Pages

Tuesday, July 20, 2010

வரும்வரை காத்திரு..4 - தொடர்கதை

அன்புள்ள நண்பர்களே!! இந்த தொடர்கதையை வெளியிட‌ இரண்டு வாரத்துக்கும் மேலாகிவிட்டது. தமிழ்மண நட்சத்திர வாரம் மற்றும் சில அலுவல்கள் காரணமாக என்னால் இந்த தொடர்கதையை எழுத முடியவில்லை. இனி தொடர்கதை தொடர்ந்து வரும்.

தொடர்கதைக்குள் செல்லலாமா..

கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க‌

வரும்வரை காத்திரு..
வரும்வரை காத்திரு..2
வரும்வரை காத்திரு..3

********


என்ன ஆனாலும் நடப்பது நடக்கட்டும் என்று அவள்வீட்டுக்கு சென்று அவளுடைய அப்பாவை பார்த்து பேசலாம் என்று கிளம்பினேன்.

என்ன தைரியத்தில் கிளம்பினேன் என்று தெரியாது. என்ன நடக்கப்போகுதோ?.. அவள் அப்பா என்ன சொல்வாரோ.. அவங்க வீட்டுல என்னை ஏத்துப்பாங்களா வழியெங்கும் யோசித்துக்கொண்டே சென்றேன்.

"டிக்கெட்..டிக்கெட்" என்று கண்டக்டர் கேட்டதுக்குகூட பதில் சொல்லாமல் யோசித்ததால் "ஏய்.. என்ன யோசனை.. முதல்ல டிக்கெட் வாங்கு அப்புறம் உக்காந்து நல்லா யோசி" என்று கண்டக்டர் உரக்க கேட்டபின்தான் ஞாபகம்வந்து போகும் இடத்தை சொல்லி டிக்கெட் வாங்கினேன். ப்ரியாவின் ஊர் அவளைப்போல அழகாகவே இருந்தது. நல்ல வயல்வெளிகள், சிலுசிலுவென்று வீசும் காற்றை அனுபவித்துக்கொண்டே, ஊர் அழகை ரசித்தபடியே நடந்துவந்து கொண்டிருந்தேன்.அவளது வீட்டை நெருங்கியதும் மனதில் பக்கென்று பயம் ஒட்டிக்கொண்டது. வீட்டை நெருங்கி கேட்டை திற‌ந்ததும் உள்ளே நிறைய தலைகளாக நிறையபேர் அங்குமிங்குமாக சென்றுகொண்டிருந்தன. ப்ரியாவின் வீட்டில் ஏதோ விசேசம் போல. சிறுவர்கள் அங்கே இருக்கும் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்ததும் அவர்கள் விளையாடுவதை விட்டுட்டு என்னையே பார்த்தபடியே என்னை பிந்தொடர்ந்தனர். அங்கு குழுமிருந்தவர்களும் என்னை நோட்டமிட்டதால் எனக்கு ஒருமாதிரியாக தப்பா எதுவும் வந்து மாட்டிக்கிட்டோமே என்று தோன்றியது.

திரும்பி செல்ல எத்தனிக்கும்போது உள்ளிருந்து ஒரு குரல்.. "தம்பி உள்ளவாங்க.. சரியான நேரத்துக்குதான் வந்திருக்கீக.. வாங்கவாங்க.. உள்ள வாங்க.. வெளிய நின்னுக்கிட்டிருக்கீக" என்றவரை பார்த்தால் ப்ரியாவின் அம்மா. "என்னங்க என்னங்க யாரு வந்திருக்காங்கன்னு பாருங்க.." என்றபடி ப்ரியாவின் அப்பாவிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார். "அடடே வாங்க தம்பி.. ப்ரியாவுக்கு நிறைய உதவியெல்லாம் செஞ்சிருக்கீளாமுல்ல.. பிரியா அம்மா சொல்லிருக்காவ.. வாங்க வந்து உக்காருங்க.. நல்ல சமயத்துலதான் வந்திருக்கீக.. வந்ததுக்கூட ஒருவகையில் நல்லதாப்போச்சி.." என்றபடி அழைத்து சென்றார். எனக்கு எல்லாம் பிரமிப்பா இருந்தது. இங்க என்ன நடக்குது?.. என்று முகத்தில் கேள்வியுடனே அமர்ந்திருந்தேன்.

