Pages

Sunday, June 21, 2009

பள்ளிக்கூடம் போகலாமா ..... தொடர்ப்பதிவு



நேற்றும் இன்றும் எனக்கு நிறைய்ய வேலை. தமிழ்மணம் பார்க்க முடியவில்லை . என் வலைப்பதிவையும் பார்க்க வில்லை . என் முந்திய பதிவான பறவையைக் கண்டேன் பதிவில் படங்களை போடுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது . ப்ளாக்கர் ரொம்ப ஹேங்க் ஆகி விட்டது . இதுக்கு 3 நாட்கள் ஆகிவிட்டது. இன்று சுமார் இரவு 9 மணிக்கு என் வலைப்பதிவைப் பார்த்தேன் . ஒரே அதிர்ச்சி .ஆச்செர்யம் .

பார்த்தால் கோவி. கண்ணன் தொடர்ப்பதிவுக்கு அழைத்திருந்தார் . என்னால் நம்பமுடியவில்லை .என் நண்பரிடம் காட்டினேன் . ஒரே சந்தோசம் தாங்க முடியவில்லை.

பள்ளிப் படிப்பை பற்றியும் அங்கே சொல்லித்தந்த ஆசிரியர்களைப் பற்றியும் தன்னுடைய காலத்தை என் பக்கமாக திருப்பி இருந்தார் கோவி. கண்ணன் .


என்னவென்று சொல்வது எப்படி சொல்வது அந்த பொற்காலத்தை .....


ஒன்னாப்பு :


யெய் சேக் ! இங்க வா இது அப்பாவின் குரல். "என்னப்பா" இது நான் . நாளைக்கு பள்ளிக்கூடம் போவனும் நா ஒன்னையை பள்ளிக்கூடத்துல சேக்கப்போறேன் . அப்படியா ஹைய்யா ஜாலி ! .எனக்குள் ஒரே சந்தோசம் . எங்கண்ணே [ பெரியப்பா மகன் ].கூட பள்ளிக்கு போம்போது நானும் போவேனா ...அதான் சந்தோசம்.


முதல் நாள் போன போது பயம் . உன் பேர் என்ன என்று டீச்சர் கேட்டபோது , எம் பேரு சேக் சிந்தா மதார் மைதீன் , டீச்சர் என்றேன். { இதான் எம் முழுப் பெயர் }. ஆங் நல்ல பையன் , இந்தா முட்டாய் சாப்பிடு என்றார் டீச்சர் . எங்க வலது கையை வச்சி இடது காதைத் தொடுப் பாப்போம் .,என்று சொன்னார் டீச்சர் . நானும் கையை எடுத்து தலைக்கு மேல வச்சி ஒரு வழியா காதைத் தொட்டேன் .



எங்கத் தெரு பயலுக பூரா பேரும் இருந்தாங்க . மிட்டாய் சாப்பிட்டு முடிந்ததும் , பக்கத்துல இருந்த பொம்பள புள்ளக்கிட்ட ஏப் புள்ள ஒரு முட்டாய் கொடேன் கேட்டேன். ஆம் புஸ்ஸூக்கு ! நானே இரண்டே ரெண்டு வச்சிருக்கேன் . ஒன் முட்டாய தின்னுட்டு எங்கிட்ட கேக்கிறியோல என்றாள் . சரி சரி ரொம்ப பீத்திக்கிறாதே என்றேன் . இப்படியே ஒரே ஜாலியா நாட்கள் ஓடியது .



அப்புறம் கொஞ்ச நாள்ல எங்கம்மா குழந்தை { என் தம்பி } பெற போனாங்களா .நானும் என் தங்கையும் அம்மாக்கூட பாட்டி வீட்டுக்கு போயிட்டோம் . பாதி நாள் { மொத்த நாள்ல } பள்ளிக்கூடம் போகவே இல்லை .



