேன் மழைத்துளி
என்னில் சங்கமிக்கும் போது ..
கால்கள் வேகமாக
இயங்கியதால் என்னவோ
தடுமாறி குப்புற விழுகிறதே
என் உடல் ..
என் உடையும் அழுகிறது
உள்ளமும் சேர்ந்து தான் ..


அதோ அவள் பூவாய்
பேருந்துள்ளே ..
பேருந்தும் அழுகிறதோ
தண்ணீரை வாரியிறைத்து ..


Post Comment

18 comments:

 1. நண்பர்களுடன் சிகரெட் அட்டை
  சேர்க்கும் போது அம்மாவிடம்
  திட்டும் அடியும் கிடைத்தது ...
  குச்சிக் கம்பு விளையாடும்போதும்
  அப்பாவிடம் மாட்டினேனே
  அவளாலே எல்லாம் அவளாலே ...

  பசுமை மாறா நினைவுகள்.
  அழகான கவிதை. தொடரட்டும் தங்களின் கவிதை ஆக்கங்கள்.
  நட்புடன்
  அபுல்

  ReplyDelete
 2. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.

  பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த

  நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே.

  //பேருந்தும் அழுகிறதோ
  தண்ணீரை வாரியிறைத்து ..//

  நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்.

  உங்க எழுத்து கூர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

  ReplyDelete
 3. என்ன குரு சொந்த கதையா-? இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் குரு...

  ReplyDelete
 4. மலரும் நினைவுகள் நல்லா இருக்கு..

  ReplyDelete
 5. என்னமா வார்த்தைகள்
  கவிதை வரிகள் நல்லாருக்கு ..

  ஒரு கவிதை சொல்லலாமா ...

  ReplyDelete
 6. காதல் காதல் ..

  சிறுவயது காதலை அற்புதமாக சொல்லிருக்கீங்க .

  எப்போ அவன் அவளை கண்டான் ?

  ReplyDelete
 7. அட... அட... என்னா ஒரு பீலிங், பள்ளி காலத்துல ஆரம்பிச்சாச்சா...:))

  ReplyDelete
 8. அழியாத கோலங்கள் அருமை ஸ்டார்ஜன்

  ReplyDelete
 9. பள்ளிக்கூடம் படிக்கும் போதே வா ........சரி சரி

  ReplyDelete
 10. இது ஒரு கவிதை வடிவில் உள்ள கதை தான் . என்னோட அனுபவம் கிடையாது .

  இது என்னோட புதிய முயற்சி .

  வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே !!

  அபுல் பசர்
  அக்பர்
  நாஞ்சில் பிரதாப்
  SUREஷ் (பழனியிலிருந்து)
  நாடோடி
  கட்டபொம்மன்
  Raja
  பிரியமுடன்...வசந்த் சைவகொத்துப்பரோட்டா thenammailakshmanan T.V.ராதாகிருஷ்ணன்
  அத்திரி

  ReplyDelete
 11. கவிதை மிகவும் அழகுண்ணே! இதை ஒரு சுவாரசியமான சிறுகதையாக்கியிருக்கலாம் என்று கூடத் தோன்றியது. அற்புதம்!

  ReplyDelete
 12. நினைவின் சுவர்களில் முட்டி மோதுவது சுகமான வலிதான்.
  அன்பின் வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 13. வாங்க சேட்டைக்காரன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 14. வாங்க ஹேமா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்