இயற்கை வைத்தியம் பற்றி நான் படித்தவை
மக்காச்சோளக் கதிர் மருத்துவம்: யுனானி முறை
நாம் உணவாகப் பயன்படுத்தும் மக்காச் சோளம் தவிர அக்கதிரின் ஜடைநார், சக்கை ஆகியவை மகத்தான மருத்துவக் குணம் கொண்டவை என யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. இறைவனின் படைப்பின் வியப்பூட்டும் விந்தைச் செய்திகளைப் படித்துப் பயன்பெறுங்களேன்.
மக்காச்சோள விதை: இதை உணவாகப் பயன்படுத்த யுனானி மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். தாய்ப்பால் பெருகும். மக்காச்சோள கஞ்சி சீதபேதியைக் குணப்படுத்தும்.
மக்காச்சோளக் கதிர்ஜடை நார்: சோளக்கதிர் ஜடை முடியை நிழலில் உலரவைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் 12 கிராம் மக்காச்சோளக் கதிர் ஜடைநாரைப் போட்டுக் கொதிக்க வைத்து 'டீ' போன்று தினம் இருமுறை குடித்து வந்தால்
1 .சிறுநீரகவலி
2. சிறுநீர் அடைப்பு
3. சிறுநீர்ப்பாதைப்புண்
4. வீக்கம் குணமடையும்
5. தாராளமாகச் சிறுநீர் பிரியும்
6. சிறுநீர்க் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.
ஆறு கிராம் சோளக்கதிர் ஜடைநாரை ஒரு கப் நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் குணமாகும் நோய்கள்:
1. இதய நோய்கள்
2. இந்திரியப்பை புண், வீக்கம்
3. குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல்
4. பித்தப்பை கற்கள்
5. மஞ்சள் காமாலை
6. கல்லீரல் வீக்கம்
7. கல்லீரல் செயலிழப்பு
8. ரத்தக்கொதிப்பு, ரத்த அழுத்தம்
மக்காச் சோளக் கதிர் சக்கை: விதைகளை எடுத்தபின் சக்கையை வீசி விடுகிறோம். ஆனால் அதிலும் புதைந்து கிடக்கும் மருத்துவ குணங்களைப் படியுங்கள்.
சோளக்கதிர் சக்கையை எரித்துச் சாம்பலாக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு கிராம் எடுத்து தேனில் கலந்து தினம் இருவேளை சாப்பிட,
1. மூலக்கட்டியில் இருந்து அதிகளவில் வெளியேறும் ரத்தம் கட்டுப்படுத்தப்படும்.
2. அதிகளவு மாதவிலக்கு ஏற்படுவதையும் தடுக்கும். இச்சாம்பலைச் சிறிது உப்பு கலந்து சாப்பிட,
1. இருமல் நீங்குகிறது
2. சிறுநீரைத் தாராளமாகப் பிரியச் செய்கிறது
3. சிறுநீர்க் கற்களைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது.
இவையெல்லாம் யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளன. பயன்படுத்திப் பாருங்களேன்.
நீர்ச்சுருக்கு
சிறுநீர்ப்பாதையில் முள் சொருகியது போல் வலிக்கும். சிறுநீர் சரியாக வெளியேறாது. வலியும் அதிகமாக இருக்கும். சிறுநீர் அளவில் குறைவாக வலியுடன் வெளியேறுவது நீர்ச்சுருக்கு எனப்படும்.
மருத்துவம்
1. தண்ணீர் நன்றாகக் குடிக்க வேண்டும். தினம் 8 டம்ளர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும்.
2. நீரைக் கொதிக்க வைத்து அதில் பொரித்த சீரகத்தைக்{1டேபிள் ஸ்பூன்} கலந்து குடிக்கலாம். அடிக்கடி சளி பிடிப்பவர்கள் சீரகம் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
3. முள்ளங்கியைத் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக்கி இடித்துச் சாறு பிழிந்து 50 மி.கி. சாறில் சம அளவு நீர் சேர்த்து காலை, மாலையில் உணவுக்கு முன்பு சாப்பிட சிறுநீர் நன்கு பெருகும்.
