"THIS IS MUHAMMAD" என்று ஒரு புத்தகம் கின்னசில் சென்றவாரம் இடம்பிடித்தது..! இப்புத்தகம் 'துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில்' நடைபெற்ற நிகழ்ச்சியில் துபாய் துணை ஆட்சியாளரும் UAE நிதி அமைச்சருமான ஷைக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் வெளியிட்டார். அதில், அண்ணல் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அன்னாரின் வாழ்வியல் வழிகாட்டுதலையும் உலக அளவில் இஸ்லாத்தின் சிறப்புகளையும் உள்ளடக்கிய இந்நூல், சவூதி அரேபியாவின் எழுத்தாளரான டாக்டர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் முஸ்லிஹ் (Saudi author and Secretary General of the Complex for Islamic Fiqh Research in Riyadh) என்பவர் எழுதியதாகும்.
420 பக்கம் கொண்ட இப்புத்தகத்தின் நீளம் 5 மீட்டர். அகலம் 4 மீட்டர். ஆக மொத்த எடை... 1500 கிலோ..!
100 பேர் 16 மாதங்களாக பணியில் ஈடுபட்டு இறகுகளாலும் விஷேசமாக தயாரிக்கப்பட்ட காகிதத்தாலும் இந்நூல் அரபிமொழியில் தயாரிக்கப்பட்டு ஜெர்மனியில் அச்சிடப்பட்ட இப்புத்தகத்தை தயாரிக்க 11 மில்லியன் திர்ஹம் (சுமார் 14 கோடி ரூபாய்) செலவாகியுள்ளது..!.
அடேங்கப்பா......!
ஆட்சியாளர்களுக்கு இவ்வளவு வீண்செலவு செய்து கின்னஸ் சாதனையில் இடம் பிடிப்பது சாதாரணமாக தோன்றுகிறது.
கஷ்டப்படும் ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்க குடிமக்களுக்கு இது மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுகிறது. இவ்வளவு பணத்தைக் கொண்டு பசியால் வாடும் கஷ்டப்பட்ட அரபிகளுக்கும் வறுமையில் வாடுபவர்களுக்கும் செலவு செய்தால் அவர்கள் மனம் குளிருவார்களே..
இந்த பணத்தைக் கொண்டு நாட்டுநலப் பணித்திட்டங்களுக்கு செலவிட்டால் நாட்டில் பணப்பற்றாக்குறையும் வேலையில்லாத் திண்டாட்டங்களும் விரைந்தோடுமே..
சிந்திப்பார்களா ஆட்சியாளர்கள்?????....
******
* ஒரு 20 ரூபாயை 2 ஏழைகளுக்கு தர்மம் செய்வது நமக்கு பெரிய விசயமாக இருக்கும்.
* ஆனால் இந்த 20 ரூபாயை ஹோட்டல் சர்வருக்கு டிப் ஆக கொடுப்பது சாதாரணமாக தோன்றுகிறது.
* ஒரு 3 நிமிடம் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது மிக கடினமாக தோன்றும்.
ஆனால் 3 மணி நேரம் சினிமா படத்தை உக்கார்ந்து பார்ப்பதில் கஷ்டமே தெரியாது.
* நாள்பூராவும் ஜிம்முக்கு போய் நேரத்தை வீணாக்கி கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்வது மிக பிடித்தமான ஒன்று.
* அதே நாள் வீட்டில் சின்னசின்ன வேலைகள் செய்து அம்மாவுக்கு உதவியாய் இருப்பதில் ரொம்பவே டயடாகி விடுவோம்.
* வருடத்தில் ஒருநாள் வரும் லவ்வர்ஸ் டே எப்போ வருதுன்னு ஆவலோடு இருப்போம்.
* ஆனால் அன்னையர் தினம் (மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை) எப்போ வருதுன்னு தெரியாமலே போய்விடும்.
