கவியே என் ஆருயிர் கவியோ நீ
உன் கவிக்கண் காண ஏக்கங்கள் எம்மில்..
வரிகளை கொண்டு உன்னையடையும்
வழிகளாய் உருவகப்படுத்தினோம்..
அது ஏக்கம், சோகம், இன்பம்,
தாங்கி நிற்கும் உணர்வுகளாக..
என்று எழுத்து என்னும் மூதாட்டியை
நிலாவில் கண்டோமோ அன்றே
நீயும் பிறந்திருப்பாய் என்றே
தோன்ற வைத்திருப்பாய்!!
சிக்கிமுக்கி காலம்முதல்
தீப்பொறிகள் போல
காதலுக்காக தூதுச்சென்றாயோ!!
அல்லது விதைகளை தூவிச்சென்றாயோ?..
உன் சக்தியால் சில மக்கியும்
பல விருட்சமாகவும் யெங்கெங்கிலும்...
ஆண்டியிலிருந்து கவிச்சக்கரவர்த்தியையும்
தாண்டி கவியரசாகவும் கவிபேரரசுகளாய்
பரந்துவிரிந்த தேசமிது
உன்னை விரும்பாதோர் அவனியில் உண்டோ?..
கவியே என் ஆருயிர் கவியோ நீ..
பூவையர் மனம் போல மென்மையானவளே!
ஒவ்வொரு நாளும் புத்தம்புது
மலராய் பூக்கின்றாய் என்னுள்..
எனை வந்து சேருவது என்னாளோ?..
வா அருகினில் வா
வந்தெனை அணைத்துக் கொள்
எமை உன் ஜோதியில் கலக்க வா..
உன் கவிக்கண் காண ஏக்கங்கள் எம்மில்...
,
நீண்ட நாட்கள் பின் நல்ல கவிதை சகோ.ஸ்டார்ஜனிடமிருந்து.அருமை.
ReplyDeleteநல்லாயிருக்கு ஸ்டார்ஜன். தொடரட்டும் உம் கவிச்சேவை!
ReplyDeleteஅருமையான கவிதை ஷேக்.வாழ்த்துக்கள்!
ReplyDeleteகவிதை நல்லாருக்குது.. தொடருங்கள்.
ReplyDeleteகவிதை அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாங்க ஆசியாக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. உங்களுடைய பாராட்டுகள் என்னை சிறப்பாக்கும்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க அக்பர் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..
ReplyDelete