நான் சமீபத்தில் சிந்தனை செய் என்ற திரைப்படம் பார்த்தேன் . படம் ரொம்ப பயங்கரமா இருந்தது . என்ன இது ! ரொம்ப பயங்கரமா இருக்கு என்று சொல்கிறானே என்று என்னை அடிக்க வருவது தெரிகிறது . அந்த அளவுக்கு திரில்லிங்கா இருந்தது .
என்ன கதை என்று பார்த்தால் பள்ளியில் வகுப்பறையில் மிடில் பெஞ்சில் படித்த நண்பர்கள் வாழ்க்கையில் என்னவாகிறார்கள் என்று படம் சொல்லுது . கதைப்படி ஹீரோ ஒன்னுக்கும் லாயக்கில்லாதவர் . காதலித்து கல்யாணம் செய்த மனைவி வெறுத்து ஒதுக்குகிறார் .
இதனால் மனமுடைந்த ஹீரோ , தன்னுடன் படித்த மற்ற 4 நண்பர்களூடன் சேர்ந்து பேங்கில் கொள்ளை அடித்து தானும் ஒரு உருப்படியானவன் என்று நிருபிக்கிறார் . பின்னர் அதன் பின் நடக்கும் சம்பவங்களும் காட்சிகளும் நமக்கு திரில்லிங்கான அனுபவத்தை கொடுக்கிறது .
கொள்ளை அடித்த பணத்தைக் கொண்டு 5 நண்பர்களும் வாழ்க்கையில் செட்டிலாகிறார்களா இல்லையா என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க .
இந்த கதை இது வரைக்கும் வராத புதிய கதை . நல்லாருக்கு . படத்தோட ஹீரோ யுவன் . படத்தோட இயக்குனரும் இவர்தான் .
நல்லா நடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் . அவரும் அவருடைய நண்பரும் ஐட்டம் வீட்டுக்கு போயிட்டு செக் கொடுப்பது , பாரில் கலாட்டா செய்வது ரசிக்கும்படியா உள்ளது .
ஆரம்பத்தில் கொஞ்சம் அப்படி இப்படி என்று மொக்கையா இருந்தாலும் படம் பேங்கில் கொள்ளை அடிப்பதிலிருந்து நம்மை நிமிர்ந்து உக்கார வைக்கிறது
அதன் பின் நடக்கும் காட்சிகளும் , யுவன் தன் நண்பர்களுக்கு துரோகம் செய்யும் காட்சிகளாகட்டும் நல்ல ஒளிப்பதிவு .
பாடல்கள் தமனின் இசையில் நல்லாருக்கு .
மயில்சாமி இந்த படத்தில் கலக்கியிருக்கிறார் .
மொத்ததில் இந்த படம் ஒரு திரிலிங்கான படம் பாக்கலாம் .
************************************************************
நான் இந்த படத்தை பாத்தபோது சிறுவயதில் பள்ளியில் பாடபுத்தகத்தில் படித்த கதை ஒன்று ஞாபகத்தில் வருகிறது .
அந்த கதை என்னவென்றால் ,
ஒரு ஊரில் நான்கு நண்பர்கள் இருந்தார்கள் . அவர்கள் பக்கத்து ஊர்களுக்கு சென்று , வியாபாரம் செய்து சம்பாதித்தார்கள் .
நாளுக்கு நாள் சேர்த்த பணத்தை பாதுகாக்க வேண்டுமே ! என்ன செய்வது என்று யோசித்தார்கள் . அதில் ஒருவன் நம்முடைய பணத்தை யாராவது ஒரு நம்பிக்கையான ஆளிடம் கொடுத்து செல்லலாம் என்று சொன்னான் .
அந்த யோசனையின் படி அந்த 4 நண்பர்களும் பக்கத்தில் உள்ள பாட்டியிடம் கொடுத்து செல்ல தீர்மானித்தனர் .
பாட்டி நாங்கள் வியாபாரத்துக்காக தொலைதூரம் சொல்கிறோம் . வர நாட்கள் ஆகும் . நாங்கள் கஷ்டபட்டு சேர்த்த பணம் இது . நாங்கள் வியாபாரத்துக்கு போயிட்டு வந்ததும் வாங்கிக்கிறோம் . நாங்க நாலு பேரும் சேர்ந்து வந்தா மட்டும் இந்த பணப்பானையை கொடுக்க வேண்டும் .வேறு யார்க்கிட்ட்யும் கொடுத்திடாதீங்க பாட்டி என்று நான்கு பேரும் சொன்னார்கள் . பாட்டியும் இதற்கு இசைந்து அவர்களை வழி அனுப்பி வைத்தார் .
இவர்கள் வெளியூர் சென்று வியாபாரம் செய்து நல்ல லாபம் கிடைத்தது . மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர் .
