காட்டுக்குள் சுள்ளிபொறுக்க சென்ற ஒரு சிறுவனை பாம்பு கடித்து விடுகிறது.
இந்த சம்பவத்துக்கு, அந்த படத்தில் சொல்லப்பட்ட காட்சியினை இங்கே விவரிக்கிறேன்.
அதாவது ஒரு சிறுவன் தன் நண்பர்களுடன் காட்டுக்குள் சுள்ளிபொறுக்க செல்கிறான். எங்குமே சரியான விறகு குச்சிகள் கிடைக்கவில்லை. அவன் அங்கிங்கு தேடி அலைகிறான். ஒரு இடத்தில் மந்திர தந்திரத்தால் ஒரு பாம்பு புத்தை சுற்றி செடி புட்புதர் திடிரென முளைக்கிறது. அந்த இடத்துக்கு வரும் சிறுவன் மகிழ்ச்சியடைந்து பாம்புபுத்துக்கு அருகில் சென்று குச்சி ஒடிக்கிறான். அந்த நேரம்பார்த்து பாம்பு கடித்துவிடுகிறது.
உடனே அவன் அய்யோ அம்மா அப்பா என்று சத்தமிட்டு கதறுகிறான். சத்தம் கேட்டு அவன்கூட சென்றவர்கள் வந்து பார்க்கும்போது பாம்பு கடித்து வலியால் துடிப்பதை பார்க்கிறார்கள். டேய் என்னடா ஆச்சி.. என்னாச்சி என்னாச்சி.. சொல்லுடா என்று கேட்கிறார்கள். வலியால் அவனால் பேசமுடியாததால் அவன் கையை காட்டுகிறான். கை காட்டும் திசையில் ஒரு பாம்பு படமெடுத்து நிற்கிறது. இவர்கள் அந்த காட்சியை கண்டு உடனே அந்த பையனை அதே இடத்தில் போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள்.
தன் மகனை காணாது இவர்கள் மட்டும் வருவதை கண்ட அந்த பையனின் தாய் கேட்கிறார் " எங்கடா என் பையனை" . சிறிது நேர மௌனத்துக்கு பின்னர் அவர்களில் ஒருவன் உங்க பையனை பாம்பு கடித்துவிட்டது. என்று சொல்கிறான். பாம்பு கடிபட்ட அந்த பையனின் அம்மா ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்கிறார். உடனே அவன் தாய் அந்த பணக்கார எஜமானி அம்மாவிடம் என் பையனை பாம்பு கடித்துவிட்டது. நான் போக வேண்டும் என்று கேட்கிறார். கொடுமைக்கார எஜமானி அதெல்லாம் முடியாது.. நீ போகக்கூடாது.. இங்குள்ள வேலையெல்லாம் யார் செய்வா.. முடியவேமுடியாது என்று கர்ஜிக்கிறாள். இந்தம்மா கெஞ்சுகிறார். இதனை பார்த்த எஜமானியின் கணவன் பாவம் அவங்க போகட்டும் என்று சொல்கிறார். அதெல்லாம் முடியாது என்று மறுக்கிறாள் எஜமானி. அவர் வலுக்கட்டாயமாக பாம்பு கடித்த பையனின் அம்மாவை அனுப்பிவிடுகிறார்.
பாம்பு கடித்த இடத்துக்குவரும் தாய் மகனை பார்த்து அய்யோ என் மகனே என்னடா ஆச்சி.. என்று கேட்கிறார். உடனே அந்த பையன் அம்மா என்னை பாம்பு கடித்து விட்டது என்று பேசமுடியாமல் மெதுவாக சொல்கிறான். அய்யோ என்ன செய்வேன் என் ஒரே மகனை பாம்பு கடித்துவிட்டதே இனி நான் என்ன செய்வேன். என்று அழுது அரற்றுகிறாள். இதற்குள் அந்த பையனின் வாயிலிருந்து நுரைதள்ளி மெல்ல மெல்ல அந்த பையன் இறந்துபோகிறான்.
விதியினால் அந்த பையன் பாம்பு கடித்து இறந்து போய்விட்டானாம். பின்னர் அந்த தாய் அழுதுபுலம்பி சாமியிடம் மன்றாடி பாட்டுப்பாடி அழுதுஅழுது மயங்கி விழுகிறாள். உடனே சாமியிடமிருந்து அருள் பெற்று அந்த பையன் மீண்டும் உயிர்த்தெழும்புகிறான்.
இதுதான் அந்த படத்தில் சொல்லப்பட்ட ஒரு காட்சி.
இந்த படக்காட்சியில் எத்தனை எத்தனை லாஜிக்மீறல்கள். எவ்வளவு மூடநம்பிக்கைகள்.
பாம்பு கடிபட்ட அந்த பையன்மேல் எந்தவிதமான குறையே இல்லை. முதலில் பாம்புபுத்தை சுற்றி ஒரே நிமிடத்தில் புதர் வளர்வது என்பது சாத்தியமானதா சொல்லுங்கள். ஒரு நிமிசத்தில் புதர் வளர்வது அதிசயத்திலும் அதிசயம். எந்த உலகத்தில் நடக்கும்?. பையன் அறியாவயசு அவன் ஆர்வத்தில் பாம்புபுத்துக்கு அருகில் சென்று குச்சி ஒடிக்கும்போது பாம்பு கடித்துவிடுகிறது.
அடுத்தது அவன்கூட வந்தசிறுவர்கள் பாம்பு கடிபட்டவனை எந்த முதலுதவியும் செய்யாமல் சென்றுவிடுகிறார்கள். ஏன் அந்த பையனுக்கு மருந்து மூலீகைகளை பறித்து கட்டு போட்டு விஷம் தலைக்கு ஏறாமல் இருக்குமாறு செய்யலாம். அல்லது ஈரத்துணியை நன்றாக இறுக்கி காலில் கட்டு போட்டு விடலாம். அல்லது இவர்களுக்கு இதெல்லாம் தெரியலைன்னா ஊருக்குள் சென்று வைத்தியரை அழைத்துவந்து காப்பாத்தி இருக்கலாம். அவர்கள் அந்த பையனின் அம்மாவிடம் போய் சொல்லுகிறார்கள் எந்தவிதமான பதட்டமோ அக்கறையோ இல்லாமல்..
அடுத்தது, இதனை கேட்ட பையனின் அம்மா பதறித்துடிக்காமல் உடனே மகனை பார்க்க செல்லாமல் அவளது எஜமானியிடம் போய் அனுமதி கேட்கிறாள். இதில் என்ன வருத்தம் என்றால் எந்ததாயாவது பிள்ளைக்கு பாம்பு கடித்துவிட்டது என்றால் எஜமானியிடம் போய் அனுமதி கேட்பாளா... சொல்லுங்கள். தன்குழந்தைக்கு எதாவது ஒன்று சிறுதலைவலியோ காய்ச்சலோ என்றால் உடனே மருத்துவரை பார்க்க ஓடுவார்கள். இதுதான் தாய் பிள்ளையின் மேல் வைத்திருக்கும் பாசம். யாரும் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கமாட்டார்கள். இதற்கெல்லாம் அனுமதி கேட்டுதான் போகவேண்டுமா?...
அடுத்தது, அந்த எஜமானி அம்மாவோ ரொம்ப ஈனஇரக்கம் மனிதாபிமானம் இல்லாமல் அனுமதி கொடுக்க மறுக்கிறாளே.. இதே அவள் பிள்ளைக்கு என்றால் சும்மா இருப்பாளா.. என்னதான் கொடுமைக்காரி என்றாலும் அவளும் ஒருதாய்தானே ஏன் மனிதாபிமானம் இல்லாமல் போய்விட்டது?...
அடுத்தது, பாம்புகடிபட்ட சிறுவனை பார்க்க அவன் தாய் செல்கிறாள். ஏன் வைத்தியரிடம் விஷயத்தை சொல்லி அழைத்து அல்லவா சென்றிருக்கவேண்டும்...
