Pages

Tuesday, July 6, 2010

காட்டுக்குள் ஸ்டார்ஜன் 2

முதல்பாகம் படித்துவிட்டு தொடருங்கள்.

தூரத்தில் எதோ ஒளி தெரிந்ததும் அங்கு என்கால்கள் நடந்தது. அருகில் சென்று பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அது சுடுகாடு. ஆஹா அப்போ அருகில் கண்டிப்பாக ஒரு ஊர் இருக்கும் என்னும்போது முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. கொஞ்சதூரம் போனதும் ஒரு தடாகத்தை பார்த்தவுடனே தண்ணீரை அள்ளிஅள்ளி ஆசைதீர குடித்ததும் என் களைப்பு நீங்கியது ரொம்ப சந்தோசமாக இருந்தது.

தண்ணீரை கண்ட ஆனந்தத்தில் திளைத்திருக்கும்போது முதுகில் பலமான அடி விழுந்ததில் அதிர்ந்துபோய் பின்னால் திரும்பிப்பார்த்தால்., என்னை சுற்றி நாலைந்துபேர் நின்றிருந்தார்கள். உடனே நான், "ஏண்டா என்னை அடித்தீர்கள்" என்று கோபமாக அவர்களை அடிக்க கையை ஓங்க அதற்குள் அவர்கள் என்னை பிடித்து என்கையை பின்னால் மடக்கினார்கள். "ஏய்.. ஏய்.. நான் என்னடா தப்பு செஞ்சேன் சொல்லுங்கடா என்னை எங்கே கூட்டிட்டுபோறீங்க சொல்லுங்கடா" என்று நான் கத்தியும் அவர்கள் எதுவும் பேசாமல் எங்கோ அழைத்து சென்றார்கள்.

ஒரு பெரிய வீட்டுக்கு முன்னால் சென்று காத்திருந்தோம். சிறிதுநேரத்தில் உள்ளேருந்து ஒரு பெரியவர் வந்தார். பார்த்தால் அந்த ஊர் நாட்டமையா இருப்பார்ன்னு நினைக்கிறேன். "என்னலே இங்க கூட்டம் என்ன விசயமுல்ல சொல்லித்தொலை.." என்று கரகரப்பான குரலில் கேட்டார். என்னை பிடித்தவர்களில் ஒருவன் "அய்யா வணக்கமுங்க..அய்யா இவன் யாருன்னு தெரியலைய்யா.. நம்மூர் கோவில் குளத்துல தண்ணீரை அசிங்கபடுத்திட்டான். பெரிய தீட்டாயிருச்சி.. இப்போ என்ன செய்யன்னு தெரியலைய்யா.. நீங்கதான் எதாவது செய்யணுமய்யா.." என்று அவன் சொன்னதும் அவருக்கு கோபத்தில் கண்ணெல்லாம் சிவந்தது.

"எலேய் என்னகாரியமுல்ல செய்திருக்கே.. அய்யோ இப்பஎன்னசெய்றதுன்னு தெரியலியே.. எல.. நம்ம பூசாரிய கூட்டிட்டுவாங்கலே.. பரிகாரம் எதாருந்தாலும் செய்துப்புடலாம்" என்றார் நாட்டாமை. "அய்யா ஒரு நிமிசம், என்னால தண்ணீர் கெட்டுப்போச்சின்னு சொல்றீக.. அதெப்படிங்க.. இதென்ன அநியாயமா இருக்கு.. நானே எந்த நிலமைல இருக்கேன்; பார்த்தீகளா.. அய்யா நா வந்த பஸ் விபத்துக்குள்ளாகி தப்பிச்சோம் பிழைச்சோமுன்னு உசுரு தப்பி வந்திருக்கேன்... பசிமயக்கம் காதடைச்சிருந்தது. குளத்துல தண்ணிய பார்த்ததும் ஆசையில உள்ள இறங்கிப்புட்டேன். இதெல்லாம் ஒரு குத்தமாய்யா" என்றேன் பண்ணையாரிடம்.

