கவிதையில் கலக்கும் கவிஞர்களுக்கும் கவிதாயினிக்கும் ரோஜாவை மையப்படுத்தி எழுதாமல் இருக்கமுடியாது.. எனக்கும் அப்படிதான்.. சினிமா பாடல்களிலும் படக்காட்சிகளில் ரோஜாவைதான் முக்கியப்படுத்தி இருப்பார்கள். அந்தளவுக்கு எல்லோருக்கும் ரோஜா மோகம்தான்.
நான் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் ரோஜாவை கொண்டுதான் ஆரம்பித்திருக்கிறேன்..
என் மனைவிக்கு ரோஜா என்றால் கொள்ளை பிரியம்.. ஊருக்கோ இல்லை வெளிய எங்கு சென்றாலும் ரோஜாப்பூ வாங்கிக்கொடுப்பேன். மிகவும் விரும்புவார்..
ஒருதடவை நானும் என்மனைவியும் சினிமா பார்க்க சென்றோம். அப்போது பஸ் ஸடாண்டில் பிளாட்பாரத்தில் பூக்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு கடைக்கு சென்றோம்.. அந்த கடையில் விதவிதமான ரோஜாப்பூக்கள் கடையை அலங்கரித்து எங்களை வசீகரித்தன.. அதில் ஒரு வெள்ளை ரோஜா தலையை நீட்டி என்னை அணைத்துக்கொள்.. அணைத்துக்கொள் என்று அழைத்தது. பார்க்க பார்க்க ரொம்ப பரவசமாக இருந்தது.
என் மனைவி அந்த ரோஜாவைக் கண்டதும் உடனே வாங்கிக் கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன் அவரது தலையில் சூட்டினேன். ரொம்ப சந்தோசமாக இருந்தது.
படம் பார்க்க போனால் படம் சுமாராக இருந்தது. படம் பார்க்கும்வேளையில் என்மனைவி தலையில் இருந்த ரோஜாப்பூவை காணவில்லை. சே என்ன இது இப்படி ஆகிருச்சே.. அழகான ரோஜா கீழே விழுந்திருச்சே என்று மனைவிக்கு வருத்தமாக இருந்தது. சரி.. சரி.. விடு நா உனக்கு வேற வாங்கித்தாரேன்.. என்று சொன்னேன். இருந்தாலும் வருத்தம்தான்.
இரவு படம் முடிந்து வெளிய வரும்போது தியேட்டர் வளாகத்தில் அந்த வெள்ளை ரோஜா சிரித்துக்கொண்டிருந்தது. உடனே என்மனைவி ஆவலுடன் ஓடோடிச் சென்று அந்த ரோஜாவை கையில் எடுக்கப்போனார். நான் உடனே ஏய்..ஏய்.. அதை கையில் எடுக்காதே.. கீழே கிடந்ததை எடுக்கக்கூடாது.. தூரப்போடு தூரப்போடு என்று சொன்னேன். மறுபடியும் கையில் எடுக்க முனைந்தார். நான் உடனே சத்தம் போட்டேன்.
உடனே என் மனைவிக்கு வருத்தமாக இருந்தது. கோபம்.. தலையை திருப்பிக்கொண்டார். வீட்டுக்கு வந்ததும் நான் ஏன் கீழே விழுந்த ரோஜாவை எடுக்கக்கூடாதென்ற காரணத்தை சொன்னதும் அவரது முகத்தில் அந்த வெள்ளை ரோஜா சிரித்துக்கொண்டிருந்தது.
நான் மறுநாள் விதவிதமான கலர்களில் ரோஜாவை வாங்கிவந்து மனைவியிடம் கொடுத்தேன்.
,
நீங்களும் உங்கள் வாழ்வின் ரோஜாவின் பங்கும் சேர்த்து அழகாய் வந்த பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteAi...Me the 1 st ah....
ReplyDeleteஇருந்தாலும் கேட்க கூடாது என்று தான் நினைத்தேன், அப்படி வீட்டில் போய் என்ன சொன்னிங்க என்று தெரிந்தால்,
ReplyDeleteநாங்களும் கொஞ்சம் விவரமாக இருந்து கொள்வோம். பரவாயில்ல எப்படியும் அக்பரிடம் சொல்லி இருப்பிர்கள் அங்கே
தெரிந்து கொள்கிறேன். அக்பர் ஜி போன் அடிக்குது எடுங்க.
ரொம்ப அழகா அனுபவித்து எழுதியிறுகீங்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஎந்தப்பதிவைப்பார்த்தாலும் எனக்கு எதாவது உருத்தும் இதில்...
வெள்ளைரோஜாவுக்கு பதில் தங்கச்சங்கிலியென்ரால்?
அப்பரம் வீட்ல என்னா சொன்னிங்கண்னா.
எனக்கும் ரோஜா மிகப்பிடிக்கும். நான் பூவைச் சொன்னேன்.
ReplyDeleteரொம்ப சுவாரஸ்யமான நிகழ்ச்சி...
ReplyDeleteஹ்ம்ம்.. என்ன சொல்லி அவங்கள சமாதனம் பண்ணினிங்க தெரியலயே??
வெள்ளை ரோஜா.... உங்கள் மனைவிக்கு நீங்க குடுத்த வெகுமதி.. :-))
அது எப்படி எல்லாப் பெண்களுமே ரோஜா மேல காதலா இருக்காங்க ,,?
ReplyDelete"நாளைய ராஜாவின் ரோஜா மலர்" நல்லா இருக்கு ஸ்டார்ஜன்.
ReplyDeleteநாளைய ராஜா.இந்த பதிவின் மூலம் ரோஜாவின் ராஜா என்றும் நிரூபித்து இருக்கிறீர்கள்.
ReplyDeleteஅனுபவம்! அது ஒரு அழகான சுகம்தான்.
வாழ்த்துக்கள்.
//என் மனைவிக்கு ரோஜா என்றால் கொள்ளை பிரியம்./
ReplyDeleteரோஜாவை யாருக்குதான் புடிக்காது.. காஞ்சுப்போய் இருந்தாலும் பத்திரப்படுத்தி பார்ப்பார்கள்
kiizee vizhuwthaalum roja roja thaane.
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteரோஜா.. யாருக்குத்தான் பிடிக்காது?
வாசிக்க தவறாதீர்கள் : சுதந்திர தின சிறப்பு சிறுகதை
ReplyDeleteரோஜாவை போல தனித்துவத்துடன் எழுத வாழ்த்துக்கள்
ReplyDeletewww.narumugai.com
அந்த வெள்ளை ரோஜா பாவம்...!!
ReplyDeleteவாங்க சீமான்கனி @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க இளம்தூயவன் @ ஆஹா.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
வாங்க நிஜாம் அண்ணே.. @ ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க கலாநேசன் @ எனக்கும் ரோஜாவை ரொம்ப பிடிக்கும்.. ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..
வாங்க ஆனந்தி @ ///வெள்ளை ரோஜா.... உங்கள் மனைவிக்கு நீங்க குடுத்த வெகுமதி.. :))///
ReplyDeleteஆமா.. கண்டிப்பா.. ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
வாங்க செந்தில் @ ஆமா.. அது ஏன்னே தெரியல இல்ல.. :))
ReplyDeleteரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
வாங்க ஸ்டீபன் @ ரொம்ப நன்றி வாழ்த்துக்கு..
ரொம்ப அழகா அனுபவித்து எழுதியிறுகீங்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteரோஜா அழகோ அழகு..
ReplyDeleteரோஜாவின் அழகு எல்லோருக்கும் மனதைப் பறிகொடுக்கதான் செய்யும். அதிலும் இந்த வெள்ளை ரோஜா. அருமையா இருக்கு ஷேக்!
ReplyDeleteவிதவிதமான கலர்களில் ரோஜாக்கள் வந்தாலும், வெள்ளை ரோஜாவின் அழகும், நாட்டுரோஜாவின்(பன்னீர்ரோஸ்)வாசமும் வேறெதிலும் இருப்பதில்லை :-)
ReplyDeleteரோஜாவை பற்றி அழகாக எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துகள்.