நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சவூதிக்கு வேலைக்கு வந்துவிட்டேன். சிறிது காலம் சென்றதும் எனக்கு பொண்ணுபார்க்க என்பெற்றோர்கள் தீர்மானித்துவிட்டனர். நானும் பெண் நல்லா இருக்கவேண்டும்;அழகாகவும் கலராகவும் இருக்க வேண்டும், என்னோட உயரத்துக்கு ஏற்றமாதிரி இருக்கவேண்டும், நல்லா என்னைமாதிரி பெண் படித்து இருக்கவேண்டும், இப்படி நிறைய கண்டிஷனெல்லாம் போட்டது கிடையாது.
நான் ஒரே வார்த்தைதான் சொன்னேன்; எப்படி இருந்தாலும் பரவாயில்லை.., உங்களுக்கு பிடித்திருந்தால் எனக்கு போட்டோவை மெயிலில் அனுப்புங்கள் என்றேன். ஆனாலும் என் அப்பாவும் அம்மாவும் மாமாவும் எனக்காக பெண்பார்க்க ஆரம்பித்தார்கள். சும்மா சொல்லக்கூடாது பெண் தேடோ தேடென்று தேடினார்கள். பெண் சரியாக அமையவே இல்லை. நிறைய ஊர்களில் பெண் தேடினார்கள். நான் ஊருக்கு வரும் காலமும் நெருங்கிக் கொண்டிருந்தது. என் அப்பாவுக்கு கவலையாக இருந்தது.
ஊருக்கு வந்தவுடன் பெண் அமைந்து கல்யாணம் நடந்து ஒரே மாதத்தில் ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயமானால் என்ன செய்வது என்ற கவலை எங்க எல்லோருக்கும். ஆனால் என்னவள் சீக்கிரம் என்னைத்தேடிவருவாள் என்ற எண்ணமே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. 2008 ஜூன் மாதம் 8ம் தேதி ஒருபெண் அமைஞ்சது. போன உடனே பெண்பிடித்துவிட்டது. அன்றே பெண்வீட்டில் பேசினார்கள். போட்டோவும் பரிமாறப்பட்டது. மறுநாள் என் தம்பி மெயிலில் போட்டோவை அனுப்பிவைத்தான். எனக்கு ஒரே சந்தோஷம். போட்டோவில் என்னவள் முகம் பார்த்ததும் உடனே பிடித்துபோனது இருவருக்கும்.
நிச்சயதார்த்தம் ஆகஸ்டு 18ம்தேதி என்றும் டிசம்பரில் கல்யாணம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. எல்லாம் ஓகே. ஆனால் இன்னும் இருவரும் பேசலியே.. அம்மாவிடம் அவங்க வீட்டு செல்நம்பர் கேட்டேன். அம்மா மறுத்துவிட்டர்கள். கல்யாணத்துக்கு முன்னாடி பேசினால் எதாவது தவறுதலாக பேசி கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிடலாம் என்ற பயம் அவங்களுக்கு.
இப்படியே 2 மாதங்கள் ஓடிவிட்டன. போன் நம்பர் தெரியவேஇல்லை. நிச்சயதார்த்ததுக்கு 10 நாட்களுக்கு முன்னர் என் மாமா பையனிடம் டேய்மாப்ள அவங்க வீட்டுநம்பர் எப்படியாவது தாடா என்றேன். அவனும் எங்கம்மா செல்போனில் இருந்து அவங்க அப்பா நம்பரும் அவங்க வீட்டு நம்பரும் கொடுத்தான், நிச்சயம் முடியகிறவரைக்கும் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன்.
திங்கள்கிழமை நிச்சயதார்த்தம். வெள்ளிக்கிழமை மாலை அவங்க அப்பாவுக்கு போன் செய்தேன் மனதில் ஒரு குறுகுறுப்புடன்.
ஹலோ நான் சவுதியிலிருந்து ஷேக் பேசுறேன்.. என்றேன்.
எந்த சேக்!! நீங்க யாருன்னு தெரியலியே.. என்றார் மாமா.
உங்க வருங்கால மருமகன் சேக். திருநெல்வேலியிலிருந்து பொண்ணு பார்த்துட்டுபோனாங்களே.. எனக்குதான் பெண் பார்த்தாங்க.. என்றேன்.