முழு ஆண்டு லீவு முடிஞ்சி நான் ரெண்டாப்பு போவனும் . பயலுக எல்லாம் சொன்னாங்க , எல சேக் , நீ ரெண்டாப்பு போக முடியாதே , டீச்சர் சொல்லிட்டாங்களே ஹைய்யா . என்று சொல்லிட்டானுக . ஹெட் மாஸ்டர் வந்தார் . ரெண்டாப்பு போற பையனுக பேரை எங்க டீச்சர் வாசிச்சாங்க . என் பேரை வாசிக்கலை . எனக்கு அழுகை அழுகையா வந்திச்சி . ஹெட் மாஸ்டர் எங்கப்பாவுக்கு தெரிந்தவர் தான் . தோட்ட சார் முத்தையா சார் எங்கப்பாக்கூட படிச்சவர் . டீச்சர் இவனை ஒன்னாப்புலயே போட்டுறலாம்ன்னு சொல்லுறீங்களா என்று ஹெட் மாஸ்டர் கேட்டார். ஆமா சார் என்று டீச்சர் சொன்னாங்க . தோட்ட சார் , " சார் இவன் நம்ம ஆளு பையன் அனுப்புங்க , எல நீ போலே " என்று சொன்னார் . எனக்கு ஒரே சந்தோசம் , தாங்கல ......






ரெண்டாப்பு :

ரெண்டாங்கிளாஸ் போன உடனே பசங்கள் எல்லாம் என்ன ! சார் உட்டுட்டாங்களான்னு கேட்டானுக . எனக்குள் ஒரே சந்தோசம் . அவனுகளுக்கு கடுப்பு . அப்புறம் ரெண்டாப்பு படிக்க ஆரம்பிச்சேன் . ரெண்டாப்பு டீச்சர் பேர் தெரியல . நல்ல டீச்சர் . அந்த டீச்சர் எங்கப்பாக்கு சொல்லிக் கொடுத்த டீச்சர்ன்னு அப்புறம் தான் தெரியும் , எங்கப்பா சொன்னாங்க . பள்ளிக்கூடத்தில் ஒரே விளையாட்டுதான் .


" பாம்பு வரும் பல்லி வரும் ஒரு குச்சிப் போடு !!! " . அப்புறம் , சிலெட்டுல தண்ணி வச்சி அழிக்கும்போது ஏன்சட்டை காயாது , காக்கா சட்டை காயும் !!!!.. காக்கா சட்டை காயாது , ஏன்சட்டை காயும் !!!!.. இப்படின்னு பாட்டு . டீச்சர் வருகைபதிவு வாசிக்கும் போது , சேக் சிந்தா மதார் மைதீன் , ஆஜர் டீச்சர் . இன்னும் சின்ன பெயராக் கிடைக்கலியா ... டீச்சர் இது எங்க தாத்தா வச்சது , என்றேன் . ரொம்ப பெரிய பேரா இருக்கு , ரிஜிஸ்டரில் இடம் காணல . சுருக்கிருவோமா என்று டீச்சர் கேட்டாங்க . முதல்ல உள்ள சேக்கையும் கடைசியில உள்ள மைதீனையும் சேத்திடுவோமால . எனக்கும் அந்த டீலிங் பிடிச்சிருந்தது . அந்த பெயர் { சேக் மைதீன் } பிடிச்சிருந்தது . இனிமே உன் பெயர் சேக் மைதீன் , என்ன சரியா என்று டீச்சர் சொன்னாங்க . சரி டீச்சர் . எனக்கு பிடிச்ச பெயரை வச்சிகிட்டு , வீட்டுக்கு வந்து எங்கப்பாகிட்ட சொன்னேன் . அவரும் சரின்னுட்டார் . எனக்கு சந்தோசமாயிருந்தது .....






அப்ப , எனக்கு லீவு லட்டரை பற்றி விவரமே தெரியாது . ஒரு தடவை , எங்க பெரியம்மாவோட அப்பா இறந்துட்டாங்க . அதுக்கு திருநெல்வேலியில் இருந்து திருச்சிக்கு உடனே போகனும் . டீச்சர்கிட்ட லீவு கேட்டேன் . எத்தனை நாள்ன்னு கேட்டாங்க . எனக்கு விவரம் தெரியாதா , நான் , டீச்சர் 4 வாரம் லீவு வேணும் . போகக்கூடாது . லீவு லெட்டர் கொடுத்துட்டுப்போ . டீச்சர் 40 நாள் . உஹும் , லீவு லெட்டர் கொடு . டீச்சர் 4 மாதம் , 4 வருசம் . உஹும் முடியாது , லீவு லெட்டர் கொடு என்றார் டீச்சர் . எனக்கு அழுகை வந்திருச்சு .அழுதுகிட்டு இருக்கேன் . அந்த சமயம் என் தங்கையும் என் மாமாவும் வந்தாங்க . மாமா டீச்சரிடம் டீச்சர் இவனுக்கு 4 நாள் லீவு கொடுங்க . திருச்சிக்கு போகனும் . .. கூட்டிக்கிட்டு போங்க இவனை , ஒரே அழுகை.... .