அடுத்தது, சிறுவன் உயிர்பிரியும் தருணத்தில் வாயில்நுரையாக வருகிறது. அப்போது அவன் தாய் அவனை மடியில் இட்டு வசனங்களா பேசித் தள்ளுகிறாள். ஒரு தடவைகூட ஞாபகமில்லையா பையனை காப்பாற்றவேண்டுமென்று?.. அவள் அப்போதும் எந்த முதலுதவியோ மருத்துவத்தை அணுகவோ தெரியலியா.. எந்ததாயாவது இப்படி வசனங்கள் பேசுவாளா.. சாகிறது விதின்னா அதை மாற்றமுடியாதுதான். அதற்கு முன்னால் நம்மால் முடிந்த அளவுக்கு விதியின் தடுக்கலாமே.. சாவிலிருந்து காப்பாற்றி இருக்கலாமே..
கடவுள் அருள் இருந்தால் நாம் எதையும் சாதிக்கலாம். துன்பத்திலிருந்து நம்மை இறைவன் காப்பாற்றுவார். ஆனால் மூட நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் இறைவன் எப்போதும் விரும்புவதில்லை. ஒரு உயிர் 15 நிமிடத்துக்கும் மேல் போராடிக்கொண்டிருக்கிறது. ஒரு 5 நிமிடத்தில் அந்த பையனை காப்பாற்றி இருக்கலாமே அவன் பிழைத்து இருப்பானே.. யாருக்குமே தோன்றவில்லையே என்பதுதான் எனது கருத்து. அப்போதும் எக்கேடுகெட்டு போனா என்ன?.. கடவுள் அருள் அவனுக்கு கிடைக்கும்; அவன் பிழைப்பான் என்று மூட நம்பிக்கையுடன் இருந்தால் எப்படி பிழைக்கமுடியும். நம்மால் ஆன முயற்சிகளை மேற்க்கொண்டு இறைவனிடம் வேண்டினால் இறைவன் நம் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பான்.
எந்தமுயற்சியுமே இல்லாமல் கடவுளே காப்பாத்து காப்பாத்து.. என்று முட்டிமுட்டி அழுதால் எப்படி நடக்கும்?
இதேமாதிரி எத்தனை படங்களில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன. அத்தனையும் மூடநம்பிக்கைகளை போதிப்பதாக உள்ளது. இந்தமாதிரி படங்கள் மக்களை மூடனாக ஆக்குவது வருந்ததக்கது.
எனவே மூடநம்பிக்கைகளை விட்டுடொழியுங்கள். கடவுள் நம்மோடுதான் இருக்கிறார். அவர் நம்மை துன்பங்களில் இருந்து காப்பாற்றுவார்.
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
,
//எனவே மூடநம்பிக்கைகளை விட்டுடொழியுங்கள். கடவுள் நம்மோடுதான் இருக்கிறார். அவர் நம்மை துன்பங்களில் இருந்து காப்பாற்றுவார்.//
ReplyDelete!
அண்ணே... சினிமாவில் லாஜிக் பார்க்கறீங்க... அய்யோ... அய்யோ... உங்களை நினைச்சாலே பாவமா இருக்கண்ணே..
ReplyDeleteவாங்க சரவணகுமரன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க ராகவன் அண்ணே..