"எலய் நீ என்னதான் சொன்னாலும் இங்க செல்லாது. தண்ணிய அசிங்கப்படுத்திட்டே.. தீட்டாயிருச்சி.. எலேய் இவனபிடிச்சி கட்டிவைங்கலே.. நாளைக்கு பஞ்சாயத்து இருக்கப்போய்" என்று சொல்லியபடி நாட்டாமை வீட்டுக்குள்ள போயிட்டாரு. என்னடா இது புது சோதனை என்றபடி பேந்தபேந்தன்னு முழிச்சிட்டு இருந்த என்னை இழுத்துக்கிட்டு சென்றார்கள். தெருவில் எல்லோரும் எதோ அதிசயத்தை பார்ப்பதுபோல என்னை குறுகுறுன்னு பார்த்தார்கள்.

என்ன இது சனங்க இப்படி இருக்காங்க. எதுக்கெடுத்தாலும் தீட்டுதீட்டுன்னு பார்த்து அவங்களுக்கு அவங்களே கெடுதல் பண்ணிக்கிறாங்களே.. தீண்டாமை இன்னும் விட்டு ஒழியலையே.. என்ன சொல்லி இவர்களுக்கு புரியவைப்பது?.. இன்னும் இப்படிப்பட்ட கிராமங்களில் தீண்டாமை கொடுமைகள் இன்னும் நடந்ததுக்கிட்டு இருக்கே என்ற வருத்தத்துடன் சென்று கொண்டிருந்தேன்.

என்னை ஒரு மரத்தில் கட்டிப்போட்டார்கள். ஏற்கனவே உடம்பு சரியில்லை, இதுலவேற கட்டிவைச்சிட்டானுக.. வலி எடுத்தது. இனி எப்படித்தான் நம்ம ஊருக்கு போகப்போறோமோ தெரியலியே.. அம்மா.. பசிக்குதே பசிக்குதே.. என்று முனகியபடி பசியில் தூக்கம் வர ஆரம்பித்தது. அப்போது என் முகத்துக்கு நேரா ஒரு கை தண்ணீரை நீட்டியது. ஆவலுடன் அந்த நீரை பருகினேன். கொஞ்சம் தெம்பு வந்தது. ஒரு இருபது இருபத்திரெண்டு வயதிருக்கும் இளம்பெண் முகத்தில் புன்னகையுடன் சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

ரொம்ப நன்றி.. நன்றிம்மா.. உனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியலே.. என்ன கைம்மாறு செய்யதாலும் இதுக்கு ஈடாகாது என்று அவளுக்கு நன்றி சொன்னேன். அவள் புன்னகையுடன் என்பேரு கவிதா.. உங்கள பார்த்தவுடனே எனக்கு உங்கமேல காதல் வந்திருச்சி.. உங்க தைரியம், உங்க பேச்சில இருந்த கவர்ச்சி; மொத்தத்துல உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு.. இந்தாங்க இந்த தட்டுல சாப்பாடு இருக்கு., பசியில இருக்கீங்க, சாப்பிடுங்க.. நல்லா யோசனை பண்ணுங்க..என்றவளுக்கு நான் பதில் சொல்வதற்குள் ஓடிவிட்டாள்.

அடடா இது என்ன புதுக்குழப்பம்.. என்ன நடக்குது இங்கே என்று திகைத்து நின்றேன். சிறிது நேரத்தில் தூக்கம் கண்ணக்கட்டியதால் தூங்கினேன்.

குக்கூ..குக்கூ.,கா கா.. கீச் கீச்.. என்ற பறவைகளின் சத்தம் பொழுது விடிந்துவிட்டதை உறுதிபடுத்தியது. நான் தூக்கம் கலைந்து கண்ணை கசக்கினேன். அந்த ஊர்ல உள்ளவங்க, நேத்து உத்து உத்து பார்த்தது போதாதென்று மறுபடியும் இன்றும் ஒவ்வொருத்தராக வந்துவந்து பார்த்திட்டு சென்றார்கள். எனக்கு சிரிப்புதான் வந்தது. என்ன செய்ய இவர்களை..