மூனாப்பு :



மூனாப்பு சேர்ந்த உடன் கொஞ்சம் படிக்க ஆரம்பிச்சேன் . அப்போ என் தங்கை ஒண்ணாங்கிளாஸ் சேர்ந்தாள். அவ கொஞ்சம் துருதுரு என்று இருப்பாள் . தொட்டியில ஏறி விளையாண்டு சேட்டை பண்ணி இருக்காள். டீச்சர் அவளை அடித்து உங்க அண்ணனை கூட்டி வா என்று அனுப்பி இருக்கிறார் . என் தங்கை அழுதுகொண்டு வந்து என்னை கூட்டிக் கொண்டு போனாள் . " இது யாரு உன் தங்கச்சியா ! ரொம்ப சேட்டை . இவ பெய்ரு இந்த கிளாஸில் இல்லை . எங்கன்னு பார்த்து சேர்த்து விடு ! " என்றார் . நானும் அவ கிளாஸ் எது என்று பார்த்து சேர்த்து விட்டேன் .






ஒரு சில மாதம் கழித்து நான் படிக்கும்போது விளையாடிக் கொண்டு இருந்தேன் . அப்போது என் மூக்கில் பொடி கல்லை போட்டுவிட்டேன் . வலி தாங்க முடியவில்லை . உடனே டீச்சர் என் வீட்டுக்கு ஆளை அனுப்பி எங்கப்பாவை கூட்டி வந்து ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தார் .



ஒரு தடவை நான் ஒண்ணுக்கு போகும் போது மரத்தடியில் என் தங்கையோட வகுப்பு நடந்து கொண்டிருந்தது . நான் என் தங்கைக்கு டாட்டா காட்டி கொண்டிருந்தபோது வாசல் படி தடுக்கி கீழே விழுந்து மண்டையில் அடிப்பட்டு விட்டது . உடனே என் தங்கை ஓடிப்போய் எங்க வீட்டுல எல்லாத்தையும் கூட்டி வந்து விட்டாள் .


எங்க பள்ளிக்கூடம் , எங்க வீட்டுக்கு அடுத்த தெருவில் இருக்கு . டீச்சர் பரவாயில்லையே அண்ணனுக்கு அடிப்பட்ட உடனே ஆளைக் கூட்டிட்டு வந்திட்டியே என்று என் தங்கையை பாராட்டினாங்க .

நாலாப்பு :






நாலாப்புல இருந்து ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சேன் , என்று நினைக்கிறேன் . நல்லா படிச்சேன் . ஒரு நாள் எங்க கிளாஸ் சார் எல சேக் மைதீன் எந்திரு என்றார் . எனக்கு பயம் , எங்க அடிக்க போறாரோ என்று .. .. . இவண் தான் நம்ம கிளாஸ் லீடர் .என்ன சரியா என்றார் .எனக்கு ஒரே சந்தோசம் . ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது .

ஐந்தாப்பு :



ஐந்தாப்பில் நான் தான் எல்லா மாதத் தேர்விலும் முதல் ராங்க் எடுத்தேன் . என் கூட எல்லா பயலுகளும் , பொம்பள புள்ளைகளும் போட்டிப் போட்டாங்க . ஒரே போட்டி யார் முதல் ராங்க் எடுப்பது என்று . ஆண்டு விழாவில் எனக்கு தான் பரிசு .



இப்படி பள்ளி பருவத்தில் ரொம்ப ஜாலியா இருந்தது . அத இப்போ நினைத்து பார்த்தால் அப்ப இருந்த சேக்கா இப்போ இப்படி என்று தோணும் .


நான் படித்த பள்ளியிலும் சரி , காலேஜ்ஜிலும் சரி எனக்கு நல்ல பெயர் உண்டு . எல்லா ஆசிரியர்களும் என்னிடம் அன்பா இருந்தாங்க .


