Pages

Saturday, July 24, 2010

ஜபல் கராஹ்வில் ஒரு பதிவர் சந்திப்பு

அன்புள்ள நண்பர்களே!! வியாழன் இரவு கொஞ்சம் வேலை இருந்தது. நம்ம நண்பர் சரவணக்குமார் அப்போது அலைபேசியில் எங்களை தொடர்பு கொண்டு பேசினார். அவர் பேசும்போது எங்கள் இடத்துக்கு கவிஞர் பா.ரா. அண்ணன் அவர்கள் வந்துள்ளார்கள். நாளைக்கு வெள்ளிக்கிழமை பாரா அண்ணனை
அழைத்துக்கொண்டு
ஹஸா வந்து விடுகிறோம் என்று சொன்னார். உடனே எனக்கும் அக்பருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை.


(வலமிருந்து அக்பர், ஆறுமுகம், ஸ்டார்ஜன், சரவணக்குமார், முடிவிலி சங்கர், அக்பரின் தம்பி, அக்பர் மச்சினன்)


ரொம்ப நாளாக பாரா அண்ணனை சந்திக்கவேண்டும் என்ற ஆவல். அதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்தது. பாரா அண்ணன், ஜூபைலில் இருக்கும் நண்பர் முடிவிலி சங்கர், கவிஞரும் நண்பருமான ஆறுமுகம் முருகேசன் மற்றும் நண்பர் சரவணக்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை சந்திக்க வருகிறார்கள் என்ற செய்தி எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை நானும், அக்பரும், அக்பரின் தம்பி, அக்பரின் மச்சினனும் வியாழன் இரவே திட்டமிட்டோம்.

(நானும் ஆறுமுகம் முருகேசனும்)


காலையில் 9 மணிக்கு எழுந்து பிரியாணி செய்து சாப்பிட ஏற்பாடு செய்தோம். நண்பர்கள் அனைவரும் சொன்னதுபோல பகல் 12 மணிக்கு வந்து எங்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார்கள். சிறிது நேரம் பேசிவிட்டு 1 மணிக்கு சாப்பிட்டு 2 மணிக்கு எங்கள் பகுதியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மணல்களால் ஆன மணற்குன்று, குகையை காண எல்லோரும் கிளம்பினோம்.

ஜபல் கராஹ்_ வை பற்றிய ஒரு பார்வை.


ஜபல் கராஹ்_ ஒரு சுற்றுலாத்தளமாகும். இது அல் ஹசா ஹபூப் சிட்டியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இது பழைமை வாய்ந்த மணற்குன்றுகளால் ஆன மணற்குகை. இங்கு வித்யாசமான குகைகளையும் சிறிய சிறிய மலைகளால் ஆனது. இந்த இடத்துக்கு பெயர் அல் கராஹ். மலைகளால் சூழ்ந்துள்ளதால் இந்த இடத்துக்கு ஜபல் அல் கராஹ் என்ற பெயர் பெற்றது. மற்ற இடங்களில் எவ்வளவுதான் சூரியன் சுட்டெரித்தாலும் இங்கு வெயிலே தெரியாத அளவுக்கு குளுமையான இடம். இதை நாங்கள் குளுமையின் உணர்வை நன்றாக அனுபவித்தோம். அதனால் இங்குள்ள வெளிநாட்டினரும் அரபிகளும் அடிக்கடி இந்த இடத்துக்கு வந்துவிடுவார்கள். வெள்ளிக்கிழமையானால் எல்லோரும் இந்த ஜபல் கராவுக்கு கிளம்பி விடுவார்கள்.


ஜபல் காரா_ கடல் மட்டத்திலிருந்து 225 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. புகைப்பட கலைஞர்களின் கலை ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதத்தில் விதவிதமான வடிவங்களில் குகைகளும், மணற்குன்றுகளும் பார்க்க பார்க்க ரொம்ப பரவசமாக இருக்கும். நாம் இந்த மலைகளின் மேல ஏறி நடந்து செல்லலாம். வெயிலில் நாம் பார்க்கும்போது தங்கம்போல பிரகாசிக்கும். வித்யாசமான கலர்களில் பார்க்க பார்க்க பரவசமாக இருக்கும்.

