Pages

Sunday, September 6, 2009

எழுத்தறிவித்தவன் - ஆசிரியர்கள் தினம்



இன்று ஆசிரியர்கள் தினம் . செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர்கள் தினம் . எல்லோரும் தனக்கு கற்பித்த ஒரு கணம் யோசித்துப் பாக்க வேண்டும் . ஒரு மாணவன் முதல் வகுப்பு சேத்தவுடன் பெற்றோர்கள் அப்பாடி தன் கடமை முடிந்ததென போயிடுவாங்க . ஆனால் ஒரு மாணவனின் வாழ்க்கையே ஆசிரியர்கள் கையில் உள்ளது .

சும்மாவா சொன்னாங்க எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று . ஆசிரியர் பணி என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட வரமாகும் . ஒரு மாணவன் பள்ளியில் சேர்ந்தவுடன் அவனுடைய திறமை என்ன என்பதை கண்டறிந்து அவனுக்கு எப்படி பாடம் சொல்லிக் கொடுத்தால் புரியும் என்பதை யூகித்து கற்றுக் கொடுப்பதை என்னவென்று சொல்வேன் . சில பிள்ளைகள் படிப்பில் மக்கா இருந்தால் அவர்களுக்கு வாழ்வில் ஒளியேற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு ராயல் சல்யூட் .

ஒவ்வொரு மாணவனின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி வாழ்வில் முன்னேறச் செய்வது ஒவ்வொரு ஆசிரியர்களின் பொக்கிஷம் .

படிக்கவில்லை என்றால் அவர்களை கண்டித்து அவர்களின் படிப்பில் முன்னேற்றம் ஏற்பட செய்யும் ஆசிரியர்களின் திறமைக்கு ஒரு சல்யூட் .
இந்த ஆசிரியர் தின நன்னாளில் எனக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு ஒரு சல்யூட் .

நான் படித்தது எங்கள் ஊரில் திருநெல்வேலி பேட்டை புனித அந்தோணியார் நடுனிலை பள்ளியில் 8 வரைக்கும் படித்தேன் .

அதுக்கப்புறம் காமராஜர் மாநகராட்சி மேல்னிலை பள்ளியில் 12 வரை படித்தேன் .

பின்னர் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பி எஸ் சி வேதியியல் படித்துள்ளேன் .

நான் படிக்கும் காலத்தில் ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவனாக இருந்துள்ளேன் . எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அனைத்து ஆசிரியர்களும் எனக்கு பிடித்தமானவர்கள் .

இந்த ஆசிரியர்கள் தினத்தில் அவர்களை எல்லாம் இப்போ எண்ணிப் பார்க்கிறேன் .

அவர்களுக்கு என்னுடைய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .

நண்பர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .

அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் .
ஸ்டார்ஜன்

Post Comment

12 comments:

  1. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //நான் படிக்கும் காலத்தில் ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவனாக இருந்துள்ளேன் .//

    பெரிய ஆளா இருந்திருக்கீங்கன்னு சொல்லுங்க

    ReplyDelete
  4. ஆசிரியர் தின வாழ்த்துகள். ரொம்ப அமைதியான ஆளாயிருந்திருப்பீங்க போலிருக்கு!

    ReplyDelete
  5. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாங்க வசந்த்

    வ்ருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. வாங்க சுரேஷ்

    வ்ருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. வாங்க சங்கா

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. வாங்க ராஜ்குமார்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படத்​தையும் ​போட்டிருக்கலா​மே மாம்ஸ்? ஆசிரியர் தின வாழத்துக்கள்!

    ReplyDelete
  11. //நான் படிக்கும் காலத்தில் ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவனாக இருந்துள்ளேன்//
    ஐ அப்ரிஸி​யேட் யூ!!!

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்