பின் ஒவ்வொருவராக என்னிடம்வந்து தங்களை தாங்களே அறிமுகப்படுத்திக் கொண்டது வியப்பாகவும் எனக்கு இது புது அனுபவமாகவும் இருந்தது.

எல்லோரும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தனர். என்கண்கள் பிரியாவை தேடின.

சிறிதுநேரம் சென்றதும் எல்லோரும் ஒரே இடத்தில் குழுமினர். நானும் அவர்களுடன் கலந்து நடப்பது என்னவென்று தெரியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பரபரப்பின் உச்சியில் இருந்தேன். இவ்வளவுபேர் இருக்கிறார்கள், எப்படி அவளது அப்பாவிடம் எங்கள்காதலை சொல்வது?.. யோசனையில் மூழ்கியிருந்தேன். அருகில் எல்லோரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே.. அங்கே ப்ரியா அலங்காரத்துடன் தோழிகள் புடைசூழ வந்தது எனக்கு அதிர்ச்சியானது.

ஒரு நிமிடத்தில் எல்லாம் விளங்கிவிட்டது. ஆம் இன்று அவளுக்கு இன்னொருவனுடன் கல்யாண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. அடடா.. இது என்ன இப்படி?.. இப்போது என்ன செய்வது?..

நான் அமர்ந்திருந்ததை பார்த்த ப்ரியாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது. எனக்கு என்னசெய்வதென்றே தெரியல.. ஆஹா வசமா மாட்டிக்கிட்டோமே இப்போ என்ன செய்வது?.. ப்ரியாவின் கண்களில் தெரிந்த அர்த்தத்தை புரிந்து கொண்டு ஒரு முடிவுக்கு வந்தேன்.

அய்யர் விவாக ஒப்பந்தத்தை படிக்க தயாரானார். "நிகழும் சங்கையான யுக வருடம் தை திங்கள்....." என்று படிக்கும்போது, "நிறுத்துங்க.. நிறுத்துங்க.. ஒரு நிமிசம்.." என்ற குரல்வந்த திசையை நோக்கி எல்லோரும் திரும்பினர்.

"நிறுத்துங்க.. இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்லை. நான் ஒருத்தரை காதலிக்கிறேன்.,அவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்" என்ற ப்ரியாவை எல்லோரும் திகைப்புடன் பார்த்தனர். உடனே அங்கு வந்திருந்தவர்கள் குசுகுசுவென பேசிக்கொண்டனர். எல்லோருக்கும் ரொம்ப ஆச்சர்யம், திகைப்பு. எல்லோரும் அதிலிருந்து வெளியேற சிறிதுகால அவகாசம் ஆனது. உடனே ப்ரியாவுக்கு அருகிலிருந்த அவளது சித்தப்பா, "என்ன தைரியமிருந்தா இப்படி சொல்லுவ?.. என்ன கொழுப்பு.. ங்ம் ங்ம்.." என்று அடிக்கவரும்போது நான் உடனே அவரது கையை பிடித்து தடுத்தேன்.

"இனி ஒரு அடி அவமேல விழுந்தது.. அப்புறம் அவ்வளவு தான்.. ஆமா நாங்க ரெண்டுபேரும் காதலிக்கிறோம். எங்க ரெண்டுபேரையும் சேத்துவைங்க" என்றேன். "ஓஹோ இதுக்கெல்லாம் நீதான் காரணமா.. எல்லோரும் சேர்ந்து அடிங்கல.. எங்க வந்து என்ன பேச்சிபேசுறே.. எவ்வளவு தைரியம்" என்று அவளது சித்தப்பா சொன்னதும் சிலர் என்னை சூழ்ந்து அடிக்க ஆரம்பித்தனர். நானும் அவர்களை என்னால் முடிந்த அளவுக்கு தடுத்தேன். நிச்சயதார்த்த வீடு களேபரமானது. மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளை சொந்தக்காரங்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நான் அடிவாங்குவதை கண்ட பிரியா தடுத்தும் அவளுக்கும் அடி விழுந்தது. உடனே அங்கிருந்த ஒரு பெரியவர் "அட விடுங்கப்பா.. விடுங்கப்பா.." என்று எல்லோரையும் விளக்கிவிட்டார்.