சிறிதுநேரம் சென்றதும் என்னை பஞ்சாயத்துக்கு அழைத்து சென்றார்கள். அங்கே நான் நேற்று பார்த்த நாட்டாமை உக்கார்ந்திருந்தார். அங்கே ஒரு பெரிய கூட்டமே கூடியிருந்தது. நாட்டாமை என்ன சொல்லப்போறாருன்னு எல்லோரும் கவனித்தார்கள். "அய்யா இதுக்கு ஒரு முடிவ சட்டுபுட்டுன்னு எடுங்கன்னு" ஒரு பெருசு குரல் கொடுத்தது. "ஊர் குளத்து தண்ணீரை களங்கப்படுத்திருக்கான். இதுக்கு பரிகாரம் சீக்கிரமே பண்ணியாகனும். ஒண்ணுமே புரியல.. யோவ் பூசாரி என்ன சொல்றீக" என்றார் நாட்டாமை. "அய்யா ஒரு யாகம் பண்ணி பரிகாரம் பார்த்துடலாம்" என்றதும்தான் நாட்டாமைக்கு நிம்மதியானது.

"அய்யா.. ஊரு சனங்களே.. என்ன இதெல்லாம் கூத்து., எந்த காலத்துல இருக்கீங்க.. இன்னக்கி கம்பியூட்டர் அறிவியல் முன்னேற்றங்கள் சாதனைகள்ன்னு நம்மநாடு முன்னேறிக்கிட்டு இருக்கு.. நீங்க இன்னும் அந்த காலத்துலே இருக்கீங்களே.. நா சொல்றத புரிஞ்சிக்கோங்க.." என்று எடுத்துக்கூறினேன். உடனே நாட்டாமை, "நிறுத்துல உன்பேச்ச.. எங்கவந்து என்ன பேசிக்கிட்டு இருக்கே.. இதென்ன உங்கஊருன்னு நினைச்சியாலே.. இந்த சாதிப்பிரச்சனை உங்கபாட்டன் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் காலத்துலருந்து இருக்குலே.. இதெல்லாம் எங்க ரத்தத்துல ஊறிப்போன ஒண்ணு.. இத யாரும் வந்து மாத்திடமுடியாதப்பா" என்று கோபத்தில் கூறினார்.

"அய்யா.. நீங்களும் மனுசந்தான் நானும் மனுசந்தான். உங்க உடம்புலேயும் இரத்தம் சிவப்பாத்தான் ஓடுது. என்உடம்புலேயும் அப்படிதான். இதுல எங்கருந்து சாதி வந்திச்சின்னு சொல்லுங்க.. ஏன் சாதிசாதின்னு அலையுறீங்க.. அவன் தொட்டா தீட்டு., இவன் தொட்டா தீட்டு.. உங்களுக்கு நீங்களே பிரிச்சிக்கிட்டு இருக்கீங்கஇதுல உங்களுக்கு என்ன கிடைத்தது?.. ஒரு மண்ணும் இல்ல.. நீங்க உங்களை உங்களையே வெட்டிக்கிட்டு செத்ததுதான் மிச்சம். நம்முடைய வாழ்நாள்ல கொஞ்சநாளாவது நிம்மதியா இருங்க.. எப்பப்பார்த்தாலும் சண்டசச்சரவு., ஏன் இப்படியெல்லாம் இருக்கீங்க.. இதுலருந்து வெளியவாங்க; வெளிச்சத்த அனுபவிங்க.. சந்தோசமா இருங்க" என்று ஒருவேகத்தில் பேசிட்டேன்.

நாட்டாமை, "ஆமாலே இவன் சொல்றத கேட்டா போதும்லே.." என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது நான் முந்திக்கொண்டு "யோவ்., பெரியமனுசா நீதான் இவங்களையெல்லாம் பிரிச்சி வச்சிருக்கே.. உன்னோட சுயலாபத்துக்காக ஒண்ணுமே தெரியாத இந்த அப்பாவிமக்களை சாதிசாதின்னு சொல்லிசொல்லியே படிப்புன்னா என்னன்னே தெரியாம அடிமைப்போல வச்சிருக்கே.. தூ தூ.. நீயெல்லாம் ஒரு பெரிய மனுசனா.." என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இரண்டுபேர் "என்னலே எங்கய்யாவையா எதிர்த்து பேசிறியாலே" அப்படின்னு சொல்லி கட்டையை கொண்டு அடித்தார்கள். உடனே எல்லோரும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். என்னவென்று புரியவில்லை. சரி ஆனது ஆகட்டும் என்றபடி நின்றிருந்தேன்.

பஞ்சாயத்து கலைந்து சென்றது. என்னை மறுபடியும் அதே இடத்தில் கட்டிவைத்தார்கள். சிறிது நேரம் சென்றிருக்கும். நேற்று எனக்கு சாப்பாடு கொடுத்த கவிதா ஓடோடி வந்தாள். வந்தவுடன் என்னுடைய கட்டவிழ்த்தபடி "வாங்க சீக்கிரம் இந்த ஊரவிட்டு ஓடிருவோம். உங்கள ரொம்ப விரும்புறேன். நீங்க பஞ்சாயத்துல பேசுனது ரொம்ப மனசு கஷ்டமாயிருச்சி.. இவங்கெல்லாம் திருந்தமாட்டாங்க.. உங்கள கல்லால அடிக்க பஞ்சாயத்துல முடிவுபண்ணிட்டாங்க.. வாங்க நாம ரெண்டுபேரும் இந்த ஊரவிட்டு போயிரலாம்" என்று அவசரப்படுத்தினாள்.

எனக்கு அவள் சொன்னதைக்கேட்டு கண்ணீரே வந்திருச்சி.. "உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல கவிதா.. என் உயிர காப்பாத்திருக்கே.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சி.. நீ வீணா மனசப்போட்டு குழப்பிக்காதே.. நீ நல்ல பொண்ணு.. என்னைவிட நல்ல ஆளப்பார்த்து உன் மனசுக்கு பிடிச்சவனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இரு. உன் உதவியை என்காலம் உள்ளவரைக்கும் மறக்க மாட்டேன். நான் வருகிறேன்" என்று நான் கண்ணீர் சிந்தியபடி நின்றிருந்த அவளிடம் விடைபெற்றேன்.

அப்பாடி.. ஒருவழியா தப்பிச்சாச்சி.. இறைவனுக்கு நன்றி செலுத்தியபடி தப்பித்தோம் பிழைத்தோம் என்று வேகமாக ஓடி ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

**********************

அன்பு நண்பர்களே!! நான் எழுதிய இந்த கற்பனைக்கதை, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எழுதியது. அந்த மூலக்கதையை அடிப்படையாக கொண்டு சிறுசிறு மாற்றங்கள் செய்து இப்போதைய கதையை வரைந்துள்ளேன்.

என்னுடைய எல்லாப் படைப்புகளையும் படித்து ஊக்கமும் ஆதரவும் கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

25 comments:

 1. "அய்யா.. நீங்களும் மனுசந்தான் நானும் மனுசந்தான். உங்க உடம்புலேயும் இரத்தம் சிவப்பாத்தான் ஓடுது. என்உடம்புலேயும் அப்படிதான். இதுல எங்கருந்து சாதி வந்திச்சின்னு சொல்லுங்க.. ஏன் சாதிசாதின்னு அலையுறீங்க.. அவன் தொட்டா தீட்டு., இவன் தொட்டா தீட்டு.. உங்களுக்கு நீங்களே பிரிச்சிக்கிட்டு இருக்கீங்கஇதுல உங்களுக்கு என்ன கிடைத்தது?.. ஒரு மண்ணும் இல்ல.. நீங்க உங்களை உங்களையே வெட்டிக்கிட்டு செத்ததுதான் மிச்சம். நம்முடைய வாழ்நாள்ல கொஞ்சநாளாவது நிம்மதியா இருங்க.. எப்பப்பார்த்தாலும் சண்டசச்சரவு., ஏன் இப்படியெல்லாம் இருக்கீங்க.. இதுலருந்து வெளியவாங்க; வெளிச்சத்த அனுபவிங்க.. சந்தோசமா இருங்க" என்று ஒருவேகத்தில் பேசிட்டேன்.


  ...... தெளிவான கருத்து..... கதையும் கருத்தும் அருமை.... பாராட்டுக்கள்!

  ReplyDelete
 2. காட்டுக்குள் டார்ஜான் தானே இருப்பார ஸ்டார்ஜன் ஏன் போனாரு....????? :))

  ReplyDelete
 3. nalla irukku starjan.

  kathai sonna vitham arumai.

  ithil nalla seithiyum undu.