* இதோ இந்தப் படத்தில் தோன்றும் இரண்டு சிறுவர்கள் பசி மயக்கத்தில் சுருண்டு கிடக்கின்றனர். இவர்களுக்கு ஆளுக்கொரு ரொட்டித்துண்டுகள் வாங்கிக்கொடுத்தால் எவ்வளவு சந்தோப்படுவார்கள்.
* ஆனால் இதே சோகக் காட்சியை படமாக வரைந்து 1 லட்ச ரூபாய்க்கு விற்பது பேசனாகி விட்டது,....
என்ன செய்ய?..
நமக்கு சாதாரணமாக தோன்றுவது பிறருக்கு அது ரொம்ப பெரிய விசயமாக இருக்கும்.
எனவே இறைவன் கொடுத்த பொருளாதாரத்தை வீண் வகைகளில் செலவு செய்யாமல் ஆக்கப்பூர்வமான விசயங்களில் ஈடுபாடு காட்டினால் உலகில் வறுமை என்னும் சொல்லே இருக்காது.
,
//இவ்வளவு பணத்தைக் கொண்டு பசியால் வாடும் கஷ்டப்பட்ட அரபிகளுக்கும் வறுமையில் வாடுபவர்களுக்கும் செலவு செய்தால் அவர்கள் மனம் குளிருவார்களே..//
ReplyDeleteஹீஹீ...காமெடி பண்ணாதீங்க குரு...:))
வாங்க பிரதாப் @ ஹிஹிஹி.. காமெடி பண்றமாதிரி ஆக்கிட்டாங்க.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அந்த ஓவியம் பத்தி கேட்டா, கலைக் கண்ணோட பாக்க சொல்லுவாங்க
ReplyDeleteவாங்க எல்கே @ சரியா சொன்னீங்க.. இது ஓவியம்தான். இந்த படத்தை என் நண்பர் ஒருவர் மெயிலில் அனுப்பியிருந்தார். அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ஓடும் ஆற்று நீரில் அங்க சுத்தி செய்தாலும் தண்ணீரை விரயம் செய்யாதீர்கள் என்று தண்ணீரைக் கூட சிக்கனமாக பயன்படுத்த சொல்லித் தந்து தாங்களும் அவ்வாறே வாழ்ந்து காட்டிய மாமனிதர்தான் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
ReplyDeleteஅவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திற்கு 14 கோடியை தண்ணீராய் வாரி இரைத்து விரயம் செய்திருப்பது மிக வருத்தமான விஷயம்!
நல்ல பதிவு, நன்றி!
//சிந்திப்பார்களா ஆட்சியாளர்கள்?????..//
ReplyDeleteநல்ல வேளை நீங்க இங்கே இருந்து இந்த பதிவை எழுதல தப்பிச்சீங்க ஹா..ஹா... :-)))
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteமிக அருமையான பதிவு சகோதரர். தெளிவான அசத்தலான கேள்விகள். இந்த கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் உளமார பதில் சொல்ல ஆரம்பித்தாலே உலகில் பல பிரச்சனைகள் தீர்க்கப்படலாம்.
வஸ்ஸலாம்...
சிறந்த பகிர்வு.
ReplyDeleteஒவ்வொரு விஷயத்தையும் வேறுபடுத்தி விளக்கிய விதம் நறுக்கென்று இருந்தது.
ReplyDeleteநல்ல கேள்விகள் பதில்தான் இல்லை.
ReplyDeleteகஷ்டப்படும் ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்க குடிமக்களுக்கு இது மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுகிறது. இவ்வளவு பணத்தைக் கொண்டு பசியால் வாடும் கஷ்டப்பட்ட அரபிகளுக்கும் வறுமையில் வாடுபவர்களுக்கும் செலவு செய்தால் அவர்கள் மனம் குளிருவார்களே..
