Pages

Tuesday, April 27, 2010

வெளிநாட்டில் இருப்பது என் தப்பா?..


இது எனது 150 வது இடுகை. வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த இடுகையை சமர்ப்பணம் செய்கிறேன். உங்கள் உள்ளத்தில் எழும் கேள்விகளுக்கு விடையாய் இந்த பதிவு. நம் மனைவி, மக்கள், பெற்றோர் சொந்தபந்தங்களை விட்டு அந்நிய மண்ணில் வாழும் பிரஜைகள் நாம். உள்ளமோ குடும்பத்தை நினைத்து வாட உதடுகளோ சிரிக்கும் ஒரு ஜீவன் நாம்.

என்ன செய்வது?.. எல்லாம் நம் பெரியகைகள் செய்த கொடையினால் நாம் எல்லோரும் இப்போது வெளிநாட்டில் அடுத்தவனுக்கு அடிமையாக. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்; ஏன் கையை ஏந்தவேண்டும் அயல்நாட்டில்.. என்ற பாட்டு கேட்க மட்டுமே உதவும். நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராது. வெளிநாட்டுக்கு விமானம் ஏறும்போதே நம் ஆசை, விருப்புவெறுப்பு, சுதந்திர கனவெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுதான் ஏறவேண்டும். இங்கே ( அந்தந்த நாட்டு ) வந்தபின் இந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மாறித்தான் ஆகவேண்டும். மீறும் போது கடுமையான தண்டனைகளுக்கு ஆளாகும் சூழ்நிலை.

இதே நம்நாடு என்றால் வெளிநாட்டு பயணிகளுக்கு நாம் தரும்மரியாதையே தனிதான். வெளிநாட்டுகாரங்களுக்குதான் முதல் முன்னுரிமை கிடைக்கும். ஆனால் இங்கே அப்படியே நிலைமை தலைகீழ். எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் தன்நாட்டுக்காரங்களுக்குதான் முதல் முன்னுரிமை கொடுப்பார்கள். அவங்க நாட்டு குடிமகனுக்கு ஒருசட்டம்; வெளிநாட்டுக்காரனுக்கு ஒரு சட்டம்.

அதேமாதிரி வெளிநாட்டுக்காரனை இவர்கள் நடத்துவதே தனி அழகுதான். கேவலமாக நினைப்பது, ஆங் (இந்தியர்கள்) இவனெல்லாம் ஏழை, இளக்காரம் என்ற நினைப்பு இவர்களுக்கு. அதுமட்டுமல்லாமல் கல்லை தூக்கி எறிவது, அடிப்பது, பெப்சி டின்னை நம்ம மேல தூக்கி வீசுவது, இரும்பு கம்பியால் தாக்குவது.. இப்படி எண்ணற்ற துன்பங்கள் கொடுக்கின்றனர். இப்படிதான் எங்க ஏரியாவில் சிலநாட்களுக்கு முன்னால், சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை இரும்புகம்பியை கொண்டு தலையிலும் முதுகிலும் பலமாக தாக்கி சென்றுள்ளனர். அவர் இப்போது ஆஸ்பத்திரியில். இந்தியாவுக்கு சென்று மருத்துவம் பார்க்கப்போகிறார். ஏன் தடுக்ககூடாதா என்று நீங்கள் கேட்கலாம்?. தாக்குபவர்கள் காரில் வந்துகொண்டிருக்கும்போதே தாக்கிவிட்டு வேகமாக சென்றுவிடுவார்கள்.

அப்படியே அவர்களை பிடித்தாலும் இந்த நாட்டுக்காரர்கள் கண்டும்காணாததுபோல இருப்பது கொடுமையிலும் கொடுமை. அதுபோல இதே நாம் அவர்களை தாக்கினால் நிலைமையே வேற.. அவ்வளவுதான் எப்படிடா எங்கஆளை நீ அடிக்கலாம்.. உனக்கென்ன உரிமை இருக்கு?.. வா போலீஸுக்கு.. உனக்கு சவுக்கடி தண்டனை வாங்கித்தராமல் விடமாட்டேன்., என்று கர்ஜிக்கும் சிங்கங்களுக்கு மத்தியில் நாம். என்ன செய்ய அமைதியாக இருக்கவேண்டிய நிலை.

இது மட்டுமல்ல.. இவங்க கார் ஓட்டுற ஸ்டைலே தனிதான். இங்க சின்ன பையன்கூட அழகாக திறமையா ஓட்டுவான். இருந்தும் என்ன பயன்?.. நம்மள ரோட்டை கடக்கவிடமாட்டாங்க.. ரொம்ப வேகமா ஓட்டுவாங்க.. சிட்டிக்குள்ளே 120 கி.மீ/ஹ ஸ்பீடுல வருவாங்கன்னா பாத்துக்கோங்க.. இதனால் நிறைய ஆக்ஸிடன்டுகள் நடக்கும். ஆனா இவங்களுக்கு ஒண்ணும் ஆகாது.. இவங்களுக்காக வேண்டியே காரை தரமா தயாரித்திருப்பார்கள்.

இப்படித்தான் போனவருஷம் நானும், அக்பரும், அக்பரின்தம்பியும் பர்சேசிங் பண்ணபோயிருந்தோம். அன்று வெள்ளிக்கிழமைன்னு நினைக்கிறேன்; வீதியெங்கும் நல்ல ஜனநெருக்கடி, சரியான கூட்டம். சாலையில் வரிசையாக கார்கள் வந்துகொண்டிருந்தன. நாங்கள் சாலையை கடந்து அந்தபக்கம் செல்லவேண்டும். நாங்களும் பொறுமையாக நின்று சாலையை கடப்பதற்காக காத்து நின்றோம்.

எங்களுக்கு கொஞ்சதூரத்தில் சிலர் சாலையை கடப்பதற்காக சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் கடக்கும்நேரத்தில் நாமும் கடந்துவிடலாம் என்று சாலையை கடக்க எத்தனித்தோம். சாலையை கடந்து வந்துகொண்டிருக்கும்போது அதற்குள் ட்ராபிக் ஜாமாகிவிட்டது. நாங்கள் சாலையின் பாதியில் நின்றுகொண்டிருந்தோம். சரியாக மாட்டிக்கொண்டோம். பின்னாலும் வரமுடியாது. முன்னால் செல்லலாம் என்று நினைக்கும்போது ஒரு கார் வந்துகொண்டிருந்தது. காரில் உள்ள சவுதிக்கு எரிச்சலாகி என்னடா நம்மை போகவிடாதபடி கடந்து கொண்டிருக்கிறார்களே என்ற கோபம். அந்த கோபத்தில் எங்களை இடிக்கும் அளவுக்கு வந்தார்...

அக்பர், அக்ப‌ர்தம்பியைவிட நான் கொஞ்சம் பருமன். எனது மூளை சுறுசுறுப்பாகி எங்கே இடித்துவிடுவானோ என்று சிறிதும் தாமதிக்காமல் ஒரு நொடியில் திடீரென அந்த சவுதியின் காரை முந்தி அந்த பக்கம் கடகடவென ஓடி மறுபக்கம் கடந்து சென்றுவிட்டேன். அக்பரும் அக்பர்தம்பியும் இரண்டு கார்களுக்கு மத்தியில். ரொம்ப குறுகி நின்றுகொண்டிருந்தார்கள். ஒரு இம்மி அளவு அவர்கள் அசைந்தாலும் முன்னால் சென்ற கார் மோதியிருக்கும். நான் மட்டும் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தால் சட்னிதான்.

அப்பாடி.. ஆண்டவன் கிருபையினால் அன்று தப்பி பிழைத்தோம்.


இது உலகம்பூராவும் ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் சூழ்நிலை.. உண்டா இல்லையா சொல்லுங்கள் நண்பர்களே?...

இது மட்டுமல்லாமல் இங்கே நிலவும் தட்பவெப்பநிலை. ஆறு மாதம் கடும்வெயில் கடும் குளிர், பாலைவன மணற்காற்று, புயல்காற்று இப்படி இயற்கை சீற்றங்களுக்கும் தலைவணங்க வேண்டிய சூழ்நிலை..


ஆனால் நாம் இங்கு இருப்பது பற்றி நம்நாட்டில் உள்ளவர்கள் நினைக்கும் பிம்பமே வேற... குறிப்பாக நம்ம சொந்தக்காரங்களின் நினைப்பே தனிதான். ஆஹா வெளிநாட்டில் வேலை செய்யுறான்; கைநிறைய சம்பாதிக்கிறான்; ஏயப்பா வீடெல்லாம் கட்டிட்டான்.. வசதியா இருக்கான்; அவனுக்கென்ன கவலை.., இப்படி அவர்கள் அவங்க இஷ்டத்துக்கு மனக்கோட்டை கட்டி வச்சிருப்பாங்க.. ஆனா இங்க நாம கஷ்டப்படுறது நமக்கும் நம்ம குடும்பத்துக்கு மட்டும்தான் தெரியும்.

அதுமட்டுமல்லாமல் அவங்க நம்மிடம் ஏப்பா எனக்கு வரும்போது அத வாங்கிட்டுவா இத வாங்கிட்டுவா.. எனக்கு ஒரு விசாப்பாரு நானும் அங்க வரலாம்முன்னு நினைக்கிறேன்.. என்று நம் சக்திக்குமீறி கேட்கும்போது நம்மால் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாத சூழ்நிலையில் மௌனமாகதான் இருக்கவேண்டியுள்ளது.

ஒரு போன் பண்ணமுடியல.. அவங்க பிள்ளைக்கு பிறந்தநாளுன்னு வாழ்த்து சொல்ல போன் பண்ணுனது தப்பா போச்சி.. போன் பண்ணுன உடனே எப்பா எனக்கு விசா பாரேன்.. எனக்கு வரும்போது அந்த சாமான் வாங்கிட்டுவந்திரு.. நீ நல்லாருக்கியான்னு ஒரு வார்த்தை மனசுல இருந்து வரட்டுமே பாப்போம்.. நீ நல்லாரு நல்லாரு நல்லாரு... இந்த வார்த்தைய கேட்கும்போது வாழ்த்துறமாதிரி தெரியல.. வயித்தெரிச்சல்ல சொல்றமாதிரி இருக்கு.. எவ்வளவு மனசு கஷ்டமாகுன்னு ஏன் அவங்களுக்கு தெரியல.. ஏன்ப்பா இவ்வளவு நாளா போனே பண்ணல.. இப்படி நீங்களெல்லாம் சொன்னா எப்படி போன் பண்ண மனசு வரும்?... சொல்லுங்க பாப்போம் மனச தொட்டு..

வெளிநாட்டுக்கு வரணும் என்றகனவு நல்ல கனவுதான். ஆனால் நாம் சில சூழ்நிலைகளை சந்தித்தே ஆகவேண்டும்.

இந்தியாவிலேயே நல்ல வேலை நல்ல வருமானம் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் ஏன் இங்கே வந்து கஷ்டப்படணும். மனைவி மக்களுடன் குடும்பத்துடன் சந்தோசமாக இந்தியாவிலே வாழலாமே...


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

76 comments:

 1. ஸ்டார்ஜன்..அனைத்தும் உண்மை..இடுகையை படித்து முடித்ததும் மனக் கனத்தது:(((

  ReplyDelete
 2. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

  ReplyDelete
 3. //இந்தியாவிலேயே நல்ல வேலை நல்ல வருமானம் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் ஏன் இங்கே வந்து கஷ்டப்படணும். மனைவி மக்களுடன் குடும்பத்துடன் சந்தோசமாக இந்தியாவிலே வாழலாமே...//

  உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்திவிட்டீர்கள்.
  யோசிக்க வேண்டியவர்கள் யோசிக்கட்டும்.

  இங்கு நான் (நாங்கள்) இருக்கும் தாய்லாந்தில்
  வசிக்கும் மக்கள் மிக மென்மையானவர்கள்.
  வெளிநாட்டவர்களை மிக மதிப்பவர்கள்;
  மரியாதையாகப் பேசிப் பழகுவார்கள்.
  சிறு குறுகலான தெருவில் காரில் அவர்கள்
  வந்தால்கூட, முன் செல்பவர்கள் யாராயிருந்தாலும்
  ஹார்ன் அடிக்கவே மாட்டர்கள். நாமாக உணர்ந்து
  நகர்ந்தால்தான் காரில் நம்மை முந்திச் செல்வார்கள்.
  பாதையைக் கட்க்கும்முன், வரும் காரைப் பார்த்து,
  சிறிதே நாம் தலையைக் குனிந்துவிட்டு பின், சாலையில்
  நடக்க ஆரம்பித்தால், எவ்வளவு விரைவாக
  வரும் காரும் நின்றுவிடும்.

  பல உதாரணங்கள்
  கொடுக்கலாம். எனினும் இது போதும்.

  தாய்க்காரர்கள் அங்கு வசிக்கின்றனரா?

  ReplyDelete
 4. //அதுமட்டுமல்லாமல் அவங்க நம்மிடம் ஏப்பா எனக்கு வரும்போது அத வாங்கிட்டுவா இத வாங்கிட்டுவா.. எனக்கு ஒரு விசாப்பாரு நானும் அங்க வரலாம்முன்னு நினைக்கிறேன்.. என்று நம் சக்திக்குமீறி கேட்கும்போது நம்மால் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாத சூழ்நிலையில் மௌனமாகதான் இருக்கவேண்டியுள்ளது.// நல்லா சொன்னிங்க,இது ஒரு சிலருக்கு புரியமாட்டேங்குது.நம்மைப்போல் வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்குதான் தெரியும் நம்நிலை என்ன என்று.....

  ReplyDelete
 5. அடடா என்ன ஸ்டார்ஜன் இது?
  அவ்ளோ தூரத்துல இருந்துகிட்டு, நண்பர்களப்பாருங்க, மனச ரிலாக்ஸ் பண்ணுங்க, மீண்டு உற்சாகமா வாங்க. ஏதோ சுமை கொஞ்சம் இறக்கி வெச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன் (முழுசும் சொல்ல முடியலைன்னாலும்) விடுங்க, சிலதை கொடுத்தே சிலதை பெற முடியும்.

  இதற்கெல்லாம் என்ன ஆறுதல் கூறினாலும் துடைத்துப்போட்டு நீங்களாய் மீண்டு வர என் பிரார்த்தனைகள்.

  --

  Cheerup friend.

  ReplyDelete
 6. நானும் ரியாதில இருக்கும்போது இதையெல்லாம் பார்த்து நொந்து நூடுல்ஸானது உண்டு. எப்பா என்ன கிளைமேட் அது.

  மொத்தத்துல ஒரு மெழுகு வர்த்தின்னு சொல்லுங்க அது பொருத்தமா இருக்கும்.

  ReplyDelete
 7. நீங்க எங்க வேண்டுமானலும் இருக்கலாம்..

  தலைபை மட்டும் தான் படித்தேன்.பதிவை படித்துட்டு வாரேன் நாளை....

  ReplyDelete
 8. எங்க வீட்டு கதை முழுதும் எழுதி இருகேங்க....இதிலும் கதை நிறைய உண்டுங்க....வெறுத்து போச்சு....

  ReplyDelete
 9. வெளிநாட்டில் இருப்பது நம்ம தப்பு ஸ்டார்ஜன்,நம்மளை இங்கேயும் அங்கேயும் பந்தாடுவது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

  ReplyDelete
 10. போலவே சில ஓனர்களும் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் கஷ்டங்களும் பார்த்திருக்கிறேன்.

  உண்மை நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

  எல்லாம் அவன் கொடுக்கும் காசுக்காகதான்.

  ReplyDelete
 11. இவ்ளோ கஷ்டம் இருக்கா இதுல :(

  /அதுமட்டுமல்லாமல் கல்லை தூக்கி எறிவது, அடிப்பது, பெப்சி டின்னை நம்ம மேல தூக்கி வீசுவது, இரும்பு கம்பியால் தாக்குவது//

  கேக்கறதுக்கே பயமா இருக்கு..

  ReplyDelete
 12. அட இந்த விசயத்தை படிச்சிட்டு முதல்ல சொன்ன 150வது பதிவு விசயத்தையே மறந்துட்டேன் பாரு.

  வெற்றிகரமான 150வது இடுகைக்கும் வாழ்த்துகள் விரைவில் 1000 த்தை தொட வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 13. நண்பரே பாதித்தான் சொல்லியிருக்கீங்க. மீதி சொல்லவில்லை என நினைக்கின்றேன்.

  ஒரு நாள் கிழமை கிடையாது, நல்லது / கெட்டது கிடையாது. எல்லாம் விட்டமின் எம் கிடைக்கின்றது என்பதற்காக.

  இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாச்சு... வேறு வழி இப்போதைக்கு புரியவில்லை. ஓடற வரைக்கும் ஓடட்டும் என்று விட்டுவிட்டேன்.

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று.மனம் தளரவேணாம்.இன்னும் எழுதுங்கள்.பாரம் குறையும்.

  ReplyDelete
 15. 150 வது இடுகைக்கு வாழ்த்துகள் நண்பரே.

  ஒரு சிறு திருத்தம் :

  blog = வலைப்பூ / வலைப்பதிவு / பதிவு

  Post = இடுகை.

  உங்கள் பதிவில் இது 150வது இடுகை.
  (நன்றி : பழமை பேசி)

  ReplyDelete
 16. 150 வது இடுகைக்கு வாழ்த்துகள் நண்பரே.

  ReplyDelete
 17. 150 வது இடுகைக்கு வாழ்த்துகள். மனைவி, மக்கள் என வெளிநாட்டில் சென்று வாழ்ந்தாலும் மண் வாசனை என்னவோ செய்கிறதுதான். இக்கரை, அக்கரை எவருக்கு அக்கறை?

  ReplyDelete
 18. //ஹேமா said...
  வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று.மனம் தளரவேணாம்.இன்னும் எழுதுங்கள்.பாரம் குறையும்.
  April 27, 2010 11:02:00 PM GMT+03:00//

  மறுபடி சொல்லிகிறேன்.. 150 க்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. 150 க்கு வாழ்த்துக்கள். வெளிநாடுகளில் இருப்பதற்கு நாம் கொடுக்கும் விலை நண்பா! சம்பாதித்தோமா, தாய் பிள்ளையோடு சேர்ந்து ஊரில் செட்டில் ஆனோமா என இருக்கவேண்டும்!

  பிரபாகர்...

  ReplyDelete
 20. உண்மை ...உண்மை...
  150 க்கு வாழ்த்துகள் ...

  ReplyDelete
 21. நெகிழ்ச்சியான பதிவு.
  மகிழ்ச்சியான 150
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. உங்கள் ஆதங்கம் புரிகிறது ஸ்டார்ஜன்.
  150 - வது இடுகைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் நம்மக்கள் படும் துயரத்தை படித்தால் சங்கடமாகத்தான் இருக்கிறது.

  நான் ஒரு வருடம் சிங்கைக்கு அருகில் பத்தாம் (Battam) இந்தோனேசியா தீவில் வசித்தபோது என்வீட்டில் இனிமேல் கடிதம் எழுதவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஏனென்றால் அவற்றில் அவ்வளவு சோகம். எனவே உங்கள் வேதனை புரிகிறது.

  ஆனால் நீங்கள் சொல்வது அமெரிக்காவில் குடும்பத்தோடு வசதியுடனும், பணி இடங்களில் நல்ல மரியாதையுடனும் வாழும் நம் மக்களுக்கு அவ்வளவாக பொருந்தாது.

  இந்த பட்டறிவு நிச்சயம் உங்கள் உயர்வுக்கு பயன்படும். விரைவில் நீங்கள் விரும்பும் முன்னேற்றம் காண வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 24. 150க்கு வாழ்த்துக்கள். சரியா சொல்லியிருக்கீங்க.

  ReplyDelete
 25. நானும் வாழ்த்து சொல்ல மறந்துட்டேன்..150க்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 26. உங்கள் ஆதங்கங்களில் இங்கே கொட்டித்தீர்த்தவை இவைகள் என்றால் இன்னும் சொல்லாதவை எவ்வளவோ என்று எண்ணத்தோன்றுகிறது. வாசிக்கும்போது மனம் சங்கடப்படுகிறது; கனத்துப்போகிறது.

  ReplyDelete
 27. //குறிப்பாக நம்ம சொந்தக்காரங்களின் நினைப்பே தனிதான். //

  ரொம்ப ரொம்ப கரெக்ட்-ஆ சொல்லிருக்கீங்க..

  ஒய் ப்ளட் சேம் ப்ளட்...!! கதை தான்..

  பண மரம் நம்ம வீடு பின்னாடியே காய்ச்சு தொங்கறதா தான் நினைப்பு அவங்களுக்கு..

  ராகவன் அவங்க, சொன்ன மாதிரி.. ஒரு நல்ல நாளைக்கு எல்லாரையும் பாக்க முடியுமா?

  இல்ல யாருக்கும் உடம்பு முடியலன்ன பாக்க முடியுமா? ஹ்ம்ம்.. என்னத்த சொல்லறது..!

  ReplyDelete
 28. சத்தியமான உண்மைக‌ள் த‌லைவா

  ReplyDelete
 29. //நாம் இங்கு இருப்பது பற்றி நம்நாட்டில் உள்ளவர்கள் நினைக்கும் பிம்பமே வேற... குறிப்பாக நம்ம சொந்தக்காரங்களின் நினைப்பே தனிதான். ஆஹா வெளிநாட்டில் வேலை செய்யுறான்; கைநிறைய சம்பாதிக்கிறான்; ஏயப்பா வீடெல்லாம் கட்டிட்டான்.. வசதியா இருக்கான்; அவனுக்கென்ன கவலை.., இப்படி அவர்கள் அவங்க இஷ்டத்துக்கு மனக்கோட்டை கட்டி வச்சிருப்பாங்க.. ஆனா இங்க நாம கஷ்டப்படுறது நமக்கும் நம்ம குடும்பத்துக்கு மட்டும்தான் தெரியும்.//

  சரியாய் சொன்னிங்க.

  ReplyDelete
 30. 150‍க்கு‍.. வாழ்த்துக்க‌ள் ஸ்டார்ஜ‌ன்..... ந‌ம்ம‌ வாழ்க்கையை சொல்லியிருக்கீங்க‌.....

  ReplyDelete
 31. நிதர்சனத்தை சொல்லியிருக்கிறீர்கள் சேக்மைதீன்.

  150 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 32. நல்லா இருக்கு. இப்பதிவை வெளீயில் இருப்பவரும், வர நினைப்பவரும் படித்தால் நல்லது.

  ReplyDelete
 33. உங்க 150 -வது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
  உங்கள் பதிவுகள் மென்மேலும் தொடரட்டும்.. :)

  ReplyDelete
 34. ஸலாம்!

  என்ன சொல்றதுன்னு தெரியல. வெளிநாட்டில் இருந்தா அப்படியே உட்கார்ந்த இடத்துல காசு கொட்டுதுன்னு எல்லாரும் நினைக்கிறாங்க. எங்க எல்லார் மனதில் உள்ளதையும் அப்படியே கொட்டின மாதிரி இருக்கு

  ReplyDelete
 35. 150 ஆவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.

  சந்தர்ப்பம், சூழ்னிலை, பொருப்புகள் காரணமாக வெளிநாடுகளில் பொருள் ஈட்ட வரவேண்டியதாகி விடுகிறது.

  கடைசியில் காலமெல்லாம் இங்கேயே கழிந்து விடுகிறது.

  ReplyDelete
 36. நீங்க சொன்ன மாதிரியான சம்பவங்கள் இங்க துபாயில் மிக குறைவு.

  சொந்தகாரர்களை பற்றி நீங்கள் சொன்னது சிலவற்றை ஒத்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் பலர் கள்ளம் கபடமில்லாமல் பழகுவது ஆறுதல் அளிக்கிறது.

  150க்கு வாழ்த்துக்கள்

  :))

  ReplyDelete
 37. அரபிகள் காட்டரபிகள், இது போல் நடந்து கொள்வார்கள், இங்கு துபாயில் வண்டி எவ்வள்வு தூரத்திலிருந்து வேகமாக வந்தாலும். ரோடு தாண்டுபவர்கள் (அதுவும் பெண்ணாக இருந்தாள் ) உடனே பிரேக் போட்டு நின்றூ விடுவார்கள், மற்றவர்களுக்கும் அப்படி தான்.

  இதே ஃபுஜெரா, அல் அயில் அங்கெல்லாம் நீங்கள் சொல்வது போல் நடக்கும், நிரை ஆக்ஸிடெண்ட்கலும் நடக்குது,

  ReplyDelete
 38. உண்மை...

  "150க்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 39. நாம் இருக்கர இந்த 60 ‍ 70 வருசதுல, எவ்ல நலைக்குதான் நிம்மதி இல்லாம வாலுரது. its very difficult life here, people's are very PAAVAM. polution, politics, weather, power, infrastructure.. ellam worst. atleast remaining days i want to go and live peacefully. i know lot of disadvantages are there, but still i beleieve from next generation people will have good life. if you wanna stay in country like INDIA, you need MONEY also POWER.

  if you get a chance to settle down in a good country go ahead.

  this is my opinion.

  ReplyDelete
 40. இங்கிருந்து சொந்தங்களின் குரலை கேட்காலாம் என்று போன பண்ணுவீங்க ஆனால் அவர்கள் வரும் போது எனக்கு மொபைல், எனக்கு , எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று என்ன வோ காசு மரத்திலிருந்து பறித்து வருவது போல் கேட்பர்கள், இவர் பிரிந்து இருக்கிறாரே, சாப்பிட்டாரா, உடம்பு நல்ல இருக்கா, உடம்பு சரியில்லா த போது யார் கவனிப்பார்கள் இட்தெல்லாம் யாரும் நினைபப்தில்லை..

  ReplyDelete
 41. மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.

  அதுவும் அந்த விசா மேட்டர் - மிகவும் சரி. இதற்காகவே எந்த நண்பர்களுக்கும் ஃபோன் பண்ண முடியவில்லை.

  இந்தியாவில் இருப்பவர்கள் ஏதோ இங்கே வந்தால், விமானத்திலிருந்து இறங்கியவுடன் நமக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து, பின்னர் பல்லக்கில் தூக்கி வைத்து, பின்னர் மாட மாளிகையில் வைத்து நமக்கு விருந்து உபச்சாரம் நடப்பதாக நினைக்கின்றனர். இங்கே வந்தால்தான் தெரியும். இந்த சூழ்நிலையில் உடல் நலம் வேறு பாதிக்கப் படும்.

  ReplyDelete
 42. அடைக்கி வைத்தது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சொல்லிடுங்க பாஸ் .

  ReplyDelete
 43. இது நாம் ஏற்றுக் கொண்ட வாழ்க்கை. இதில் இருக்கும் கஷ்ட, நஷ்டங்களை நாம்தான் அனுபவிக்க வேண்டும். இவ்வளவு கஷ்டங்கள் இருப்பினும், தொடர்ந்து இங்கு இருக்கிறோம் என்றால், அதிலும் பல லாபங்கள் இருக்கப்போய்த்தானே?

  உறவினர் வருத்தங்கள் - இது இப்போ வெளிநாட்டினருக்கு மட்டுமல்ல; உள்நாட்டில் நல்ல நிலையில்/ பொறுப்பில் இருப்பவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.

  இன்னும் அங்கு சில சவூதிகளின் மனநிலை மாறவில்லை என்பது வருத்தமே. அமீரகம் நன்றாக இருக்கீறது இவ்விஷயத்தில்.

  ReplyDelete
 44. வெளிநாட்டில் வசிக்கும் பலரின் உள்ளக்குமுறலை அப்படியே சொல்லியிருக்கீங்க.

  நூற்றைம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 45. அருமையான பகிர்வு ஸ்டார்ஜன். அதிலும் வெளிநாட்டில் வாழும் எத்தனை எத்தனையோ உள்ளங்களில் உள்ள ஓசை உங்கே உங்கள் இடுகையில் பிரதிபலிக்கிறது. சொந்தக்காரங்களே இப்படித்தான். அவர்களின் கோரிக்கையை ஒதுக்கித் தள்ளிட்டு நீங்க முன்னேறுங்க.

  150 இடுகைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 46. 150 க்கு வாழ்த்துகள்.வெளி நாட்டில் இருப்பதில் பல இன்னல்களுக்கு மத்தியில் இது மாதிரி இன்னல்களும் இருக்க தான் செய்கிறது.சரியாக தான் சொல்லி இருக்கிங்க.

  ReplyDelete
 47. என்ன சொல்ல நண்பரே ? உங்கள் வேதனை எங்களுக்கு புரிகிறது. மற்றவர்களை பற்றிய கவலையை விடுங்கள். அவர்களை ஒதுக்கி தள்ளுங்கள். 150 க்கு வாழ்த்துக்கள். மேலும்வளருங்கள்

  ReplyDelete
 48. ////அதேமாதிரி வெளிநாட்டுக்காரனை இவர்கள் நடத்துவதே தனி அழகுதான். கேவலமாக நினைப்பது, ஆங் (இந்தியர்கள்) இவனெல்லாம் ஏழை, இளக்காரம் என்ற நினைப்பு இவர்களுக்கு. அதுமட்டுமல்லாமல் கல்லை தூக்கி எறிவது, அடிப்பது, பெப்சி டின்னை நம்ம மேல தூக்கி வீசுவது, இரும்பு கம்பியால் தாக்குவது.. இப்படி எண்ணற்ற துன்பங்கள் கொடுக்கின்றனர்//////  என்ன செய்வது நண்பரே இங்கு நடப்பதை எல்லாம் சொன்னாலும் . இன்னும் வெளிநாடு என்கின்ற மோகம் இதையெல்லாம் மறைத்து விடுகிறது . பகிர்வுக்கு நன்றி !

  ReplyDelete
 49. ஆதங்கத்தை இறக்கி வைத்திருக்கிறீர்கள்.

  150-வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்! தொடருங்கள்.

  ReplyDelete
 50. அருமையான பதிவு. வெளிநாடு வாழ் இந்தியர்களின் மன ஆதங்கத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளது இந்த பதிவு. நண்பருக்கு நன்றி.

  ReplyDelete
 51. //
  ஏன் கையை ஏந்தவேண்டும் அயல்நாட்டில்.. என்ற பாட்டு கேட்க மட்டுமே உதவும். நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராது...//


  Ancient days, other kingdons conquered india, came here and took away our wealth, Now Indians going all across the globe and bringing them back to india, Ippadi oru quote engaio padichen, optimism and its true, ellam naama manasula nenaikuradhula dhaan iruku, naama avungala depend panni irukom nu nenaichi naamale inferiora feel pandratha vida avungala nammala depend panni irukkaanga nu nenaichi paarunga..

  ReplyDelete
 52. //இதே நம்நாடு என்றால் வெளிநாட்டு பயணிகளுக்கு நாம் தரும்மரியாதையே தனிதான். வெளிநாட்டுகாரங்களுக்குதான் முதல் முன்னுரிமை கிடைக்கும். ஆனால் இங்கே அப்படியே நிலைமை தலைகீழ். எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் தன்நாட்டுக்காரங்களுக்குதான் முதல் முன்னுரிமை கொடுப்பார்கள். அவங்க நாட்டு குடிமகனுக்கு ஒருசட்டம்; வெளிநாட்டுக்காரனுக்கு ஒரு சட்டம்.