ReplyDeleteஅண்ணே சினிமாவில் லாஜிகெல்லாம் பாக்கமுடியாதுதான். அதற்காக கண்முன்னே ஒரு உயிர் போய்க்கொண்டிருக்கிறது. பார்த்துக்கிட்டு இருக்க சொல்றீங்களா.. அதுவும் அவனை பெற்றதாய் முன்னாடியே.. எந்ததாயாவது அப்படி இருப்பாளா?.. ஒரு மனிதாபிமானம் வேண்டாமா.. சாமி அருள் கிடைத்தால் போதுமா.. நம்மால் ஒரு சிறுமுயற்சி வேண்டாமா?.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அய்யா இது அரிச்சந்திரன் மகன் கதைங்க. புராண காலத்து கதைய யாரு ஒரு கன்னடக்காரன் காப்பியடிக்க அதைபோயி நீங்க இவ்வளவு நீளளளளளளமாக எழுதக்கூடாது. சந்திரமதி மகனை தூக்கிக் கொண்டு போய் மாயானம் செல்வாள். ஹரிச்சந்திரன் எரிக்க காசு கேட்பார். காசு இல்லையென்று சொன்னவுடன் தாலியை கழட்டி தா என்று கேட்பார். இதெல்லாம் படத்தில வருதா
ReplyDeleteஅட, இது யாரு?
ReplyDeleteஓ நம்ம புது ஸ்டார்ஜன்!!!
நடக்கட்டும்,,...
இந்த படம் என்னையை விட்டுட்டு எப்ப பார்த்தே?
ReplyDeleteபொதுவா பழைய படங்களில் எல்லாமே பத்து நிமிஷம் வசனம் பேசிட்டுத்தான் காப்பாத்துவாங்க.
சம்பவத்தை கண் முன் கொண்டு நிறுத்தியது அருமை.
அதென்ன புது ஸ்டார்ஜன் ?
ReplyDeleteசினிமாவே ஒரு வியாபாரம்.
இங்க போய் என்னமோ தேடிக்கிட்டு...நீங்க வேற !
நடக்கட்டும், நடக்கட்டும்.... அசத்துங்க...
ReplyDeleteஎல்லாம் பிரமை...,
ReplyDelete//மூடநம்பிக்கைகளை விட்டுடொழியுங்கள். கடவுள் நம்மோடுதான் இருக்கிறார். அவர் நம்மை துன்பங்களில் இருந்து காப்பாற்றுவார்.//
ReplyDeleteமூட நம்பிக்கைகளை நாம் விட்டொழித்தாலும் சினிமாக்கள் வாழ்வதே அதனால்தான்.
நம்ம இராம.நாராயணன் போல் மூட நம்பிக்கைகளை வைத்து படமெடுக்க கன்னடத்திலும் ஒருவர் இருக்கார் போலும்.
நல்ல பகிர்வு.
ரொம்ப டென்சனாயிட்டீங்க ஸ்டார்ஜன். அப்படியே பழைய தமிழ்ப்படங்களையும் பாருங்களேன்.
ReplyDeleteஉங்கள் கோபம் புரிகிறது :)
ReplyDeleteசினிமாவில் என்ன லாஜிக் இருக்கிறது? ஆனால் ஒருவேளை இதெல்லாம் நெகடிவ்வாக வேலை செய்து மக்கள் இப்படி செய்யக் கூடாது என்று தெரிந்துகொல்வார்களோ என்னமோ...! இப்போ நீங்களே ஒரு இடுகை போட்டுட்டீங்க பாருங்க...!
ReplyDeleteசினிமாவே ஒரு வியாபாரம்.
ReplyDeleteஇங்க போய் என்னமோ தேடிக்கிட்டு...நீங்க வேற
நிறைய படங்கள் இப்படிதான் இருக்கின்றன.
ReplyDeleteகடவுள் காப்பாற்றுவார் நாமும் அதற்குண்டான முயற்சியை எடுக்க வேண்டுமல்லவா?என்ன சொல்ல வறீங்கன்னு புரிகிறது,மூட நம்பிக்கையில் நம்பிக்கை இல்லை அப்படிதானே ?
ReplyDeleteஅண்ணே, நம்ம தமிழ் சினிமா ஹீரோக்களெல்லாம் புவியீர்ப்பு தத்துவத்தையே முறியடிக்கிறா மாதிரி பறந்து பறந்து அடிக்கிறாங்க! :-))
ReplyDeleteஎன்ன தல இது சினிமாவில் லாஜிக்கும், அரசியலில் நேர்மையையும் எதிர்பார்க்கலாமா?
