Pages

Wednesday, July 7, 2010

தங்க ராஜா - தொடர் இடுகை

ஸாதிகா அக்கா என்னை ஒரு தொடர் இடுகைக்கு அழைத்திருந்தார். அவருக்கு என் நன்றிகள்.


ஒரு பெரிய தங்க கடையில் உள்ளே நுழைந்து வேண்டிய மட்டும் ஃப்ரீயாக அள்ளிக்கொளுங்கள் எனும் பொழுது வரும் ஸ்டார்ஜனின் அனுபவம்..


* முதலில் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.

* இப்போது தங்கம் விற்கும் விலையில் ஒரு பெரிய தங்கநகை கடையில் எல்லாம் ப்ரீயா கிடைக்குதுன்னா கேட்கவா வேணும். ஆனந்தம் ஆனந்தம்.

* தங்கநகைக் கடையில் ப்ரீயாக என்றால் நான் அந்த நகையில் உள்ள எல்லாவற்றையும் நானே எடுத்துக் கொள்வேன்.

* நான் கடையில் உள்ள எல்லாத்தையும் எடுத்தப்பிறகு கடைக்காரரிடமிருந்து கடையை வாங்கிக் கொள்வேன்.

* என்மனைவி, எங்கம்மா, என்தங்கைக்கு வேண்டியதை மட்டும் கொடுப்பேன்.

* கஷ்டப்படுகிறவர்களுக்கும் ஏழைஎளியவங்களுக்கும் விலையை குறைத்து கொடுப்பேன். செய்கூலி, சேதாரத்தில் நியாயமாக உள்ள ப்ரசன்டேஜ் மட்டும் அவர்களிடம் வாங்குவேன்.

* எல்லோரும் தங்கம் வாங்கவேண்டும்; கனவு நனவாகவேண்டும். விலையை குறைக்க தங்க நகைக்கடை உரிமையாளர் கூட்டத்தில் வலியுறுத்துவேன்.

* நகைக்கடையில் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு செல்லும் இளம்பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்ளமாட்டேன். கஷ்டப்படும் குடும்பங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

* அந்த பெண்கள் படித்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும். ட்ரஸ்ட் ஆரம்பித்து அவர்கள் படிக்க வழிசெய்வேன்.

* வலைஉலக நட்புகளுக்கு செய்கூலி,சேதாரம் இல்லாமல் விற்பனை செய்வேன்.

* கலப்படமில்லாத சுத்தமான தங்க நகைகளைதான் விற்பனை செய்வேன். அநியாயவிலைக்கு நகைகளை விற்கமாட்டேன்.

* இப்படி ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துவேன்.


**************



இந்த இடுகையை குட்பிளாக்ஸ் பகுதியில் தேர்ந்தெடுத்த யூத்புல் விகடன் ஆசிரியர் அவர்களுக்கும் விகடன் குழுவினருக்கும் என் நன்றிகள்.

,

Post Comment

29 comments:

  1. * என்மனைவி, எங்கம்மா, என்தங்கைக்கு வேண்டியதை மட்டும் கொடுப்பேன்.

    அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. //என்மனைவி, எங்கம்மா, என்தங்கைக்கு வேண்டியதை மட்டும் கொடுப்பேன்.//

    கொடுத்ததுக்கப்புறம் ஏதாச்சும் மிச்சம் இருக்குமா???? :))

    இந்த சந்தோசத்துல எனக்குத் திருப்பி தரவேண்டிய 50 பவுனை மறந்துடாதீங்க குரு...

    ReplyDelete
  3. தமிழிஷ்ல் இணைக்கமுடியவில்லை. ஒர்க் ஆகலை. ஒர்க் ஆச்சின்னா யாராவது இணைச்சிருங்க‌

    ReplyDelete
  4. //நான் கடையில் உள்ள எல்லாத்தையும் எடுத்தப்பிறகு கடைக்காரரிடமிருந்து கடையை வாங்கிக் கொள்வேன்.//

    இது சூப்பர்...!!

    உதவ வேண்டும் என்று நினைக்கிற உங்கள் மனதுக்கு ஒரு ராயல் சல்யூட் !!

    ReplyDelete
  5. //தமிழிஷ்ல் இணைக்கமுடியவில்லை. ஒர்க் ஆகலை. ஒர்க் ஆச்சின்னா யாராவது இணைச்சிருங்க‌//


    இங்கும் அதே நிலைதான். தமிளிஷை காணவே இல்லை..?! நேற்று பிளாக்கர் படுத்தியது ... இன்று தமிளிஷ்.... என்னவோ போங்க....

    ReplyDelete
  6. வாங்க அபுல்பசர் @ ரொம்ப நன்றி. உங்கள் பாராட்டு எனக்கு சந்தோசமாக இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  7. //நாஞ்சில் பிரதாப் said...

