முதலில் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2 வாரங்களுக்கு முன்னால் நான் ஆரம்பித்த கேள்விக்கு உங்கள் பதில் இடுகை உங்களின் அமோக ஆதரவினை பெற்று ஒரு நல்ல இடுகையாக வருவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
இது உங்களுக்கான இடுகை. இது நீங்கள் ஆர்வத்துடன் பங்குபெற்று உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இடுகை.
சென்ற வாரம் இடுகை கேள்விக்கு உங்கள் பதில் 2
இனி இந்த வார கேள்விக்கு செல்லலாமா..
கேள்வி 3 :
தனியார் பள்ளிக் கட்டணத்தை அவர்களே தீர்மானிப்பது சரியானதா?.. இல்லை அரசே கட்டணத்தை தீர்மானிப்பது சரியா?...
சென்ற வாரம் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது போல இந்த கேள்விக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
,
ஹையா! நான் தான் ஃபர்ஸ்ட்! :-))
ReplyDeleteதனியார் பள்ளிகளின் கட்டணம் மட்டுமல்ல, அவற்றில் அனுமதிப்பதையும் பொறியியல், மருத்துவக்கல்லூரிகளைப் போல அரசு முறைப்படுத்தியே தீர வேண்டும். இல்லாவிட்டால், எல்லாருக்கும் கல்வியென்பது எட்டாக்கனியாகத் தானிருக்கும்.
அரசுதான் தனியார் பள்ளிகளின் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்.
ReplyDeleteஇன்னும் சொல்லப்போனால். அரசே அனைத்து பள்ளிகளின் தரத்தையும் உயர்த்தி அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
நல்லதொரு கேள்வியை கேட்டதற்கு மிக்க நன்றி,இன்று அநேக தனியார் பள்ளிகளில் வசதிகள் இல்லாவிட்டலும் மிக அதிக கட்டணங்களை வசூல் செய்கிறார்கள்,பல ஆண்டுகளாகவே அரசும் இதை பற்றி கண்டு கொள்ளவில்லை ஆனால் எதற்கும் ஒரு காலம் உண்டல்லவா,கடந்த 3 வாரங்களுக்கு முன்பு நமது அரசு தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுக்கும் முகமாக ஓர் அரசு அறிவிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பி அதன் பிறகு மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக தனியார் பள்ளிகளின் ஜாதகத்தை கேட்டுள்ளார்கள் இனிமேலாவது அரசு தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை அழித்து முறையான கட்டண விகிதங்களை அறிவித்து நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்க்க வேண்டுகிறேன்,
ReplyDeleteஅன்புடன்,மகுடம் மோகன்.
யார் குரு இந்தமாதிரி உங்களை கேட்க சொல்லுறது... அக்பர் கூட சேராதீங்கன்னு சொன்னா கேட்கறதேயில்லை...
ReplyDeleteஎன்னைக்கேட்டா தனியார் பள்ளிகளே இருக்கக்கூடாது... அரசாங்க பள்ளிகள் மட்டும் இருந்து அனைவர் பிள்ளைகளுக்கும் ஒரேமாதிரியான கல்வி கிடைக்கவேண்டும்...
தனியார் பள்ளிகளில் இருக்கும் கல்வித்தரம் , சுகாதாரம் , வசதிகள் அரசு பள்ளிகளில் இல்லை. அதனால் அவர்கள் அதிகம் பணம் வசூலிப்பதில் என்ன தவறு.
ReplyDeleteஅரசுதான் தனியார் பள்ளிகளின் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்.
ReplyDeleteஅரசு தான் தீர்மானிக்கவேண்டும் நண்பரே..
ReplyDelete(கல்வி நிலையங்களே தனியார் வசம் இருப்பது வெட்கக் கேடானது.அரசின் இயலமையைத் தான் இது காட்டுகிறது.)
அரசாங்கத்தின் கடமை பள்ளிகளை அமைத்து தரமான கல்வியை கற்பிப்பது.
