Pages

Monday, April 5, 2010

ஐயா சாமிகளா.. ஒரு நிமிஷம்

அன்புமிக்க நண்பர்களே!!

கடந்த 2 நாட்களில் என் வலைப்பூவுக்கு வந்த அனைவரும் பார்த்திருப்பீங்க சில மாற்றங்களை. ஆமா டெம்ப்ளேட் மட்டும் மாற்றம் இல்லை. கருத்துரை மட்டுறுத்தலையும் கவனிச்சிங்களா.. ஏன் இந்த மாற்றம்?. வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருஷத்துக்கு மேலாகுது, இதுநாள் வரைக்கும் மட்டுறுத்தலை நான் வைத்ததுகிடையாது.

இதுக்கு காரணம் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் என் வலைப்பூவில் சில விஷமிகள் விஷத்தை கக்கி சென்றுள்ளனர். நான் வெள்ளியன்று விருது கொடுத்து வாழ்த்துக்கள் பதிவிட்டிருந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த பதிவில் சில கயவர்கள் கெட்டவார்த்தைகளால் கருத்துரை இட்டுவிட்டு சென்றிருக்கின்ற‌னர்.

சொல்லத்தகாத அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் கருத்து போட்டிருந்தனர்.

//!#$^^*&()_++++.... டேய் நாயே... எங்கபோனாலும் உன்னோட மூஞ்சிதான் தெரியுது. எங்கே போனாலும் @!#$$%%^^&&*~+++... வந்திருவியா....@#%$%^&&&*#&_>:::$%*_!#%$%&+++..../// இதில் நான் சொல்லாத பல வார்த்தைகள் அடங்கியுள்ளன.

இதை நான் கவனிக்கவில்லை. சனிக்கிழமை நண்பர் சரவணகுமார் போன் செய்து உங்க பிளாக்ல ஒரு மோசமான கமெண்ட் வந்திருக்கு. அதை உடனே டெலிட் பண்ணுங்க, சீக்கிரம்.., யாரும் பார்த்திடபோறாங்க. என்று சொன்னார். நான் அதை பார்த்ததும் அதிர்ந்து போயிவிட்டேன். ரொம்ப வருத்தமாக இருந்தது.

ஏன் இப்படி எல்லாம் எழுதி என்பெயரைக் கெடுக்க சதிவேலை செய்கின்றனர்?. என் வலைப்பூ லேடீஸ், பெரியவர்கள், நண்பர்கள், என்று எல்லோரும் வந்துபோகக்கூடிய வலைப்பக்கம். இப்படி எழுதவேண்டிய அவசியமென்ன?.

இந்த கமெண்ட் போலி பயனர் பெயரில் வந்துள்ளது.
இந்த கமெண்ட் எழுதியிருந்தவர் எழுதி இருந்த கருத்தை பார்க்கும்போது, என்னை பலநாள்கள் கவனித்து இருப்பார்போல. புதிதாக என்பக்கத்துக்கு வர‌கூடியவரும் அல்ல.

நான் ஏதோ என் சிந்தனைக்குட்பட்ட கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒன்றும் தப்பாக அல்லது தனிப்பட்ட எவரையும் தாக்கி, அல்லது கருத்துவேறுபாடு கொண்ட விஷயங்களை பற்றி எழுதவில்லை. இதனை நீங்கள் அனைவருமே அறிவீர்கள்.

எனக்கு பிடித்தவர்களுக்கு அவர்கள் பக்கங்களுக்கு சென்று கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். நான் யாரையும் கேட்டு எழுத‌ வேண்டிய அவசியமில்லை. எல்லாமே என் சொந்தக்கருத்துக்கள்.

என்ன நண்பர்களே!!.. நான் சொல்றது சரிதானே..

என் எழுத்துக்களில் எதாவது குறையிருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.

நீங்களும் உங்கள் வலைப்பக்கங்களில் கருத்துரை மட்டுறுத்தலை சேர்த்துகொள்ளுங்கள்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

44 comments:

 1. தம்பி,

  இதற்கெல்லாம் கவலைப்படாமல் எழுது, நாய்கள் காலைத் தூக்கும் இடம் பற்றி முடிவு செய்து கொள்வதில்லை

  ReplyDelete
 2. மெயில் பாலோ அப் இருந்ததால் எனக்கும் வந்தது.

  ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கமெண்ட் மாடுரேஷன் வைத்து இவர்களை புறக்கணிப்பதுதான் நல்லது.

  ReplyDelete
 3. படிக்கவே மிகவும் வருத்தமாக இருக்கிறதண்ணே! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தொல்லைகள் போலிருக்கிறது. உங்களுக்கு வசவு என்றால், ஒருவர் தொடர்ந்து என்னை ஏளனம் செய்து கொண்டிருக்கிறார். நானும் இப்போது மட்டுறுத்தலில் தான் கருத்துக்களை வைத்திருக்கிறேன். உங்கள் மனவலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது! God is great!