ReplyDeletethis is an interesting article
ReplyDeletehttp://infopediaonlinehere.blogspot.com/
// இராகவன் நைஜிரியா Said...
ReplyDeleteஅண்ணே... சினிமாவில் லாஜிக் பார்க்கறீங்க... அய்யோ... அய்யோ... உங்களை நினைச்சாலே பாவமா இருக்கண்ணே..///
ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு...
சினிமாவில் லாஜிக் பார்க்ககூடாதுதான்; அதற்காக இதேமாதிரி காட்சிகளை எல்லாம் எப்படி அனுமதிக்கலாம்.. இதேமாதிரி காட்சிகள் தமிழ்சினிமாவிலும் நிறைய உள்ளன. இப்போ இதுமாதிரி யாரும் எடுக்கலன்னு (ராம.நாராயணன்) சந்தோசப்பட்டுகிறவேண்டியதுதான். என்ன செய்ய?...
ReplyDeleteநல்ல பகிர்வு ஸ்டார்ஜன்..... அருமை!!!
ReplyDelete/////அந்த பணக்கார எஜமானி அம்மாவிடம் என் பையனை பாம்பு கடித்துவிட்டது. நான் போக வேண்டும் என்று கேட்கிறார். கொடுமைக்கார எஜமானி அதெல்லாம் முடியாது.. நீ போகக்கூடாது.. இங்குள்ள வேலையெல்லாம் யார் செய்வா.. முடியவேமுடியாது என்று கர்ஜிக்கிறாள். இந்தம்மா கெஞ்சுகிறார். இதனை பார்த்த எஜமானியின் கணவன் பாவம் அவங்க போகட்டும் என்று சொல்கிறார். அதெல்லாம் முடியாது என்று மறுக்கிறாள் எஜமானி. /////////
ReplyDeleteஇது போன்ற குணங்கள் உள்ள பெண்களை எஜமானி என்று சொல்லக்கூடாது எமனானி என்று சொல்வதுதான் சரி . என்ன செய்வது இன்னும் இதுபோன்று பல வீடுகளில் பணம் இருக்கும் திமிரில் மனிதரின் உணர்வுகளைக் கூட சரியாக புரிந்து கொள்ள இயலாத மிருகங்களாய் ஐந்து அறிவுடன் . ஆடை அணிந்து வலம் வரத்தான் செய்கிறார்கள் இந்த சமூக வீதிகளில் .
பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் மீண்டும் வருவேன் .
அட ஆமா. இந்த சினிமா காரங்களே இப்படி தான்...
ReplyDeleteஅதுக்காக கடவுள் இல்லையின்னு சொல்றீங்களா...
இந்த மாதிரி சீன்களைப் பாக்கும்போது கடுப்பாத்தான் வரும். முக்கியமா சிறுபிள்ளைங்களோடு பார்க்கும்போது உண்மை நிலையைச் சொல்லிப் புரிய வேறு வைக்கவேண்டும்!!
ReplyDeleteசில படங்கள் பார்ப்பதென்றால் முதலில் எங்கள் மூளையைக் கழட்டி வைத்துவிட்டுத்தான் பார்க்கணும் :))))
ReplyDeleteகோபத்தில் ரிவியை உடைக்கலையே :))
நல்ல பதிவு..
ReplyDeleteபடங்களின் லாஜிக்மீறல்கள் குறித்து குறிப்பிட்ட விதங்கள் அனைத்தும் உண்மை தான்..
என்ன செய்யறது.. இப்படி தான் இருக்கு நிலைமை..!!
வாழ்த்துக்கள்.