அறிமுகம் ஆனதும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
நிச்சயதார்த்தமும் இனிதே நல்லமுறையில் நடந்தேறின. அக்பர் ஊருக்கு சென்றிருந்ததால் அக்பரும் என்னுடைய நிச்சயதார்த்ததில் கலந்து கொண்டார். நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் காலை சவூதி நேரம் 9.30 மணிக்கு என்னவள் வீட்டுக்கு போன் செய்தேன்.
ஹலோ நான் சவுதியிலிருந்து சேக் பேசுறேன்.. என்றேன் மனதில் குறுகுறுப்புடன்
ஹலோ யாரு.. ஆ!! நீங்களா நல்லாருக்கீங்களா..நல்லாருக்கீங்களா இருங்க அம்மாட்ட கொடுக்கிறேன். என்ற குரலில் என்னவள் குடியேறினாள் என் இதயத்தில்.
ஹலோ நான் மாமி பேசுறேன்.. நல்லாருக்கீங்களா. என்று பேசினாங்க மாமி.
நலம் விசாரித்ததும் அவங்க வீட்டுல எல்லோரும் பேசினார்கள். என்னவளிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். பின்னர் தொடர்பு கொள்கிறேன் என்று வாய் சொல்லியது மனசே இல்லாமல்.
நான் பேசுவேன் பேசுவேன் என்று இரவு முழுவதும் என்னவளை விழிக்கவைத்தது, மனதுக்கு கஷ்டமானது.
தினமும் மிஸ்டுகால்கள் கொடுப்பேன்; அப்பப்ப பேசிக்கொள்வோம்.
இப்படியா நடந்தேறியது ஸ்டார்ஜன் தம்பதியினர் திருமணம்.
இந்த தொடரை தொடர்ந்து எழுத நான் அழைப்பது
அக்பர்
செ.சரவணகுமார்
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
,
சுவாரஸ்யம்.
ReplyDelete///இப்படியா நடந்தேறியது ஸ்டார்ஜன் தம்பதியினர் திருமணம்.///
ReplyDeleteதம்பதியினருக்கு வாழ்த்துக்கள்..
//நான் பேசுவேன் பேசுவேன் என்று இரவு முழுவதும் என்னவளை விழிக்கவைத்தது, மனதுக்கு கஷ்டமானது.//
ReplyDeleteஅடப்பாவி. நீயும் தூங்காம, தம்பிகளையும் தூங்கவிடலையாமே தம்பி சொன்னான்.
மணமக்கள் இனிதே வாழ வாழ்த்துகள்.
/இப்படி நிறைய கண்டிஷனெல்லாம் போட்டது கிடையாது. //
ReplyDeleteஇந்த வரி வர்ற வரைக்கும், ”யூ டூ ஸ்டார்ஜன்”னுதான் நினைச்சுகிட்டிருந்தேன்.
ஸ்டார்ட் மியூசிக்...........
ReplyDeleteintersting...
ReplyDelete//என்ற குரலில் என்னவள் குடியேறினாள் என் இதயத்தில்.//
ReplyDeleteம்ம் என்னா சொல்றது பொய் சொல்லிதான் ஆகனும், அவங்களும் பிளாக் படிக்கிறாங்கள்ளே???
நல்ல பகிர்வு ஷேக்
நிறைய எதிர்பார்த்தோம்.ரொம்ப ஷார்ட்டா முடிச்சுட்டீங்க...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன் தம்பதியினருக்கு...
நிறைய எதிர்பார்த்தோம்.ரொம்ப ஷார்ட்டா முடிச்சுட்டீங்க...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன் தம்பதியினருக்கு...
//அடப்பாவி. நீயும் தூங்காம, தம்பிகளையும் தூங்கவிடலையாமே தம்பி சொன்னான்.//
ReplyDeleteஉண்மையா குரு???
தினத்திந்தி நியூஸ் படிச்சா மாதிரி இருக்கு...உங்க அனுபவம்...ஹீஹீ
நல்ல வேளை தல பழக்கதோஷத்துல என்னை இந்த தொடர்பதிவு எழுத கூப்பிடாம போனிங்க... :))
விறு விறுன்னு ஒரே மூச்சில படிச்சுட்டேன்.
ReplyDeleteநல்லதா போச்சு எந்த் நாட்டு ஷேக்குன்னு கேட்காம இருந்தாங்களே[அப்படித்தானே கேட்டாங்க எனக்குதெரியுமே] மிக சுவாரஸ்யம்
ஸ்டார்ஜன் சார் வெரி இண்டரஸ்டிங்...ஸ்டார்ஜன் என்றால் அமைதியான பதிவர் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.உங்கள் பெண் பார்க்கும்படலத்திலும் அதே..அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteதொடர் பதிவு எழுதினதுக்கு ரொம்ப நன்றி!
