நீங்கள் கொடுக்கும் ஆதரவும் உங்கள் கருத்துக்களும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. அதற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய இந்த பதிவு, என்னில்இருந்து, உங்களுக்கு ஒரு வித்யாசமான அனுபவத்தை கொடுக்கும் என நம்புகின்றேன். இது எனது சிறிய முயற்சி. அது என்னவென்றால் ஒரு கேள்வியை இங்கு வெளியிடுவேன். அதற்கு உங்களிடமிருந்து பலதரப்பட்ட கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். இது வாரத்துக்கு ஒருதடவை இந்த பதிவு வெளியிடுவேன்.
முதலில் பெண்களிலிருந்து ஆரம்பிப்போம்.
கேள்வி :
பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.
இது என்னோட சிறிய முயற்சி.
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
//பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.//
ReplyDeleteகுடும்பம் வழி அமைத்துக் கொடுக்க வேண்டும், சமூகம் வரவேற்க வேண்டும்.
கோவி யை வழிமொழிகிறேன்
ReplyDelete//பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.//
ReplyDeleteஇரண்டுமேதான்னு நினைக்கிறேன். இதில் அண்ணன் கோவிகண்ணன் கருத்தை வழிமொழிகிறேன்.
இதுக்கு பெண்கள் பதில் சொன்னால் இதை விட சிறப்பாக இருக்கும்.
உங்கள் சார்பாக அனைவரையும் அழைக்கிறேன்.
பல குடும்பங்கள் சேர்ந்ததுதானே சமுதாயம், எனவே குடும்பம்.
ReplyDelete/// பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?. ///
ReplyDeleteஅருமையான சிந்தனை; நல்வாழ்த்துகள்
பெண்களுக்கு முதலில் அறிமுகமாவது குடும்பம்தான். பின்னர் தான் சமூகம். அவர்களை வழிநடத்துவது குடும்பம் தான்; சமூகம் வரவேற்று முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லவேண்டும்.
\\பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா //
ReplyDeleteசமுதாயத்தை பார்த்து குடும்பம் உதவினால் பெண்கள் முன்னேறலாம்.
குடும்பம்தான்....
ReplyDeleteபெண் உலகை அறிய மிகமுக்கியமான காரணமாய் இருப்பது குடும்பம்தான்.
சமூகமும் உதவி புரிந்தாலும் நீங்கள் ‘பெரிதும்’ எனக்குறிப்பிட்டதால் குடும்பம்தான் என ஆணித்தரமாக சொல்ல முடியும்.
//இதுக்கு பெண்கள் பதில் சொன்னால் இதை விட சிறப்பாக இருக்கும்//
அக்பர் சொன்னதை வழிமொழிகிறேன்...
குடும்பம்தான் சமுதாயம்தான் என அறுதியிட்டு சொல்லமுடியாதபடி ஒவ்வொருவர் அனுபவத்திலும் ஒவ்வொன்று முன் நிற்கும்.
ReplyDeleteஇங்கே கோவி.கண்ணன் சொல்லியிருப்பது அருமை. அதை வழிமொழிகிறேன்.
கண்டிப்பாக குடும்பம் தான். குடும்பம் வழிகாட்டுகிறது; சமூகம் வாய்ப்பளிக்கிறது.
ReplyDeleteகுடும்பம்தான்.... நிறைய கணவன்கள் மனைவியை படிக்க வைக்கிறார்கள்... இது வரவேற்கபட வேண்டியது.
ReplyDeleteசில தகப்பன்கள் சமூதாயத்தை காரணம் காட்டி... பெண் பிள்ளையின் படிப்பை நிறுத்தியதுண்டு.
எனவே குடும்பம்தான் என்பது என் கருத்து.
பதிவுக்கு...பாராட்டுக்கள்.
////பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.//
ReplyDeleteஎடுங்கய்யா சொம்பை...கூப்பிடுங்கய்யா நாட்டாமையை...
குடும்பமா சமூகமான்னு கேட்டா... குடும்பம்தான். பல குடும்பங்கள் ஒன்றுசேர்ந்ததுதானே குடும்பம்... குடும்பம் இல்லன்னா சமுதாயம் எப்படிவரும்...
தீர்ப்பு சொல்லியாச்சு இனி தீர்ப்பை மாத்தமுடியாது...
சமுகம் என்பது என் கருத்து..
ReplyDeleteகுடும்பம் தான் முதலில்.
ReplyDeleteஅடடா..புது யுத்தி.பட்டிமன்ற ஸ்டைலில்.தீர்ப்பு உண்டுதானே?வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.
ReplyDelete//பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.//அருமையான தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்?என்னை பொருத்த வரை பெரிதும் உதவியாக எல்லா வகையிலும் இருப்பது குடும்பம்..குடும்பம்..குடும்பம் தான்.உதாரணத்திற்கு என்னையே எடுத்துக்கொள்ளுங்கள்.நான் பிளாக்கில்,பத்திரிகையில்,இதர இணைய தளங்களில் எழுதி வருகிறேன்.வாசிக்கும் சமுதாயத்தினர் என் ஆக்ககங்களை வாசித்து கருத்துகளும் இட்டு வருகிறார்கள்தான்.ஆனால் இப்படி என்னை எழுதுவதற்கு சம்மதித்து,கணிணி முன் அமர்ந்து நேரத்தை கடத்தவும் என் குடும்பத்தினர் உதவுவதால்,சம்மதித்ததால்தானே என்னால் எழுத முடிகிறது.அவர்களின் சம்மதமின்மையும்.உதவியின்மையும் இருந்தால் என்னால் முடியுமா?
இது சிந்திக்க வேண்டிய கேள்வி...
ReplyDeleteஇதற்கு என் அமைச்சர் பதில் சொல்வார்; அந்தப்புரத்தில் மகாராணி அழைத்தது போலிருக்கு, நான் வருகிறேன்.
// பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.//
ReplyDeleteஎனக்கு தெரிஞ்சு "நாய்டு ஹால்"
//இது சிந்திக்க வேண்டிய கேள்வி...
ReplyDeleteஇதற்கு என் அமைச்சர் பதில் சொல்வார்; அந்தப்புரத்தில் மகாராணி அழைத்தது போலிருக்கு, நான் வருகிறேன்.//
சிந்திக்கவேண்டிய கேள்வின்னுட்டு அந்தபுரம் போனா எப்படி.
பெண்களையெல்லாம் அந்தபுரத்திலே அடைச்சு வச்ச உம்மை பிடிச்சி ஒரு கேஸ் போடணும்.
சமுகம் என்பது என் கருத்து..
ReplyDelete//பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.//
ReplyDeleteநான் என்ன புதுசா சொல்லிவிட போறேன்...குடும்பம் தான்
குடும்பம்தான். சந்தேகமே இல்லை
ReplyDeleteவேணும்னா பாப்பையா அவர்களுக்கு ஒரு போன் போட்டு கேட்ருவோம்:)
முதலில் குடும்பம் ...பின்பு சமுதாயம் ஸ்டார்ஜன்
ReplyDeleteகுடும்பம் ஆதரவாக இருந்தால் சமுதாயம் குறித்து கவலை வேண்டாம்; அதுவும் ஒருநாள் கைகொடுக்கும்.
ReplyDeleteவருகை தந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDelete//பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.//
ReplyDeleteகுடும்பம் வழி அமைத்துக் கொடுக்க வேண்டும், சமூகம் வரவேற்க வேண்டும்
குடும்பத்தில் ஆதரவு கிடைத்தாலே சமூகத்தில் முன்னேறலாம்.
ஹுஸைனாம்மா சொல்வதும் சரியே//
கோவிகண்ணன் சொல்வதும் சரியே
வருகைதந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட
ReplyDeleteஹூசைனம்மா
ஜலீலா
ஆகியோருக்கு என் நன்றிகள்