Pages

Tuesday, November 24, 2009

நானும் என் வரலாறும் - தொடர்பதிவுநான் இந்த வலையுலகில் பதிவு எழுத ஆரம்பித்த பின் எத்தனை எத்தனையோ நண்பர்களாக நீங்கள் கிடைத்து உள்ளீர்கள் . அதில் , இப்போது கலிபோர்னியாவில் வசித்து வரும் நண்பர் ஷங்கி ( சங்கா ) வும் ஒருவர் . அவர் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளார் .

அது என்னவென்றால் நாம் பதிவு எழுத வந்தததை பற்றிய அனுபவத்தை எழுத வேண்டும் .

எனக்கு சிறு வயதில் படிப்பதில் ரொம்ப ஆர்வம் உண்டு . பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி வாரமலர் ,சிறுவர்மலர் , ராணி காமிக்ஸ் படிக்கணுன்னா கொள்ளை பிரியம் . என்ன செய்வது நம்மளால தான் காசு கொடுத்து வாங்க முடியாதே !. எங்காவது கிடைக்குமா என்று தேடி அலைவேன் .

கடைகளில் மளிகை சாமான் வாங்கும் போது கடைக்காரரிடம் அந்த புத்தகங்கள் இருந்தால் தாங்கண்ணே படிச்சிட்டு தாரேன் என்று சொல்லி வாங்கிட்டு வந்து படிப்பேன் . அப்புறம் நூலகத்துக்கு சென்று புத்தகங்கள் படிக் ஆரம்பித்தேன் .

எனக்கு நாவல் படிப்பதிலும் ரொம்ப ஆர்வம் . பட்டுக்கோட்டை பிரபாகர் , சுபா , ராஜேஷ்குமார் இவங்கள்லாம் என்னுடைய ஹீரோ கனவுக்கு வித்திட்டவர்கள் .இந்த கதைகளில் வரும் ஹீரோக்களாக என்னை நினைத்துக் கொள்வேன் .

அப்படி வளர்த்த கனவை இப்ப வரை தக்க வச்சிருக்கேனா ; நீங்களே சொல்லுங்க .

பின்னர் கல்லூரி படிப்பு முடித்தேன் . வேலை நம்மளைத் தேடி வராது ; நாமதான் வேலையை தேடணுமென்று வேலை தேட ஆரம்பித்தேன் . ஆரம்பத்தில் வேலை சரியாக அமைய வில்லை . முதலில் சேல்ஸ்ரெப் ,மெடிக்கல்ரெப் என்று போய்க் கொண்டிருந்தது .

அப்புறம் எங்க மாமா மூலம் டி வி எஸ் மோட்டார் வாகன கம்பெனியில் சூப்பர்வைசர் வேலை கிடைத்தது . அதில் படிபடியாக முன்னேறி அசிஸ்டெண்ட் மானேஜர் ஆனேன் . பின்னர் ஒரு கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறினேன் .அதன் பின்னர் இங்கே சவுதியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் . வேலைக்கு சேர்ந்த புதிதில் இங்கே இணைய வசதி இல்லை . பின்னர் 2007 ல் தான் ப்ராட்பேண்ட் DSL கனெக்சன் கிடைத்தது . அப்போது ஆரம்பத்தில் தினமலர் இணையத்துக்கு தான் முதலில் செல்வேன் . ஏன்னா சிறுவயது ஞாபகமல்லவா ... சும்மா விடமுடியுமா என்ன ? ...

அப்புறம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தினமலர் , தினத்தந்தி , தட்ஸ்தமிழ் என்று தமிழ் வெப்சைட் எல்லாம் போய் படித்தேன் . தமிழ் வெப்சைட் தேடும்போது தமிழ் நெட் மூலமா தமிழ்மணத்தின் லிங் கிடைத்தது .
அப்படி என்ன தான் தமிழ்மணத்தில் உள்ளது என்று போய் பார்த்தால் , உள்ளே நிறைய பொக்கிஷங்கள் புதைந்து கிடந்தன .

சென்ற வருடம் முதல் முதலா நான் படித்தது நண்பர் முரளிக்கண்ணன் பதிவை தான் . அவருடைய சினிமா உலகில் என்னையும் கலக்க வைத்தேன் . அப்புறம் பரிசல்காரன் , கோவி கண்ணன் , கேபிள் சங்கர் , வடகரை வேலன் , ஆசிப்மீரான் , உண்மைத்தமிழன் , சுரேஷ் சக்கரை , டாக்டர் சுரேஷ் ( பழனி ) , நர்சிம் , தாமிரா , டி வி ராதாக்கிருஷ்ணன் சார் , இப்படி எண்ணற்ற தலைகள் என்னுடைய வாசிப்புக்கு தீனி போட்டனர் .