ப்ரியாவின் அப்பா மாணிக்கம், "தம்பி எவ்வளவு மரியாதை வச்சிருந்தேன் உன்மேல.. சே.. எவ்வளவு துணிச்சல் இருந்தா இவ்வளவு கூட்டத்துலயும் ப்ரியாவ காதலிக்கிறேன்னு சொல்லிருப்ப.. இந்த விசேச வீட்டையே இவ்வளவு களேபரமா மாத்திட்டியே.. உன்னை காதலிக்கிறேன்னு அவளும் எங்கிட்ட சொல்லலியே.. இவ்வளவு ஏற்பாடும் செய்தபின்னாடி இப்படி சொன்னா எப்படிப்பா?.. என்னை இவ்வளவு கூட்டத்து முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டியே.. சே.. சரி அதெல்லாம் விடு. நீ என்ன வேலைப் பார்க்கிற?.. உங்க அப்பா அம்மா யாருன்னே எனக்கு தெரியாது., என்ன குலம் கோத்திரம் தெரியாமலே எங்கிருந்தோ வந்து என்பொண்ண கட்டிக்கிறேன்னு சொன்னா எப்படி தம்பி?.." என்றார்.

நான் "அய்யா., எனக்கு பக்கத்தூருங்க.. எங்கப்பா ரைஸ்மில்லுல வேலைப்பார்க்கிறாரு.. நான் பிஎஸ்சி படிச்சிக்கிட்டு இருக்கேன்" என்றதும் அவர், "நீ இன்னும் படிச்சிமுடிக்கலை.. அதுக்குள்ளே காதலாம் காதல். ஒரு வேலைவெட்டி கிடையாது.. எம்பொண்ண எப்படி வச்சி காப்பாத்துவ.. இத்தனவருசமா பொத்திபொத்தி வளத்த பொண்ண வேலைவெட்டி இல்லாத வெறும்பயலுக்கு கட்டிக்கொடுத்து எம்பொண்ணையும் உன்னமாதிரி கஷ்டப்பட சொல்றீயா.. எப்போ எம்பொண்ண கட்டிக்கிற தகுதி இருக்கோ.. அப்ப வா.. இப்ப போகலாம்" என்றதும் அங்கிருந்தவர்கள் திகைத்து நின்றனர்.

"போகலாம்ன்னு சொன்னேனுல்ல.. ம்ம்ம்.. ம்ம்" என்று மாணிக்கம் சொன்னதும் ப்ரியாவை பார்த்தபடி நான் அவளது வீட்டைவிட்டு வெளியேறினேன்.

மாப்பிள்ளை வீட்டாரும் சொந்தக்காரங்களும் என்னை முறைத்து பார்த்தபடி என்னை கடந்து சென்றனர்.

தொடரும்...

,

Post Comment

12 comments:

 1. Thodarar nalla irukku. padikkum arvaththai thakka vaiththuk kolkirathu...

  thodarungal....

  ReplyDelete
 2. வாங்க கௌசல்யா @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 3. வாங்க குமார் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 4. நல்லா போகுது.

  அப்பான்னா இப்படித்தான் இருக்கனும்.

  அடுத்த பாகம் எப்போ?

  ReplyDelete
 5. ரொம்ப நல்லா போகுது தொடருங்கள்...

  ReplyDelete
 6. நல்ல அழகாக கதையைக் கொண்டு போகிறீர்கள் சேக்.
  இது பட்ட அனுபவமா, அல்லது படித்த அனுபவமா.
  எதுவாக இருந்தாலும்,மொத்தத்தில் கதை நேர்த்தியாக போகிறது.

  தொடரை எதிர்ப்பார்த்தவனாக.....

  ReplyDelete
 7. நல்ல சுவாரசியமா இருக்கு ஸ்டார்ஜன்..

  ReplyDelete
 8. வாங்க அக்பர் @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 9. வாங்க கமலேஷ் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

  ReplyDelete
 10. வாங்க அபுல்பசர் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 11. வாங்க தேனக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்