அதேமாதிரி எங்க வீட்டுக்கு வரும் டோப்பிக்கும் பயப்படுவேன். ஏன்னா அவரு வெத்தலை பெட்டி வச்சிருப்பாரு. அதுல உள்ள பாக்குவெட்டிய எடுத்து கண்ணுக்கு நேரா காட்டி மூக்கை வெட்டிருவேன்னு பயங்காட்டுவார். நான் இதுக்கெல்லாம் மசியிரா ஆளா. பயப்படுறமாதிரி நடிச்சிட்டு அவர் அங்கிட்டு போனதும் நம்ம சேட்டை ஆரம்பமாயிரும்.
தாத்தா பாட்டி வெளியூர் போனாலும் நான்கூட செல்வேன். எல சேக் சேட்டை பண்ணுனே நிமிட்டாம்பழம் கொடுத்துடுவேன், அதனால ஒழுங்கா இருக்கணும். அதென்ன நிமிட்டாம்பழம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது வேற ஒண்ணும் இல்லை தொடையில் கிள்ளி விடுவதுதான். சில சமயங்கள் நான் நிறைய நிமிட்டாம்பழத்தை வஞ்சனையில்லாம வாங்கிக்குவேன்.
எனக்கு சின்னவயசில கதை கேட்கிறது ரொம்ப பிடிக்கும். அதனால எங்க தாத்தாவும் பாட்டியும் கதை சொல்ல சொல்லி கேட்பேன். ஈனாம்பூச்சி கதை, புலிமச்சான் கதை, நல்லதங்காள் கதை, புட்டு தண்ணியா போன கதை இப்படி நிறைய கதைகள் உண்டு. இவை ரசிக்கும்படியான கதைகள்.
இந்தமாதிரி கதைகள்ல லாஜிக்கெல்லாம் பார்க்கப்படாதுன்னு முன்னாடி சொல்லிபுட்டேன் ஆமா...
எங்க தாத்தா சொன்ன கதைகள்ல ஒரு கதையை இங்கு பார்ப்போம்.
கதை கேளாத நாயி..
ஒரு ஊர்ல ஒரு பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஒரு மனைவி. அவர்கள் ஒருநாயை வளர்த்து வந்தனர். அவன் தினமும் காலையில் வேட்டைக்கு செல்லும் போது நாயையும் கூட அழைத்து செல்வான். வேட்டையாடியவற்றை அந்த நாயிடம் கொடுத்து அனுப்புவான். அவன் மனைவி அதை சமைத்து ரெடியாக்கி வைப்பாள். அவன் வேட்டையை முடித்து ஆற்றில் குளித்து விட்டு வருவான். தினமும் இதேமாதிரி வேட்டைக்கு செல்வதும் அவனது வாடிக்கையாகும்.
ஒருநாள் காலையில், அவன் நாயுடன் வேட்டைக்கு கிளம்பினான். வேட்டையில் ஒரு மான் சிக்கியது. அவனுக்கு ரொம்ப சந்தோசம். ஆஹா இன்னிக்கி சரியானவேட்டை, இதை அம்மாவிடம் கொடுத்து கறி சமைத்து வைக்க சொல்லு. நான் வேட்டையை முடித்து குளித்துவிட்டு வருவேன். சீக்கிரம் வீட்டுக்கு போ. நான் வருவேன். என்று நாயிடம் அந்த மானை கொடுத்து அனுப்பினான். நாயும் சரியென தலையாட்டியபடி சென்றது.
நாய் வேகமாக வந்துகொண்டிருந்தது. வழியில் ஒரு மரத்தடியில் நாலுபேர் உக்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தது. நாய் அவர்கள் பேசும் கதையில் லயித்தது. அப்படியே கதை கேட்டுக்கொண்டிருந்ததால் வீட்டுக்கு செல்வதை மறந்தது. எல்லோரும் பேசிமுடிந்ததும் கிளம்பினர். அப்போதுதான் நாயிக்கு ஞாபகம் வந்தது.., ஆஹா வீட்டுக்கு செல்ல மறந்துவிட்டதே என்றெண்ணி வேகமாக வீட்டுக்கு ஓடியது.
வேட்டைக்கு சென்ற பணக்காரன் குளித்துமுடித்து பசியோடு வீட்டுக்கு வந்தான். வீட்டில மனைவி சும்மா இருப்பதைக்கண்டு கோபமாகி சத்தம் போட்டான். நான் நாயிடம் அப்போதே கொடுத்துவிட்டேனே ஏன் இன்னும் சமைக்கலை., என்றான். என்னது நாயிடம் கொடுத்துவிட்டீங்களா நாய் இன்னும் வரவேஇல்லை. நான் என்ன செயவது.. என்றாள் மனைவி. வரட்டும் நாய் ஒரு கை பார்த்திடுதேன் என்று சொன்னான் மனதில்.
நாய் மூச்சிரைக்க ஓடிவந்தது. என்ன நாயே உங்கிட்ட அப்போதே கொடுத்துவிட்டேனே., எங்கே போய் தொலைந்தாய். சொல்லு நாயே. என்று அதட்டினான்.
இல்ல வருகிற வழியில் நாலுபேர் மரத்தடியில் உக்கார்ந்து கதை பேசிக்கிட்டு இருந்தனர். அவர்கள் கதையில் ஐக்கியமானதால் இவ்வளோ நேரமாயிருச்சி என்றது. அவனுக்கு கோபம் அதிகமானது. ஒரு புளியங்குச்சியை எடுத்து நாயை கதை கேளாத நாயி கதை கேளாத நாயின்னு அடிபின்னிட்டான்.
இப்படி நான் எங்க தாத்தாவிடம் கதை கேட்டுட்டு இருந்தபோது என் முதுகில் அடிவிழுந்தது. என்னன்னு பார்த்தா எங்க தாத்தா சிரிச்சிக்கிட்டே கதை கேளாத நாயின்னு செல்லமா அடித்தார்.
இதுதான் கதை கேளாத நாயோட கதை.
அன்புமிக்க நண்பர்களே!!
எனக்கு ஒரு எண்ணம் இந்த பதிவை தொடரிடுகையாக ஆரம்பிக்கலாம் என்று எண்ணம். இதனை செயல்படுத்துவது உங்கள் கையில் உள்ளது. நண்பர்களே உங்களுக்கு சிறுவயதில் கதை கேட்ட அனுபவங்கள் இருப்பின் அதனை இங்கே
தொடராக எழுதுங்கள்.
என்கருத்து சரிதானே நண்பர்களே..
உங்கள் சின்ன வயதில் கதைகேட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். குறைந்தது ஒரு மூன்று பேரையாவது இந்த தொடரை தொடர்ந்து எழுத அழையுங்கள்.
இந்த தொடரை தொடர இவர்களை அன்போடு அழைக்கிறேன்.
அக்பர்
நிஜாமுதீன்
ஹூசைனம்மா
ஸாதிகா மேடம்
கண்ணா
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
,
சேட்டை பண்ணினா கண்ணுலே வெங்காயமா? :-))) எனக்கெல்லாம் லாரியிலே தான் வாங்கணும் போலிருக்கு!
ReplyDeleteகதை கேளாத நாயி கதை நல்லாவேயிருக்கு! (அதான் லாஜிக் பார்க்கக் கூடாதுன்னு சொல்லிட்டீங்களே!)
அட கதை ரொம்ப அருமையா இருக்கே.
ReplyDeleteகதை கேளா நாயின்னு பேர் வாச்சா எப்படி கதை கேக்குறது.
குரு அந்த கதைகேளாதே கதைல கடைசில என்ன ஜொல்ல வர்றீங்கன்னு சொல்லவே இல்லயே.... ஏன் தல நீங்க பட்ட கஷ்டத்தைஎங்களுக்கு குடுக்கறீங்க... இதுல தொடர் பதிவு வேறயோ.... சுத்தம்...
ReplyDeleteவே கண்ணா...சின்ன வயசுல வீடு கட்டுன கொத்தனாரு கதையை மட்டும் சொன்னீரு....அப்புறம் நல்லாருக்காது அம்புட்டுதேன்...
சேட்டைக்காரன்:
ReplyDeleteசேட்டை ரொம்ப...
முடியல....
/// நாஞ்சில் பிரதாப் said...
ReplyDeleteகுரு அந்த கதைகேளாதே கதைல கடைசில என்ன ஜொல்ல வர்றீங்கன்னு சொல்லவே இல்லயே.... ஏன் தல நீங்க பட்ட கஷ்டத்தைஎங்களுக்கு குடுக்கறீங்க... இதுல தொடர் பதிவு வேறயோ.... சுத்தம்...///
சிஷ்யா இந்த கதையோட முடிவு சொல்லிய்யாச்சி.. போதுமா.. :))).
நல்ல கதை போங்கள். (நல்லாயிருக்குன்னு சொல்றேன்.)
ReplyDeleteஅடுத்து தொடர்வதற்கு நம்மையும் கூப்பிட்டிட்டீங்களா!?
கதைதானே? சொல்லிட்டாப் போச்சி, அதுக்கென்ன?
ஒரு ஊர்ல.................................
(தொடரும்...)
கதை நல்லா இருக்கு ஸ்டார்ஜன்... தொடர்பதிவுக்கு கூப்பிட்டு இருக்கும் ஆட்களும் சூப்பர்..
ReplyDelete// நான் சேட்டை பண்ணினா கண்ணுல வெங்காயத்தை ஊத்திருவேன்ன்னு சொல்வாங்க. //
ReplyDeleteஎங்க அம்மா செஞ்சுடுவாங்க ...
தாத்தா (சொன்ன) கதை நல்லா இருக்கு :))
ReplyDeleteகதை நல்லாத்தான் இருந்துச்சி. இங்க வந்து படிச்சிட்டு ஒட்டு போடாம போறவங்களுக்கு "கதை கேளாத நாயி" பட்டம் கொடுக்கற ஐடியா இருக்கா
ReplyDeleteகதை கலக்கல் .