  ReplyDelete
 4. /. அப்போது என் முகத்துக்கு நேரா ஒரு கை தண்ணீரை நீட்டியது. ஆவலுடன் அந்த நீரை பருகினேன். கொஞ்சம் தெம்பு வந்தது. ஒரு இருபது இருபத்திரெண்டு வயதிருக்கும் இளம்பெண் முகத்தில் புன்னகையுடன் சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.
  //ஹா..ஹா..ஹா..அட்றா சக்கை.

  //உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல கவிதா.. என் உயிர காப்பாத்திருக்கே.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சி.. நீ வீணா மனசப்போட்டு குழப்பிக்காதே.. நீ நல்ல பொண்ணு.. என்னைவிட நல்ல ஆளப்பார்த்து உன் மனசுக்கு பிடிச்சவனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இரு. உன் உதவியை என்காலம் உள்ளவரைக்கும் மறக்க மாட்டேன். நான் வருகிறேன்" //
  அப்பாடா...நல்ல நகைசுவை கற்பனை.

  ReplyDelete
 5. கதை நல்லா இருக்கு ஆனா பட்டுன்னு முடிஞ்சமாதிரி இருக்கு . கொஞ்சம் நீட்டி எழுதிருக்கலாம் .

  ReplyDelete
 6. ரெண்டு பகுதியையும் சேர்த்துவெச்சு படிச்சிட்டேன்.. நல்லாருக்கு.

  ReplyDelete
 7. நண்பரே நல்லாயிருக்கு

  ReplyDelete
 8. தீண்டாமையை அருமையாக கூறியுள்ளிர்கள். ஜாதியின் பெயராலும் , மதத்தின் பெயராலும் அடித்து கொள்கிறார்கள். இவர்களுக்கு இறைவன் நல்வழி காட்டுவானாக.

  ReplyDelete
 9. நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.
  கலக்குங்க!!!

  ReplyDelete
 10. க‌ற்ப‌னை க‌தை ந‌ல்லா இருந்த‌து ஸ்டார்ஜ‌ன்..

  ReplyDelete
 11. க்தை ரொம்ப நல்லாருக்கு.. வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. இந்த காலத்துல இப்படி ஒரு கிராமமா?

  ReplyDelete
 13. அன்புள்ள நண்பர்களே!! என்னாச்சின்னு தெரியல.. ஒரு பின்னூட்டம் கூட வெளியாகவில்லை. யாருக்காவது கமாண்ட் வெளியாகிருக்கா.. இது என்ன சோதனை?..

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. ரொம்ப நல்லாயிருக்கு..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 16. நட்ச்சத்திர வார வாழ்த்துக்கள்
  கதை அருமை

  ReplyDelete
 17. கற்பனை வளம் அருமை ..

  ReplyDelete
 18. நண்பரே...முதல் பாகத்திலிருந்து படித்து பார்த்தேன் அருமையான ஸ்கிரிப்ட்..
  ஏதாவது டைரக்டர் கனவு இருக்கா என்ன..
  வரிகளை நன்றாக காட்சி படுத்துகிறீர்கள்..வாழ்த்துக்கள் தொடருங்கள்..

  ReplyDelete
 19. என்ன அழகாய் கதை சொல்லிடீங்க ஒரு முழு தமிழ் படம் பார்த்தமாதிரி இருக்கு....வாழ்த்துகள்....

  ReplyDelete
 20. கதை ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.. இரண்டு பகுதியும் அருமையாக உள்ளது.

  ReplyDelete
 21. ரொம்ப நல்லாருக்கு ஷேக்.

  ReplyDelete
 22. நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்.

  கதை நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 23. போதும் ஸ்டார்ஜன். காட்டை விட்டு வெளியில வாங்க.

  நல்ல பதிவுகளுக்காக வெயிட்டிங்.

  ReplyDelete
 24. வருகைதந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 25. அன்பின் ஸ்டார்ஜன்

  கதை முடியவில்லை - இன்றும் தொடர்கிறது. எனன் செய்வது - காலம் மாறும் - பொறுத்திருக்க வேண்டும்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்