ReplyDelete:-)
ReplyDeleteபதிவு செம சுவாரஸ்யம். ரசிச்சு படிச்சேன்.வாழ்த்துக்கள் ஷேக்.
நல்லா இருக்கு :-)
ReplyDelete//////////நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சவூதிக்கு வேலைக்கு வந்துவிட்டேன். சிறிது காலம் சென்றதும் எனக்கு பொண்ணுபார்க்க என்பெற்றோர்கள் தீர்மானித்துவிட்டனர்.//////////
ReplyDeleteஉங்களுக்குமா ? வெளிநாடு என்றாலே அப்படித்தானோ ?
///////நான் ஒரே வார்த்தைதான் சொன்னேன்; எப்படி இருந்தாலும் பரவாயில்லை.., உங்களுக்கு பிடித்திருந்தால் எனக்கு போட்டோவை மெயிலில் அனுப்புங்கள் என்றேன். ///
ReplyDeleteஇதிலிருந்து தெரிகிறது நீங்க அடக்கமான குடும்பப்பய்யன் .
என்ன தேடுரீங்க ? எங்கே தெரிகிறது என்றா !
சும்மா ஒரு கோர்வையாக இருக்கட்டுமேனு சொன்னேங்க !
கலக்கல் !
ReplyDeleteமிகவும் அருமை நண்பரே !
ரசிக்கும் வகையில் சொல்லி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி !
எல்லாம் அப்படியே பசுமையா நினைவிருக்குது போலிருக்கே! கடகடன்னு கோர்வையா எழுதியிருக்கீங்கண்ணே! :-)))))
ReplyDeleteம்ம்ம்....
ReplyDeleteமலரும் இனிய நினைவுகள்.......
நன்று.
அமர்களமா எழுதிட்டீங்க...
ReplyDelete//தினமும் மிஸ்டுகால்கள் கொடுப்பேன்; அப்பப்ப பேசிக்கொள்வோம்//
என்னா தல.. அப்பப்பன்னு சொல்லிடீங்க... நானெல்லாம் அப்பப்பதான் போன் பேசாம இருப்பேன்..
ம்...அது அந்த காலம்....
//ஹலோ நான் சவுதியிலிருந்து சேக் பேசுறேன்.. //
ReplyDeleteபேர கேட்டாலே அதிருதுல்ல...
:) பதிவு நல்லா இருக்கு ஸ்டார்ஜன்
வாவ் வாவ் ரொம்பவே இன்ரஸ்டிங் உங்க ஸ்டோரி..
ReplyDelete//என்ற குரலில் என்னவள் குடியேறினாள் என் இதயத்தில்.///
இங்கதான் நிக்கிறீங்க ஸ்டார்ஜன்.. ஒரு வரியில் உங்க காதலையும் வெளிப்படுத்திட்டீங்களே.. அருமையான காதல் ஸ்டோரியை படித்த உணர்வு.
வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் இணைபிரியாமல் பல்லாண்டு வாழ்க.
ஆஹா சுவாரசியமான இடுகை.
ReplyDeleteஎங்க காலத்துல சுயம்வரம்தான்.
வாங்க ஸ்ரீராம். @ வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க ஸ்டீபன் @ வாழ்த்துகளுக்கு நன்றி
வாங்க அக்பர் என்ன போட்டு கொடுத்திட்டிங்களா.. வாழ்த்துகளுக்கு நன்றி அக்பர்
ReplyDeleteவாங்க ஹூசைனம்மா @ நான் அப்படியெல்லாம் கிடையாதுங்க..,:))
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஹூசைனம்மா.
வாங்க இர்ஷாத் @ ம்ம் ஆரம்பிக்கட்டும்.,ஸ்டார்ட் மியூசிக்...........
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஸ்ரீ.கிருஷ்ணா @ ரொம்ப நன்றி
ReplyDeleteவாங்க அபு அஃப்ஸர் @ உண்மைக்கும்தான் ஆமா படிக்காவிட்டாலும் படிக்கவைச்சிருவீங்க போல.. :)) அன்புக்கு மிக்க நன்றி அபு அஃப்ஸர். வாழ்த்துகளுக்கு நன்றி..
ReplyDeleteவாங்க ராஜா @ தங்கள் அன்புக்கு மிக்க நன்றி..வாழ்த்துகளுக்கு நன்றி..