  ReplyDelete
 4. கவலை படாமல்
  எழுதுங்கள் நண்பா, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. எங்க சங்கத்து ஆள அடிச்சது எவன்டா (சாரிங்க அனானி ஒரு ப்ளோல டா போட்டுட்டேன்)

  நீ கவலைப்படாதே தல.

  இப்படி ஒரு கமெண்ட் வந்ததையே நீ சமாளிச்சிட்டு எழுதுறன்னா இனி யாரு எவ்வளவு அடிச்சாலும் நீ தாங்குவே.

  நல்லது நினைக்கியிலே கெட்டது தானா விலகிடும்.

  cooool

  ReplyDelete
 6. கவலைபடாதே சகா. பக்கபலமாய் நாங்கள் இருக்கும்போது........

  ReplyDelete
 7. கண்டிக்கப் பட வேண்டிய ஒன்று. இது போன்ற கருத்துக்களைப் புறம் தளளி உற்சாகமாகச் செயல் படுங்கள். ஆறுதல்களும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 8. மன நலம் பாதித்தவர்கள்...

  ReplyDelete
 9. ்நீங்க பிரபலமாயிட்டீங்க!

  ReplyDelete
 10. எங்க போனாலும் இப்படி ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

  ReplyDelete
 11. //எங்க சங்கத்து ஆள அடிச்சது எவன்டா //

  அதானே...எவன்டா அது...பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்...எவன்டா எங்க குருவுக்கு அசிங்க அசிங்கமா கமெண்ட் போடறது......

  குரு இந்தமாதிரி கமெண்ட்லாம் ஒரு மேட்டரே கிடையாது....
  எனக்கு என்னமோ இந்த கண்ணா மேலத்தான் டவுட்டா இருக்கு....

  ReplyDelete
 12. குரு...ஆமா... அதுஏன் போட்டோவுல பர்சை பறிகொடுத்தா மாதிரியே இருக்கீங்க...கொஞ்சம் சிரிச்ச முகத்ததோட ஒரு போட்டோவைத்தான் போட்டுவுடறது....ம்க்கும்..

  ReplyDelete
 13. நீங்க‌ க‌வ‌லைப்ப‌டாம‌ல் எழுதுங்க‌ ஸ்டார்ஜ‌ன். க‌மெண்ட் மாடுரேச‌ன் வைத்திருப்ப‌து ந‌ல்ல‌து..

  ReplyDelete
 14. கவலைப்படாமல் தொடருங்கள் நண்பா .

  ReplyDelete
 15. என்க்கும் இந்த மாதிரி கமெண்ட் வந்தது..சில பதிவுகள் வேகமா டைப் செய்து தவறுகளை பார்காமல் வெளி இட்டு இருக்கிறேன்.அப்புறம் நாஞ்சில் பிரதாப் தான் தமிழில் டைப் பண்னும் முறை சொன்னார்.

  பதிவுலகம் யாருக்கு சொந்தம் ...

  ஏன் தேவை இல்லாத கமெண்ட் அனுப்பி மனதை நோகடிக்கிறாங்க.. அதில் அவர்களுக்கு என்ன சந்தோசம்....?

  ReplyDelete
 16. கண்டிக்கப் பட வேண்டிய ஒன்று

  ReplyDelete
 17. இந்ததடைக்கற்கள் எல்லாவற்றையும் படிகற்களாக மாற்றி இன்னும் உயரே,உயரே..எறுங்கள்,ஸ்டார்ஜன்.நிச்சயம் சிகரத்தை எட்டுவீர்கள்

  ReplyDelete
 18. பிரபலங்களின் வரிசையில் உங்கள் பெயரும் இணைக்கப்பட்டு விட்டது. துணிந்து தொடர்ந்து செல்லுங்கள்.

  ReplyDelete
 19. இதெல்லாம் கண்டுக்காமப் போயிட்டேருக்கணும்...

  ReplyDelete
 20. கவலைப்படாமல் எழுதுங்கள் சகோ!! இதெல்லாம் ஜூஜூபி மேட்டர்ர்...

  ReplyDelete
 21. வணக்கம் .....நண்பரே ..உங்கள் முன்னேற்றத்தில் எரிச்சல் பொறாமையாக் இருக்கலாம் ஒவ்வொரு அடியும் ( தப்பும்) உங்களை மேம்படுத்தும் , படிகள்.வலிகளை மேற்கொண்டு முன்னேற பாருங்கள். நட்புடன் சகோதரி ..நிலா

  ReplyDelete
 22. vidunga starjan.,comment moderation enable pannunga. athuthan ithuku oru nalla vazhi

  ReplyDelete
 23. நண்பரே நானும் modarete வைத்ததற்கு இது தான் காரணம். விடுங்கள் அந்த நாய்களால் வேறென்ன பண்ண முடியும். மலையை பார்த்து குறைத்து கொண்டு தானே இருக்கும் அதனால் அந்த மலைக்கு என்ன பாதிப்பு நண்பா. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்.

  ReplyDelete
 24. varuthappadathingka STARJAN...comments moderation potutingkala ....ini enna

  ReplyDelete
 25. !#$^^*&()_++++.... டேய் நாயே... எங்கபோனாலும் உன்னோட மூஞ்சிதான் தெரியுது. எங்கே போனாலும் @!#$$%%^^&&*~+++... வந்திருவியா....@#%$%^&&&*#&_>:::$%*_!#%$%&+++..../// இதில் நான் சொல்லாத பல வார்த்தைகள் அடங்கியுள்ளன

  ஆமா, வேற என்ன வார்த்தைகள்??? hehe... :) take it easy

  ReplyDelete
 26. //நாஞ்சில் பிரதாப் said...

  எனக்கு என்னமோ இந்த கண்ணா மேலத்தான் டவுட்டா இருக்கு...//

  வே.. சவத்தமூதி... போறபோக்குல ஏம்லே இப்பிடி கொளுத்தி போட்டு போற....

  குரு.. முதல்ல இவன நல்லா முட்டிக்கு முட்டி தட்டி விசாரி.......

  ReplyDelete
 27. மனதிற்கு கவலையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 28. கடந்து செல்லுங்கள் ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 29. நண்பர் ஸ்டார்ஜன் எனக்கும் ஒரு நாதாரிப்பயல் இப்படிதான் போட்டிருக்கு,பொறாமை பிடித்தவர்கள்,இதுக்கு போய் ஃபீல் பண்ணாதீர்கள்,நண்பரே.உங்க சேவை தொடரட்டும்,போட்டோ மாற்ற தேவையில்லை,எனபதே என் கருத்து,

  ReplyDelete
 30. நண்பரே.. என்னையும் திட்டிப் பின்னூட்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. பின்னூட்ட மட்டறுப்பு வைப்பது தான் சரி!! மற்றபடி.. தொடருங்கள்!!

  ReplyDelete
 31. இதெற்கெல்லாம் கவலைப்படாதீர்கள் சேக். தொடர்ந்து வழக்கம்போல உற்சாகமாக எழுதுங்கள்.

  ReplyDelete
 32. நண்பரே, இவையெல்லாம் தடைக்கற்கற்கள்
  என்று நினைக்க வேண்டாம்; படிக்கற்கள்
  என்றெண்ணி, ஏறிப் போய்க் கொண்டெயிருங்கள்.

  ReplyDelete
 33. அவர் (?) குரூர புத்தி கொண்டவர்.

  விட்டுத் தள்ளுங்கள்.
  வெற்றிப்பாதையில் செல்லுங்கள்.

  ReplyDelete
 34. பிரபல பதிவராயிட்டா இதெல்லாம் கண்டுக்கக்கூடாது.மாடுரேஷன் வெச்சிடுங்க.

  ReplyDelete
 35. இது ரொம்ப வருந்ததக்க விஷயம்.. கவலைப்படாதீங்க ஸ்டார்ஜன்.

  உங்கபேர்லே ஸ்டார் இருக்கு; அதனாலே இன்னும் ஜொலிப்பீங்க.

  ReplyDelete
 36. ஸ்டார்ஜன். கவலைவேண்டாம்.., இது வருந்ததக்க விஷயம்.

  கண்டுக்காமல் முன்னேறுங்கள்.

  ReplyDelete
 37. வருகைதந்து ஆதரவு கொடுத்து ஆறுதல் சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  நன்றி நண்பர்களே!! உங்கள் ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 38. காய்த்த மரம் கல்லடி படத்தான் செய்யும். கல்மனம் படைத்தோருக்கும் நாம் கனியையே கொடுப்போம்.

  ReplyDelete
 39. இதுகெல்லாம் போய் வருத்தபடலாமா சகோதரா எழுதவந்துவிட்டோம் எதையும் எதிர்கொள்ளுவோம்.

  முன்னேறிச்செல்ல இது முட்டுக்கட்டயல்ல
  முட்டிமோதிவிட்டு
  முன்னுக்குவர முன்னுரை வாழ்த்து
  ஆகவே

  தொடர்ந்து எழுதி தொல்லைகளை நீங்குங்கள்..

  ReplyDelete
 40. நாளைய ராஜாவே
  நரிகளை கண்டு...
  அஞ்சாதே-நான்
  இருக்கிறேன் -உன்னுடன்
  ஆயிரத்தில் ஒருவனாய்....

  ReplyDelete
 41. கவலை படாமல் எழுதுங்கள் நண்பா,

  உங்கள் மனவலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது!

  இவையெல்லாம் படிக்கற்கள்
  என்றெண்ணி கடந்து செல்லுங்கள்...

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 42. தம்பி,
  இதெல்லாத்தையும் சகஜமா எடுத்துக்கனும். காரணம் இதெல்லாம் சில மனிதர்களின் உள் மனத்தில் புதைந்து கிடக்கும் வக்கிரமான எண்ணங்களின் வெளிப்பாடுதான். தொடர்ந்து எழுதுங்கள்!

  ReplyDelete
 43. ஸ்டார்ஜன் இதெல்லாம் சகஜம்,கொஞ்சம் நாம பிரகாசமா தெரிய ஆரம்பித்தால் வந்தது வினை,இப்படி கூட இருப்பாங்களா?என்ன?விட்டுத்தள்ளுங்கள்.

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்