  அதேமாதிரி வெளிநாட்டுக்காரனை இவர்கள் நடத்துவதே தனி அழகுதான். கேவலமாக நினைப்பது, ஆங் (இந்தியர்கள்) இவனெல்லாம் ஏழை, இளக்காரம் என்ற நினைப்பு இவர்களுக்கு.//  Neenga sollradhu oru paadhi venum na unmai, adiyen irupaadhu Europe la, Velinaatavar namma oorula nadatha paduradha vida, indha makkal nammavar'a inga mariyadhaiyoda dhaan nadathuraanga.. Central la irundhu Egmore rialway sation poradhuku 300rs ketta auto drivera naan paarthu irukken, bangalore la 100rsa vaangittu chillarai kudukkaame autova eduthuttu vegma pona autokaarangala paarthu riukken,. Inga nammavar(asians) ku virodhi na innoru Asian dhaan.. indians and Pakistanis are treated with good respect,. Inga attuliam pandradhu Srilankans and Bangaladeshis dhaan.. avungala paartha dhaan makkal konjam baiyapaduraanga.

  ReplyDelete
 53. 150 க்கு வாழ்த்துக்கள். அருமையான பதிவு

  ReplyDelete
 54. தங்களின் 150-ஆவது இடுகைக்காக,
  தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 55. vanakkam anna unmaiyana vishayam konchamaa sollirunthalum unmaiyaiye sollirinthinga naanum athigamagave parthirukken padaippukku nanri ithai paarthavathu sila makkal thirunthattum

  ReplyDelete
 56. வருகைதந்து கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நன்றி... உங்கள் ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 57. நல்ல கட்டுரை.

  எருது புண்ணை காக்கை கொத்தி கொத்தி காக்கை உணவாக்கிக் கொள்ளும் என்பார்கள். அது போன்று தான் வெளிநாட்டிற்கு வேலை செய்யச் சென்றவர்கள் பற்றிய பொதுவான பேச்சு.

  ReplyDelete
 58. இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்.நானும் இந்த மாதிரி அனுபவங்களை சந்தித்தவன்தான் நண்பரே! அதுவும் இப்போதெல்லாம் மிகவும் கேவலமான சம்பளம். அதை இங்கேயே சம்பாதிக்கலாம்!

  ReplyDelete
 59. போன் பண்ணுன உடனே எப்பா எனக்கு விசா பாரேன்.. எனக்கு வரும்போது அந்த சாமான் வாங்கிட்டுவந்திரு.. நீ நல்லாருக்கியான்னு ஒரு வார்த்தை மனசுல இருந்து வரட்டுமே பாப்போம்.. நீ நல்லாரு நல்லாரு நல்லாரு... இந்த வார்த்தைய கேட்கும்போது வாழ்த்துறமாதிரி தெரியல.. வயித்தெரிச்சல்ல சொல்றமாதிரி இருக்கு.. எவ்வளவு மனசு கஷ்டமாகுன்னு ஏன் அவங்களுக்கு தெரியல.. ஏன்ப்பா இவ்வளவு நாளா போனே பண்ணல.. இப்படி நீங்களெல்லாம் சொன்னா எப்படி போன் பண்ண மனசு வரும்?... சொல்லுங்க பாப்போம் மனச தொட்டு..


  REally Very Good.......
  Manathai neenaithu kaya potu vitergal....
  Anbudan Haroon

  ReplyDelete
 60. ஸ்டார்ஜன்...மனசைக்காயப் படுத்துறவங்க எங்கேயும்தான் இருக்கங்க ...வருந்தாதீங்க அவர்களும் புரிந்து கொள்ளும் காலம் வரும்

  ReplyDelete
 61. 150 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 62. பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html

  ReplyDelete
 63. வாழ்த்துக்கள். நல்ல பதிவு.
  முதல் வருகையாக வந்ததும் வாழ்த்தோடு வந்து புகுந்துட்டேன்.
  ஒன்று மட்டும் நிச்சய்ம். நம்ம குழந்தைகளுக்கு தான் கஷடம். அதுக்களுக்கு ஒன்றும் புரியாமல் வாழுகிறது. இந்தியா கலாசாரமும்,அந்நிய நாட்டு கலாசாரமும் சேர்ந்து பாடாபடுத்துகிறது.
  என்ன செய்ய எல்லாம் ஆண்டவன் விட்ட வழி என்று தான் தொடருகிறோம் இங்கு அமெரிக்காவில் வாழும் நம் மக்கள்.

  ReplyDelete
 64. //ஆனால் நீங்கள் சொல்வது அமெரிக்காவில் குடும்பத்தோடு வசதியுடனும், பணி இடங்களில் நல்ல மரியாதையுடனும் வாழும் நம் மக்களுக்கு அவ்வளவாக பொருந்தாது.
  //

  இது ஓரளவிற்க்கு சரியே. அதனாலேயே இந்தியர் மட்டுமின்றி, மற்ற நாட்டினரும் (ஜெர்மன், ஜப்பான் உட்பட) தாய் நாடு திரும்ப யோசிக்கின்றனர்.

  ReplyDelete
 65. ஸ்டார்ஜ‌ன்...150க்கு‍ வாழ்த்துக்க‌ள். உண்மையாய் எழுதி உள்ளீர்கள். உணர முடிகிறது. வலிக்கிறது

  ReplyDelete
 66. வாங்க கோவி அண்ணே @ இப்படி ஒரு பழமொழி இருக்கா.. நல்லாத்தான் இருக்கு.. நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்.

  வாங்க எம்.ஞானசேகரன் @ நன்றி சார். அடுத்து எழுதிருவோம்.