அவர்கள் ஊர் எல்லைக்கு வரும்போது அவர்களுக்கு ரொம்ப தாகம் எடுத்தது .
அப்போது கொஞ்ச தூரத்தை கடந்து வரும்போது ஒருவர் மோர் வித்துக்கொண்டிருந்தார் . தாகத்துக்கு மோர் சாப்பிடலாம் என்றெண்ணி மோர் கேட்டனர் .
ஆனால் நான்குபேருக்கும் மோர் வாங்க பெரிய பானை எதுவுமில்லை . என்ன செய்வது என்று யோசிக்கும் போது கொஞ்ச தூரத்தில் பணப்பானை கொடுத்த பாட்டி வீடு இருந்தது . உடனே பாட்டியிடம் மோர்வாங்க காலிப்பானை ஒன்று வாங்கி வா என்று அவர்களில் ஒருவனை மற்ற 3 பேரும் அனுப்பி வைத்தனர் .
அவன் நேராக பாட்டியிடம் சென்று பணப்பானையை தரும்படி கேட்டான் . பாட்டி நீ மட்டும் வந்து பானை கேட்கிறாய் . நாலு பேரும் வந்தாத்தான் நான் பணப்பானையை தருவேன் என்று சொன்னார் .
அவன் உடனே என் நண்பர்கள் அதோ அங்கே இருக்காங்க . அவங்க தான் வாங்கிட்டு வரச்சொன்னாங்க , அதனால பானையை தாங்க என்று கேட்டான் .
இல்லை நாலு பேரும் வந்து கேட்டாத்தான் பணப்பானையை தருவேன் என்று சொன்னார் .
உடனே அவன் தூரத்தில் உள்ள தன் நண்பர்களிடம் பாட்டி பானையைத் தரமாட்டுக்காங்க பானையைத் தரச்சொல்லுங்க . என்று கத்தினான் .
உடனே அந்த மூன்று பேரும் , மோர்வாங்குவதற்கு காலிப்பானை கேட்கிறான் போல என்று நினைத்து பானையை கொடுங்க பாட்டி என்று கை அசைத்து சொன்னார்கள் .
பாட்டியும் உள்ளே சென்று பணப்பானையை எடுத்து அவனிடம் கொடுத்தார் .
பானையை அவன் வாங்கியதும் வேறு காட்டு வழியில் ஓடி விட்டான் .
காட்டு வழியே சென்ற அவனை புலி அடித்து கொன்றது .
கதையைப்பார்த்தா படத்தை இப்பவே பார்க்கனும் போல இருக்கு.
ReplyDeleteஆமா படம் எப்போ ரிலீஸ்.
அக்பர் இந்த படம் ஆகஸ்டுல வந்தது ; இப்பதான் படம் பார்த்தேன் .
ReplyDeleteபுதிய படத்தின் விமர்சனமும், பள்ளி நாளில் படித்த பழைய கதையின் பகிர்வும் அருமை ஸ்டார்ஜன்.
ReplyDeleteசும்மா புட்டு,புட்டு வைக்கிற விமர்சன பதிவுகளை விட இப்படி பட்டும் படாம பண்ற விமர்சனம் அருமையாகவும்,ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளது. தனிமனித விருப்பு, வெறுப்புக்களை கலக்காமல் இதே போன்று எல்லோரும் விமர்சனப்பதிவு எழுதினால் கலைத்துறையை சார்ந்தவர்களும், சினிமா ரசிகர்களும் மிகவும் மகிழ்வார்கள்.
இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே....
Good Review..
ReplyDeleteவாங்க துபாய்ராஜா வருகைக்கு மிக்க நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி ராஜ்குமார்
ReplyDeleteஇந்தப் படத்தைச் சில நாட்களுக்கு முன் பார்த்தேன். பரவாயில்லை. பழைய கதையைச் சேர்த்து எழுதியிருப்பது நன்று.
ReplyDeleteபடம் வந்து பல நாள் ஆனாலும் விமர்சனம் நல்லாயிருக்கு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவிமர்சனம் மிகவும் அருமை .அதிலும் பழைய கதை சூப்பர்
ReplyDeleteஇப்படி ஒரு படம் வந்துச்சா... நல்லாருக்குன்னு சொல்றீங்க..படம் ஓடலையா??
ReplyDeleteரெண்டாவது சொன்ன கதை நல்லாருக்கு... இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களே...
ஷங்கியின் வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க அத்திரி வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க vettippayapullaiga வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க பிரதாப் வருகைக்கு நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி சரவணக்குமார்
ReplyDeleteஅப்போ படம் பாக்கலாம்ன்னு சொல்றீங்க.உங்க நீதிக்கதையும் நல்லாத்தானிருக்கு.
ReplyDelete