என்னாடா இது என்னை பற்றி எழுதும் போது , வேற யாரோ சேக் மைதீனை பற்றி எழுதி இருக்கேனே என்று பார்க்கீங்களா ...../..






இங்க ஸ்டார்ஜன் பற்றி சொல்லவே இல்லையே என்று நினைக்கிறீங்கன்னு தெரியுது .

என்னோட உண்மையான பெயர் சேக் மைதீன் தான் ..



ஸ்டார்ஜன் என்பது நானா கொடுத்துக்கிட்ட பெயர் .



தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்கும் மூவர்,


சுரேஷ் (கனவுகளே )
முரளிக்கண்ணன் ( நிரோடை )
வசந்த் ( பிரியமுடன் வசந்த் )


விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும் !

Post Comment

23 comments:

  1. தொடருவோம்..,

    ஆனாப் பாருங்க.., ஒரு மாதத்திற்கு முன்னால் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவத்தை எழுத ஆரம்பித்து ஏழு பகுதி எழுதியும் முடிக்க முடியாம் இருக்கேன். ஒரு பத்தி எழுதினால் அது இரண்டு பாகம் வந்து நிக்குது.

    இப்ப பள்ளிக் கூடம் பத்தி எழுத ஆரம்பிச்சு அது என்னைக்கு முடிய போகுதுன்னு தெரியலயே..,

    ReplyDelete
  2. கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


    இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

    மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

    நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

    ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

    ஆறாம்பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

    நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்


    இந்தக் கதை இப்பத்தான் கால்பகுதி வந்திருக்கு.

    இப்ப பள்ளிக் கூடம் முழுக்க எழுத ஆரம்பிச்சா எழுதிக் கொண்டே இருக்கலாம். தயாராக இருங்கள்.

    இது தவிர கல்லூரி தொடர்புடைய இடுகைகள், புனைவுகள், மற்றும் கதைகளையும் எழுதிக் கொண்டே இருக்கிறேன்.

    இப்ப இதையும் கேட்டிருக்கிறீர்கள். கண்டிப்பாக எழுத ஆரம்பித்து விடுகிறேன்

    ReplyDelete
  3. தமிழ் மணத்தில் ஓட்டுப் போட்டுவிட்டேன். மற்றவைகளில் நீங்கள் சேர்த்த பிறகு போட்டுவிடுகிறேன்

    ReplyDelete
  4. ஸ்டார்ஜன்,

    அருமையாக எழுதி இருக்கிங்க, தங்கையுடன் ஒரே பள்ளியில் படித்த நினைவுகள், முதல்வகுப்பில் இருந்து இரண்டாம் வகுப்புக்கு செல்வதற்கு தரிகனத்தோம் போட்டுவிட்ட்ய் முதல் மாணவனாக ஐந்தாம் வகுப்பில் வந்திருக்கிறீர்கள். கலக்கல் !

    விளையாடும் வயதில் விளையாட்டுப் பிள்ளையாக இருப்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வியப்புதான்.

    அழைப்பை ஏற்று அருமையாக எழுதியதற்கு பாராட்டுகள், நன்றி !

    ReplyDelete
  5. அந்த புகைப்படத்தில் நீங்களும் இருக்கிங்களா ? அல்லது சுப்ரமணிய புரம் படம் போல் ஒரு படத்தின் ஸ்டில்லா ?

    ReplyDelete
  6. //சிலெட்டுல தண்ணி வச்சி அழிக்கும்போது ஏன்சட்டை காயாது , காக்கா சட்டை காயும் !!!!.. காக்கா சட்டை காயாது , ஏன்சட்டை காயும் !!!!.//


    அட அதே பாட்டுதான்.

    நல்லா எழுதியிருக்கீங்க ஸ்டார்ஜன்,

    பள்ளிக்கூட நினைவுகள் சரியாத்தான் போய்க்கிட்டு இருக்கு.

    ReplyDelete
  7. (ரஜினி ஸ்டைலில் படிக்கவும் )

    உண்மையை சொன்னாய்

    எல்லாம் சரி
    ட‌வுச‌ர் அடிக்க‌டி கிழிந்த‌தையும்,
    பள்ளியில் காந்தி வேடம் போட்டதையும்,

    விட்டு விட்டாயே..

    எழுத்தில் நல்ல வேகம், தொடரட்டும்.

    வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  8. \\\\ SUREஷ் (பழனியிலிருந்து) said...
    தொடருவோம்..,

    ஆனாப் பாருங்க.., ஒரு மாதத்திற்கு முன்னால் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவத்தை எழுத ஆரம்பித்து ஏழு பகுதி எழுதியும் முடிக்க முடியாம் இருக்கேன். ஒரு பத்தி எழுதினால் அது இரண்டு பாகம் வந்து நிக்குது.

    இப்ப பள்ளிக் கூடம் பத்தி எழுத ஆரம்பிச்சு அது என்னைக்கு முடிய போகுதுன்னு தெரியலயே.., ////

    வருகைக்கு நன்றி சுரேஷ் ...

    ReplyDelete
  9. சுரேஷ் உங்க கதைகள் நல்லா இருக்கும் ....

    பள்ளிக்கூடம் பற்றி எழுதினீங்கன்னா நல்லா இருக்கும்..

    ReplyDelete
  10. \\\\ கோவி.கண்ணன் said...

    ஸ்டார்ஜன்,

    அருமையாக எழுதி இருக்கிங்க, தங்கையுடன் ஒரே பள்ளியில் படித்த நினைவுகள், முதல்வகுப்பில் இருந்து இரண்டாம் வகுப்புக்கு செல்வதற்கு தரிகனத்தோம் போட்டுவிட்ட்ய் முதல் மாணவனாக ஐந்தாம் வகுப்பில் வந்திருக்கிறீர்கள். கலக்கல் !

    விளையாடும் வயதில் விளையாட்டுப் பிள்ளையாக இருப்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வியப்புதான்.

    அழைப்பை ஏற்று அருமையாக எழுதியதற்கு பாராட்டுகள், நன்றி ! ////

    பள்ளிக்கூடத்தை பற்றி எழுத சொல்லி என்னை அந்த பொற்காலத்துக்கு அழைத்து சென்ற பெருமை உங்களுக்கு தான் ....

    என் பணி தொடர வாழ்த்தவும் ....

    ReplyDelete
  11. வாங்க அப்பாவி முரு

    வாழ்த்துங்கள் ...

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி அக்பர்

    ReplyDelete
  13. கோவி. கண்ணன்

    நான் போட்டிருக்கும் படம்

    பசங்க திரைப்படத்தின் ஸ்டில்ஸ்

    ReplyDelete
  14. அக்பர்

    அந்த நாட்களை எல்லாம் மறக்க முடியாதே !

    காந்தி வேஷம் போட்டது ஆறாப்புல ....

    ReplyDelete
  15. பள்ளிப் பருவத்தை பற்றி அருமையாக எழுதி உள்ளீர்கள்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. அய்யோ அம்மா நான் இந்த விளையாட்டுக்கு வரல நம்ம எழுதுனாக்கா நம்மளப்பத்தி இந்த ஊரே சிரிச்சுப்புடும்.

    நன்றி நண்பரே தொடர் பதிவெழுத அழைத்தமைக்கு.....

    மறுப்புக்கு காரணம்

    எனக்கு சரியா தொடர் எழுத வராது

    ஆனால் கண்டிப்பா ஒரு நாள்

    இதுக்கு தொடர் பதிவு எழுதுவேன்

    ஆனா இப்போ இல்ல....

    மீண்டும் நன்றியுடன் வசந்த்

    ReplyDelete
  17. பெரிய ஆட்கள் எல்லாம் இப்படி சொல்லாமா

    முயற்சி பண்ணுங்க‌

    வருகைக்கு நன்றி வசந்த்....

    ReplyDelete
  18. பள்ளி நாட்கள் மறக்க முடியாதே

    ReplyDelete
  19. நிச்சயம் எழுதுகிறேன் ஸ்டார்ஜான்.

    அழைப்பிற்க்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  20. வாங்க‌

    முரளி

    வருகைக்கு

    நன்றி

    ReplyDelete
  21. அருமை தல.... அப்டியே எப்டி இப்டி எல்லாம் எழுதுறதுன்னு கொஞ்சம் சொல்லி கொடுத்தீங்கன்னா நல்ல இருக்கும்...

    ReplyDelete
  22. வருகைக்கு நன்றி சுகுமார் சுவாமிநாதன்

    எழுத ஆரம்பிசிங்கன்னா அது தானா வரும்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்