வாரம்தோறும் இந்த பகுதியில் வெளியாகும் கேள்விக்கு உங்கள் பதில் இடுகைகளில் நிறையபேர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள ஏதுவாக உள்ளது. உங்களின் ஒவ்வொருவரின் வித்யாசமான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளும்போது புதிய கருத்துப் பரிமாணம் கிடைக்கிறது. இதற்கு ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் வலைச்சரத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கும் வந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சரி இந்த வார கேள்விக்கு உங்கள் பதில் 6 க்கு செல்வோமா..
கேள்வி 6:
சினிமா/சீரியல்கள் பெண்களுக்கு முன்னேற்றம் அமைத்துக் கொடுக்கிறதா இல்லை இழிவுபடுத்துகிறதா...
சென்ற வாரம் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது போல இந்த கேள்விக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
,
பெண்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்தக் குடும்பங்களின் மீது உளவியல் தாக்குதல் நடைபெறுகிறது என்பதால், இழிவுபடுத்துகிறது என்று தான் சொல்வேன்.
ReplyDeleteசீரியல் - நிச்சயமாக பெண்களை இழிவுப் படுத்துகின்றது. ஒரு பெண் மிக நல்லவராகவும், அவரைச் சுற்றி உள்ள 10 பெண்கள் கொடுமையானவராகவும் சித்திரிக்க வைத்து, நம் வீட்டுக் கூடத்தில் நாமே வரவழைக்கும் கொடுமை. அதுவும் இப்போ காசு கொடுத்து வாங்கு கொடுமை.
ReplyDeleteசந்தேகேமேயில்லாமல் சொல்லலாம்... சீரியல் மட்டுமல்ல, ரியாலிட்டி ஷோ என்று அடிக்கும் கூத்தும் தாங்க முடியாதது.
நண்பர் சேட்டை, அண்ணன் இராகவன் ரெண்டு பேரோட கருத்தே என்னுடையதும்.
ReplyDeleteஇழிவுபடுத்துகிறது.
ReplyDeleteநிச்சயமாக சினிமா,சீரியல் பென்களை இழிவுதான் படுத்துகின்றது.பெண்களைமட்டுமல்ல குடும்பத்தினையே அலைகழிக்கின்றது என்பதுதான் உண்மை.குடும்பத்தலைவனால் ரசித்து சாப்பாடை உண்ண முடியவில்லை,திரையைப்பார்த்துக்கொண்டே இல்லாள் பேச்சுக்கு தலைமட்டும் ஆட்டி,அவள் என்ன பேசினாள் என்பதே அறியாமல் போகும் வயிறெரிச்சல்,பிள்ளைகளின் படிப்பைக்கெடுத்தல்,பெண்ணின் நேரங்களை விரயப்படுத்தி,அவளது கடமைகளை செய்யாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே சீரியலில் மூழ்கும் அபாயம்,விளம்பரங்கள் பார்த்து கணவனின் கஜானாவைக்காலி யாக்கும் ஆர்வம்..இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.இதற்கு மாற்றுக்கருத்தே இல்லை.
ReplyDeleteபெண்கள் எவ்வளவோ முன்னேறியிருந்தும் அழுவதற்காகவும் கொடுமைப் படுத்தவும் பிறந்தவர்களாகச் சித்தரித்து இழிவு படுத்தியே காட்டுகிறது.
ReplyDeleteஇதில் விளக்கி எழுத ஒன்றுமில்லை, உள்ளங்கை நெல்லிக் கனிபோல் இழிவு படுத்துகிறது. அவ்வளவுதான்.,
ReplyDeleteசந்தேகத்திற்கு இடமின்றி
ReplyDeleteஇழிவு படுத்துகிறது.
கண்டிப்பாக இழிவுபடுத்துகிறது. ஒரு வீட்டில் மாமியாருக்கும்,மருமகளுக்கும் எப்படியெல்லாம் சண்டை வரனும் என்பதை பெண்களுக்கு சொல்லி, இல்லை இல்லை டியூசன் எடுக்கிறது சீரியல்கள்...
ReplyDeleteநண்பர் சேட்டை, அண்ணன் இராகவன் ரெண்டு பேரோட கருத்தே என்னுடையதும்.
ReplyDeleteஇவை மட்டும் அல்ல விளம்பரங்கலயும் இணைத்து கொள்ளுங்கள். அவையும் பெண்களை இழிவு படுத்துகின்றன
ReplyDeleteஇழிவு படுத்துகிறது என்பதில் மாற்று கருத்தே இருக்கமுடியாது.
ReplyDeleteநம் பெண்களின் பொன்னான நேரமும் பாழடிக்கப் படுகிறது.
இழிவு படுத்துகிறது.
ReplyDeleteசீரியல் குடும்பத்தில் உள்ள உறவையும் நிம்மதியையும் சீர்குலைக்கிறது.
ReplyDeleteநேரத்தையும், வேலையையும் கெடுக்கிறது.
ReplyDeleteபெண்கள் முன்னேற்றம் என்பது சினிமாக்களிலோ அல்லது சீரியல்களிலோ கண்டிப்பாக இல்லை என்பதே எனது கருத்து.
ReplyDeleteகாரணம் யாதெனில், சினிமாக்களில் பெண்கள் கவர்ச்சிப் பெட்டகமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். அப்படியிருக்க எப்படி முன்னேற்றப்பாதை அமைத்துத் தரும்.
சீரியல்களை சொல்லவே வேண்டாம்.. எந்த நேரமும் அழுகையுடன் திரியும் பெண்கள்தான் அதிகம். இதனால் மன அழுத்தம் அதிகரிக்குமே ஒழிய முன்னேற்றத்திற்கான அறிகுறி குறைவுதான் நண்பரே..!
// சினிமா/சீரியல்கள் பெண்களுக்கு முன்னேற்றம் அமைத்துக் கொடுக்கிறதா இல்லை இழிவுபடுத்துகிறதா...//
ReplyDeleteசினிமா, சீரியல் ரெண்டுமே...
முன்னேற்றத்தின் அளவுகோல் மிக குறைவு..
இழிவு படுத்துவது தான் அதிகம்.. என்பது என் கருத்து..
சீரியலில் எப்பவும் அழுகை, சாபம் விடுதல், அடுத்தவரை திட்டுதல்..
இது இல்லாம நாடகமே இல்லை.. நான் நாடகமே பார்ப்பது கிடையாது..
பொதுவாக பொழுபோக்கு அம்சமாக இருக்க வேண்டிய நாடகங்கள்.. மன இறுக்கத்தை தான் தருகிறது
நிச்சயமாக இழிவுபடுத்துவது மட்டுமல்ல கொஞ்சம் கொஞ்சமா மூளைசலவையும் நடக்குது.வீட்டுல பாலிடிக்ஸ் பண்றது எப்டின்னு, நல்லாவே பாடம் எடுக்கிறாங்க.
ReplyDeleteவருகைதந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ReplyDeleteவருகைதந்து கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.
ReplyDelete