கிராமத்து அழகே தனி தான் . ஒரு ஊருக்குள்ளே போனாப்போதும் , பச்சைப்பசேல் என வயல்வெளி நம்மை வரவேற்கும் . அதிகாலையில் அம்மாவ் என கத்திக்கொண்டு போகும் மாடுகளை கூட்டிக்கொண்டு , பண்ணைக்கு போகும் ஆட்கள் . ஒரு ஓலைக்குடிசையில் 2 பெஞ்ச்ஸ் போட்டு டீக்கடை நடத்தும் அந்த ஊர்க்காரர் யாரையோ எதிர்ப்பாத்திட்டு இருப்பார் . அந்த பெஞ்ச்சில் இருக்கும் எல்லொரும் கூட எதிர்ப்பாங்க. அட அது நம்ம பால்க்காரரைத்தான் . அங்க உக்காந்து டீக்குடிச்சிகிட்டு ஊர்க்கதை பேசி நேரத்தைப்போக்கும் பெருசுகள்.
அப்புறம் , கம்மாக்கரைக்கு போகும் பொம்பளைங்க . பசங்க எல்லோரும் வாய்க்காலுக்கு போய் , குட்டிக்கரணம் அடிப்பது , கும்மாளம் போடுவது போன்ற தன்னுடைய வீரதீர பிரதாபங்களைக் காட்டி தண்ணியை கலங்கடிப்பாங்க . பக்கத்துல நிக்கிற பொம்பளைங்க " எலய் , ஏம்ல இப்படி சல்லியம் பண்றீக , வூட்டுக்கு போங்கல..."என்று திட்டுவாங்க .
ஒரு தூக்குச்சட்டியில கஞ்சியையும் வெங்காயத்தையும் பச்சை மிளகாயை கொண்டுக்கிட்டு வயக்காட்டுக்கு போகும் ஆம்பளைங்களும் ...., அவங்க பின்னாடியே , தம் புள்ளைங்களுக்கு கஞ்சித்தண்ணியை கொடுத்துட்டு எலய் நானும் உன் அப்பாரும் வரந்தண்ணியும் சமத்தா இருக்கோனும் ...என்ன சரியால ...என்று வயக்காட்டுக்கு போவாங்க பொம்பளைகள் .
சாயங்காலமானா டீக்கடைக்கு போய் ஒரு காப்பித்தண்ணிய குடிச்சிப்புட்டு சீட்டு தாயக்கட்டை விளையாடுவாங்க . அப்போ ஒருத்தன் ஓடிவந்து , அப்பூ , என்ன இங்க விளையாண்டுக்கிட்டு இருக்கீக ...., அங்க , கீழத்தெரு மாயாண்டியும் மேலத்தெரு செவத்தம்மாளும் ஊர விட்டு ஓடிட்டாக ....., அப்புறம் நம்ம பயலுக போய் இழுத்துட்டு வந்தாக ... , அதேன் பஞ்சாயத்தை கூட்டிப்புட்டாக . நானென் போறேம்முல .. நீ வாரியால.... நீ முன்னாடி போ . நா எல்லாத்துக்கும் சத்தங்க்காட்டிட்டு வாறேம்முல ...
ஆத்தங்கரை ஓரமா ஒய்யாரமா தன் கிளைகளை வீற்றிருக்கும் அந்த ஆலமரத்தை சுற்றிலும் மனிதக் கூட்டம் கூடியிருப்பாங்க . முக்கியமான ஒருத்தருக்காக காத்திருப்பாங்க . அவர் தான் அந்த ஊர் நாட்டாமை . அவருக்கு அந்த ஊரில் நிறய்ய செல்வாக்கு இருக்கும் . அவர் சொல்றது தான் சட்டம் . அவர் பேச்சுக்கு மறுப்பேதும் கிடையாது . அவர் வர்ற வரைக்கும் இருந்த ( ஒரே கலபுலாவாக ) பேச்சு , அவர் வந்த பிறகு கப்சிப் என்று ஆகிவிடும் .
காலங்காலமாக , அவர் குடும்பம் தான் நாட்டாமையா இருப்பாங்க . அந்த அளவுக்கு அந்த ஊர்க்காரங்க ரொம்ப மரியாதை கொடுத்து வச்சிருப்பாங்க . அந்த ஊர் மக்கள் அறியாமையில இருக்குற வரைக்கும் தான் அவர் அந்த ஊர் நாட்டாமை . ஒரு ஆள் புதுசா அவங்க ஊருக்கு போகும்போது எல்லொரும் கூடிருவாங்க . என்ன ஏதுன்னு ரொம்ப அன்பா விசாரிச்சு உபசரிப்பாங்க . அந்த அன்புக்கு ஈடுஇணையே கிடையாது .