ReplyDeleteவாங்க சிஷ்யா பிரதாப் @ இது கல்யாணம் ஆனவங்களுக்கு உண்டான பதிவு., உங்களுக்கு வேலையில்லையே.. :))
ReplyDeleteதொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிஷ்யா
வாங்க மலிக்கா @ அட கரெக்டா சொல்லிட்டீங்க.. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மலிக்கா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க ஸாதிகா @ பாராட்டுக்கு மிக்க நன்றி..,உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
ReplyDeleteதொடர்ந்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்கு ஜஸாக்கல்லாஹ் கைரன்.
வாங்க அநன்யா @ நன்றி பாராட்டுக்கு.. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteஒரு நல்ல இதமான பதிவு.நீங்கள் இருவரும் நிறைவான வாழ்க்கை வாழ் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமகிழ்ச்சியான மணப்பெண் பார்க்கும் நாளை,
ReplyDeleteமகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டது, படிக்க
மகிழ்ச்சியாக இருக்கிறது.
அடப்பாவிகளா! என்னையெல்லாம் இந்த விளையாட்டுக்கு கூப்பிட மாட்டீங்களா? ( தொடர்பதிவுக்கு) உங்க கூட டூ!
ReplyDeleteவாங்க KVR @ வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க பனித்துளி சங்கர் @ ஆமா நீங்க சொல்றது கரெக்ட்தான்.. வருகைக்கும் தொடர் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே..
வாங்க சேட்டை @ அதெப்படி மறக்கமுடியும்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க சைவகொத்துப்பரோட்டா @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க கண்ணா @ நான் தினமும் பேசுவேன்.., அப்ப கொஞ்சம் பொருளாதாரம் வீக்கு அதான் மிஸ்டுகால்.
ReplyDeleteவாங்க ஷபிக்ஸ் @ ஹா ஹா ஹா.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க மின்மினி @ வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..
ReplyDeleteவாங்க கட்டபொம்மன் @ ஓஹோ அப்படியா.. நன்றி
வாங்க ஆஷியா உமர் @ வருகைக்கும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
ReplyDeleteவாங்க நிஜாமுதீன் @ நன்றி நிஜாம். வருகைக்கு நன்றி
வாங்க திரவியம் ஐயா @ நான் உங்களையும் அழைக்கிறேன். உங்கள் அனுபவத்தையும் எழுதுங்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
இனிய ஆரம்பம்...... வாழ்க பல வளங்கள் பெற்று . .
ReplyDeleteஏனுங்க, வெறும் போட்டோவைப் பாத்தே கல்யாணம் பண்ணிக்க எப்படிங்க அவங்களுக்குத் துணிச்சல் வந்துச்சு? :))
ReplyDeleteVery interesting story.
ReplyDelete//நிறைய எதிர்பார்த்தோம்.ரொம்ப ஷார்ட்டா முடிச்சுட்டீங்க//
ReplyDeleterepeatu
'''' அம்மாவிடம் அவங்க வீட்டு செல்நம்பர் கேட்டேன். அம்மா மறுத்துவிட்டர்கள். கல்யாணத்துக்கு முன்னாடி பேசினால் எதாவது தவறுதலாக பேசி கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிடலாம் என்ற பயம் அவங்களுக்கு. '''''
ReplyDeleteநல்ல சொல்லி இருக்காங்க ..இபாடி பேசி பல சம்பந்தங்கள் நின்று இருக்கு...
வாங்க நிலாமதி @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
ReplyDeleteவாங்க அக்கினி சித்தன் @ போட்டோதான் முக்கியம்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஜெஸ்வந்தி @ தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteவாங்க எல்கே @ உங்கள் அன்புக்கு நன்றி
ReplyDeleteவாங்க மலர் @ சரியாச்சொன்னீங்க.. சரிதான்.
//ஹலோ நான் சவுதியிலிருந்து ஷேக் பேசுறேன்."எந்த ஷேக்"//
ReplyDeleteரொம்ப அருமையா பகிர்ந்து கொண்டீர்கள்.
உங்கள் வாழ்வு என்றும் சர்க்கரை பொங்கலாய் இனிக்க வாழ்த்துக்கள்.
Thanks Jaleela
ReplyDeleteVERY NICE
ReplyDeletevisit www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN
வருகைக்கு மிக்க நன்றி VAAL PAIYYAN..
ReplyDelete