நேற்று நான் ஒரு கேள்வியை வெளியிட்டேன். அதற்கு நான் எதிர்பார்த்ததுபோலவே நீங்கள் பலதரப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை 21 பேர் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்காங்க. இன்னும் பலர் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவாங்க. உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி 3:
தனியார் பள்ளிக் கட்டணத்தை அவர்களே தீர்மானிப்பது சரியானதா?.. இல்லை அரசே கட்டணத்தை தீர்மானிப்பது சரியா?...
ஒரு குழந்தை கல்வியையும் அறிவையும் கற்றுக் கொள்ளும் ஒரு இடம் பள்ளிக்கூடம். ஒரு பெற்றோர், நாம்தான் படிக்கவில்லை; தன் குழந்தையாவது எல்லாவிதமான கலைகளையும் கற்று சமுதாயத்தில் பெரிய ஆளாக வரவேண்டும் என்றே விரும்புகின்றனர். அப்படி இருக்கும்போது அவர்கள் நல்ல கல்வி நிலையங்களை எங்கே என்று நாடிச் செல்கின்றனர்.
பெற்றோர்களின் இந்த மனநிலையை அறிந்த பெரும்பாலான தனியார் பள்ளிகள் தங்கள் இஷ்டத்துக்கு கல்விக்கட்டணத்தை பெற்றோர்களிடமிருந்து எவ்வளவு கறக்கமுடியுமோ அவ்வளத்தையும் கறக்கின்றனர். டொனேஷன், வளர்ச்சிநிதி, கல்விகட்டணம், அந்தபீஸூ, இந்தபீஸூ என்று நம்மிடம் கேட்பதை பார்க்கும்போது தலைசுற்றுகிறது. நடுத்தரவர்க்கத்தினர் பணத்துக்கு என்ன பண்ணுவார்கள். இப்பவே இப்படி இருந்தால் இனி வருங்காலத்தில் எப்படியோ?. இறைவன் அறிந்தவனாக இருக்கின்றான்.
அப்போ நீங்க கேட்கலாம்; பணத்துக்கு முடியாதவங்க ஏன் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கணும் என்று?.. அரசு பள்ளியில் கல்வி சரியில்லை. ஒருசில அரசு பள்ளிகளில் மட்டுமே அனைத்து ஆசிரியர்களும் வருகைதந்து பிள்ளைகளுக்கு நன்றாக சொல்லிக் கொடுக்கின்றனர்.
தனியார் கல்விநிறுவனங்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் வாதம் என்னவாக இருக்கும்?. நாங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குகிறோம். அதுமாதிரி இதர பழக்கவழக்கங்கள், பயிற்சிகள் கற்றுக் கொடுக்கிறோம். அதற்கு நாங்கள் திறமைவாய்ந்த ஆசிரியர்களுக்கு அவர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்கவேண்டும். பிள்ளைகளுக்கு அவர்களிடம் என்ன திறமைகள் உள்ளனஎன்பதை அறிந்து பாடம்சொல்லிக் கொடுத்து அவர்களை சமுதாயத்தில் சிறந்தவர்களாக ஆக்க நாங்கள் எவ்வளவு முயற்சி மேற்கொள்கிறோம் என்பதை யாரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.
நான் கேட்பது என்னவென்றால், நீங்கள் கல்விநிறுவனங்கள் ஆரம்பிக்கவேண்டும் என்றால் உங்கள் சொந்தப் பொறுப்பில் எல்லாவிதமான செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ளவேண்டும். பெற்றோர்களிடமிருந்து வசூல்செய்வது எந்த விதத்தில் நியாயமானது என்று நீங்களே சொல்லுங்கள். இதுதான் எல்லா தனியார் பள்ளிகளின் நிலையும்.
இதில் ஒருசில கல்விநிறுவனங்களை பாராட்டியே ஆகவேண்டும். அவர்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்று பிள்ளைகளை சமுதாயத்தில் சிறந்தவர்களாக ஆக்குகின்றனர். பெற்றோர்களிடமிருந்து அதிகமாக வசூலிப்பதில்லை.
ஒருசில அரசு பள்ளிகளை தவிர்த்து எல்லாப் பள்ளிகளைபற்றி கேட்கவே வேண்டாம். அரசு இந்த பள்ளிகளை தன்னுடைய நேரடி கண்காணிப்பில் வைத்து திறமையான ஆசிரியர்களை நியமித்து பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க முன்வரவேண்டும்.
அரசு இந்த கல்வியாண்டுமுதல் முதல்வகுப்பு முதல் ஆறாம்வகுப்பு வரை சமச்சீர் கல்விமுறையை அறிவித்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதுபோல தனியார் பள்ளிகளுக்கு பாதகமில்லாமல் கல்விகட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும்.
இதுதான் இன்றைய வாழ்க்கை நடைமுறை.
மீண்டும் அடுத்தவாரம் வேறொரு கேள்வியுடன் உங்களை சந்திக்கின்றேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
,
கல்வி , மருத்துவம் இரண்டையும் இலவசமாக்கினாலே பிரச்சினைகளும் பெரும்பாலான பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் ..
ReplyDeleteஇப்போதைக்கு பிரசன்ட் போட்டுக்கிறேன்.
ReplyDeleteஅனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கிவிட்டு பள்ளி நிர்வாகி என்பதனை தனி பதவியாக்கி விரும்பினால் அந்தப் பதவியில் தொடரச் சொல்லி ஒரு சம்பளத்தைக் கொடுக்கலாம். ஏனென்றால் பள்ளி ஆரம்பிப்பதே சேவை செய்யத்தானே..,
ReplyDeleteஇப்ப எல்லாம் பள்ளி தொடங்குவதே, ஒரு "வியாபாரம்" என்ற நோக்கத்திலே இருக்கு நண்பா,
ReplyDeleteஅரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
அறிவுக்கண்ணைத்திறக்க அளவில்லாமல்கேட்கப்படும் தொகை
ReplyDeleteஅநியாயம்தான்.
அரசு தீர்மானிக்கவேண்டும் நியாயமாக..
கேள்வியும் சூப்பர், உங்கள் பதிலும் சூப்பர்..
ReplyDelete/தனியார் பள்ளிக் கட்டணத்தை அவர்களே தீர்மானிப்பது சரியானதா?.. இல்லை அரசே கட்டணத்தை தீர்மானிப்பது சரியா?...//
ReplyDeleteஎப்படி தீர்மானித்து குறைக்கிறார்கள் என்றாலும் 'டொனேசன்' என்ற பெயரில் பெற்றோர்களிடம் வாங்குவதற்கு எந்த பற்றுச் சீட்டும் தரமாட்டார்கள், அவர்களுக்கெல்லாம் ஒரு வாசல் மூடினால் பல ஜன்னல்கள் திறக்கும்
அலசல் நன்று.
ReplyDeleteகோவி.கண்ணன் சொல்லியிருப்பதும் வருத்தந்தரும் உண்மையே:(!
உறவினர் இந்த வருடம் ஊரில் (KK Dist) போய் செட்டிலாகப் போகிறார். எட்டாம் வகுப்புக்கு பல பள்ளிகளில் குறிப்பிட்டுள்ள (பில்லில்லாத) டொனேஷன் தொகைகள்: 20,000 முதல் 50,000 வரை!! இதில் கல்விக் கடவுளின் பள்ளிக்குத்தான் அதிகபட்ச ரேட்டாம்!!
ReplyDeleteவாங்க கிருஷ்ணா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க அக்பர்
ReplyDeleteகமெண்ட் எங்கே?.
விவரமான பதில் அருமை.
ReplyDeleteகேள்விகளுக்குக் கிடைத்த பதில்களின் சாரத்தோடு, உங்களது கருத்தையும் அழகாய் வெளியிட்டிருக்கிறீர்கள் அண்ணே! இது போல தொடர்ந்து விவாதிக்கலாம்!
ReplyDeleteவாங்க டாக்டர் தல
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சைவகொத்துப்பரோட்டா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க மலிக்கா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஸ்டீபன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க கண்ணன் அண்ணே
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஹூசைனம்மா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஸாதிகா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சேட்டைக்காரன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி