நேற்று என்பதிவு உங்களுக்கு புதிய அனுபவமாக இருந்திருக்கும் என நம்புகின்றேன். நேற்று நான் ஒரு கேள்வியை வெளியிட்டேன். அதற்கு நான் எதிர்பார்த்ததுபோலவே நீங்கள் பலதரப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை 21 பேர் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்காங்க. இன்னும் பலர் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவாங்க. உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி :
பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.
இந்த கேள்விக்கு பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது சமுதாயம்தான் என்று கூறியிருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு பெண் முன்னேற குடும்பத்தில் எவ்வளவுதான் உதவி செய்தாலும் சமுதாயம்தான் அங்கீகரிக்க வேண்டும். அவளுடைய நல்ல அந்தஸ்துகளை கொடுப்பது சமுதாயம் தான். ஒரு பெண், தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களையும் சமாளித்து சமூகத்திலும் தன் திறமையைக் கொண்டு திறம்பட செயலாற்றுகிறாள். இதனால் அவளை போற்றிக் கொண்டாடுகிறது. அவளுக்கென ஒரு அங்கீகாரத்தை வழங்குகிறது.
இதே சமூகம்தான் அந்த பெண் தவறிழைக்கும் போது அவளைத் தூற்றவும் செய்வது மிகுந்த வருத்தத்தை தருகிறது. அது ஏன் என்றே தெரியவில்லை. அவளும் பெண்தானே?. ஆணாவது எதாவது ஒருவகையில் தப்பித்துவிடுகிறான். அப்போது அவளுக்கு பெரிதும் ஆறுதலாயிருப்பது குடும்பம்தான். அவள் வாழ்க்கையில் மீண்டும் ஒரு வசந்தத்தை ஏற்படுத்தி கொடுப்பது வீட்டில் உள்ளவங்க தான். ஒரு பெண்ணுக்கு சமுதாயத்தை அறிமுகப்படுத்துவது குடும்பம்தான். ஒரு பெண் பிறந்து வளர்ந்து சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தை பெறுவதுவரை அவளுக்கு துணையாயிருந்து அவளுடைய கஷ்டங்களில் பங்கெடுப்பது அவளது குடும்பத்தில் உள்ள பெற்றோர்களும் அவளுடைய கணவனும் அவளுடைய குழந்தைகளும் தான்.
இந்த உண்மையை யாராலும் மறுக்க இயலாது. பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பம் தான் என்று நீங்கள் கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கருத்து வரவேற்கத்தக்கது.
இதுதான் என்னுடைய கருத்து. எனவே பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பம்தான் என்னுடைய கருத்தையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த கருத்தை வலியுறுத்தி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் பூங்கொத்து அளிக்கிறேன்.
மீண்டும் அடுத்தவாரம் வேறொரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன்.
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
நாட்டாமை தீர்ப்பு வந்துவிட்டது !
ReplyDelete:)
நாட்டமை தீர்ப்பு சூப்பர்
ReplyDeleteசாலமன் பாப்பையா , திண்டுக்கல் லியோனி நிலமை இனி கஷ்டம்தான்.
இதுக்கு தீர்ப்பெல்லாம் இல்லை
ReplyDeleteஇது ஒரு விவாதம்.. முடிவு எட்டமுடியாது
எனவே தீர்ப்பு சொல்லுவதை மறந்திடுங்க
பதிவுலெ ஒரு விவாதம் அருமை, நல்ல ஐடியா
பூங்கொத்து மட்டும்தானா :))
ReplyDeleteஉண்மைதான் நண்பரே..
ReplyDeleteநல்ல பகிர்வு.
அக்பர் நம்ம குரு இப்படியே போனா சரியா வராது... அவரோட சொம்பை தூக்கி ஒளிச்சு வச்சுருஙக...
ReplyDelete//மீண்டும் அடுத்தவாரம் வேறொரு கேள்வியுடன் உங்களை சந்திக்கிறேன்//
ReplyDeleteமறுபடியும் முதலேருந்தா.....
நாட்டமை தீர்ப்பு சரியே
ReplyDeleteநாஞ்சிலாரே உங்களுக்க்காக தொன்று தொட்டு தீர்ப்பு சொல்லும் சொம்பை ஒளித்து வைக்க முடியாது
தொடருங்கள்!
ReplyDeleteஎன்ன ஸ்டார்ஜன் சார்.நச் என்று ஒரு தீர்ப்பை வழங்காமல் இரண்டு தரப்பினரும் மனம் வருந்திவிடக்கூடாது என்று பார்த்து,பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி எல்லோரது வாயிலும் விழுகின்ற மாதிரி பதவிசான தீர்ப்பை வழங்கிவிட்டீர்கள்!!
ReplyDeleteஆஹா தீர்ப்பு வந்திருச்சா! என் மதியுக மந்திரியல்லவா நீங்க!! ககபோ...
ReplyDeleteஅடுத்த வாரம் என்ன கேள்வியோட
ReplyDeleteவரப்போறீங்க?
நீங்க கலக்குங்க தல..தீர்ப்பு நல்லா இருக்கு.
ReplyDeleteகுடும்பமே அனைவர் நலனுக்கும் உதவியாக உள்ளது. அதுவும் பெண் என்றால் அனைவரும் வீடுகட்டி அடிக்க வருவது உண்மை. நல்ல தீர்ப்பு.
ReplyDeleteunga blog romba nalla iruku
ReplyDeleteHigh Definition Youtube Video Download Free
visit 10 to 15 Website and EARN 5$
CineMa Tickets Booking Online
அடுத்த கேள்வி எப்போது??
ReplyDeleteநாட்டாம திர்ப்ப மாதி சொல்லுங்க ..
ReplyDeleteஎன் கருத்தை எழுதிட்டு நான் அப்புறம் யோசிச்சிட்டிருந்தேன். இதே கருத்தை எத்தனை பேர் சொல்வாங்களோன்னு! பரவாயில்லை, நானும் மெஜாரிட்டி பக்கம் தான்! ;-))
ReplyDeleteபதிவுலகத்தில் ஓரு விவாதம் மிக அருமை.
ReplyDeleteநிச்சயம் இரண்டிலும் பெண்களுக்கு ஆதரவு இருந்தா அதைவிட ஒரு பெண்ணுக்கு வேறு என்ன வேண்டும்.
ஒருகைதட்டிலான் ஓசையா இருகைதட்டினால் ஓசையா
மிக அருமை.. வாழ்த்துக்கள்
வருகைதந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட
ReplyDeleteகோவி.கண்ணன்
அக்பர்
அபுஅஃப்ஸர்
சைவகொத்துப்பரோட்டா
முனைவர்.இரா.குணசீலன்
நாஞ்சில் பிரதாப்
Jaleela
ராமலக்ஷ்மி
ஸாதிகா
கட்டபொம்மன்
NIZAMUDEEN
நாடோடி
Madurai Saravanan
henry J
gulf-tamilan
ROMEO
சேட்டைக்காரன்
அன்புடன் மலிக்கா
அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அட வாரா வாரமும் உண்டா வாழ்த்துக்கள் தொடருங்கள் ஸ்டார்ஜன் நல்ல முயற்சி
ReplyDeleteவாங்க தேனக்கா
ReplyDeleteஆமாக்கா, தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி