Pages

Sunday, August 1, 2010

லேட்டா வந்தது தப்பா...


முதல் மணியோசை
தூரத்தில் ஒலிக்க
அம்மா படத்தை வணங்கி
திருநீர் இட்டு, சம்படமும்
பைக்கட்டும் தோளில்
கூடவே வர ஓட்டமும்
நடையும் விரைகையில்
அந்தோ!! 2வது மணியோசை
நிறுத்தியது என்னை
பள்ளி நுழைவாயிலில்..

தாமதம் தான் என்ன செய்ய..
கைமொழியில் இரண்டு அடியும்
நாலணா அபராதமும்
கொடுத்துவிட்டு
பள்ளியறையினில்
நுழைகையில் டீச்சர்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

என்ற குறளுக்கு விளக்கம்
கொடுத்துக் கொண்டிருந்தவர்
என் தாமத வருகையினால்
குறள் மங்கி குரல்
ஓங்கி ஒலித்தது
"மூதேவி மூதேவி..
எப்பப்பாரு லேட்டுதான்..
பரட்டத்தலையோட...
உள்ள வந்துத் தொலை என்று.."

ஏய் ஏய்.. இதுவரை என்ன‌
என்று அருகாமையை வினவியதில்
டீச்சரின் குரல் மேலும்
என்னை கலவரமாக்க..
"எலே உருப்படாதவனே..
வந்ததே லேட்டு., அங்க என்ன‌
சலசலன்னு பேச்சி.."
அவரது பார்வையில்
நானொரு .......

யாரெல்லாம் வீட்டுப்பாடம்
எழுதலைன்னு கேட்க‌
கோபப்பட்டு சபையிலிருந்து
வெளியேறுபவன் போல‌
விருட்டென எழுந்த என்னை..

"தெரியுமே தெரியுமே..
அது நீதான்னு...
வர்றது லேட்டு
எப்பப்பாரு பேச்சி..
வீட்டுப்பாடம் எழுதாத தில்லு..
படிச்சி கிழிச்சது போதும்
வீட்டுல உங்கம்மா அப்பாவ‌
கூட்டிட்டுவா.."

என்று முன்பைவிட
குரல் ஓங்காரமாய் ஒலிக்க‌

நீட்டுடா கையை என்றவருக்கு
உள்ளத்தை காட்டும்
கண்ணாடி போல
உள்ளங்கையை
நான் காண்பிக்க..

எப்படியும் அடி பிண்ண போறாங்க‌
ரொம்ப வலிக்குமே
கண்களை மூடியபடி
என்கையை நீட்டியபடியே
நின்ற என்காதுகளில்

"டீச்சர் அவனுக்கு
அம்மா கிடையாது.."

என்ற குரல் ஒலித்தது.

"எலே என்னடா இது..
கையில் கொப்பளமா..
எப்படிடா இதெல்லாம்"
வினவிய டீச்சருக்கு

"என்ன சொல்ல..
அம்மா இற‌ந்ததும்
சித்தி வந்தகதையை சொல்லவா..
தன் குழந்தையை
சீராட்டி வளர்த்த சித்தி
என்னை பரதேசியாய்
அலையவிட்ட கதையை சொல்லவா..
வீட்டுவேலை செய்யமுடியாமல்
செய்து படிக்க உட்காரும்போது
கையில் சூடுபோட்ட கதையை சொல்லவா..
எந்த கதையை நான் சொல்ல..
நான் லேட்டா வந்தது தப்பா.."

சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க...

கண்மூடி நின்ற எனக்கு
எதோ உணர்வு என்னைத் தாக்க‌

டீச்சரின் கண் நீர் என்
கொப்பளத்துக்கு
மருந்தினை கொடுக்க..
அவரின் அணைப்பினில்
என் அன்னையின்
அரவணைப்பை கண்டேனே...

***************

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

,

Post Comment

29 comments:

 1. வாழ்த்துக்கள் உங்களுக்கும்..

  கண் கலங்க வச்சிட்டிங்க..

  ReplyDelete
 2. கதைக்கு :-(

  நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :-))

  ReplyDelete
 3. நண்பர்கள் தின வாழ்த்துக்கள். கவிதை வேதனை.

  ReplyDelete
 4. பாவம் அந்த பையன். அவனைப்போன்ற பையன்களுக்கு சலுகை காட்டலாம். கவிதை நல்லாயிருக்கு.

  நண்பர்கள் தின வாழ்த்துகள் சேக்.

  ReplyDelete
 5. அந்த சிறுவனின் அம்மாவை 'லேட்' ஆக்கிய கடவுள் மேல்தான் தப்பு :-(

  ReplyDelete
 6. கவிதை மிக நன்றாகவே துவங்கியிருந்தது. இறுதிப்பகுதி தான் ஒரு பழைய பாக்யராஜ் திரைப்படத்தின் காட்சியை நினைவுபடுத்தியது.

  மற்றபடி இது மிக நல்ல முயற்சி ஸ்டார்ஜன். கவிதை இந்த வடிவத்தில் வெளிப்படுவது உணர்வுப்பூர்வமாக அதை அணுகுவதற்கு இலகுவாக இருக்கும்.

  நண்பர்கள் தின வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. மனதினை நெகிழச்செய்து விட்டது இந்த கவிதை படித்ததும்.

  ReplyDelete
 8. மிக அருமையா எழுதியிருக்கிங்க.. நல்லாருக்கு ஸ்டார்ஜன்

  ReplyDelete
 9. "கண்மூடி நின்ற எனக்கு
  எதோ உணர்வு என்னைத் தாக்க‌"

  மனதை பிசைந்த வரிகள். இல்லை வலிகள்.

  கண்கலங்க வைத்த கவிதை.
  உங்களுக்கும் நண்பர்களுக்கும் அன்பான " நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் "

  ReplyDelete
 10. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.


  கண் கலங்க வச்சிட்டிங்க.

  ReplyDelete
 11. கலங்க வெச்சுட்டீங்கப்பா.

  நட்பு நாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 12. நெஞ்சை உருக்கும் கவிதை சிறப்பான வரிகள்

  இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் ....

  ReplyDelete
 13. வாங்க சுசி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

  நண்பர்கள் தின வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. வாங்க ஜெய்லானி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

  நண்பர்கள் தின வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. பொதுவாய் கவிதைகள் என்னை அத்தனை கவர்வதில்லை. இருந்தாலும் இதைப் படிக்கையில் கொஞ்சம் மனது கணக்கிறது.

  கவிதை வடிவம் என்று வைத்து பார்த்தால் இன்னும் சிறிது நேர்த்தி வேண்டும்.

  ReplyDelete
 16. என்ன சொல்ல..
  அம்மா இற‌ந்ததும்
  சித்தி வந்தகதையை சொல்லவா..
  தன் குழந்தையை
  சீராட்டி வளர்த்த சித்தி
  என்னை பரதேசியாய்
  அலையவிட்ட கதையை சொல்லவா..
  வீட்டுவேலை செய்யமுடியாமல்
  செய்து படிக்க உட்காரும்போது
  கையில் சூடுபோட்ட கதையை சொல்லவா..
  எந்த கதையை நான் சொல்ல..
  நான் லேட்டா வந்தது தப்பா.."

  இந்த வரிகள் ரொம்ப மனதை கஷ்டபடுத்தி விட்டது. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. சித்தி கொடுமைனா இதுதான் என்று கவிதை நடையில் அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. "என்ன சொல்ல..
  அம்மா இற‌ந்ததும்
  சித்தி வந்தகதையை சொல்லவா..
  தன் குழந்தையை
  சீராட்டி வளர்த்த சித்தி
  என்னை பரதேசியாய்
  அலையவிட்ட கதையை சொல்லவா..
  வீட்டுவேலை செய்யமுடியாமல்
  செய்து படிக்க உட்காரும்போது
  கையில் சூடுபோட்ட கதையை சொல்லவா..
  எந்த கதையை நான் சொல்ல..
  நான் லேட்டா வந்தது தப்பா.."


  ....."முந்தானை முடிச்சு" படம் பார்த்துக்கிட்டே எழுதுனீங்க போல......

  ReplyDelete
 19. ந‌ண்ப‌ர்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள் ஸ்டார்ஜ‌ன்..

  ReplyDelete
 20. //கவிதை மிக நன்றாகவே துவங்கியிருந்தது. இறுதிப்பகுதி தான் ஒரு பழைய பாக்யராஜ் திரைப்படத்தின் காட்சியை நினைவுபடுத்தியது. //

  "முந்தானை முடுச்சு" என்றாலும், கவிதையில் எங்களை கட்டிப் போட்டு விட்டீர்கள் ஷேக்.

  ReplyDelete
 21. நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் ஹாசிம் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. வாங்க ஜெயந்தி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 23. வாங்க அக்பர் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete
 24. வாங்க கவிசிவா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

  வாங்க சரவணக்குமார் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 25. வாங்க ஸாதிகா அக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

  வாங்க ரியாஸ் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

  ReplyDelete
 26. வாங்க அபுல்பசர் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  வாங்க குமார் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

  ReplyDelete
 27. வாங்க அமைதிக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

  வாங்க சீமான்கனி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

  ReplyDelete
 28. மிக..மிக அருமை..!!!!
  முடிக்க முடியவில்லை..
  கண்களீல் கண்ணீர்..
  எழுத்துக்கள்
  மட்டும்
  வெளிராக......


  ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்