வாங்க saicom
ReplyDeleteஅட ஆமா அதேபடம்தான். நல்லா சொல்லிருக்கீங்க
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க நிஜாமுதீன்
ReplyDeleteஆமா இது ஊர்ல இருக்கும்போது எடுத்த போட்டோ நல்லாருக்கா..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அக்பர்
ReplyDeleteகாலையில் வேலைக்கு கிளம்பும்போது... ஆமா நீங்க சொல்றது சரிதான்., நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஹேமா
ReplyDeleteநீங்க சொல்றது சரிதான்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சந்ரு
ReplyDeleteரொம்ப நாளா ஆளே காணோம்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க தல டாக்டர்
ReplyDeleteசரிதான்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க குமார்
ReplyDeleteசரியா சொல்லிருக்கீங்க குமார்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சரவணன்
ReplyDeleteடென்ஷனெல்லாம் இல்லீங்க.. அவ்வளவுநேரம் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சிறுவனை காப்பாத்தி இருக்கலாமே என்ற ஆதங்கம்தான்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க பிரசன்னா
ReplyDeleteஓகே பிரசன்னா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஸ்ரீராம்.
ReplyDeleteஅட ஆமா.. சரிதான்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க டிவிஆர் சார்
ReplyDeleteஓகே சார்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சைவகொத்துப்பரோட்டா
ReplyDeleteநன்றி தொடர் வருகைக்கும் கருத்துக்கும்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஆசியா
ReplyDeleteநான் சொன்னத சரியா புரிந்து கொண்டீர்கள் மிக்க நன்றி தொடந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சேட்டை
ReplyDeleteஅதனாலதான் பாப்புலராகிறார்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க கண்ணா
ReplyDeleteசரிதான் தல.. நீங்க சொன்னா சரிதான்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க இர்ஷாத்
ReplyDelete///Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வாங்க ராகவன் அண்ணே..
அண்ணே சினிமாவில் லாஜிகெல்லாம் பாக்கமுடியாதுதான். அதற்காக கண்முன்னே ஒரு உயிர் போய்க்கொண்டிருக்கிறது. பார்த்துக்கிட்டு இருக்க சொல்றீங்களா.. அதுவும் அவனை பெற்றதாய் முன்னாடியே.. எந்ததாயாவது அப்படி இருப்பாளா?.. ஒரு மனிதாபிமானம் வேண்டாமா.. சாமி அருள் கிடைத்தால் போதுமா.. நம்மால் ஒரு சிறுமுயற்சி வேண்டாமா?. ///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டே.... :)))
இதுதான் என்பதில்..
தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க infopediaonlinehere.blogspot.com
ReplyDeleteநன்றி நன்றி நன்றி. கருத்துக்களுக்கு...
வாங்க மின்மினி
ReplyDeleteநல்லா சொல்லிருக்கீங்க நன்றி மின்மினி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க கவிதன்
ReplyDeleteஉங்கள் கவிதைகள் மிக அருமை.. ரசித்து படித்தேன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க பனித்துளி சங்கர்
ReplyDeleteநல்லா சொல்லிருக்கீங்க.. நன்றி தல..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஆனந்த்
ReplyDeleteநான் அப்படி சொல்ல வரல..
//மூடநம்பிக்கைகளை விட்டுடொழியுங்கள். கடவுள் நம்மோடுதான் இருக்கிறார். அவர் நம்மை துன்பங்களில் இருந்து காப்பாற்றுவார்.///
இதுதான் என்பதில்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஹூசைனம்மா
ReplyDeleteஆமா நல்லா. இது ஏன் சினிமாக்காரங்களுக்கு தெரியலைன்னு தெரியலியே...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க மாதேவி
ReplyDeleteசே சே டிவிய உடைக்கும் அளவுக்கு எனக்கு கோபமெல்லாம் கிடையாது..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஆனந்தி
ReplyDeleteநன்றி ஆனந்தி கருத்துக்களுக்கும் தொடர்ந்து ஆதரவு கொடுப்பதுக்கும்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
மூடநம்பிக்கைகள் ஊறிப்போய் நிற்கும்காலமாகிவிட்டது ஷேக்.
ReplyDeleteஎதைச்சொன்னாலும் நம்பிவிடும் மக்களிருக்கும்வரை மாறாது மாறாது
மூடநம்பிக்கைகள் மாறாது..
வாங்க மல்லிக்கா @ சரிதான்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDelete