Pages

Tuesday, June 30, 2009

நாட்டாமை ..... தீர்ப்பு சொல்லாம போகாதீங்க ...


ஒரு கிராமத்தை எடுத்துக்கிட்டா பச்சைப்பசேல் என வயக்காடு .சுற்றிலும் அழகு அழகான தோட்டங்கள் நம் கண்ணுக்கு விருந்தளிக்கும் . அங்கே நாம பாக்கிற ஒவ்வொருத்தரும் ரொம்ப வித்தியாசமா இருப்பாங்க .
ஒரு ஆள் புதுசா அவங்க ஊருக்கு போகும்போது எல்லோரும் கூடிருவாங்க . என்ன ஏதுன்னு ரொம்ப அன்பா விசாரிச்சு உபசரிப்பாங்க . அந்த அன்புக்கு ஈடுஇணையே கிடையாது .

ஆத்தங்கரை ஓரமா ஒய்யாரமா தன் கிளைகளை வீற்றிருக்கும் ஆலமரத்தை சுற்றிலும் எல்லோரும் கூடியிருப்பாங்க . முக்கியமான ஒருத்தருக்காக காத்திருப்பாங்க . அவர் தான் அந்த ஊர் நாட்டாமை . அவருக்கு அந்த ஊரில் நிறய்ய செல்வாக்கு இருக்கும் . அவர் சொல்றது தான் சட்டம் . அவர் பேச்சுக்கு மறுப்பேதும் கிடையாது . அவர் வர்ற வரைக்கும் இருந்த ( ஒரே கலபுலாவாக ) பேச்சு , அவர் வந்த பிறகு கப்சிப் என்று ஆகிவிடும் .


காலங்காலமாக , அவர் குடும்பம் தான் நாட்டாமையா இருப்பாங்க . அந்த அளவுக்கு அந்த ஊர்க்காரங்க ரொம்ப மரியாதை கொடுத்து வச்சிருப்பாங்க . அந்த ஊர் மக்கள் அறியாமையில இருக்குற வரைக்கும் தான் அவர் அந்த ஊர் நாட்டாமை . .

இதுவரைக்கும் , நீங்க பாத்தது நம்ம ஊர் கிராமங்களில் உள்ள நாட்டாமைகளைப் பற்றி . ..

இப்போ .. இதே நாட்டாமைகள் சினிமாவுல எப்படி இருக்காங்க என்பதைப் பற்றி......

அவங்களோட குணாதிசயங்கள் என்னன்ன என்பதைப் பற்றி .....


கிழக்கு வாசல்

ஆர் . வி. உதயக்குமார் இயக்கத்தில் 1990 ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் . இதில் கார்த்திக் , ரேவதி , குஷ்பு , விஜயகுமார் , ஜனகராஜ் , சின்னிஜெயந்த் , மனோரமா சண்முகசுந்தரம் மற்றும் பலர் நடித்திருப்பாங்க . இந்த படத்தில் கார்த்திக் மிக அருமையாக நடித்திருப்பார் . இளையராஜாவின் தாலாட்டும் இசையில் அனைத்து பாடல்களும் நல்லா இருக்கும் . இந்த படத்தில் சண்முகசுந்தரம் பக்கத்து ஊர் பண்ணையாராக இருப்பார் . இவருடைய மகளாக துறுதுறுவென்று வரும் குஷ்பு கார்த்திகை விளையாட்டுக்காக விரும்புவார் .

இதை உண்மையென நம்பி பொண்ணுக் கேட்டு போகும் மனோரமாவை சண்முகசுந்தரம் அவமானபடுத்தி அனுப்புவார் . அந்த அவமானத்தால் மனோரமா இறந்துவிடுவார் . இன்னொரு பக்கம் விஜயகுமார் தன்னுடைய வப்பாட்டியின் வளர்ப்பு மகளான ரேவதியை அடைய நினைப்பார் . ரேவதிக்கு பாதுகாப்பாக வரும் ஜனகராஜ் அற்புதமாக நடித்திருப்பார் . இதற்கு இடையில் ரேவதியும் கார்த்திக்கை விரும்புவார் . கார்த்திக் இதையெல்லாம் சமாளித்து , சண்முகசுந்தரம் & விஜயகுமாரின் முகத்திரையை கிழித்து ரேவதியை கரம்பிடிப்பார் .

சின்னத்தம்பி

பி . வாசு இயக்கத்தில் பிரபு நடித்த படம் . 1989 ல் வெளிவந்தது என்று நினைக்கிறேன் . இந்த சூப்பர் டுப்பர் ஹிட் திரைப்படத்தில் பிரபு ,குஷ்பு , கவுண்டமணி , ராதாரவி , மனோரமா மற்றும் பலர் நடித்துள்ளனர் . இதில் பிரபு வெகுளித்தனமாக நல்லா நடித்திருப்பார் . இளையராஜாவின் தாலாட்டும் இன்னிசையில் பாடல்கள் மிக மிக அற்புதம் . இந்த ஊரில் ராதாரவி அவருடைய தம்பிகளும் சேர்ந்து ரொம்ப அட்டகாசம் செய்வாங்க . தன் தங்கை வெளியப் போகும்போது ஆம்பிளைங்க பாத்துட்டா பாதி முடியை ( தலையில் பாதி , மீசையில பாதி ) எடுத்து அராஜகம் பண்ணுவாங்க .

இந்த படத்தில் மாலைக்கண்ணு நோய் உள்ள கவுண்டமணியின் காமெடி ரொம்ப நல்லா இருக்கும் . அப்பாவியா வரும் பிரபுவை குஷ்பு காதலிப்பார் . பிரபு தன்னுடைய அப்பாவித்தனத்தால் ராதாரவியின் குடும்பத்தில் புகுந்து தன்னை காதலிக்கும் குஷ்புவை திருமணம் செய்து கொள்வார் . வறட்டு கவுரவம் பார்க்கும் ராதாரவியை திருத்தி குஷ்புவை கரம்பிடிப்பார் .


சின்ன ஜமீன்

கார்த்திக் நடித்து ராஜ்கபூர் இயக்கத்தில் வெளிவந்தது இந்த திரைப்படம் . சூப்பர் ஹிட் திரைப்படம் . வருசம் தெரியல .{ முரளி , கொஞ்சம் சொல்லுங்க }. இந்த படத்தில் கார்த்திக் மிக அருமையாக அப்பாவியாக ஒன்னும் தெரியாதவரா நடித்திருப்பார் . ஆர் .பி .விஸ்வம் அந்த ஊர் நாட்டாமையாக வரும் இந்த படத்தில் சுகன்யா வினிதா சபிதாஆனந்த் காந்திமதி மற்றும் பலர் நடித்திருப்பாங்க . பெரிய ஜமீன் சொத்துக்கு அதிபதியான கார்த்திக்கை பைத்தியக்காரனாக்கி ரோட்டில் அலையவிட்டிருப்பார் ஆர்.பி . விஸ்வம் . இதை தட்டிக்கேட்கும் வினிதாவை கெடுத்து கொன்னுவிடுவார் . அந்த ஊரில் அவர் வைத்ததுதான் சட்டம் என்று அந்த மக்களை ஆட்டிப்படைப்பார் . ஆனா பார்ப்பதற்கு சாதுவாக இருப்பார் . .
வினிதாவின் தங்கையாக வரும் சுகன்யா அந்த ஊரில் டீச்சர் . அவர் கார்த்திக்கை திருத்தி ஆர்.பி. விஸ்வத்தை பழிவாங்குவார் . இளையராஜாவின் மயக்கும் இசை இந்த படத்துக்கு பக்க பலம் .

இது நம்ம பூமி

கார்த்திக் , குஷ்பு , விஜயகுமார் , ராதாரவி மனோரமா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படம் 1992 ல் வெளிவந்தது . இயக்கம் யாருன்னு தெரியல . { முரளி , கொஞ்சம் சொல்லுங்க } . இந்த படத்தில் கார்த்திக்கும் குஷ்புவும் காதலிப்பாங்க . அந்த ஊர் பெரிய மனுசங்களாக வரும் விஜயகுமாரும் ராதாரவியும் தங்களுடைய சுயலாபத்துக்காக ஊரை ரெண்டாக்கி வச்சிருப்பாங்க . ஊருக்கு நடுவில் பெரிய சுவற்றை கட்டி ஜாதியை பெரிய பிரச்சனையாக்கி வச்சிருப்பாங்க . கார்த்திக்கின் அப்பாவான விஜயகுமார் ஒரு பிரச்சனையில் இறந்து விடுகிறார் . நெப்போலியன் வில்லனாக வருவார் . பின்னர் கார்த்திக் போராடி அந்த ஊர் மக்களை காப்பாற்றுவார் . இசை இளையராஜா .

சின்ன கவுண்டர்

ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் 1992 ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் . இதில் விஜயகாந்த் , சுகன்யா , மனோரமா , கவுண்டமணி , செந்தில் , வடிவேலு மற்றும் பலர் நடித்திருப்பாங்க . இசை ராகதேவன் இளையராஜா . பாடல்களும் சூப்பர் ஹிட் . இந்த படத்தில் விஜயகாந்த் ஒரு நல்ல நாட்டாமையா வாழ்ந்திருப்பார் . அந்த ஊர் மக்கள் அவர் மேல ரொம்ப மரியாதை வச்சிருப்பாங்க . இதைப் பொறுக்காத வில்லனா வரும் சலீம் கவுசர் சூழ்ச்சி செய்து விஜயகாந்துக்கு அவப்பெயரை உண்டாக்குவார் .

விஜயகாந்துக்கு மனைவியா வரும் சுகன்யா ஒரு பிரச்சனையில் தன் கணவனுக்காக ஜெயிலுக்கு போகிறார் . இந்த படத்தில் விஜயகாந்த் நல்லா நடித்திருப்பார் .விஜயகாந்த் சலீமின் சூழ்ச்சியை வென்று மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார் . இந்த திரைப்படத்தில் மறக்க முடியாத ஒன்று கவுண்டமணி செந்தில் நகைச்சுவை சூப்பர் ஹிட் . தொனதொனவென்று கேள்வி கேட்கும் செந்திலும் அதை சமாளிக்கும் கவுண்டமணியும் காமெடி சகாப்தம் .

தேவர்மகன்

பரதன் இயக்கத்தில் 1992 ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் . இந்த படத்தில் சிவாஜி கணேசன் , கமலஹாசன் , ரேவதி , கவுதமி , நாசர் ,மற்றும் பலர் நடித்திருப்பாங்க . இளையராஜாவின் இன்னிசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் . இந்த படத்தில் சிவாஜி கணேசன் அந்த ஊர் பெரிய மனிதராக வாழ்ந்திருப்பார் . அவருடைய மகன் கமலஹாசன் வெளிநாட்டில் படித்து ஊருக்கு திரும்புவார் . கவுதமியும் கமலும் காதலிப்பாங்க . அப்போ , நாசர் ஜாதி பிரச்சனையை கிளப்பி விட்டு தீயை பத்த வைப்பார் . சிவாஜி மனம் நொந்து இறந்து விடுவார் . பின்னர் கமலஹாசன் அந்த ஊர்த் தலைவராகுவார் . ஒரு பிரச்சனையில் கீழ்ஜாதி பெண்ணான ரேவதியை மணந்து அந்த ஊர் மக்களை நல்ல வழிக்கு கொண்டு வருவார் . கமலஹாசன் இந்த படத்தில் மிக அருமையாக நடித்து அந்த ஊர் பெரிய மனிதராக வாழ்ந்திருப்பார் .

எஜமான்

ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 1993 ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் . இந்த திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , மீனா , கவுண்டமணி , செந்தில் , விஜயகுமார் நெப்போலியன் மற்றும் பலர் நடித்திருப்பாங்க . இளையராஜாவின் இன்னிசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் . இந்த படத்தில் ரஜினிகாந்த் அந்த ஊர் நாட்டாமையாக பெரிய மனிதராக நடித்திருப்பார் . அந்த ஊர் மக்கள் சூப்பர்ஸ்டாரின் மேல் ரொம்ப மரியாதை வச்சிருப்பாங்க . அவருக்கு போட்டியாக வறட்டு கவுரவம் பார்க்கும் நெப்போலியன் தனக்கும் மரியாதை கிடைக்க வேண்டும் என்று மக்களை துன்புறுத்துவார் . ரஜினிகாந்த் நெப்போலியனை சமாளித்து மக்களுக்கு நல்லது செய்வார் . இந்த திரைப்படத்தில் முக்கிய ஒன்று காமெடி . கவுண்டமணி செந்திலுடன் ரஜினிகாந்த் மூவரும் செய்யும் காமெடி நல்லா இருக்கும் .

நாட்டாமை

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ல் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் . இந்த திரைப்படத்தில் சரத்குமார் குஷ்பு மீனா விஜயகுமார் கவுண்டமணி செந்தில் மனோரமா பொன்னம்பலம் , சங்கவி மற்றும் பலர் நடித்திருப்பாங்க . இந்த படத்தில் விஜயகுமார் அந்த ஊரில் நீதி நேர்மைத் தவறாத நாட்டாமையாக வாழ்ந்திருப்பார் . அவருடைய கம்பீரமான தோற்றம் வியக்க வைக்கும் . அவருடைய மகன்களாக இரண்டு வேடத்தில் சரத்குமார் மிக அருமையாக நடித்திருப்பார் . அண்ணன் சரத்குமாரும் அப்பாவைப் போல நீதி நேர்மையாக இருப்பார் .

பொன்னம்பலத்தின் சூழ்ச்சியால் தன் தம்பியை குற்றவாளி என்று எண்ணி ஊரை விட்டு தள்ளி வைத்து விடுவார் . பிறகு உண்மைத் தெரிந்து தப்பான தீர்ப்பைக் கொடுத்துவிட்டோமே என்றெண்ணி தன் உயிரை விட்டு மக்கள் மத்தியில் ரொம்ப உயர்ந்து விடுவார் . 2 சரத்குமாரும் மிக அற்புதமாக நடித்திருப்பார்கள் . அண்ணன் சரத்குமாருக்கு குஷ்புவும் தம்பிக்கு மீனாவும் நன்றாக ஜோடியாக நடித்திருப்பார் . இந்த படத்துக்கு சிற்பி இசை அமைத்திருப்பார் . பாடல்களும் சூப்பர் ஹிட் . அப்புறம் கவுண்டமணியும் செந்திலும் காமெடியில கலக்கிருப்பாங்க . ரொம்ப சூப்பர் காமெடிகள் . நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு ...... வசனம் ரொம்ப பிரபலம் .

முத்து

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1995 ல் வெளி வந்தது என்று நினைக்கிறேன் . இது சூப்பர் ஹிட் திரைப்படம் . இந்த படத்தில் ரஜினிகாந்த் , மீனா , சரத்பாபு , ரகுவரன் , ராதாரவி செந்தில் மற்றும் பலர் நடித்திருப்பாங்க . இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையில் பின்னி எடுத்திருப்பார் . பாடல்கள் மிக அற்புதம் . இந்த படத்தில் அப்பா ரஜினிகாந்த் அந்த ஊரில் பெரிய ஜமீந்தாராக நடித்திருப்பார் . திவானாக வரும் ரகுவரன் சொத்தை அபகரிக்க நினைக்கும் போது ரஜினியே அதை கொடுத்திட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவார் . அவமானம் தாங்காமல் ரகுவரன் தற்கொலை செய்திடுவார் . ரகுவரனின் மனைவி அந்த சொத்தை பாதுகாத்து மகன் ரஜினியிடம் ஒப்படைப்பார் . அம்பலத்தாராக வரும் ராதாரவி இந்த சொத்தை அபகரிக்க நினைத்து சூழ்ச்சி செய்வார் . ரஜினிகாந்த் இந்த படத்தில் ரொம்ப நல்லா நடித்திருப்பார் . ரஜினியும் மீனாவும் சந்திக்கும் இடங்கள் ரொம்ப சுவாரசியமாக இருக்கும் . காமெடியில் ரஜினிகாந்த் கலக்கியிருப்பார் . இதுபோக செந்தில் , வடிவேலு , காமெடிகளும் நல்லா இருக்கும் .

அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் !!!

நாட்டாமை ..... தீர்ப்பு சொல்லாம போகாதீங்க ...

Post Comment

22 comments:

  1. நல்ல கலெக்சன்,

    கவுண்ட மணி காமெடியில் கொடிகட்டி பறந்த காலம்.

    நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  2. இதைஎல்லாம் விட எனக்கு பிடிச்ச நாட்டாமை கேரக்டர் ரெண்டு படத்துல வரும். செம்மயா நக்கலடிச்சு..

    1. ஆஹா என்ன பொருத்தம்
    2. பிரசாந்த், கௌசல்யா நடிச்ச படம். பேரு ஞாபகம் வரலை. விவேக் நாட்டமையா வையாபுரி தாமுகூட காமெடி செஞ்சிருப்பாரு :)

    ReplyDelete
  3. வாங்க அக்பர்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. வாங்க சென்ஷி

    நீங்க சொன்ன அந்த படம்

    பிரசாந்த் விவேக் நடித்தது

    ஆசையில் ஓர் கடிதம்

    நல்ல காமெடிப் படம்

    ReplyDelete
  5. அருமையான படத்தொகுப்பு


    தீர்ப்பை சொல்லுறேன்

    நல்லா இருக்கு

    ReplyDelete
  6. வாங்க ராஜா

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. அருமையான எழுத்து நடை!

    ReplyDelete
  8. வாங்க கலையரசன்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. ஹி ஹி ஹி நாட்டாமை சொம்பு பற்றி ஒன்னும் சொல்லலையே :-))))

    ReplyDelete
  10. வாங்க டி வி ஆர் சார்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. வாங்க கிரி

    சொம்பைத் தேடி ஆள் போயிருக்காங்க‌

    :-)))

    ReplyDelete
  12. // { முரளி , கொஞ்சம் சொல்லுங்க }//

    பி.வாசு என்றே நினைக்கிறேன்.

    நாட்டாமை படம் எடுக்கும் நாட்டாமைகள்,

    பி.வாசு, ஆர்வி உதயக் குமார், கேஎஸ் இரவிக்குமார். இதுல கேஎஸ் இரவுக்குமார் இன்னும் களத்தில் இருக்கிறார்.

    கிராமத்தை வைத்து படம் எடுத்தால் நாட்டாமை இல்லாமல் இருக்காது. தென் தமிழகம் பற்றிய கதைகளில் நாட்டாமைகள் மிகுதி.

    நல்ல தகவல்கள், படத்துக்காக நாட்டாமைகளைப் பற்றி கொஞ்சம் மிகுதியாகக் காட்டுகிறார்கள்.

    ReplyDelete
  13. நல்ல தொகுப்பு.

    தாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மனதில் மறக்கமுடியாத இடம் பிடித்த்வை.

    ReplyDelete
  14. காளைன்னு ஒரு படம் தல..,

    அதுல கூட நாட்டாமை வருவாக

    ReplyDelete
  15. பாஷா கூட ஒரு மாதிரி நாட்டாமை மாதிரிதானே தல..,

    ReplyDelete
  16. வாங்க கோவி . கண்ணன்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  17. வாங்க துபாய் ராஜா

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  18. வாங்க சுரேஷ்

    நல்லா சொன்னீங்க போங்க

    கிராமம்னா நாட்டாமை இல்லாமலா

    ReplyDelete
  19. இதனால பதினெடிட்டுப்பட்டி சனங்களுக்கும் நான் தெரிவிக்கிறது என்னன்னா... தல ஸ்டார்ஜனோட இந்த பதிவு நல்லாருக்கு... இதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு..
    சொம்பை எடுங்கப்பா....

    ReplyDelete
  20. கண்ணுபட போகுதய்யா சின்ன கவுண்டர் நாஞ்சில் பிரதாப்,
    உனக்கு சுத்திப் போட வேணுமய்யா சின்ன கவுண்டரே

    சரியான தீர்ப்பு சொன்ன நாட்டாமைக்கார அய்யா நாஞ்சில் பிரதாப் வாழ்க .

    :-)))

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்