Pages

Monday, November 9, 2009

எல்லோரும் கொண்டாடுவோம் ... தொடர்பதிவு

எனது நெருங்கிய நண்பரும் பள்ளிக்கால தோழரும் வலைப்பதிவு வித்தகர் மச்சான் அக்பர் என்னை ஒரு அருமையான தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார் .

அது என்ன வென்றால் , நாம் கொண்டாடிய பண்டிகை பத்தி 10 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் .

இதோ நான் கொண்டாடிய‌ ர‌ம்ஜான்

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ? .

சொந்த ஊர் திருநெல்வேலி . இப்போது சவுதி அரேபியாவில் கணணி பழுது சரிபார்க்கும் வேலை ( (Hardware service) ) செய்து வருகிறேன் . சென்ற வருடம் தான் திருமணமாகியது .

2) ரம்ஜான் என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

சிறு வ‌ய‌து இருக்கும் போது , ர‌ம்ஜான் பெருநாள் என்று நினைக்கிறேன் . நானும் என் த‌ங்கையும் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம் . நானும் அவ‌ளும் ப‌லூன் வைத்திருந்தோம் . என்னுடைய‌து உடைந்து விட்ட‌து .

நான் அவ‌ளுட‌ய‌தை கேட்டேன் , அவ‌ள் த‌ர‌வில்லை . உட‌னே , அவ‌ள் கையில் இருந்த‌ ப‌லூனை பிடித்து இழுத்தேன் . நான் இழுத்ததில் அவள் பக்கத்தில் இருந்த மடையில் ( கால்வாய் ) விழுந்திட்டாள் . உடனே நான் , அய்யயோ .. என் தங்கச்சி மடையில் விழுந்திட்டாள் ; காப்பாத்துங்க என்று கத்தினேன் . உடனே அந்த வழியா வந்த ஒருவர் என் தங்கையை மடையிலிருந்து தூக்கினார் . நான் அவருக்கு நன்றி சொன்னேன் .

3) 2009 ரம்ஜானுக்கு எந்த‌ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

சவுதியில் இருந்தேன்.


4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் ரம்ஜான் ப‌ற்றி ஒருசில‌வ‌ரிக‌ள் ?

இங்கு (சவுதியில்) நோன்பு நோற்கும் 30 நாளும் கடைகளை மதியத்திற்கு மேல் திறந்து இரவு 1 மணிக்கு அடைப்பார்கள். அதன் பின் சமைத்து நோன்பு வைத்து தொழுதுவிட்டு தூங்கினால் மதியம் தான் எழும்புவோம். மக்கள் 30 நாளும் செழிப்பாகவும் , மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். ரம்ஜானுக்கு மூன்று நாள் விடுமுறை.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

நான் ஊரில் இருக்கும் போது , நெல்லை ஆரெம்கேவி , போத்தீஸ் ல் தான் ரெடிமேட் வாங்குவேன் . ரெடிமேட் தான் என் தேர்வு .

6) உங்கள் வீட்டில் என்ன‌ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

எப்போதுமே வீட்டில் ரம்ஜான் அன்று காலையில் தோசை, இட்லி செய்து சாப்பிடுவோம். மதியம் பிரியாணியை ஒரு பிடிபிடித்து தூங்க வேண்டியது தான். சமையல் அம்மா.

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

எல்லோருக்கும் தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்தேன் . உங்க‌ளுக்கு வலைப்பதிவின் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தேன் .

8) ரம்ஜான் அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

ஊரில் தொழுதுவிட்டு வந்தவுடன் சாப்பாடு பின்பு தூக்கம் சாயங்காலம் சினிமாவுக்கு போவது இப்படி நேரம் கழிந்து விடும். சவுதியில் இருக்கும் போது மூன்று நாளும் வெளியில் தான் சுற்றுவோம். ச‌வுதியில் வேறெந்த‌ பொழுது போக்குமில்லை .


9) இந்த‌இனிய‌நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?.

நான் ஒவ்வொரு ர‌ம்ஜானுக்கும் , கஷ்டப்படுகிற‌வர்களுக்கு என்னால் முடிந்த‌ உத‌விக‌ளை செய்வேன் . இதற்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வேன் .

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?.

அபு அஃப்ஸ‌ர் ( என் உயிரே ) , முர‌ளிகண்ண‌ன் ( நீரோடை )

Post Comment

16 comments:

 1. நல்ல பகிர்வு. சரி பலூன் கிடைச்சுதா இல்லையா

  ReplyDelete
 2. பிரியாணி மாதிரியே

  சுவையா இருந்தது சேக்..

  ReplyDelete
 3. அப்போ நல்ல கொண்டாட்டமாத்தான் போயிருக்கென்று சொல்லுங்க..

  ReplyDelete
 4. வாங்க அக்பர் , பலூனா முக்கியம் ..

  ReplyDelete
 5. வாங்க வசந்த் , வருகைக்கு நன்றி

  ReplyDelete
 6. நீங்களும் சௌதி தானா மக்கா. நல்ல பகிர்வு ஸ்டார்ஜன் (இயற்பெயர் சொல்லவில்லையே).

  அபு அஃப்ஸ‌ர் ( என் உயிரே ) - சீக்கிரம் வா மச்சான் மலரும் நினைவுகளோடு

  ReplyDelete
 7. வாங்க சந்ரு வருகைக்கு நன்றி

  ReplyDelete
 8. வாங்க அபு அஃப்ஸர் , வருகைக்கு நன்றி

  ReplyDelete
 9. வாங்க நவாஸ்

  என் பெயர் சேக் மைதீன்

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 10. ஹீஹீஹீ...நல்லாருக்கு... இன்னு பலூன் கதையை மறக்காம வைச்சிருக்கீங்களே

  ReplyDelete
 11. வாங்க பிரதாப் , வருகைக்கு நன்றி

  ReplyDelete
 12. வாங்க T.V.Radhakrishnan , வருகைக்கு நன்றி

  ReplyDelete
 13. பலூனுக்காக இப்படி ஒரு ​​போராட்டமா?? ​பெரிய இழு​வைக்காரரா இருந்திருப்பீங்க ​போல!
  ரம்ஜான் வாழ்த்துகள்!

  ReplyDelete
 14. வாங்க ஜெகநாதன் ,

  வருகைக்கு நன்றி

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்