அப்புறம் , சென்ற வருடம் அக்டோபர் இறுதியில் , நாமும் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்று எனக்கு தோன்றியது .

உடனே நான் , நாளைய ராஜா என்றொரு வலைப்பதிவை ஆரம்பித்தேன் . அதை தமிழ்மணத்தில் இணைத்து எழுத ஆரம்பித்தேன் .

பின்னர் நான் ஊருக்கு போக வேண்டிய நேரமும் வந்தது . எனக்கு ஊரில் பெண் பார்த்திருந்தார்கள் . நவம்பர் இறுதியில் ஊருக்கு சென்றேன் .

பின்னர் டிசம்பரில் கல்யாணம் முடித்து , நாலு மாசம் லீவும் நாலே நாளில் போனது போலிருந்தது . மீண்டும் சவுதிக்கே பயணப்பட்டேன் கடந்த ஏப்ரல் 9 ம் தேதியில் .

பின்னர் என் சோகத்தை மாற்ற மீண்டும் வலைப்பக்கம் வர ஆரம்பித்தேன் .

அப்புறம் நான் , நிலா அது வானத்து மேல! என்ற வலைப்பக்கத்தை ஆரம்பித்து இதோ உங்கள் முன் நிற்கிறேன் .

எனக்கு எண்ணற்ற நண்பர்கள் கிடைத்து இருப்பது இந்த வலையுலகின் மூலமா தான் .

என் எழுத்தைப் பார்த்து முதன்முதலில் வாழ்த்துக்கள் சொன்னது என் நண்பர் அக்பர் தான் .

இது போல என்னை ஊக்கப்படுத்தியது கோவி கண்ணன் , முரளிகண்ணன் , கேபிள் சங்கர் , உண்மைத் தமிழன் சரவணன் , வசந்த் ( பிரியமுடன் வசந்த் ) , டாக்டர் சுரேஷ் , டாக்டர் தேவா சார் , சென்ஷி , டி வி ராதாக்கிருஷ்ணன் சார் , எம் எம் அப்துல்லா , நையாண்டி நைனா , சங்கா , ஜெகநாதன் , சந்ரு , குறை ஒன்றும் இல்லை ராஜ்குமார் , சக்கரை சுரேஷ் , துபாய் ராஜா , நாஞ்சில் பிரதாப் , அபு அஃப்ஸர் , நவாஸ்தீன் , இன்னும் முகமறியா எத்தனை எத்தனையோ நண்பர்கள் .

அப்புறம் , மிஸ்டர் NO . இவரும் மிக மிக குறிப்பிடத்தக்கவர் .


இவர்களுக்கெல்லாம் என் நன்றியினை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் .

இங்கே பெயர் விடுபட்டவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் .

இந்த பதிவைத் தொடர , இந்த பதிவு யாரெல்லாம் எழுதலியோ அவங்க இந்த பதிவையே அழைப்பாக ஏற்று தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் .

ஸ்டார்ஜன்

Post Comment

51 comments:

 1. வாழ்த்துகள் நண்பரே...

  மிக அழகாக சொல்லியிருக்கீங்க..

  நீங்களும் ஹோசூர் யூனிட்டில் வேலைப் பார்த்து இருக்கீங்களா?

  மிக்க சந்தோஷம். நானும் ஹோசூர் டிவிஎஸ்ஸில் வேலைப் பார்த்தவன்.

  ReplyDelete
 2. // எனக்கு சிறு வயதில் படிப்பதில் ரொம்ப ஆர்வம் உண்டு . //

  ஆமாங்க சின்ன வயசில் படிப்பதில் ஆர்வம் இருக்கணுமுங்க...

  ReplyDelete
 3. // பின்னர் கல்லூரி படிப்பு முடித்தேன் //

  ஆமாங்க ஸ்கூல் முடிச்ச பின்னாடித்தான் கல்லூரி படிப்பை முடிக்க முடியுங்க..

  ReplyDelete
 4. // அதில் படிபடியாக முன்னேறி அசிஸ்டெண்ட் மானேஜர் ஆனேன் . //

  ஒரு 50 படி ஏறி இருப்பீங்களா?

  ReplyDelete
 5. // பின்னர் ஒரு கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறினேன் //
  ஒன்னே ஒன்னுக்காக வெளியே வந்துட்டீங்களா?