  வாங்க ஹாரூன் @ நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்

  வாங்க தேனக்கா @ நன்றி அக்கா கருத்துக்கும் வருகைக்கும்

  ReplyDelete
 67. வாங்க ஸ்ரீராம். @ நன்றி வாழ்த்துகளுக்கு

  வாங்க பனித்துளி சங்கர் @ நன்றி நண்பா

  வாங்க விஜி மேடம் @ நீங்க சொன்னது உண்மைதான்; வெளிநாட்டுல இருக்கிறவங்கபாடு கஷ்டம்தான். நன்றி முதல்வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்..

  வாங்க ராமா @ சரிதான்.. நன்றி கருத்துகளுக்கும் வருகைக்கும்

  வாங்க மோகன்குமார் @ நன்றி வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும்... ரொம்ப நன்றி.

  ReplyDelete
 68. ஆனால் நாம் இங்கு இருப்பது பற்றி நம்நாட்டில் உள்ளவர்கள் நினைக்கும் பிம்பமே வேற... குறிப்பாக நம்ம சொந்தக்காரங்களின் நினைப்பே தனிதான். ஆஹா வெளிநாட்டில் வேலை செய்யுறான்; கைநிறைய சம்பாதிக்கிறான்; ஏயப்பா வீடெல்லாம் கட்டிட்டான்.. வசதியா இருக்கான்; அவனுக்கென்ன கவலை.., இப்படி அவர்கள் அவங்க இஷ்டத்துக்கு மனக்கோட்டை கட்டி வச்சிருப்பாங்க.. ஆனா இங்க நாம கஷ்டப்படுறது நமக்கும் நம்ம குடும்பத்துக்கு மட்டும்தான் தெரியும்.


  ..... அருமையான எழுத்து நடையில் சரியாக விளக்கி இருக்கிறீர்கள்.
  சொல்லி இருக்கும் விஷயங்கள் எல்லாம், கவனத்துக்கு உரியவை.

  ReplyDelete
 69. ராஜன், நல்ல பதிவு. நானும் ரியாதில் இடை கண்டிருக்கிறேன்

  ReplyDelete
 70. கேட்கவே கஷ்டமாத்தாங்க இருக்கு.... இந்த வெளிமோகம் உடைந்தால் மோட்சம் கிடைக்கும்....

  மனதை கனக்கச்செய்த அனுபவ இடுகை....

  ReplyDelete
 71. உண்மையில் உங்களை போன்றவர்களை நான் மெழுகுவத்தியாகதான் பார்க்கிறேன். தான் எரிந்தாலும் பிறருக்கு வெளிச்சம் கொடுக்கும் அந்த மெழுகுவர்த்தியும் நீங்களும் ஒன்றுதான்.................

  ஒருமுறை Saudia விமானத்தில் பயணம் செய்து (Paris>Riyadh>Chennai) ரியாத் ஏர்போர்ட்டில் அரபிகளின் கேவலமான அனுகுமுறையால் எனக்கும் அங்குள்ள இந்தியர்களின் நிலமை புரிகின்றது. இத்தனைக்கும் நான் ஒரு "transit" பயணி...

  அந்த வகையில் என்னைபோன்று ஐரோப்பிய வாழ் இந்தியர்கள் இங்கு வாழ புண்னியம் தான் செய்திருக்கின்றோம்.

  150 வது இடிகைக்கு வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்....

  ReplyDelete
 72. நண்பரே நீங்கள் சொல்லிருப்பது அத்தனையும் உண்மை. இந்தியா என்றாலே இவர்களுக்கு இருக்கும் எண்ணம் என்றும் மாறப்போவதில்லை. நம் நாட்டின் சமீப கால முன்னேறங்கள், சாதனைகள் கூட இவர்களுக்குத் தெரிவதில்லை. இந்தியர்கள் என்றாலே பணத்துக்காக எதுவும் செய்வார்கள் என்ற எண்ணம், நன்கு படித்து உயரிய வேலையில் இருப்பவர்களைக்கூட தங்களுக்கு சேவகம் செய்ய வந்தத அடிமயாகவே நினைக்கும் மனப்பாங்கு இவர்களுடையது.

  நானும் எல்லாரையும் கேட்டுக்கொள்கிறேன். நல்ல வேலையில் இருப்பவர்கள் அதைவிட்டு விட்டு, அரபு நாடுகளுக்கு ஒருபோதும் செல்லாதீர்கள். புரபஷனல்களுக்கோ, திறமைசாலிகளுக்கோ கொஞ்சம் கூட லாயக்கில்லாத நாடுகள் இவை. பணம் மட்டுமே உங்கள் நோக்கம் மற்றபடி, கேரியர் முன்னேற்றம், வேலையில் திருப்தி போன்றவற்றை தேவையில்லை என்றால் மட்டுமே அரபு நாடுகளைப் பற்றி யோசிக்கவும்!

  ReplyDelete
 73. 150வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 74. மனிதனை மதம்/நிறம்/மொழி தாண்டி மனிதனாக மதிக்கும் அமெரிக்காவில் வாழ்வதற்காக பெருமைப்படுகிறேன்.

  வாழ்த்துகள் 150 க்கு

  ReplyDelete
 75. உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.

  http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_22.html

  ReplyDelete
 76. 7:29 PM
  நம்மை வாழவைத்த அரபுநாடுகள் | புதுமனைkpm
  puthumanaikpm.blogspot.c

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்