சென்ற வாரம் நீங்கள் ஆவலுடன் பங்கெடுத்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட கேள்விக்கு உங்கள் பதில் பதிவுஇடுகை உங்களின் அமோக ஆதரவினால் இந்த வாரமும் கேள்விக்கு உங்கள் பதில் இடுகையில் கேள்வியை வெளியிடுகிறேன்.
கேள்வி 2 :
போலிச்சாமியார், போலி விளம்பரங்கள் இப்படி போலியான விஷயங்களை மக்கள் அதிகமாக விரும்புவதேன்? குறிப்பாக பெண்கள் விரைவில் ஏமாறுவதேன்?...
சென்ற வாரம் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது போல இந்த கேள்விக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இன்று மகளிர் தினம்.
பெண்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேற நம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.
அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.
,
பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும்தான், குறுகிய காலத்தில் எப்படியாவது,
ReplyDeleteசெல்வம் சேர்க்க வேண்டும் என்ற பேராசையும், மனதை கவரும் பேச்சுகளில் ஈர்க்க பட்டு
சிந்திக்க மறுப்பதுமே ஏமாற காரணம் என நினைக்கிறேன்.
பொருளாசையினால்தான்.///பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும்தான்///இருந்தாலும் பெண்கள்தான் அதிகளவில் என்பதை மறுக்க இயலாது.
ReplyDeleteமுன்னேயெல்லாம் கல்யாணப்பொண்ணுக்கு அம்மா,அக்கா தான் அலங்காரம் பண்ணுவாங்க! இப்போ அதுக்குன்னே கூலிக்கு ஆள் கிடைக்கிறாங்க! இது கவரிங் யுகம்! மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்று தெரிந்தும் முண்டியடித்து வாங்கி அலர்ஜியாகி அவஸ்தைப்படுறாங்க!
ReplyDeleteபோலிகளை கண்டு ஏமாறுவதில் பெண்களைவிட ஆண்கள்தான் முந்துகிறார்கள்.
ReplyDeleteஆனால் ஆண்களுக்கு பொருளாராத பாதிப்பு மட்டும்தான். ஆனால் பெண்கள் உடல் , மன ரீதியாக அதிகம் பாதிப்படைகிறார்கள்.
படித்தவர்களும் இந்த மாதிரி அறியாமையில் சிக்கிக்கொண்டாளும் படிக்காதவர்களே இதில் அதிகம்.
அனைவருக்கும் தேவை அடிப்படை கல்வியறிவு. மற்றும் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வு.
என்னத்தல.. இப்படில்லாம் கேள்வி கேட்டு நம்மமக்களை இன்சல்ட் பண்ணக்கூடாது...
ReplyDeleteநான் வெளிநடப்பு செய்கிறேன்...
வாங்க பிரதாப்
ReplyDelete///என்னத்தல.. இப்படில்லாம் கேள்வி கேட்டு நம்மமக்களை இன்சல்ட் பண்ணக்கூடாது...
நான் வெளிநடப்பு செய்கிறேன்...///
என்னத்தல.. இப்படி சொல்லி என்னை இன்சல்ட் பண்ணிட்டீங்களே !!
இது ஒரு நல்ல கேள்வி. சமுதாயத்துக்கு ஏற்ற சிந்தனை; இது எல்லா கால கட்டத்துக்கும் பொருந்தும் ஒரு நல்ல சிந்தனை.
ReplyDeleteபோலியான விஷயங்களை தான் மனிதமனம் ரொம்பவே விரும்புது. பேராசை, பொருளை விற்கிறவர் பண்ணும் கவர்ச்சி இதெல்லாம்தான் மனம் மாறுவதற்கு முக்கிய காரணம். இது ஆண்/பெண் இருவருக்கும் ரொம்பவே பொருந்தும். இந்த விஷயம் ஒரு முடிவு பெறாமல் நீண்டு கொண்டே போகுமே தவிர அவ்வளவு ஈசியா முடியாது.
/// நாஞ்சில் பிரதாப் said...
ReplyDeleteஎன்னத்தல.. இப்படில்லாம் கேள்வி கேட்டு நம்மமக்களை இன்சல்ட் பண்ணக்கூடாது...
நான் வெளிநடப்பு செய்கிறேன்... ///
ஏன் பிரதாப் சார், அவர் ஏதோ எழுதுறார்; நமக்கு பிடிக்கலைன்னா பேசாம போயிர வேண்டியதுதானே... எதுக்கு இதெல்லாம்?...
எல்லோரும்தான் ஏமாந்து போறாங்க இதுல ஆண் என்ன பெண் என்ன ஸ்டார்ஜன்
ReplyDeleteபோலியான விஷயங்களை மக்கள் ரொம்பவே ஈர்க்க காரணம், பெரும்பாலும் மக்களோட அறியாமையே காரணம் என்று அடித்து சொல்லலாம். அதுபோக நாம் அடுத்தவன் என்ன செய்கிறான் என்றுபார்த்து அதுபோல நாமும் செய்யும் போது விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. பொறாமை, பொருளாசை, அவசரபுத்தி, இது ஆண்/பெண் இருவருக்குமே பொருந்தும்.
ReplyDeleteஆசை!! இருப்பதைக் கொண்டு திருப்திப்படாமல், இன்னும், இன்னும் என்று (பணத்தை மட்டும்) தேடும்போது இந்நிலை ஏற்படுகிறது எனலாம்!!
ReplyDeleteஅவ்வாறு தேடும் சமயங்களில் இழக்கும் நட்பு, உறவுகளுக்கு ஒரு மாற்று தேடும்போது இம்மாதிரியானவர்களின் வலையில் வீழ்ந்து விடுகின்றனரோ என்னவோ?
அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகை தந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்
ReplyDeleteசைவகொத்துப்பரோட்டா
ஸாதிகா
சேட்டைக்காரன்
அக்பர்
நாஞ்சில் பிரதாப்
ராஜா
தேனம்மை அக்கா
கட்டபொம்மன்
ஹூசைனம்மா
தியாவின் பேனா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி