
நான் இந்த வலையுலகில் பதிவு எழுத ஆரம்பித்த பின் எத்தனை எத்தனையோ நண்பர்களாக நீங்கள் கிடைத்து உள்ளீர்கள் . அதில் , இப்போது கலிபோர்னியாவில் வசித்து வரும் நண்பர் ஷங்கி ( சங்கா ) வும் ஒருவர் . அவர் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளார் .
அது என்னவென்றால் நாம் பதிவு எழுத வந்தததை பற்றிய அனுபவத்தை எழுத வேண்டும் .
எனக்கு சிறு வயதில் படிப்பதில் ரொம்ப ஆர்வம் உண்டு . பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி வாரமலர் ,சிறுவர்மலர் , ராணி காமிக்ஸ் படிக்கணுன்னா கொள்ளை பிரியம் . என்ன செய்வது நம்மளால தான் காசு கொடுத்து வாங்க முடியாதே !. எங்காவது கிடைக்குமா என்று தேடி அலைவேன் .
கடைகளில் மளிகை சாமான் வாங்கும் போது கடைக்காரரிடம் அந்த புத்தகங்கள் இருந்தால் தாங்கண்ணே படிச்சிட்டு தாரேன் என்று சொல்லி வாங்கிட்டு வந்து படிப்பேன் . அப்புறம் நூலகத்துக்கு சென்று புத்தகங்கள் படிக்
க ஆரம்பித்தேன் .
எனக்கு நாவல் படிப்பதிலும் ரொம்ப ஆர்வம் . பட்டுக்கோட்டை பிரபாகர் , சுபா , ராஜேஷ்குமார் இவங்கள்லாம் என்னுடைய ஹீரோ கனவுக்கு வித்திட்டவர்கள் .இந்த கதைகளில் வரும் ஹீரோக்களாக என்னை நினைத்துக் கொள்வேன் .
அப்படி வளர்த்த கனவை இப்ப வரை தக்க வச்சிருக்கேனா ; நீங்களே சொல்லுங்க .
பின்னர் கல்லூரி படிப்பு முடித்தேன் . வேலை நம்மளைத் தேடி வராது ; நாமதான் வேலையை தேடணுமென்று வேலை தேட ஆரம்பித்தேன் . ஆரம்பத்தில் வேலை சரியாக அமைய வில்லை . முதலில் சேல்ஸ்ரெப் ,மெடிக்கல்ரெப் என்று போய்க் கொண்டிருந்தது .
அப்புறம் எங்க மாமா மூலம் டி வி எஸ் மோட்டார் வாகன கம்பெனியில் சூப்பர்வைசர் வேலை கிடைத்தது . அதில் படிபடியாக முன்னேறி அசிஸ்டெண்ட் மானேஜர் ஆனேன் . பின்னர் ஒரு கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறினேன் .

அதன் பின்னர் இங்கே சவுதியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் . வேலைக்கு சேர்ந்த புதிதில் இங்கே இணைய வசதி இல்லை . பின்னர் 2007 ல் தான் ப்ராட்பேண்ட் DSL கனெக்சன் கிடைத்தது . அப்போது ஆரம்பத்தில் தினமலர் இணையத்துக்கு தான் முதலில் செல்வேன் . ஏன்னா சிறுவயது ஞாபகமல்லவா ... சும்மா விடமுடியுமா என்ன ? ...
அப்புறம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தினமலர் , தினத்தந்தி , தட்ஸ்தமிழ் என்று தமிழ் வெப்சைட் எல்லாம் போய் படித்தேன் . தமிழ் வெப்சைட் தேடும்போது தமிழ் நெட் மூலமா தமிழ்மணத்தின் லிங் கிடைத்தது .
அப்படி என்ன தான் தமிழ்மணத்தில் உள்ளது என்று போய் பார்த்தால் , உள்ளே நிறைய பொக்கிஷங்கள் புதைந்து கிடந்தன .
சென்ற வருடம் முதல் முதலா நான் படித்தது நண்பர்
முரளிக்கண்ணன் பதிவை தான் . அவருடைய சினிமா உலகில் என்னையும் கலக்க வைத்தேன் . அப்புறம்
பரிசல்காரன் , கோவி கண்ணன் , கேபிள் சங்கர் , வடகரை வேலன் , ஆசிப்மீரான் , உண்மைத்தமிழன் , சுரேஷ் சக்கரை , டாக்டர் சுரேஷ் ( பழனி ) , நர்சிம் , தாமிரா , டி வி ராதாக்கிருஷ்ணன் சார் , இப்படி எண்ணற்ற தலைகள் என்னுடைய வாசிப்புக்கு தீனி போட்டனர் .
அப்புறம் , சென்ற வருடம் அக்டோபர் இறுதியில் , நாமும் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்று எனக்கு தோன்றியது .
உடனே நான் ,
நாளைய ராஜா என்றொரு வலைப்பதிவை ஆரம்பித்தேன் . அதை தமிழ்மணத்தில் இணைத்து எழுத ஆரம்பித்தேன் .
பின்னர் நான் ஊருக்கு போக வேண்டிய நேரமும் வந்தது . எனக்கு ஊரில் பெண் பார்த்திருந்தார்கள் . நவம்பர் இறுதியில் ஊருக்கு சென்றேன் .
பின்னர் டிசம்பரில் கல்யாணம் முடித்து , நாலு மாசம் லீவும் நாலே நாளில் போனது போலிருந்தது . மீண்டும் சவுதிக்கே பயணப்பட்டேன் கடந்த ஏப்ரல் 9 ம் தேதியில் .
பின்னர் என் சோகத்தை மாற்ற மீண்டும் வலைப்பக்கம் வர ஆரம்பித்தேன் .
அப்புறம் நான் ,
நிலா அது வானத்து மேல! என்ற வலைப்பக்கத்தை ஆரம்பித்து இதோ உங்கள் முன் நிற்கிறேன் .
எனக்கு எண்ணற்ற நண்பர்கள் கிடைத்து இருப்பது இந்த வலையுலகின் மூலமா தான் .
என் எழுத்தைப் பார்த்து முதன்முதலில் வாழ்த்துக்கள் சொன்னது என் நண்பர்
அக்பர் தான் .
இது போல என்னை ஊக்கப்படுத்தியது
கோவி கண்ணன் , முரளிகண்ணன் , கேபிள் சங்கர் , உண்மைத் தமிழன் சரவணன் , வசந்த் ( பிரியமுடன் வசந்த் ) , டாக்டர் சுரேஷ் , டாக்டர் தேவா சார் , சென்ஷி , டி வி ராதாக்கிருஷ்ணன் சார் , எம் எம் அப்துல்லா , நையாண்டி நைனா , சங்கா , ஜெகநாதன் , சந்ரு , குறை ஒன்றும் இல்லை ராஜ்குமார் , சக்கரை சுரேஷ் , துபாய் ராஜா , நாஞ்சில் பிரதாப் , அபு அஃப்ஸர் , நவாஸ்தீன் , இன்னும் முகமறியா எத்தனை எத்தனையோ நண்பர்கள் .
அப்புறம் , மிஸ்டர் NO . இவரும் மிக மிக குறிப்பிடத்தக்கவர் . இவர்களுக்கெல்லாம் என் நன்றியினை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் .
இங்கே பெயர் விடுபட்டவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் .
இந்த பதிவைத் தொடர , இந்த பதிவு யாரெல்லாம் எழுதலியோ அவங்க இந்த பதிவையே அழைப்பாக ஏற்று தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் .
ஸ்டார்ஜன்
Post Comment