இங்குள்ள பாறைகள் குன்றுகள் எல்லாம் உயரமாக, செங்குத்தாக உள்ளது. குகையின் உள்ளே சூரியன் தனது ஒளிக்கற்றையை உள்ளே செலுத்தி பார்க்க ரொம்ப அழகாக் உள்ளது. நீங்களும் படங்களில் கண்டுகளியுங்கள்.


நம் நாட்டிலுள்ள ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைபிரதேசம். இங்குள்ள சவுதிகளுக்கு நீரோடை, பூங்கா, மலைப்பிரதேசம் என்றால் ரொம்ப கொள்ளை பிரியம். இங்குள்ளவர்கள் இயற்கைக்கு ரொம்ப ஏங்குகிறார்கள். அதனால்தான் செலவையும் பொருட்படுத்தாமல் பல வெளிநாடுகளுக்கு வருடம்தோறும் சுற்றுலா செல்கிறார்கள். சவுதி அரசாங்கமும் தங்கள் பங்குக்கு நகரமெங்கும் செயற்கை புல்வெளிகள், நீரூற்றுகள், பூங்காக்கள் அமைத்து வெயிலின் தாகத்தை ஓரளவுக்கு பூர்த்தி செய்கிறார்கள்.

********

நண்பர் ஆறுமுகம் முருகேசனின் காரில் எல்லோரும் சரியாக 2 மணிக்கு கிளம்பினோம். நானும் அக்பரும் இதற்கு முன்னர் ஜபல் கராஹ்_ க்கு இரண்டு மூன்று தடவை சென்றிருக்கிறோம். ஆனால் இப்போது செல்லும்போது வழியெங்கும் சாலைகள் எல்லாம் சீர்படுத்தி எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வைத்தது சவுதி அரசாங்கம். இருந்தாலும் இடையிடையே வழிக்கேட்டு சென்றது எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. ரொம்ப சுவாரசியமாக இருந்தது. ஒருவழியாக ஜபல் கராஹ்_ வை அடைந்தோம்.

உள்ளே செல்ல செல்ல ஆர்வம் மிகுதியானது. செல்ல முடியாத அளவுக்கு சிறிய சிறிய இடுக்குகளில் எங்கள் உடம்பை செலுத்தி உள்ளே சென்றோம்.
எல்லா இடத்துக்கும் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு கிளம்பினோம். வரும்போது மலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் பகுதியையும் பார்வையிட்டோம். எனக்கும் அக்பருக்கும் வேலை இருந்ததால் மாலை 4.30 மணிக்கு திரும்பினோம்.

நேற்றைய பொழுது ரொம்ப சந்தோசமாக இனிமையாக கழிந்தது.

வீடியோ காண..

Post Comment

31 comments:

 1. அக்பரின் பதிவில் படித்தேன் ... நல்ல சந்திப்பு நல்ல பகிர்வு

  ReplyDelete
 2. மறக்க முடியாத அற்புதமான தருணம் அது.

  அருமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

  மிக்க நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 3. ஆஹா கமெண்ட் மாடுரேஷனா? ரைட்டு.. அப்ப நோ கும்மி..

  அக்பர் பதிவுல மீட் பண்ணுவோம்..

  சீக்கிரம் வாங்க.

  ReplyDelete
 4. //மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் பகுதியையும் பார்வையிட்டோம்//
  யாரும் சாகசம் செய்யலையா ?
  நல்ல பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 5. வாங்க ராம்ஜீ அண்ணே @ அன்புச்செல்வனின் அன்பினால் வெளியிடமுடியவில்லை. மற்றவை நலம் நலமறிய ஆவல்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 6. வாங்க கார்த்திக் @ ரொம்ப நன்றி

  ReplyDelete
 7. வாங்க ஆசியாக்கா @ ரொம்ப நன்றி

  ReplyDelete
 8. //விஷமிகள் விஷத்தை கக்காமல் இருக்க இந்த மாறுதல்//

  hahahha... ரொம்ப அடிவாங்கிருப்பீங்க போல... சீக்கிரம் அக்பர் பதிவுக்கு வாங்க குரு

  ReplyDelete
 9. நேசத்தின் பிணைப்பை அருவிபோல் நெகிழ்ச்சியாக வழிந்து விட்டுருக்கிறீர்கள் ஸ்டார்ஜன் அண்ணா.