    இந்த சந்தோசத்துல எனக்குத் திருப்பி தரவேண்டிய 50 பவுனை மறந்துடாதீங்க குரு...//

    வாங்க சிஷ்யா @ ரொம்ப சந்தோசம். உங்க குரு கொஞ்சம் கஷ்டத்துல இருக்கேன். நீங்க எனக்கு இன்னும் 100 பவுன் கடன் கொடுங்க. நா உங்களுக்கு கொடுக்கவேண்டிய 50 பவுனை தருகிறேன். :)))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  8. அந்த பெண்கள் படித்து வாழ்க்கை முன்னேறச் செய்வேன் என்று சொன்னது சூப்பர். நல்ல கொள்கைகள் ஸ்டார்ஜன். வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. நல்ல ஆசைகள்தான் , நிறைவேற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அதென்ன அது 50-100 பவுன் என்று பேசிக்கிறீங்க சார்? அவங்கவங்க கிலோ கணக்கில் பேசிக்கொண்டிருக்கும் போது... நல்ல இடுகை ...

    ReplyDelete
  11. தமிலிஷ் கண்ணுக்கே தெரியலையே..!!

    ReplyDelete
  12. ஆஹா..இனி நகைக்கடை முதலாளிதான் ஸ்டார்ஜன் சார்.ரொம்ப அருமையா,இத்தனை விரைவாகவும் எழுதி இருக்கீங்க.மிக்க நன்றி.//* என்மனைவி, எங்கம்மா, என்தங்கைக்கு வேண்டியதை மட்டும் கொடுப்பேன்.
    // ஹப்பா..குடும்பத்தின் மேலுள்ள கடலளவு பாசம் என்பது இதுதானோ?

    ReplyDelete
  13. ஸ்டார்ஜன் ,//
    * அந்த பெண்கள் படித்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும். ட்ரஸ்ட் ஆரம்பித்து அவர்கள் படிக்க வழிசெய்வேன்.// உங்கள் மனித நேயத்திற்கு ஒரு சல்யூட்.

    ReplyDelete
  14. கூடவே வலைஉலக நட்புகளுக்கு செய்கூலி,சேதாரம் இல்லாமல் விற்பனை செய்வேன் என்றும் போட்டு இருக்கலாம்.

    ReplyDelete
  15. இப்போ தங்கம் அணியும் நாகரீகம் குறைந்துகொண்டுதானே வருகிறது.
    என்றாலும் அளவான ஆசைகள் உங்களுக்கு.

    ReplyDelete
  16. வலையுலக சகோதரிகளுக்கும் ஏதாவது தங்கம் கொடுக்கிற ஐடியா இருக்கா :-))

    ReplyDelete
  17. ஸ்டார்ஜன்....

    ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.

    ReplyDelete
  18. குருவும் சிஷ்ய‌னும் ச‌ண்டை போட்டுகிற‌துல‌ என‌க்கு கொடுக்க‌ வேண்டிய‌ 100 ப‌வுனை ம‌ற‌ந்திடாதீங்க‌ ஸ்டார்ஜ‌ன்.. ஆமா சொல்லிப்புட்டேன்..

    ReplyDelete
  19. //கஷ்டப்படுகிறவர்களுக்கும் ஏழைஎளியவங்களுக்கும் விலையை குறைத்து கொடுப்பேன். //

    நம்பிட்டேன் நண்பரே

    ReplyDelete
  20. வாங்க கௌசல்யா @ ரொம்ப ரொம்ப நன்றி.. உங்கள் பாராட்டுக்கள் மகிழ்ச்சியாக உள்ளது.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  21. வாங்க அக்பர் @ ரொம்ப மகிழ்ச்சி.. பாராட்டுக்கு மிக்க நன்றி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  22. வாங்க ஜெய்லானி @ ரொம்ப மகிழ்ச்சி.. வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  23. வலைஉலக நட்புகளுக்கு செய்கூலி,சேதாரம் இல்லாமல் விற்பனை செய்வேன்.//

    இது கேக்க ரொம்ப நல்லா இருக்கே ஸ்டார்ஜன்..:)) முதல்ல என்கிட்டே சொல்லிடுங்க..:))

    ReplyDelete
  24. ஆமா,, எழுதச் சொன்னவங்களுக்கு ஏது மில்லையா??

    ReplyDelete
  25. * வலைஉலக நட்புகளுக்கு செய்கூலி,சேதாரம் இல்லாமல் விற்பனை செய்வேன்.


    .... "தங்கமான" மனசு.

    ReplyDelete
  26. அனக்கு ஒண்ணும் கிடையாதா ஸ்டார்ஜன் - அன்பு மட்டும் தானா - சரி சரி - உண்மையாகவே இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நாம் என்ன செய்வோம் - யாராலும் இப்பொழுது சொல்ல இயலாது.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  27. ஆசை நிறைவேற வாழ்த்துகள்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்