ReplyDeleteஉண்மைக் கதையா ?
இல்லை கற்பனையா நண்பரே?
பகிர்வுக்கு நன்றி !
மீண்டும் வருவேன்
’’’’’ஒரு ஊர்ல ஒரு பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஒரு மனைவி.’’’
ReplyDeleteஎன்ன பணக்காரனுகே ஒருமனைவிதானா....?
:-))))
ReplyDeleteதொடர் பதிவு அழைப்பிற்கு நன்றி தல..
ReplyDeleteசீக்கிரம் எழுதுகிறேன்.
//சிறுவயதில் கதை கேட்ட அனுபவங்கள் இருப்பின் அதனை இங்கே
தொடராக எழுதுங்கள்.//
நல்ல வேளை சிறுவயதில்னு போட்டீங்க... இல்லேன்னா... சில பல அஜால் குஜால் கதைகள்தான் ஞாபகத்திற்கு வரும் :))
கதை ரொம்ப சூப்பரா இருக்கு.. தொடர்பதிவா.., அசத்தல்., ஐந்து பேரை மாட்டிவிட்டாச்சா.. கதை சொல்ல ஆரம்பிங்க..
ReplyDeleteஅது என்னன்னு தெரியலே ஸ்டார்ஜன் சார்.எல்லாவற்றையும் இத்தனை ஞாபமாக தொகுத்து கொடுத்து இருக்கீங்க.நாணும் யோசித்துப்பார்க்கிறேன்.யாரும் எனக்கு சிறுவயதில் கதை சொன்னதாக ஞாபகம் இல்லை.பாட்டியிடம் 50 பைசா கேட்டால் யாருக்கும் தெரியாமல் ஒடரு ரூபாய் கொடுத்தது மட்டுமே நஞாபகம் உள்ளது.அவசியம் நான் என் பிள்ளைகளுக்கு சொன்ன கதையை ஞாபகப்ப்டுத்தி பதிவு போடுகிறேன்.அழைப்புக்கு நன்றி.
ReplyDeleteஅது என்னன்னு தெரியலே ஸ்டார்ஜன் சார்.எல்லாவற்றையும் இத்தனை ஞாபமாக தொகுத்து கொடுத்து இருக்கீங்க.நாணும் யோசித்துப்பார்க்கிறேன்.யாரும் எனக்கு சிறுவயதில் கதை சொன்னதாக ஞாபகம் இல்லை.பாட்டியிடம் 50 பைசா கேட்டால் யாருக்கும் தெரியாமல் ஒடரு ரூபாய் கொடுத்தது மட்டுமே நஞாபகம் உள்ளது.அவசியம் நான் என் பிள்ளைகளுக்கு சொன்ன கதையை ஞாபகப்ப்டுத்தி பதிவு போடுகிறேன்.அழைப்புக்கு நன்றி.
ReplyDeleteஸ்டார்ஜன், இன்னிக்கு எழுதலாம்னு நினைச்சேன்; முடியலை; ரெண்டு, மூணு நாள்ல எழுதிடுறேன், இன்ஷா அல்லாஹ். சரியா? அழைப்புக்கு ரொம்ப நன்றி.
ReplyDeleteஅது சரி... கதை சொல்றேன்னு சொல்லி எங்களை உக்கார வச்சி கடைசியில இப்படி பேசி... அதுவும் புளியங்குச்சியால அடிச்சுப்புட்டீங்களே...
ReplyDeleteநல்லாயிருக்கு உங்க கதை... அடிதான் வலிக்குது.
சின்ன வயசில் கேட்ட கதைகள் அருமை.
ReplyDeleteஸ்டார்ஜன்! இதோ நானும் தொடர் பதிவு
ReplyDeleteபோட்டுவிட்டேன்.
http://nizampakkam.blogspot.com/2010/04/kathaikkaalam.html
வருகைதந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.
ReplyDeleteசேட்டைக்காரன்
சிஷ்யா பிரதாப்
அக்பர்
இர்ஷாத்
நிஜாமுதீன்
ஸ்டீபன்
ராகவன் அண்ணே
சைவகொத்துப்பரோட்டா
LK
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
ஜெய்லானி
malar
T.V.ராதாகிருஷ்ணன்
கண்ணா..
மின்மினி
ஸாதிகா
ஹுஸைனம்மா
சே.குமார்
துபாய் ராஜா
நிஜாமுதீன்
அனைவருக்கும் நன்றிகள்.
நல்ல இருக்கு ,., நல்ல ஞாபகம் வைத்து எழுதி இருக்கீங்க/
ReplyDelete// நாஞ்சிலாரே அவர் ஜொல்ல வந்தத தான் சொல்லிட்டாரே//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜலீலா..
ReplyDeleteமானுக்கு என்ன ஆச்சு ஷேக்!! தப்பி ஓடிட்டுதோ!
ReplyDelete