4. முள்ளங்கிச் செடியின் கொழுந்து இலை 20 கிராம் எடுத்து சோற்றுப்பு(கல் உப்பு) சிறிது சேர்த்து அரைத்து நீரில் கலக்கி தினமும் 2 முறை குடித்து வந்தால் நீர்க்கடுப்பு, சிறுநீர் அடைப்பு நீங்கும்.
5. முள்ளங்கிக் கிழங்கை சமையலில் அடிக்கடி சேர்த்துச் சாப்பிட நீர்க்கடுப்புடன் மலச்சிக்கலும் நீங்கும்.
6. முள்ளங்கி விதைகளைக் கழுவி 10 கிராம் விதைகளை 200மிலி நீரில் இரவு ஊறவைத்து, அதிகாலையில் குடிக்கலாம்.
7. முள்ளங்கி விதைகளை இள வறுப்பாக வறுத்துப் பொடித்து சலித்து காலை, இரவு உணவுக்குப் பின் இரண்டு கிராம் பொடியை நீர் அல்லது வெல்லத்துடன் கலந்து சாப்பிட சிறு நீர் பெருகும்.
தீமை: முள்ளங்கியை அதிகளவில் பயன்படுத்தினால் மூட்டுக்களில் வாதம் ஏற்படும்.
பெப்டிக் அல்சர்
பெப்டிக் அல்சர் என்பது வயிற்றுப்பகுதி, முன் சிறுகுடல் பகுதி, உணவுப்பாதை ஆகியவற்றில் ஏற்படும் புண்.
காரணம்:
1. நேரம் தவறி சாப்பிடுதல்
2. காரமான உணவு உட்கொள்ளுதல்
3. வைட்டமின் பற்றாக்குறை
4. மனக்கவலை, மன அழுத்தம், கோபம், பயம்
மருத்துவம்
1. மணத்தக்காளிக்{மிளகுத் தக்காளி} கீரையை சமைத்துச் சாப்பிடலாம். சூப் செய்தும் சாப்பிடலாம்.
2. மணத்தக்காளி வற்றலை நல்லெண்ணையில் பொரித்து தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அல்சர் குணமாகும். சளித்தொல்லையும் நீங்கும்.
மணத்தக்காளிக் கீரையை வீட்டில் வளர்த்து பயன்பெறலாம். மணத்தக்காளி வற்றல் நாமே தயார் செய்து கொள்ளலாம்.
மணத்தக்காளி வற்றல் தயாரிக்கும் முறை:
மணத்தக்காளிக் காயை ஒருநாள் முழுவதும் வெயிலில் காயவைத்து இரவு புளித்த தயிரில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் ஊறியபின் தயிர் வற்றியதும் வெயிலில் வைத்து நன்கு உலர வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பித்தம்
பித்தத்தினால் தலைவலி, தலைசுற்றல், வாந்தி ஏற்படும். இதைத் தவிர்க்க கீழாநெல்லிச் செடியை முழுதாக புளித்த தயிர்விட்டு அரைத்து ஒரே உருண்டையாக உருட்டி அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
நன்றி "தாருல் ஸஃபா”
எல்லோரும் வாங்க
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான அன்றாடம் செய்யக் கூடிய தகவல்
ReplyDeleteமிக்க நன்றி
வசந்த் ,
ReplyDeleteவருகைக்கு நன்றி
அக்பர் ,
ReplyDeleteவருகைக்கு நன்றி
இந்த பதிவுக்கு இத்தனை விமெர்சனமா
ReplyDeleteஹாய் ஸ்டார்ஜான் ,
ReplyDeleteஉங்கள் பதிவு நச்
ஆனா கமெண்ட் இல்ல
வருகைக்கு நன்றி, ராஜா
ReplyDeleteஉங்கள் வருகை என் வரவு
சூப்பர் ;) சூப்பர் நல்ல தகவல் உங்க பாலோவராவும் ஆகியாச்சு இனி வலையுலகில் இணைந்து பயணிப்போம்
ReplyDeleteநலம் நலம் அரிய ஆவல்
ReplyDeleteஅன்புடன் ஹரூன்