ReplyDeleteதனியார் பள்ளிகளை நிறுவி ஒரு பக்கத்தால் நடத்த முற்பட்டால் வசதியானவர்கள் கட்டணம் அறவிட்டு கற்பார்கள்.வறுமைப்பட்டவர்கள் அரசபள்ளியில் கற்கவேண்டிய நிலை.பெரும்பான்மையினர் தனியார் பள்ளியில் கற்பதால் அரசிற்கு இது தொடர்பான அழுத்தம் இருக்காது.எனவே தனியார் பள்ளி அமைக்காமல்,அனைவருமே அரச பள்ளியில் கற்று வந்தால் அரசே பொறுப்பேற்கவேண்டும்.அனைவருக்குமே சமமாக இருக்கும்.
குட் குவிசன் பட் பதில்
ReplyDeleteஅரச பள்ளி
Hello Friend, Hope everything is fine.
ReplyDeleteI am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My research topic is "Bloggers, Internet users and their intelligence". In connection with my research I need your help. If you spare your time, I will be sending the research questionnaire's to your mail Id. You can give your responses to the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. Please reply. Thank you
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
(Pls ignore if you get this mail already)
தனியார் பள்ளிகளில் கல்விக்கு கட்டணம் ரொம்ப கொடுமையானது; கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் இப்போது இருந்திருந்தால் ரொம்ப வேதனைப்படுவார், இந்த நிலையை எண்ணி.
ReplyDeleteபள்ளிகளில் பாடம்தான் சொல்லிக்கொடுக்க வேண்டும்.. அதுக்குத்தானே பள்ளிகள் ஆரம்பிச்சிருக்கீங்க. அதை விட்டுட்டு படிக்கவரும் பிள்ளைகளிடம் டொனேஷன் வசூலிப்பது எந்தவிதத்தில் நியாயமுன்னு சொல்லுங்க பார்ப்போம். ஏ நானும் பள்ளி ஆரம்பிக்கிறேன் பேர்வழின்னு ஒரு சின்னரூம் கிடைத்தா போதும், கொடுக்கவேண்டியவங்களுக்கு கொடுக்கிறதை கொடுத்து பிள்ளைகளின் உயிருக்கே உலை வச்சிருதீங்க. சமீபத்தில் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டு எத்தனை பிஞ்சுகள் கருகி போனார்கள். இப்போது அதை நினைத்தால் மனசு ரொம்ப வலிக்குது. இதெல்லாம் ஏன்?. முதலில் குழந்தைகளுக்கு பாதுகாப்புதான் வேண்டும். அப்புறம்தான் மத்ததெல்லாம். கல்வி என்கிற பேரில் நீங்கள் செய்வது நியாயமா.. பள்ளி ஆரம்பிக்கவேண்டுமென்றால் அடிப்படை வசதிகள் இருந்தால்தான் அரசு அங்கீகாரம் கொடுக்க வேண்டும். தவறு செய்யும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்.
எனவே அரசுதான் பள்ளிக்கட்டணத்தை தீர்மானிப்பது சரிதான்.
என்னதான் தாங்கள் தரும் வசதிகள் தரம் பற்றி வாதாடினாலும் இஷ்டத்துக்கு ஏற்றிக் கொண்டே போகும் தனியார் பள்ளிக் கட்டணங்களை அரசு கண்காணிப்பதும் நிர்ணயிப்பதும் அவசியமென்றே தோன்றுகிறது.
ReplyDeleteஅய்யோ எனக்கு பதில் சொல்லவெல்லாம் தெரியாதுங்கோ .
ReplyDeleteவியாபாரம் என வந்த பின் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்வது யார் கையில்?
ReplyDeleteகல்விக் கொடையாக மட்டுமே இருந்த காலம் வேறு. இப்போதையக் காலம் வேறு,
வெளி நாட்டில் மட்டும் கட்டணம் கட்டி பயிலாத கல்வி நிறுவனம் இல்லையா?
தன் நிறுவனத்தை பெரும்பொருள் கொண்டு நிர்வகிக்கும் ஒருவர் அதற்காக அவர் வேண்டும் கட்டணம் கேட்பது தவறா?
நம் எல்லோராலும் விரும்பப்படும் திரு ரஜினி காந்த். அவர் நடத்தும் பள்ளிக் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
இவர் நாளை முதல்வர் ஆனால்? பயனாளிகளின் திறன் பொறுத்து கட்டணம்.
fivestar hotel fee அரசா நிர்ணயம் செய்கிறது?
அரசுதான் தரத்திற்கேற்ப தீர்மானிக்கவேண்டும்; இதிலும் ஊழல் புகாமல் இருந்தால் நல்லது நடக்கும்; இல்லைன்னா, அரசு அதிகாரிகளுக்கு வருமானம் கிடைக்க இன்னொரு வழி!!
ReplyDeleteநல்ல கேள்வி ஸ்டார்ஜன் அரசுதான் தீர்மானிக்கணும் அப்போதான் ஒரு ஒழுங்கு முறைக்கு வரும்
ReplyDeleteஇன்றைய நிலையில் தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளிகளைவிட நன்றாக பாடம் நடத்துகிறார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். அதனால்தான் எல்லோரும் தனியார்துறையில் குழந்தைகளை சேர்க்க முனைகிறோம்.
ReplyDeleteதனியார் பள்ளிகளில் நாம் குவிவதால்தான் அவனவன் கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கிறான். அதையும் கட்டிவிடும் பணக்காரர் மத்தியில் கடன்படுவது ஏழைதான்.
தனியார் பள்ளிக் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தால் நல்லதுதான். ஆனால் பல தனியார் பள்ளிகளின் முதலாளிகள் அரசியல்வாதிகளே. அவர்கள் அரசுக்கு ஒரு ரசீதும் அன்பளிப்புக்கு ஒரு ரசீதும் இடுவார்கள். இதனால் அவர்களுக்கு இரட்டை லாபம்.
அரசு ஒரே கட்டணம் கொண்டு வருவதைவிட அரசுப் பள்ளிகளின் பாடம் நடத்தும் முறையில் மாற்றம் ஏற்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு இணையாக கொண்டுவந்தால் ஏழைக்கு கல்வி எட்டாக் கனியாகதே..? சத்துணவுக்காக புத்தக மூட்டை சுமப்பவன் சத்தான பாடத்தையும் மனதில் சுமப்பானே..!
கட்டணம் என்பதை ரத்து செய்துவிட வேண்டும்..,
ReplyDeleteதனியார் பள்ளிகளில் வசூலிக்கும் தொகையானது மிக மிக அதிகம்.அதை நெறி படுத்தாமல் இந்த அரசாங்கம் என்ன தான் செய்கிறது என்றே தெரியவில்லை. இன்றைய நிலையில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தினை அரசே நிர்ணயம் செய்வது மிக கட்டாயமானது.
ReplyDeleteவருகைதந்து கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteசேட்டைக்காரன்
அக்பர்
மகுடம்மோகன்
சிஷ்யா பிரதாப்
கட்டபொம்மன்
டிவி ராதாக்கிருஷ்ணன்
முனைவர்.இரா.குணசீலன்
விடிவெள்ளி
சிவசங்கர்
மெகருன்னிஷா
ராஜா
ராமலட்சுமி
சங்கர்
நாளும் நலமே விளையட்டும்
ஹுஸைனம்மா
தேனக்கா
சே.குமார்
டாக்டர் சுரேஷ் தல
அமுதா கிருஷ்ணா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
///தனியார் பள்ளிகளில் இருக்கும் கல்வித்தரம் , சுகாதாரம் , வசதிகள் அரசு பள்ளிகளில் இல்லை. அதனால் அவர்கள் அதிகம் பணம் வசூலிப்பதில் என்ன தவறு.///உண்மைதான்.கல்வித்தரம்,சுகாதாரம்,நல்லொழுக்கம்,இன்னும் பிற வசதிகள் தந்து மாணவர்களை நல்ல பிரஜைகளாக்கித்தரும் கல்வி நிறுவனம் தரம் வாய்ந்த நிறைய அனுபவமுள்ள ஆசிரியர்களை நியமித்தால் சம்பளமும் நிறையத்தரவேண்டியுள்ளது.ஆதலால் அவரவர்களே மனசாட்சியுடன் கட்டணங்களை நிர்மாணித்துக்கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து.
ReplyDeleteவாங்க ஸாதிகா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.