இது உண்மையான ஒரு அன்பு . இந்த அன்புக்கு நாம கொடுத்து வச்சிருக்கனும் . காந்தி அடிகளே இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்கள் தான் என்று சொல்லி இருக்கிறார் . கிராமத்துல இருக்கிற மக்களுக்கு நல்ல வசதி ஏற்படுத்தி கொடுக்கணும் . அவங்களை அறியாமையில இருந்து வெளிக்கொணர வேண்டும் . அதுக்கு அவங்களுக்கு படிப்பறிவு வேண்டும் . உலக விசயங்கள் தெரிந்து இருக்க வேண்டும் . நல்ல முன்னேற்றம் வேண்டும் அவர்கள் வாழ்விலே ....
நம் நாடு முன்மாதிரியாக வேண்டும் . அப்போ தான் நம் இந்தியா உலக அரங்கில் வல்லரசாக ஆக முடியும் ......
கனவு காணுங்கள் நன்றாக .... நம் திறமை வெளிப்பட .....
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் ......
கனவு காணுங்கள் நன்றாக .... நம் திறமை வெளிப்பட .....
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் ......
கிராமத்து அழகை கண் முன்னே கொண்டுவந்து விட்டீர்கள்.
ReplyDeleteஅழகான வர்ணனை, கடைசியில் மெசேஜ் நச்.
பாராட்டுக்கள்.
//கிராமத்து அழகை கண் முன்னே கொண்டுவந்து விட்டீர்கள்.
ReplyDeleteஅழகான வர்ணனை, கடைசியில் மெசேஜ் நச்.
பாராட்டுக்கள்.//
ரிப்பீட்டேஏஏஏஏ.......
பக்கத்து கிராமத்துக்குள்ள போன மாதிரில இருக்கு..
ReplyDeleteவாங்க அக்பர்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி துபாய் ராஜா ...
ReplyDelete:-)))
ReplyDeleteவருகைக்கு நன்றி தீப்பெட்டி சார்
நீங்க எழுதியிருக்கிறது எந்த கிராமத்தை பத்தி.
ReplyDeleteசெய்தி...,
ReplyDeleteசெய்தி...,
செய்தி....,
ஓட்டுக்கள் போட்டாச்சு
அக்பர் அது உங்க கிராமமாக்கூட இருக்கலாம்
ReplyDeleteவாங்க சுரேஷ்
ReplyDeleteநன்றி ஓட்டுக்கு
அழகான வர்ணனை
ReplyDeleteவாங்க டி.வி சார்
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி
வாழ்த்து மற்றும் பூங்கொத்து
ReplyDeleteநிறைவான விளக்கம் ஸ்டார் ஜான்
நல்ல வர்ணனை. காட்சிகள் மனக்கண்ணில் ஓடும்படி எழுதுயிருக்கிறீர்கள்.
ReplyDeleteGood Message ...
ReplyDeleteவாங்க வசந்த் ,
ReplyDeleteவருகைக்கு நன்றி
இதை படிக்கும்போது சுத்தமான காத்தும் நல்ல தண்ணியும் நம்ம மனசு வழியா உடம்புகுள்ள போற மாதிரி ஒரு உணர்வுச் சிலிர்ப்பு . நான் ஆயுதக்காரன் . ஆனா உங்க எழுத்து அழகான பொண்ணு கையில இருக்கிற ரோஜாப் பூ!
ReplyDeletewww.kavinkavi.blogspot.com
வருகைக்கு நன்றி முரளி
ReplyDeleteவாங்க குறை ஒன்றும் இல்லை
ReplyDeleteவருகைக்கு நன்றி செந்தில் குமரன்
ReplyDeleteஉங்கள் பதிவை படித்தேன் அருமை
கடைசி ரெண்டு வரிகளும் தேசிய கொடியை ஞாபகப்படுத்துதே....
ReplyDeleteநல்லா இருக்கு உங்கள் ரசனை
ReplyDeleteகடைசியில் நச் நச்
வருகைக்கு நன்றி ராஜா
ReplyDeleteஅதே தான் அக்பர்
ReplyDeleteகிராமத்து வர்ணனை அபாரம்
ReplyDeleteவாங்க நச்ரேயன்
ReplyDeleteநானும் ஒரு கிராமத்தான் தான்.. ஆனால் அங்கே நாட்டமையும் இல்லை, பஞ்சாயத்தும் இல்லை..
ReplyDeleteகிராமத்தின் அழகாய் அருமையா சொல்லியிருக்கீங்க...
கிராமத்து காதல்...! ஆனா இப்ப கிராமங்கள் கொஞ்சம் பழைய அழகில் இருந்து மாறிக்கொண்டு வருவது போல் தெரிகிறது...
ReplyDeleteகண் முன் கிராமத்தை கொண்டு வந்த உங்கள் எழுத்துகள் அருமை...
வாழ்த்துக்கள்