  ReplyDelete
 6. //என் எழுத்தைப் பார்த்து முதன்முதலில் வாழ்த்துக்கள் சொன்னது என் நண்பர் அக்பர் தான் .//

  கூடவே இருந்து இதுகூட செய்யாமலா.

  ரொம்ப சூப்பர்.

  ReplyDelete
 7. // வேலைக்கு சேர்ந்த புதிதில் இங்கே இணைய வசதி இல்லை . //

  அங்க இணைய வசதி இல்லை என்றால், அப்புறம் எங்கதான் இணைஞீங்க....

  (கோச்சு கிடாதீங்க...)

  ReplyDelete
 8. // அப்புறம் , சென்ற வருடம் அக்டோபர் இறுதியில் , நாமும் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்று எனக்கு தோன்றியது .//

  வெரி குட்... நல்ல நினைப்புங்க..

  ReplyDelete
 9. // நாளைய ராஜா என்றொரு வலைப்பதிவை ஆரம்பித்தேன் . //

  அதை அப்படியே தொடர்ந்து இருந்தீங்கன்னா, இப்ப மகாராஜாவா ஆயிருக்கும் இல்ல.. வுட்டுடீங்களே..

  ReplyDelete
 10. // இங்கே பெயர் விடுபட்டவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் . //

  பெயர் விடுபட்டவர்கள் - யூ மீன் அனானிஸ்...

  அனானிகளுக்கு நன்றி தெரிவித்த முதல் ஆள் நீங்கதாஙக்..

  ReplyDelete
 11. // இந்த பதிவைத் தொடர , இந்த பதிவு யாரெல்லாம் எழுதலியோ அவங்க இந்த பதிவையே அழைப்பாக ஏற்று தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் .//

  யூ மீன் செந்தமா சூன்யம் வச்சுகிடணும்.. அப்படித்தானே..

  (இது என் ஃபார்முலா மாதிரி இருக்கே..)

  ReplyDelete
 12. வெரி சாரி ஃபார் த கும்மி...

  இஃப் யூ டோண்ட் லைக் இட், யூ ஹவ் எவ்வரி ரைட் டூ டிலீட் இட்..

  ReplyDelete
 13. // அக்பர் said...
  //என் எழுத்தைப் பார்த்து முதன்முதலில் வாழ்த்துக்கள் சொன்னது என் நண்பர் அக்பர் தான் .//

  கூடவே இருந்து இதுகூட செய்யாமலா.

  ரொம்ப சூப்பர். //

  வெரி குட் நண்பர்... கீப் ஹெல்பிங்..

  ReplyDelete
 14. தமிழ் மணத்தில் ஓட்டுப் போட்டாச்சு..

  தம்ழிஷில் ஓட்டு போட்டுட்டு இருக்கேன்... இந்த பின்னூட்டம் போட்டு முடிவதற்குள் ஓட்டு விழுந்துருக்கும்..

  ReplyDelete
 15. // "நானும் என் வரலாறும் - தொடர்பதிவு" //

  ஒரு சிறிய திருத்தம்...

  தொடர் இடுகை...

  blog = வலைப்பூ / வலைப் பதிவு

  post = இடுகை.

  உங்கள் வலைப்பூவில் (அ) வலைப் பதிவில் நீங்க இடுகை போட்டு இருக்கின்றீர்கள்.

  ReplyDelete
 16. ராகவன் நைஜீரியா அண்ணே !!

  வணக்கமுங்கண்ணா, என்ன இங்கே டேரா போட்டதுமாதிரி இருக்கே

  வாங்கன்ணா வாங்கண்ணா .... வந்து கலக்குங்கண்ணா

  நீங்கள்லாம் எனக்கு இருப்பது எனக்கு எவ்வளவு சந்தோசம் ...

  ReplyDelete
 17. இராகவன் சார்.

  ரொம்ப சந்தோசமாக இருக்கு.

  உங்க கமெண்டுகளில் நகைச்சுவை அருமை.

  அப்படியே என்னையும் கண்டுகிடுங்க.

  ReplyDelete
 18. முதல்முறையா வரேன். nice narration. குழந்தைகள் படம் அருமை.

  ReplyDelete
 19. வாழ்த்துகள் Starjan

  மிக அழகாக சொல்லியிருக்கீங்க

  ReplyDelete
 20. ஒருவருடம் ஓடிப் போச்சு.....அதுக்கு முன்னால திருமணமெல்லாம் ஆகிப் போச்சு... உங்களைப் பற்றி தகவல் அறிய தந்ததற்கு நன்றி தம்பி !