  :)))

  ReplyDelete
 10. nanbarkal santhippum... jabal patriya ungal kurippum miga arumai...

  anaivaraiyum photovil parththtathu mikka makizhchi...

  amaa... pa.ra. anna enga? photovil missing?

  ReplyDelete
 11. போட்டோ எல்லாம் ந‌ல்லா இருக்கு ஸ்டார்ஜ‌ன்..

  ReplyDelete
 12. ஆஹா,

  இதுவல்லோ ஸ்டார்ஜன்!

  இவ்வளவு டீட்டெயில் எங்கிருந்துங்க கலக்ட் பண்ணீங்க?

  யம்மா! :-)

  ராம்ஜி,

  //does he want to hide//

  ஆம் ராம்ஜி. எழுத்தின் பின்புறம்.

  ReplyDelete
 13. நல்லாருக்குது பயணமும் சந்திப்பும். அதுல ஒரு மணல்குன்றின் ஃபோட்டோ அச்சுஅசல் ஒரு முகம்மாதிரியே இருக்கு.. கவனிச்சீங்களா...

  ReplyDelete
 14. அக்பரின் பதிவில் படித்தேன் ...

  super

  ReplyDelete
 15. நல்ல சந்திப்பு நல்ல பகிர்வு

  ReplyDelete
 16. போட்டோவும் வீடியோவும் சூப்பர்..ஷேக்.. நேரில பார்த்த உணர்வு

  ReplyDelete
 17. வாங்க சரவணன் @ ரொம்ப சந்தோசமாக இருந்தது... நேத்து அடிச்ச கும்மி கும்மிதான். அசத்தல்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 18. /// Karthick Chidambaram said...

  //மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் பகுதியையும் பார்வையிட்டோம்//
  யாரும் சாகசம் செய்யலையா ?
  நல்ல பகிர்வு. நன்றி.///

  வாங்க கார்த்திக் சிதம்பரம் @ அந்தநேரம் பார்த்து யாரும் பண்ணலியே.. சில வீடியோக்களில் பார்த்திருக்கிறேன். ரொம்ப அருமையாகவும் திரிலிங்காகவும் இருக்கும்.

  ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

  ReplyDelete
 19. சந்திப்பின் மகிழ்ச்சி புகைப்படத்தில் உணரமுடியுது.. அடிக்கடி சந்தித்து நட்பை வளருங்கள்..

  புகைப்படத்திற்க்கு ஏன் பாராமுகம் பாரா அண்ணா?

  சங்கம் வாழ்த்துகளில் உங்கள் பழைய போட்டோ மட்டுமே பார்வைக்கு கிடைக்கிறது...ரொம்ப சங்கோஜ படாதீங்கண்ணே....சும்மா போட்டு விடுங்க... - நேயர் விருப்பம்

  ReplyDelete
 20. பதிவர் சந்திப்பையும்
  சுற்றுலாத் தல விளக்கத்தையும்
  நேர்த்தியாக பதிவிட்டுள்ளீர்கள்.

  ReplyDelete
 21. பதிவர் சந்திப்பு அருமை படங்களும் சுவாரஸ்யம்...! அருமை ஸ்டார்ஜன்!

  ReplyDelete
 22. பதிவர் சந்திப்பு அருமை,படங்கள் நன்றாக உள்ளது.

  ReplyDelete
 23. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 24. அருமையான விடயம்.. பகிந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 25. வாங்க சிஷ்யா @ அடியோ அடி.. :))

  நன்றி

  ReplyDelete
 26. வாங்க ஆறுமுகம் @ உங்களையெல்லாம் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 27. சென்னையில ஏதேனும் இது போல நடந்தா சொல்லுங்கப்பா

  ReplyDelete
 28. புகைப்படங்கள் அனைத்தும் புதுமையான முறையில் எடுத்து இருகிறிர்கள் . பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 29. போட்டோஸ் எல்லாம் அழகாக இருக்கு. அருமையான இடம்

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்