ReplyDeleteஇந்த பணத்தைக் கொண்டு நாட்டுநலப் பணித்திட்டங்களுக்கு செலவிட்டால் நாட்டில் பணப்பற்றாக்குறையும் வேலையில்லாத் திண்டாட்டங்களும் விரைந்தோடுமே..///
எல்லா நாடுகளுமே இந்த விஷயத்தில் ஒற்றுமை.
//எனவே இறைவன் கொடுத்த பொருளாதாரத்தை வீண் வகைகளில் செலவு செய்யாமல் ஆக்கப்பூர்வமான விசயங்களில் ஈடுபாடு காட்டினால் உலகில் வறுமை என்னும் சொல்லே இருக்காது.//
அனைவரும் இப்படியே பின்பற்றினால் எவ்வள்வு நன்றாக இருக்கும்?
நல்ல சிந்தனை,அருமையான இடுகை.ஜஸகல்லாஹ்கைரன்
//எல்லா நாடுகளுமே இந்த விஷயத்தில் ஒற்றுமை//
ReplyDeleteரிப்பீட்டு....
சாட்டையடி கேள்விகள்.
ReplyDeleteஎளிமையின் சிகரமாய் வாழ்ந்த நபி (ஸல்)அவர்களின் வாழ்க்கையை பற்றி சொல்வதற்கு இவ்வளவு செலவு செய்து புத்தகம் தயாரிப்பதை விட அவர்களின் வாழ்க்கையை நாம் வாழ்ந்து காட்டினாலே போதுமே.
அப்புறம் அன்னையர் தினம், மகளிர் தினம் என்று தினம் வைத்து கொண்டாடாமல் டெயிலி கொண்டாடினால் என்ன??
////எல்லா நாடுகளுமே இந்த விஷயத்தில் ஒற்றுமை////
ரிப்பிட்டுக்கு ரிப்பீட்டு
அபு நிஹான்
ஆட்சியாளர்களுக்கு பசி புரியாது. புகழ் வேண்டும். வரலாறு முக்கியமல்லவா?
ReplyDeleteஅருமையான விஷயத்தை எல்லோருக்கும் புரியும் படியாக எளிமையாக பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துகள் தல!
@@ நல்லா இருக்கீங்களா மக்கா? @@
நல்லதொரு பதிவு..
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteவாங்க மீரான் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க ஜெய்லானி @ அடடே.. அப்படி ஒண்ணு இருக்கா.. ஹிஹிஹிஹி..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஆஷிக் அஹ்மத் @ சரியான கருத்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க சுவனப்பிரியன் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க நிஜாமுத்தீன் @ நன்றி கருத்துக்கு..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அக்பர் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க ஸாதிகாக்கா @ தெளிவான கருத்துக்கள்.. சரியா சொன்னீங்க
ReplyDeleteநன்றி வருகைக்கும் கருத்துக்கும்
வாங்க ஹூசனம்மா @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க ராஜகிரி ஹாஜா மைதீன் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க அப்துல்காதர் சார் @ சரியா சொன்னீங்க தல.. நாங்க நல்லாருக்கோம். அல்ஹம்துலில்லாஹ்.. நீங்க எப்படி இருக்கீங்க., நாம பேசி ரொம்ப நாளாச்சி..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க சாந்தியக்கா @ நன்றி தொடர் ஆதரவுக்கும் வருகைக்கும்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க முரளி @ எப்படி இருக்கீங்க.. ரொம்ப சந்தோசம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
கின்ன்ஸ் மோகம் யு.ஏ.இ -யையும் விட்டு வைக்கவில்லையா?
ReplyDeleteஒரு சந்தோஷம்அண்ணல் நபி (ஸல்)அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகள் இஸ்லாத்தின் சிறப்பை உள்ளடக்கிய நூலை வெளியிட்டு சாதனையில் வென்றது.எழுத்தாளரை வாழ்த்துவோம்.
அருமையான ஆக்கம்
ReplyDelete