  ReplyDelete
 21. நீங்க உங்க கதைய அழகாக சொல்லி இருகிங்க.

  வலைப்பதிவு மூலம் பல நண்பர்கள் கிடைத்திருப்பது சந்தோசமே

  ReplyDelete
 22. அழகாக சொல்லியிருக்கீங்க..

  ReplyDelete
 23. வாங்க ராகவன் ,

  உங்க கம‌ண்ட்ஸ் ரொம்ப அருமை

  அப்பப்ப இப்படி வந்துட்டு போங்க

  ReplyDelete
 24. ராகவன்

  நான் தூத்துக்குடி டீலரின் ப்ராஞ்ச் ஒன்றில் வேலை பார்த்தேன்

  உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி

  ReplyDelete
 25. வாங்க அக்பர் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 26. வாங்க மணிகண்டன் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 27. வாங்க டி வி ஆர் சார் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 28. வாங்க கண்ணன் அண்ணே வருகைக்கு நன்றி

  ReplyDelete
 29. வாங்க சந்ரு வருகைக்கு நன்றி

  ReplyDelete
 30. வாங்க தியாவின் பேனா வருகைக்கு நன்றி

  ReplyDelete
 31. வாங்க ராஜ்குமார் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 32. நல்ல அருமையான தெளிவான எழுத்து நடை

  உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன் .

  ReplyDelete
 33. நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்துள்ளேன்

  கொஞ்சம் நிலா அங்க வருமா ...

  ReplyDelete
 34. வாங்க கட்டபொம்மன் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 35. அருமையான வரலாறு. அழகாக எழுதியுள்ளீர்கள். தற்போது பணிப்பளு அதிகம். வலைப்பக்கம் வரவே நேரமேயில்லை. தாமதமான வருகையை தவறாக நினைக்கவேண்டாம் நண்பரே...

  ReplyDelete
 36. வருகைக்கு மிக்க நன்றி துபாய்ராஜா

  ReplyDelete
 37. தொடர்ந்தமைக்கு நன்றி ஸ்டார்ஜன். அலங்காரங்கள் இல்லாமல் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 38. நண்பர்கள் கூட்டத்துல என்னையும் சேர்த்துகிட்டக்கு நன்றி... நல்லாருக்கு

  லெட் ஸ்டார்ட் கும்மி...

  //தமிழ்மணத்தில் உள்ளது என்று போய் பார்த்தால் , உள்ளே நிறைய பொக்கிஷங்கள் புதைந்து கிடந்தன//

  அட புதுசா இருக்கே... தமிழ்மணத்துல பொக்கிஷமா? எங்களை வச்சு காமெடிகீமெடி பண்ணலையே??

  ReplyDelete
 39. //அது என்னவென்றால் நாம் பதிவு எழுத வந்தததை பற்றிய அனுபவத்தை எழுத வேண்டும் .//
  இதை ஏன் நீங்க ஒரு புத்தகமாக வெளியிடக்கூடாது... முறைக்காதீங்க சும்மா கேட்டேன்...

  ReplyDelete
 40. //பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி வாரமலர் ,சிறுவர்மலர் , ராணி காமிக்ஸ் படிக்கணுன்னா கொள்ளை பிரியம் .//

  பாடபுத்தகங்களா?? சரிங்க இதை நம்பிட்டோம்...

  என்னண்ணே சிறுவர் மலர், வாரமலர்னு வேற "எதுவுமே" படிக்கலையோ??? சே...சின்ன வயசை வேஸ்ட் பண்ணிட்டீங்களேண்ணே... :-)

  ReplyDelete
 41. //நிலா அது வானத்து மேல! என்ற வலைப்பக்கத்தை ஆரம்பித்து இதோ உங்கள் முன் நிற்கிறேன்//

  எண்ணே நிக்கிறீங்க.. உக்காருங்கண்ணே...

  நிலா அதுவானத்துமேல...பலானது எதுவும் இல்லயா???

  ReplyDelete
 42. ஒரு உரிமைலதான் கும்மி அடிச்சேன்...
  இத்தோட நிறுத்திக்குறேன்.. தப்பா எடுத்துக்காதீங்க...

  ராகவன் சார் அடிச்ச கும்மியவே தாங்கிட்டீங்க... இதை தாங்க மாட்டீங்களா???

  ReplyDelete
 43. ஷங்கியின் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 44. பிரதாப் வருகைக்கும் கும்மிக்கும் நன்றி

  ReplyDelete
 45. //நானும் என் வரலாறும் - தொடர்பதிவு //
  வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே.. :)
  மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்