நேற்றைய பதிவான கேள்விக்கு உங்கள் பதில் 2 உங்களுக்கு புதிய அனுபவமாக இருந்திருக்கும் என நம்புகின்றேன். நேற்று நான் ஒரு கேள்வியை வெளியிட்டேன். அதற்கு நான் எதிர்பார்த்ததுபோலவே நீங்கள் பலதரப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் பலர் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவாங்க. உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி 2 :
போலிச்சாமியார், போலி விளம்பரங்கள் இப்படி போலியான விஷயங்களை மக்கள் அதிகமாக விரும்புவதேன்? குறிப்பாக பெண்கள் விரைவில் ஏமாறுவதேன்?...
இந்த கேள்விக்கு பதில் சொல்வது என்பது ஒரு சிக்கலான காரியம் . இது போன்ற போலியான விஷயங்களை மக்கள் நாடுவதுக்கு முழுக்க முழுக்க காரணம் மக்களோட அறியாமைதான். மக்கள் ஒவ்வொருத்தருக்கும் பலவிதமான சூழ்நிலைகள், கஷ்டங்கள் இப்படி ஒவ்வொருத்தருக்கும் பல பிரச்சனைகள் இருக்கின்றன.
மக்களின் இந்த பலவீனத்தை பயன்படுத்தி தான் ஒவ்வொரு சாமியாரும் ஆசிரமம் என்ற பெயரில் ஆரம்பித்து மக்களிடம் பணம் பறிக்கிறார்கள். இதுமாதிரிதான் போலி டாக்டர்களும் பணம் பறிக்கின்றனர். இவர்களை நாடி செல்லும் மக்கள் , தங்கள் பிரச்சனைகள், நோய்களை தீர்த்து வைப்பார்கள் என்ற நப்பாசையில் செல்கிறார்கள். ஆனால் நடப்பதோ வேறுமாதிரி. சாமியார் விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் ஏமாறுகிறார்கள்.
ஆண்களை பொறுத்தவரை பணம்சம்பந்தமான விஷயங்களில் அதிகம் ஏமாறுகிறார்கள். உதாரணத்துக்கு போலி சிட்பண்ட், மற்றும் மோசடிக் கும்பல்களிடம் வசமாக சிக்கிக் கொள்கின்றனர். போலி நிறுவனங்களை நடத்துவருபவர் மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து மக்களை தங்கள் வலைகளில் விழவைக்கின்றனர்.
எனக்கு தெரிந்த எத்தனையோபேர் இப்படித்தான் ஏமாந்து போயுள்ளனர்.
பெண்களும் இந்தமாதிரி அதிகமாக ஏமாறுகின்றனர். நாம் அடுத்தவன் என்ன செய்கிறான் என்றுபார்த்து அதுபோல நாமும் செய்யும் போது விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. பொறாமை, பொருளாசை, அவசரபுத்தி, பேராசை இது ஆண்/பெண் இருவருக்குமே பொருந்தும்.
இதெல்லாம் மக்களின் மனநிலையை பொறுத்து மாறுபடும். எனவே இந்த விஷயம் ஒரு முடிவு பெறாமல் நீண்டு கொண்டே போகுமே தவிர அவ்வளவு ஈசியா முடியாது.
இந்த விஷயங்களில் நாம் விழிப்புணர்ச்சியுடன் நடந்து நம்மை நாமே பாதுகாக்க வேண்டும். இதற்கு அரசாங்கமும் மக்களுக்கு உதவி செய்யவேண்டும். தமிழக அரசு இப்போது கண்காணிப்பு குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.
போலியான விளம்பரங்கள், போலி நிறுவனங்களை மக்கள் சரியாக அடையாளம் கண்டுகொள்ள விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.
உங்கள் மேலான கருத்துகளை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
,
நல்ல தீர்ப்பு சேக்.
ReplyDeleteஅருமையான கருத்துகள்.
ஏமாறாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால் வாழ்க்கையே பாதிக்கிற அளவு கண்மூடித்தனமா ஏமாறக்கூடாது.
இனியாவது மாறுமா நமது சமுதாயம் என்று பார்ப்போம் !
ReplyDeleteநல்ல சிந்தனை கருத்துகள்.வாழ்த்துக்கள் !
ஆமாங்க, ஆமாங்க...
ReplyDeleteஏமாறாமல் இருந்தால் பல பேர் வாழ்க்கையை
ReplyDeleteஓட்டுவது கஷ்டம்......
நாட்டாமையின் தீர்ப்பு ஏற்று கொள்ள பட்டது :))
ReplyDeleteதீர்வு சொல்லியிருக்கும் விதம் அருமை..ஸ்டார்ஜன். தொடருங்கள்...
ReplyDelete//போலிச்சாமியார், போலி விளம்பரங்கள் இப்படி போலியான விஷயங்களை மக்கள் அதிகமாக விரும்புவதேன்? குறிப்பாக பெண்கள் விரைவில் ஏமாறுவதேன்?...//
ReplyDeleteநம்பிக்கைகள் இதில் நிருபனத்திற்கு வழியே இல்லாதது இறை நம்பிக்கை. இதை வைத்து ஆண்களும் ஏமாற்றப்படுகிறார்கள், பெண்களும் ஏமாற்றப்படுகிறார்கள். ஆண்கள் ஏமாறுவது ஒரு சமூகத்தின் ஏமாற்றம், பெண்கள் ஏமாறுவது ஒரு குடும்பத்தின் ஏமாற்றம்.
நல்ல அருமையான விளக்கங்கள். இதுபோன்று நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அருமையான சிந்தனை; தொடரட்டும் உங்கள் சேவை... வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல சிந்தனை கருத்துகள்
ReplyDeleteஉண்மை ஸ்டார்ஜன் விழ்ப்புணர்ச்சிதான் இப்போ தேவை
ReplyDeleteநல்ல அலசல்.
ReplyDeleteவாங்க அக்பர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteவாங்க சங்கர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க பழமைபேசி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஜெட்லி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சைவகொத்துப்பரோட்டா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க நாடோடி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க கண்ணன் அண்ணே
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ராஜா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க கடையம் ராஜா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க தேனம்மை அக்கா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க கட்டபொம்மன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நல்ல அருமையான பகிர்வு,
ReplyDeleteநல்ல வாழ்க்கை துணை அமையாதவர்கள் இப்படி நிலை தடுமாறி ஏமார்ந்து விடுகிறார்கள்.
வாங்க ஜலீலா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி